Advertisements

இலங்கை அரசியலில் புதிய மாற்றத்திற்கான பாதையினை குருநாகல் மாவட்டத்தில் இருந்து எமது கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவிப்பு

இலங்கை அரசியலில் புதிய மாற்றத்திற்கான பாதையினை குருநாகல் மாவட்டத்தில் இருந்து எமது கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

குருநாகல் சீசன் ஹோட்டலில் விழிப்போம், சிந்திப்போம், ஒன்றுபடுவோம் என்னும் தொனிப் பொருளில் இடம் பெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

குருநாகல் மாவட்ட அமைச்சரின் ஒருங்கிணைப்பாளரும், தொழிலதிபருமான அஸார்தீன் மொயினுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது – [Read more…]

பாவனையாளர் பாதுகாப்பு விதிகளை மீறும் வியாபாரிகளுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

பாவனையாளர் பாதுகாப்பு விதிகளை மீறும் வியாபாரிகளுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் நிறை வேற்றுப்பணிThukar Nayeemப்பாளர் சட்டத்தரணி துல்கர் நயீம் (துல்சான்) தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் கிழக்கு மாகாண அதிகாரிகளுடனான சந்திப்பு அண்மையில் அம்பாரை மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாணத்திற்கான உதவிப்பணிப்பாளர் எச்.எல்.குத்துஸ் தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் அதிதியாகக்கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார். [Read more…]

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக எம் ஐ எம் மன்சூர் தனது அமைச்சின் கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்..

பைஷல் இஸ்மாயில் –

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக நேற்று காலை நியமனம் பெற்ற கிழக்கு மாகாண சகாதார அமைச்சர் எம் ஐ எம் மன்சூர் தனது அமைச்சுப்பொறுப்புக்களை நேற்று காலை 10.00 மணியளவில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சுகாதார அமைச்சர் தனது கடமைபெற்பதற்காக அமைச்சுக்கு வருகை தந்தபோது அமைச்சின் உத்தியோகத்தர்கள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பளித்தனர். அதனைத்தொடர்ந்து அமைச்சர் தனது அமைச்சின் கடமைகளை உத்தியோக பூர்வமாக [Read more…]

சிங்கள பேரினவாத அமைப்பான பொதுபலசேனாவை நேரடி விவாதத்திற்கு வருமாறு மாற்றத்திற்கான இளைஞர்கள் படையணி எனும் அமைப்பு அறைகூவல்

மேற்குலகை தளமாக கொண்ட சிங்கள பேரினவாத அமைப்பான பொதுபலசேனா என அழைக்கப்படும் அமைப்பு கடந்த காலங்களில் செய்துவந்த அட்டூழியங்களுக்கு எந்தவித எதிர்ப்பு நடவடிக்கைகளும் இன்றி வாழ்ந்து வரும் இலங்கை முஸ்லிம்களை தொப்பி போட்ட முட்டாள்கள் என்று ஒருபோதும் எண்ணிவிடக்கூடாது. இலங்கைத்திருநாட்டில் அக்காலத்தில் வந்த வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு இடம் கொடுத்து பெண் கொடுத்து இந்நாட்டிலேயே இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திய சிங்கள மன்னர்களி்ன் வழித்தோன்றலில் வந்தவர்களா என்று எண்ணத்தோன்றுகிறது. வெறும் ஊடக அறிக்கைகள் என்று அலம்பாமல் முடியுமாக இருந்தால் முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் என்று நிரூபிக்க முடியுமென்றால் நேரடி விவாதத்திற் வருமாறு அன்பாய் அழைக்கிறோம் என்று இலங்கையை தலைமையகமாக கொண்ட மாற்றத்திற்கான இளைஞர்கள் படையணி தெரிவித்துள்ளது.
securedownload
இலங்கையில் தொலைக்காட்சி, மற்றும் வானொலி ஆகியவற்றில் இந்த விவாதம் நேரடியாக ஒளிபரப்பப்படுவதற்குரிய அனைத்து வேலைப்பாடுகளையும் தாங்கள் பொறுப்பெடுப்பதாகவும் கூறியுள்ள இப்படையணி மஹிந்த அரசாங்கத்தோடு இணைந்து செய்த அட்டூழியங்கள் தாங்க முடியாமல்தான் ஆட்சியினையே மாற்றினார்கள், கட்சிகளுக்காகவோ பணத்திற்காகவோ ஜனாதிபதி மைத்திரிக்காகவோ அல்ல விடிவுகாலம் வேண்டும் என்பதற்காகவே!

[Read more…]

கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்கள் உரை

பைஷல் இஸ்மாயில் –

 மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும் தாய் நாட்டை அபிவிருத்தி செய்வதற்குமான தனது முயற்சியில் அனைத்து சமூகங்களையும் குழுவினர்களையும் அரவணைத்து பங்குபெறச் செய்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதிலும் எல்லா அரசியல் கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதிலும் மிக திறமையாக புத்திசாதூரியமாக பல முன்னெடுப்புக்கள் முன்னெடுத்து வருகின்ற எமது நாட்டின் ஜனாதிபதியை வரவேற்பதற்கு கிடைத்த இச்சந்தர்ப்பத்தை நான் பெருமையாகக் கருதுகிறேன் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கடந்த 03.03.2015 செவ்வாய்க்கிழமை மாலை திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வில் [Read more…]

ஊடகவியலாளர்களுடன் ஐக்கிய அமெரிக்காவின் இலங்கை தூதுவர் ஆலயத்தின் சினேகபூர்வ சந்திப்பு

(பஹ்மி யூஸூப்)

ஐக்கிய அமெரிக்காவின் இலங்கை தூதுவர் ஆலயத்தின் கல்வி, கலசாரம் மற்றும் ஊடகம் விவகாரப்பணிப்பாளர் NICOLE CHULICK  க்கும் திருகோணமலை மாவட்ட ஊடகவியளாளர்க்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பு 04.03.2015 ஆம் திகதி Chaaya Blu Hotel  இல் இடம்பெற்றது இந்நிகழ்வில் தூதுவர் ஆலயத்தின் உதவி தொடர்பாடல் அதிகாரி Omar Rajarathnam  அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

DSC_0027 [Read more…]

உலக கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான் போட்டியில் இலங்கை அணி வெற்றி…

உலக கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்றைய தினம் நடைபெற்றிருந்தது.

இலங்கை அணியின் கிரிக்கட் இரசிகர்கள் பலராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இலங்கை அணி 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 232 ஓட்டங்களைப் பெற்று சகல

[Read more…]

அக்கரைப்பற்று கிளுநகர் கிராமத்திற்கான மின்சாரம் வழங்கும் நிகழ்வு

சலீம் றமீஸ்)

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளுநகர் கிராமத்திற்கான மின்சாரம் வழங்கும் நிகழ்வு மஸ்ஜிதுர் றஹ்மான் பள்ளிவாசல் தலைவர் எம்.ஏ.உமர்லெப்பை தலைமையில் இடம் பெற்றது.

இதில் உள்ளுராட்சி மாகாண சபைகள் முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்;.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு மின்சார திட்டத்தினை மக்களின் பாவனைக்காக [Read more…]

மாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில்- நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-05 அல்-ஹிறா மகா வித்தியாலத்தில் மாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் அல்-ஹிறா மகா வித்தியாலத்தின் 1992 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பழைய மாணவர்களினால் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

அன்பளிப்பு செய்யப்பட்ட மேற்படி நற்சிந்தனை அடங்கிய பலகைகளை கையளிக்கும் நிகழ்வு 22-02-2015 நேற்று சனிக்கிழமை அல்-ஹிறா மகா வித்தியாலத்தில் [Read more…]

சாய்ந்தமருதில் ஒஸ்டா அமைப்பின் கல்விக் கருத்தரங்கு

-எம்.வை.அமீர் –
மக்களும் பிரதேசமும் பயன்படும் வகையில் பல்வேறு செயற்திட்டன்களை செயற்படுத்தி வரும் சமூக அபிவிருத்திக்கும் உதவிக்குமான (OSDA) என்ற அமைப்பு 2015-02-22 ல் சாய்ந்தமருது இளைஞர் வளநிலையத்தில் தகவல் தொழில்நுட்பம் சம்மந்தமான கல்விக்கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

இதில் இப்பிராந்தியத்தில் பாடசாலைவிட்டு விலகிய மாணவ மாணவிகள் பங்கு கொண்டனர் நிகழ்வில் தகவல் தொழில்நுட்பம் சம்மந்தமான கற்பித்தலில் வளவாளராக ஏ.எம்.சஜீப் கலந்து கொண்டார்.

a

DSC_0001

கிழக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் நியமிப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை தொடர்பாக – அமைச்சர் விமல வீர திஸாநாயக்கா

(சலீம் றமீஸ்)
கிழக்கு மாகாண சபை தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீறியுள்ளதாகவும், ஸ்தம்பிதம் அடைந்த கிழக்கு மாகாண சபையானது மக்களுக்கான பணிகளை தடையின்றி மேற்கொள்வதற்காக முதலமைச்சரை மாத்திரம் நியமிப்பதற்கே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 14 பேரினதும் விருப்பத்துடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 06 பேரும் இணைந்து அனுமதி வழங்கினோம் என கிழக்கு மாகாண கல்வி, காணி, காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் விமல வீர திஸாநாயக்கா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் நியமிப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை தொடர்பாக அம்பாறையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் [Read more…]

25 வருட காலம் பேஷ் இமாமாக கடமையாற்றிய மௌலவி எம்.பீ.எம்.ஆதம்பாவா பலாஹியின் சேவை பாராட்டு நிகழ்வும் பிரியாவிடை வைபவமும்

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பெரிய மௌலானா பள்ளிவாயலில் கடந்த 25 வருட காலம் தொடர்ச்சியாக பேஷ் இமாமாக கடமையாற்றிய மௌலவி எம்.பீ.எம்.ஆதம்பாவா (பலாஹி) தனது பணியிலிருந்து ஒய்வு பெற்றுள்ள நிலையில் அவரின் சேவையை கௌரவித்து பெரிய மௌலானா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் சேவை பாராட்டு நிகழ்வும் பிரியாவிடை வைபவமும் 21-02-2015 நேற்று சனிக்கிழமை பெரிய மௌலானா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

பெரிய மௌலானா பள்ளிவாயலின் நிருவாக சபையின் செயலாளர் விரிவுரையாளர் எம்.எச்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும்,  காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி), காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் [Read more…]

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று பாடசாலைகளுக்கு டெனிஸ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு 19-02-2015வியாழக்கிழமை காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

[Read more…]

https://kattankudi.wordpress.com/2015/02/21/100102/

அல்குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வின் முதலாவது நிகழ்வு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் 28வது வருட அல்குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வின் முதலாவது நிகழ்வு 21-02-2015 இன்று சனிக்கிழமை காத்தான்குடி-05 மஸ்ஜிதுல் ஹூதா சின்னப்பள்ளிவாயலில் இடம்பெற்றது.

காத்தான்குடி குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர் மௌலவி எம்.ஐ.ஆதம்லெவ்வை (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைகளின் தலைவரும் காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி), குர்ஆன் மத்ரஸாக்கள் [Read more…]

கிழக்கில் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இணக்க அரசியலை ஏற்படுத்தியது நாங்களே-பூ.பிரசாந்தன்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாணத்தில் இணக்க அரசியலை சிறப்பாக மேற்கொண்டு தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து காட்டிய பெருமை எம்மையே சாரும். எதிர்ப்பு அசியலே தமிழர்களின் பாதை என்பதனை மாற்றி சுய கௌரவத்துடன் இணக்க அரசியலும் செய்யலாம். அதன் மூலம் தமிழர்களின் அடிப்படைத் தேவைகளான நிதி நிருவாக சமத்துவத்தினை பேணிப்பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதனை ஏனைய அரசியல் தலைமைகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எடுத்துக்காட்டியது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினையே சாரும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும்இ தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளமான பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராம மட்ட அமைப்பாளர்களுடனான 2015ம் வருடத்திற்கான கட்சியினின் செயற்திட்ட தொடர்பான கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 2008ல் கிழக்கு [Read more…]

நுகேகொடை கூட்டத்தை கண்டு தமிழ் பேசும் மக்கள் பதட்டமடைய தேவையில்லை – மனோ கணேசன்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்காரஇ உதய கம்மன்பில ஆகியோர் முன்னின்று நுகேகொடை அங்காடிக்கு எதிரே நடத்திய கூட்டம்இ இனவாதத்தை தமது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்த நினைக்கும் ஒரு மிகப்பழைய முயற்சியாகும்.

இந்த கூட்டத்தை கண்டு தமிழ் பேசும் மக்கள் பதட்டமடைய தேவையில்லை. இந்த நாட்டை மீண்டும் வரலாற்றை நோக்கி திருப்பி அழைத்து போகும் இந்த முயற்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பையும், சுதந்திர கட்சியையும் பிளவு படுத்துவதிலேயே போய் முடியும். தங்களை தாங்களே பிளவுபடுத்திக்கொண்டு பலவீனப்படும் வேலையை இவர்களே செய்துகொள்கிறார்கள். இது இந்த நாட்டில் வாழும் ஜனநாயக சக்திகளுக்கு சாதகமானது.

எனவே முடிந்து போன காட்டாட்சி மீண்டும் தலையெடுத்து விடுமோ என்று நுகேகொடை கூட்டம் குறித்து தமிழ்இ முஸ்லிம் மக்கள் பதட்டமடைய [Read more…]

மீறாவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தின் 20வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள மீறாவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தின் 20வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் வித்தியாலய மைதானத்தில் நேற்று (20.02.2015) மாலை இடம் பெற்றது.

வுpத்தியால அதிபர் ஏ.எல்.அபுல்ஹசன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வீடமைப்பு சமுரத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் [Read more…]

அல்-மீசான் பௌண்டசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தலைமைத்துவ மற்றும் உளவியல் பயிற்சி பட்டறை

அல்-மீசான் பௌண்டசன் தனது 11வது வருடமாகவும் நாடுதழுவிய ரீதியில் நடாத்திவரும் தலைமைத்துவ மற்றும் உளவியல் பயிற்சி பட்டறை இன்று காலை 08.00 மணி முதல் அல்-மீசான் பௌண்டசன்-ஸ்ரீலங்கா திருகோணமலை கிளை அலுவலக கேட்போர் கூட்டத்தில் இடம் பெற்று வருகிறது.இந்த பயிற்சி பட்டறையில் பாடசாலை,பல்கலைகழக மாணவ,மாணவிகள் 175 பேர் கலந்துகொண்டனர்.

முற்றிலும் இலவசமாக இடம்பெற்று வரும் இந்த பயிற்சி நெறியை யூத் ரோஸாஸ் எனும் தனியார் விளம்பரப்படுத்தல்  கம்பனியினர் ஏற்பாடு செய்திருந்ததுடன் இப்பயிற்சி நெறியின் விரிவுரையாளர்களாக நாட்டின் தலைசிறந்த பல்கலைகழக விரிவுரையாளர்களும், மற்றும் பல அமைப்புகளை சேர்ந்த விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.1911697_1472505769668613_9141011936218749874_n.jpg.[t=1096754860,m=5] [Read more…]

பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வைபவம் நாளை நிந்தவூா் அல்-மஸ்ஹா் மகளீா் உயா்தர பாடசாலையில்…

மீரா S இஸ்ஸடீன்

கிழக்கு மாகாண சபை உறுப்பினா் ஆாிப் சம்சுடீனின் பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை(நாளை) காலை 9.00மணிக்கு நிந்தவூா் அல்-மஸ்ஹா் மகளீா் உயா்தர பாடசாலையில் வைத்து வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் சகல தரங்களையும் சோ்ந்த சுமாா் 150 மாணவா்கள் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்ளவிருக்கின்றனா். இத்துடன் நிந்தவுா் பிரதேசத்திலிருந்து பல்கலைக் கழகங்களுக்குத் தொிவு செய்யப்பட்ட மாணவா்களும் [Read more…]

தாய்சேய் சிகிச்சை நிலைய கட்டட வேலைக்கு தடங்கல் – மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்..

எம்.எம்.இர்பான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண்ணோடை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தாய்சேய் சிகிச்சை நிலையத்தின் கட்டிட வேலைகளை தொடரவிடாமல் சிலர் தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவ்வாரனவர்களை சட்டத்தின்முன் நிருத்துவதோடு எங்களது பிரதேசத்திற்காக தாய்சேய் நிலையத்தை அமைத்துத் தருமாரும் கோறி செம்மண்ணோடை மக்கள் இன்று (புதன்கிழமை) பகல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் ஐரோப்பிய யூனியனின் 45 லட்சம் ரூபா நிதியளிப்பில் யுனிசப் நிறுவனத்தின் நடைமுறையப்படுத்தலில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினதும் மேற்பார்வையில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது. [Read more…]

துருவம் ஊடக வலையமைப்பு நடாத்தும் இலவச ஊடக செயலமர்வு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

துருவம் ஊடக வலையமைப்பு இரண்டாவது தடவையாக கிழக்கு மாகாணத்தில் ஊடக செயலமர்வு ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. ‘ஊடகங்கள் வாயிலாக இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்’ எனும் தலைப்பில் இச்செயலமர்வு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளது. இது முற்றிலும் இலவசமானது.

இந்த ஊடக செயலமர்வில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர்கள்இ சமூக வலைத்தளங்களில் ஆர்வமுள்ளவர்கள், செய்தி இணையத்தளங்களை நடாத்துவோர், டுவிட்டர் சேவைகளை நடாத்துவோர் மற்றும் ஊடகத்துறையில் ஆவர்வமுள்ள மாணவஇ மாணவிகளும் கலந்துகொள்ள முடியும். இச்செயலமர்வில் ஆண்கள்இ பெண்கள் என இருபாலாரும் கலந்துகொள்ள முடியும். [Read more…]

கானல்நீராய் கல்முனையின் அபிவிருத்தி??? அங்கலாய்க்கும் மக்கள்

-எம்.வை.அமீர் –

கல்முனைத்தாய் தனது கடந்தகால வரலாற்றில் பல்வேறுபட்ட தலைவர்களையும்இ சிறந்த அடைவுகளையும், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பேசும் அளவுக்குஇ முஸ்லிம்களின் தலைநகர், என்ற அந்தஸ்த்தையும் ஏன் பல்வேறுபட்ட அபிவிருத்திகளையும் கண்டாள்.

கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் முதல் எம்.சீ.அகமட், ஏ.ஆர்.எம்.மன்சூர், எம்.எச்.எம்.அஷ்ரப், எம்.எம்.முஸ்தபா (மையோன்) எச்.எம்.எம்.ஹரீஸ் வரை பாரளமன்ற உறுப்பினர்களையும் கல்முனைத்தாய் ஈன்றாள். அத்துடன் உயர் கல்வியாளர்கள்இ சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், விவசாயிகள்இ மீனவர்கள் என பல்வேறு தரப்பினரையும் தன்னகத்தே உள்ளடக்கினாள்.

கல்முனைத்தாய் பெற்ற மக்கள் ஒற்றுமைக்கு பெயர்போனவர்கள். அவர்களுக்குள் முரன்பட்டுக்கொன்டாலும் இறுதியில் ஒன்றுபட்டு விடுவார்கள். இதற்க்கு பல்வேறு [Read more…]

போராட்டத்திற்கெதிராக போராட்டம்…

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு- வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக இன்று 18.02.2015 பிற்பகல் இருவேறு தரப்பினர் ஏட்டிக்குப் போட்டியாக கறுப்புப் பட்டி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கருப்படும் ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிப்பதற்காக ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவேண்டுமென அரசாங்கத்தைக்கோரி ஒரு குழுவினர் துண்டுப்பிரசுரம் விநியோகித்தனர்.

[Read more…]

காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கிவரும் காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தினால் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2014ம் ஆண்டில் நடாத்தப்பட்ட பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்,2015ம் ஆண்டிற்கான புதிய பாடநெறிகளின் ஆரம்ப நிகழ்வும் கடந்த 16 திங்கட்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.ஐ.எம்.எம்.மஹ்பூழ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலும் கௌரவ அதிதியாக காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கரும் கலந்து கொண்டனர். [Read more…]

ஏறாவூரில் காணாமற்போன வாலிபர் சடலமாக மீட்பு

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமற்போனதாகக் கருதப்படும் வாலிபர் ஒருவரது சடலம் மட்டக்களப்பு-செங்கலடி கறுத்தப்பாலத்தின் கீழ் கிடந்து இன்று 18.02.2015 புதன்கிழமை காலை மீட்கப்பஏறாவுட்டதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

உருக்குலைந்து துர்வாடை வீசிய நிலையில் காணப்பட்ட இச்சடலம் மட்டக்களப்பு-கொம்மாதுறை உமா மில் வீதியைச்சேர்ந்த 27 வயதுடைய சுந்தரம் மகேந்திர ராஜா என்பவருடையதென்றும் [Read more…]

தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மை கட்சிகளுக்கு பாதகமாக அமையக்கூடாது – ஜனாதிபதி உறுதி என்கிறார் மனோ கணேசன்

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

இன்றைய தேர்தல் முறைக்கு சீர்திருத்தம் எப்போது கொண்டுவரப்பட்டாலும், அது ஒருபோmano29_11_2009_033_001_042தும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கும், சிறு கட்சிகளுக்கும் பாதகமாக அமைந்து விடக்கூடாது. தேர்தல் மூலம் தங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு மறுக்கப்படும் போதுதான் சட்டவிரோத வன்முறை சார்ந்த வழிமுறைகளை நாடும் நிலைமைக்கு சிறுபான்மை பிரிவினர் தள்ளப்படுகிறார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய நிறைவேற்று சபை கூட்டத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்ததாவது, [Read more…]

விடிவெள்ளி பத்திரிகை நாளை திங்கட்கிழமை முதல் தினசரி பத்திரிகையாக…

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

முஸ்?????????????????????????லிம் சமூகத்தின் முதன்மைக் குரல் என்று அழைக்கப்படும் உங்கள் அபிமான விடிவெள்ளி பத்திரிகை 16-02-2015 நாளை திங்கட்கிழமை முதல் தினசரி பத்திரிகையாக வெளிவருகின்றது.

மேற்படி பத்திரிகை திங்கள் முதல் வியாழன் வரை தினசரி விலை 15 ரூபாவுக்கும் வெள்ளிக்கிழமைகளில் வார இதழ் 30 ரூபாவுக்கும் உங்கள் பிரதேசத்திலுள்ள அனைத்து பத்திரிகை முகவர்களிடம் பெற முடியுமென விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம்.பைரூஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

15-02-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் நிதி, நிருவாக அதிகாரி எஸ்.எம்.அதீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது அதிதிகளினால் 3 மாத கால ஆங்கில மற்றும் தொழில் நுட்ப பாடநெறியினை பூர்த்தி செய்து திறமையான சித்தி பெற்ற மாணவர்கள் சான்றிதழும், [Read more…]

உலகக் கிண்ண கிரிக்கட் முதல் போட்டியில் இலங்கை தோல்வி

  நியூசிலாந்து அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்New-Zealand-vs-Sri-Lanka-1st-ODI-Live-Score-10-Nov-2013புக்கு மத்தியில் நியூசிலாந்தில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 98 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. [Read more…]

பொது தேர்தல் 2015: மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக்க முனைகிறார் விமல்

vimalவிமல் வீரவன்ச உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பல தரப்புகள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தெரிய வருகின்றது.

விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, மற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் சுசில் பிரேம் ஜயந்த இவ்வாறான திட்டம் எதுவும் தம்மிடம் இல்லை என மறுத்துள்ளார்.

இது பற்றி சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த மஹிந்த ராஜபக்சவிடம் வினவிய போது, தான் இன்றுதான் தனது ஊரில் இருந்து வந்ததாகவும் அவ்வாறான அழைப்பு எதுவும் தமக்கு விடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தல்: சில்லு சின்னத்தில் மஹிந்த ராஜபக்ஸ ?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இரத்தினபுரி மாவட்டத்தில் எதிர்வரும் பாரர்ளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஆசியன் மிரர் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன தேர்தல் தொகுதியின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி கட்சியின் சில்லு சின்னத்தில் போட்டியிடுவார் என குறிப்பிடப்படுகிறது.

[Read more…]

கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது

பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் இன்று (10) அனைத்துக் கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 

கிழக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று காலை 10 மணிக்கு தவிசாளர் ஆரியபதி கலபதி தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சபை அமர்வில் புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் மற்றும் புதிய உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ஆகியோரை வரவேற்று 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது வரவு செலவுத்திட்டம் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீரினால் வாசிக்கப்பட்டபோது அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று தங்களின் ஆரவினை தெரிவித்தனர். [Read more…]

கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கு முதல்வர்

ஏ.எஸ்.எம்.தாணீஸ்

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பொறியியலாளர் அல்ஹாபிழ் நசீர் அஹமத் தனது கடமைகளை முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (10) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும்,முன்னால் இம்மாகாண சபையின் விவசாய, சுற்றுலாத்துறை அமைச்சருமாவார்.

[Read more…]

காத்தான்குடியில் டெங்கு தொடர்பாக பெண்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு

தற்போது எமதூரில் மிக வேகமாக பரவிவருகின்ற டெங்கின் பாதிப்பிலிருந்து எமது குழந்தைச் செல்வங்களையும் எம்மையும் பாதுகாத்து ஆரோக்கியான சமூக சூழலை கட்டியெழுப்ப
இஸ்லாம் வழியுறுத்தும் சுத்தம் ‘பேணுவோம்! டெங்கை ஒழிப்போம்!!’ எனும் கருப்பொருளில் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த டெங்கு தொடர்பாக பெண்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு நேற்று 09.02.2015 திங்கட்கிழமை பி.ப. 4.00 தொடக்கம் 6.00 மணிவரை புதிய காத்தான்குடி 06 ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், டெங்கு நுளம்பின் பெருக்கமும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களும் எனும் தலைப்பில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி Dr. U.L. நஸீர்தீன் அவர்களும் உடல், உள, சமூக ஆரோக்கியத்திற்கு இஸ்லாம் வழியுறுத்தும் சுத்தம் எனும் தலைப்பில் ஓட்டமாவடி தாறுஸ் ஸலாம் கலாபீடத்தின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் A.L. முஸ்தபா (ஸலாமி) BA அவர்களும் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றினர்.

இந்நிகழ்வில் இஸ்லாமிக் சென்றர் நிருவாகிகள், மற்றும் பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் நிருவாகத்தின் கீழ் இயங்கும் ஜம்இய்யதுந் நிஸா (பெண்கள் அமைப்பு) இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

IMG_2207 IMG_2213 IMG_2217 IMG_2220 IMG_2223 IMG_2225

வெளிநாட்டு பண நோட்டுக்களுடன் சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய வர்த்தகர்

எம்.ஐ.அப்துல் நஸார்

எழுபத்தேழு இலட்ச ரூபாய் பெறுமதியான பவுண், யூரோ மற்றும் ஜப்பானிய யென் ஆகியவற்றுடன் சிங்கப்பூர் செல்வதற்காக வந்திருந்த தொலைபேசி உதிரிப்பாக வர்த்தகரொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

சந்தேக நபர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயது வர்த்தகராவார்.

[Read more…]

கிழக்கு முதல்வரை வரவேற்கும் நிகழ்வு

பைஷல் இஸ்மாயில் –

கிழக்கு மாகாண சபைக்கு வருகை தந்த புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் வரவேற்கும் இன்று நிகழ்வு மாகாண சபையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் புதிய முதலமைச்சர் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர்களை முதலமைச்சின் நிருவாகத்தினர் வரவேற்றனர்.  [Read more…]

கிழக்கு மாகாண சபையில் இன்று பெரும் அமலிதுமளி

கிழக்க மாகாண சபை அமர்வு சபையின் தவிசாளர் ஆரியபதி பலபதி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டன.

இந்த அமர்வின்போது புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டினால் மாகாண சபையின் நான்கு அமைச்சுக்களினதும் அத்துடன் முதமைச்சின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பித்து முடிந்ததும் அனைத்து கட்சிகளின் குழுத் தலைவர்களுக்கு சபையில் உரையாற்ற சுமார் 5 நிமிடங்கள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டன. [Read more…]

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் நூதன திருட்டு

NUA-முஹம்மட் றிஃப்கி-

மறைந்த எமது பெரும் தலைவர் அஸ்ரப் அவர்கள் தனது மரணத்திற்கு முன்பு தேசிய ஐக்கிய முன்னணி (NUA) எனும் கட்சியை ஆரம்பித்து அதனூடாக முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால அரசியலை விஸ்தரிப்பதற்கு உரிய முயற்சிகளை எடுத்திருந்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் எனும் பெயரில் தேசிய அரசியலை செய்ய முடியாது என்ற காரணத்தினால் அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டதாக கருப்பட்டது.

[Read more…]

கிழக்கு முதல்வர் நியமனம் தொடர்பாக நடந்தது என்ன – ஷிப்லியின் ஊடகஅறிக்கை…

தற்போது கிழக்குமாகாண சபையின் புதிய முதலமைச்சராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் நஸீர் ஹாபிஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் என்னை சம்பந்தப்படுத்தி பலதரப்பட்ட கருத்துக்களும், விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை எனக்கிருக்கின்றது என்ற காரணத்தினால், இவ்வூடக அறிக்கையானது என்னால் வெளியிடப்படுகின்றது.
[Read more…]

கிழக்கு மாகாண சபை: TNA, SLMC மீண்டும் பேச்சுவார்த்தை

-அஸ்லம் எஸ்.மௌலானா-

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்படுத்தியுள்ள புதிய ஆட்சியில் தமிழ்த் தேசியக்’ கூட்டமைப்பு பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கமொன்றை உருவாக்கி மூவின மக்களும் ஒன்றாகச் செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக்’ கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமது ஆட்சியில் இணைந்து கொள்ள முன்வர வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். [Read more…]