Advertisements

கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது

பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் இன்று (10) அனைத்துக் கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 

கிழக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று காலை 10 மணிக்கு தவிசாளர் ஆரியபதி கலபதி தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சபை அமர்வில் புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் மற்றும் புதிய உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ஆகியோரை வரவேற்று 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது வரவு செலவுத்திட்டம் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீரினால் வாசிக்கப்பட்டபோது அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று தங்களின் ஆரவினை தெரிவித்தனர். [Read more…]

கிழக்கு முதல்வரை வரவேற்கும் நிகழ்வு

பைஷல் இஸ்மாயில் –

கிழக்கு மாகாண சபைக்கு வருகை தந்த புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் வரவேற்கும் இன்று நிகழ்வு மாகாண சபையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் புதிய முதலமைச்சர் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர்களை முதலமைச்சின் நிருவாகத்தினர் வரவேற்றனர்.  [Read more…]

கிழக்கு மாகாண சபையில் இன்று பெரும் அமலிதுமளி

கிழக்க மாகாண சபை அமர்வு சபையின் தவிசாளர் ஆரியபதி பலபதி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டன.

இந்த அமர்வின்போது புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டினால் மாகாண சபையின் நான்கு அமைச்சுக்களினதும் அத்துடன் முதமைச்சின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பித்து முடிந்ததும் அனைத்து கட்சிகளின் குழுத் தலைவர்களுக்கு சபையில் உரையாற்ற சுமார் 5 நிமிடங்கள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டன. [Read more…]

கிழக்கு மாகாண சபையில் பிள்ளையானுக்கு அமைச்சிப் பதவி

கிழக்கு மாகாண விவசாய அமைச்சராக முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) நியமிக்கப்படுவார் என்று அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, பிள்ளையான் மற்றும் அவருடன் புதிதாக இணைந்துள்ள இனியபாரதி ஆகியோருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை பேச்சு நடத்தினர்.

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழர் ஒருவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கி நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பிள்ளையானுக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்க அரசுத்தரப்பு முன்வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

எனது முதல் வெளிநாட்டு பயணம் தமிழ்நாட்டுக்குத்தான்: ஹாபீஸ் நசீர் அகமது

இலங்கை கிழக்கு மாகாண முதல்-மந்திரி ஹாபீஸ் நசீர் அகமது, 2 வாரத்திற்குள் தமிழ்நாட்டிற்கு வந்து, தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக ‘தினத்தந்திக்கு’ அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.

இலங்கையின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை போன்ற பகுதிகளை உள்ளடக்கியது கிழக்கு மாகாணம். இதன் புதிய முதல்-மந்திரியாக, ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்’ துணை தலைவரான ஹாபீஸ் நசீர் அகமது நேற்று முன்தினம் பதவியேற்றார். [Read more…]

அமைச்சர் ரிஷாத்தை சந்தித்தது உண்மையே ஆனால் அவர் எந்தப் பொதியையும் தரவில்லை: ஜெமீல்

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர் தன்னைச் சந்தித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனிடம் அழைத்துச் சென்றார் என்றும் இதற்கான ஏற்பாடுகளை மாகாண சபை உறுப்பினரான அன்வரே செய்ததாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஏ.எம். ஜெமீல் என்னிடம் தெரிவித்தார்.

என்னுடனான அவரது தொலைபேசி உரையாடலை அப்படியே தருகிறேன்…. [Read more…]

கிழக்கு முதலமைச்சர் தெரிவு : நடந்தது என்ன? உள்வீட்டு தகவல்கள்

கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்றிரவு (04) கிழக்கு மாகாண புதிய முதலமைச்சர் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். அதன்போது முடிவுகள் பெரிதாக எட்டப்படவில்லை.

இந்த நிலையில் இன்று (05) காலையில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ஹக்கீமின் கொள்ளுப்பிட்டி வீடு பரபரப்பாக காணப்பட்டது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஹாபிஸ் நஸீர், தவம், ஜெமீல் ஆகியோர் அங்கிருக்கவில்லை. (மன்சூரும் காணப்படவில்லை என கூறப்டுகிறது) ஜெமீலுடன் அமைச்சர் ஹக்கீம் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பலனளிக்கவில்லை. தவம் காலையிலேயே வந்து விட்டு சென்றதாக தகவல் வழங்கப்பட்டதனையடுத்து அவர் மீண்டும் அழைக்கப்படவில்லை. [Read more…]

கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹாபீஸ் நசீர் அஹமட்?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற உடன்படிக்கைக்கு அமைய இறுதி இரண்டரை வருடங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சு பதவி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்பட வேண்டும் [Read more…]

கிழக்கில் தமிழ்க் கூட்டமைப்பினர் ஆட்சியமைக்க ரணில் பூரண ஆதரவு

கிழக்கு  மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.  [Read more…]

முதலமைச்சர் பதவிக்காக சமூகங்களுக்கிடையே விரிசலை தோற்றுவிக்காதீர்

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி புதிய முதலமைச்சரை நியமிப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குமிடையே ஏற்பட்டுள்ள அரசியல் ரீதியான இழுபறி நிலையை தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான முறுகலாக காண்பிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக சமயங்களுக்கிடையிலான கருத்தாடல் மையம் தெரிவித்துள்ளது. 

[Read more…]

கிழக்கு மாகாண சபை அமர்வு எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

-பைஷல் இஸ்மாயில் –

கடந்த 12 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை இன்று (20) திகதி காலை 9.30 மணியளவில் கூடியது.

தவிசாளர் ஆரியபதி கலபெத்தி தலைமையில் இடம்பெற்ற இந்த அமர்வில் ஆளும்தரப்பினர் மற்றும் எதிர் தரப்பினர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை முன்வதை்தனர்.

[Read more…]

கிழக்கு மாகாணத்தில் ஆட்சி மாற்றம்: பேச்சுவார்த்தைகள் தோல்வி

இலங்கையில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

முதலமைச்சர் பதவி தொடர்பாக இணக்கப்பாடு ஏற்படாததே இந்த தோல்விக்குக் காரணம் என இரு தரப்பும் கூறுகின்றன.

[Read more…]

கிழக்கு மாகாண ஆட்சிமாற்றம்: நஜீப் அப்துல் மஜீதின் ஊடக அறிக்கை

கிழக்கு மாகாண சபையின் ஆட்சிமாற்றம் சம்மந்தமாக புதிதாக தோன்றியிருக்கின்ற நெருக்கடியைக் கவனத்திற் கொண்டு, அக்கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பது சம்மந்தமாக பொதுஜன ஐக்கிய முன்னனிக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்ற உடன்படிக்கையைத் தொடர்ந்தும் செயற்படுத்துவதற்கு ஏதுவான வகையில் தலையீட்டை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் எம். நஜீப் அப்துல் மஜீத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், பொதுஜன ஐக்கிய முன்னனியின் செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

[Read more…]

கிழக்கு மாகாண ஆட்சி: முஸ்லிம் காங்கிரஸ் – ஐ.ம.சு. கூட்டமைப்பு இணக்கம்?

கிழக்கு மாகாண ஆட்சியைத் தக்க வைப்பதில் முன்னைய ஆளும் தரப்பினர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இடையே இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [Read more…]

கிழக்கு ஆளுனராக அப்துல் மஜீதை நியமிக்குமாறு நியமிக்குமாறு கோரிக்கை

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாணத்திற்கான ஆளுனராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மாகாண சபை உறுப்பனருமான எம்.அப்துல் மஜீதையும் முதலமைச்சராக தமிழ் தேசிய  கூட்டமைச்சேர்ந்த ஒரு வரையும் நியமிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சமூக முற்போக்கு முன்னணி மகஜர்களை அனுப்பிவைத்துள்ளன.

[Read more…]

இன்றைய கிழக்கு மாகாணசபை நிகழ்வுகள் குறித்து ஷிப்லி பாறூக் அறிக்கை

Shibly Rally (25)இன்று கிழக்கு மாகாண சபையில் முஸ்லிகளுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைக்கு எதிரான ஓர் கண்டனப் பிரேரணை நிறைவேற்றுதலின் ஊடாக அரசிற்கு அழுத்தத்தினை கொடுப்பது சம்பந்தமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் அவர்களால் ஓர் பிரேரணை திட்டமிட்டபடி முன்வைக்கப்பட்டு இருந்தது.

ஏற்கனவே சபையினுடைய நிகழ்ச்சி நிரலிலும் இது உள்வாங்கபட்டிருந்த்தது. ஆனால் இன்று இதே விடயத்தை  அவசரப்பிரேரணையாக முன் மொழிந்து ஆரம்ப உரையை ஆற்றவேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கேட்டுகொண்டது. அவ்வாறு முதன்மைப்படுத்தி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு உள்வாங்க முடியாது என்ற சர்ச்சை எழுந்ததன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் தவிசாளருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து, தொடர்ச்சியாக சபை நடவடிக்கைகளை கொண்டு செல்வதற்க்கு முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததனாலும் இன்றைய சபை கூட்டம் எதிர்வரும் ஜூலை 16 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

[Read more…]