தாய்சேய் சிகிச்சை நிலைய கட்டட வேலைக்கு தடங்கல் – மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்..

எம்.எம்.இர்பான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண்ணோடை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தாய்சேய் சிகிச்சை நிலையத்தின் கட்டிட வேலைகளை தொடரவிடாமல் சிலர் தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவ்வாரனவர்களை சட்டத்தின்முன் நிருத்துவதோடு எங்களது பிரதேசத்திற்காக தாய்சேய் நிலையத்தை அமைத்துத் தருமாரும் கோறி செம்மண்ணோடை மக்கள் இன்று (புதன்கிழமை) பகல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் ஐரோப்பிய யூனியனின் 45 லட்சம் ரூபா நிதியளிப்பில் யுனிசப் நிறுவனத்தின் நடைமுறையப்படுத்தலில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினதும் மேற்பார்வையில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது. [Read more…]

துருவம் ஊடக வலையமைப்பு நடாத்தும் இலவச ஊடக செயலமர்வு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

துருவம் ஊடக வலையமைப்பு இரண்டாவது தடவையாக கிழக்கு மாகாணத்தில் ஊடக செயலமர்வு ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. ‘ஊடகங்கள் வாயிலாக இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்’ எனும் தலைப்பில் இச்செயலமர்வு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளது. இது முற்றிலும் இலவசமானது.

இந்த ஊடக செயலமர்வில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர்கள்இ சமூக வலைத்தளங்களில் ஆர்வமுள்ளவர்கள், செய்தி இணையத்தளங்களை நடாத்துவோர், டுவிட்டர் சேவைகளை நடாத்துவோர் மற்றும் ஊடகத்துறையில் ஆவர்வமுள்ள மாணவஇ மாணவிகளும் கலந்துகொள்ள முடியும். இச்செயலமர்வில் ஆண்கள்இ பெண்கள் என இருபாலாரும் கலந்துகொள்ள முடியும். [Read more…]

போராட்டத்திற்கெதிராக போராட்டம்…

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு- வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக இன்று 18.02.2015 பிற்பகல் இருவேறு தரப்பினர் ஏட்டிக்குப் போட்டியாக கறுப்புப் பட்டி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கருப்படும் ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிப்பதற்காக ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவேண்டுமென அரசாங்கத்தைக்கோரி ஒரு குழுவினர் துண்டுப்பிரசுரம் விநியோகித்தனர்.

[Read more…]

ஏறாவூரில் காணாமற்போன வாலிபர் சடலமாக மீட்பு

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமற்போனதாகக் கருதப்படும் வாலிபர் ஒருவரது சடலம் மட்டக்களப்பு-செங்கலடி கறுத்தப்பாலத்தின் கீழ் கிடந்து இன்று 18.02.2015 புதன்கிழமை காலை மீட்கப்பஏறாவுட்டதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

உருக்குலைந்து துர்வாடை வீசிய நிலையில் காணப்பட்ட இச்சடலம் மட்டக்களப்பு-கொம்மாதுறை உமா மில் வீதியைச்சேர்ந்த 27 வயதுடைய சுந்தரம் மகேந்திர ராஜா என்பவருடையதென்றும் [Read more…]

துரிதமாக அபிவிருத்தி கண்டுவரும் கிழக்குப் பலக்லைக்கழகம்

கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவுடனான நேர்காணல்

– நேர் கண்டவர் எம்.எஸ்.எம். நூர்தீன் (ஊடகவியலாளர்) –

நான் 2012 மார்ச் 5ம் திகதி கிழக்கு பலக்லைக்கழகத்திற்கு உப வேந்தராக கடமையைப் பொறுப்பேற்றேன்.

அன்றிலிருந்து கிழக்கு பலக்லைக்கழகத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டது என கிழக்கு பலக்லைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.

அவர் வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.

Dr Kitnan Kobintharajah (1)

பல்கலைக்கழகத்தின் பௌதீக வசதிகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள்; என பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன?

குறிப்பாக கூறினால் இவ்வளவு காலமும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்குப்பல்கலைக்கழகத்தை மற்றய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில் அது பௌதீக அபிவிருத்தியிலும் கல்வி அபிவிருத்தியிலும் பின்னடைவாகத்தான் காணப்பட்டது.

இப்போது முற்றுமுழுதாக பௌதீக வளத்தை பாரிய அளவில் அபிவிருத்தி செய்துள்ளோம். மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்திருக்கின்றோம்.

இந்த அபிவிருத்தியை மேற் கொள்வதற்காக தாரளமான உதவிகளை தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா ஆகியோர் வழங்கி வருகின்றார்கள். அதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா ஆகியோருக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

ஜனாதிபதி அவர்கள் இரண்டு முறை எமது பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்துள்ளார்கள் அதிலும் விசேடமாக ஒருவருடத்திற்குள் இரண்டு முறை விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கதாகவும்.

எம்மைப் பொறுத்த வரைக்கும் இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வாகும்.

உயர் கல்வியமைச்சரைப் பொறுத்தவரைக்கும் அவர் எந்தவொரு பாகுபாடுமின்றி எமது பல்கலைக்கழகத்திற்கு உதவி செய்து வருகின்றார்.

அவர் இன மத மொழி வேறு பாடின்றி துடிப்புடன் செயலாற்றி வரும் ஒரு அமைச்சர்

கிழக்கு பலக்லைக்கழகத்திற்கு எந்த உதவியை கேட்டுச் சென்றாலும் அவர் மறுத்ததில்லை.

அத்தோடு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவி பேராசிரியரியை  ஷானிகா ஹிரும்புரேகம மற்றும் உயர் கல்வியமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ண ஆகியோரும் இதற்கு உதவி வருகின்றவர்கள் அவர்களிடம் எந்த உதவியை தொலைபேசியிலோ நேரடியாகவோ கேட்டாலும் மறுக்காமல் உதவி செய்பவர்கள் அதற்காக கிழக்கு பலக்லைக்கழக சமூகமும் கிழக்கு மக்களும் நன்றிக்கடன் உடையவர்களாக இருக்க வேண்டும்.

கிழக்கு பலக்லைக்கழகத்திற்கு இவ்வளவு பாரியளவிளான உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி அவர்களுக்கு கிழக்கு மக்கள் எப்போதும் நன்றிக்கடன் உடையவர்களாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பௌதீக அபிவிருத்தியில் என்ன மாற்றம் உங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது?

 963 மில்லியன் ரூபாய் செலவில் மேற் கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்திகள் நிறைவடைந்துள்ளன.

அதில் நான்கு பாரிய திட்டங்கள் முடிவடைந்துள்ளது. கலை மற்றும் கலாச்சார பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடம் மற்றும் விலங்கியல் பிரிவுகளுக்கான கட்டிடத்தொகுதி மேலும் பிரதான நூலகம்  கட்டிடம் என்பன 720 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இக்கட்டிடங்கள் பேராசிரியர் அத்தநாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு பினனர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களால் திறந்து வைக்கப்பட்டன.

அத்துடன் 100 மில்லியன் செலவில் அரைசுவர், புதிய பாதை, வடிகால் திட்டம், பிரதான கலையரங்கு என்பன புனரமைக்கப்பட்டு அவற்றின் வேலைகள் முடிவடைந்துள்ளன.

143 மில்லியன் செலவில் புதிய விரிவுரை மண்டபம், பரீட்சை மண்டபம், அரைநிரந்திர விடுதி வசதிகள் (Pre-cast Hostel Facilities) மற்றும் சிறு உடல் வலுவூட்டல் பயிற்சி நிலையக் கட்டிட நிர்மாணப்பணிகள் முடிவடைந்துள்ளன.

தற்போது எவ்வகையான அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன?

2974 மில்லியன் ரூபா செலவில் தற்போது அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றில் 1600 மில்லியன் ரூபாய் செலவில 200 மாணவர்களை உள்வாங்கும் நோக்கில் மூன்று விடுதிக்கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு அவற்றின் நிர்மணப்பணிகள் முடிவடையும் நிலையிலுள்ளன. இக்கட்டிடங்கள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினால் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளன.

மற்றுமொரு விடுதிக்கட்டிடம் சுனாமி புனர்நிர்மாண திட்டத்தின் கீழ் 300 மாணவர்களை உள்வாங்கும் நோக்கில் 180 மில்லியன் ரூபாய் செலவில் நிhடமானிக்கப்பட்டு வருகின்றது.

கிழக்குப் பல்கலைக்கழக வைத்திய பிரிவு (Professorial Unit) கட்டுமான பணி மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் 299 மில்லியன் ரூபாய் செலவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பிள்ளையாரடியில் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்திற்கான கட்டிடத்தொகுதி (பகுதி-1) 360 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

அத்தோடு கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் பல்வேறு கட்டுமான பணிகள் 1400 மில்லியன் ரூபாய் செலவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன.

40 மில்லியன் ரூபாய் செலவில் புதிய நுழைவாயில், நுழைவாயிலுக்கான பாதை மற்றும் மலசலகூடங்கள், சிற்றுண்டிச்சாலை விரிவாக்கம் மற்றும் மகளிர் விடுதிக்கான கூரை புனரமைப்பு வேலைகள் ஆகியன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. முற்றும் வந்தாறுமூலை வளாகத்தில் மிக நீண்ட காலமாக கட்டி முடிக்கப்படாமல் இருந்த கலைப்பீட அரங்கமும் மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் நீண்ட காலமாக கட்டி முடிக்கப்படாமல் இருந்த நிர்வாக கட்டிடமும் 95 மில்லியன் ரூபாய் செலவில கட்டி முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Dr Kitnan Kobintharajah (2)

எதிர்காலத்தில் பௌதீக அபிவிருத்தியில் எவ்வகையான திட்டங்களை மேற் கொள்ளவுள்ளீர்கள்?

10538 மில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதற்காக சில திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் சில திட்டங்கள் அனுமதிக்காக அனுப்பபட்டுள்ளன.

அவற்றில் 7.96 பில்லியன் ரூபா நிதியின் கீழ் குவைத் அரசாங்கத்தின் உதவியுடன் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட அபிவிருத்தி திட்டம். (இத்திட்ட முன்மொழிவினை குவைத் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது)

303 மில்லியன் ரூபாய் செலவில் விவசாய பீடத்திற்கான கட்டிடத்தொகுதி நிர்மாணம் மற்றும் ஆங்கில மொழி கற்பித்தல் பிரிவிற்கான கட்டிடத்தொகுதி 275 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் 2 பில்லியன் ரூபாய் செலவில் கால்நடை உற்பத்தி தொழில்நுட்ப பீடம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இதனை 2015ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வியில் எவ்வகையான மாற்றத்தினை கொண்டு வந்துள்ளீர்கள்?

பௌதீக வளங்களில் மாத்திரமல்ல கல்வியிலும் பாரிய மாற்றத்தினை கொண்டுவந்துள்ளோம்.

அதில் குறிப்பிட்டுக் கூறுவதென்றால் இது வரை காலமும் பலக்கைல்கழகத்தில் பரீட்சையொன்று நடைபெற்றால் பரீட்சை முடிவை வெளியிடுதவற்கு பத்துப்பதினொரு மாதங்கள் காலதாமதமாகும். நான் வந்ததன் பின்பு ஆறு வாரங்களுக்குள் பரீட்சை முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளேன்.

அத்தோடு குறிப்பிட்ட ஆண்டிற்குள் கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய Webomatric Ranking 970 ஆல் அதிகரித்துள்ளது. 2013 ஜுலை மாதத்தில் 12,124,  2014 ஜுலை மாதத்தில் 11,154

பல வருடங்களாக தாமதமாகிய முதுநிலை பட்டம் மற்றும் இளநிலை பட்டம் நிகழ்சி திட்டங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

Master of Business Administration– 13.09.2013 அன்று அனுமதிக்கப்பட்டுள்ளது

Bachelor of Education in Preschool & primary Education –  09.05.2013 அன்று அனுமதிக்கப்பட்டுள்ளது

Master of Education – 10.12.2013 அன்று அனுமதிக்கப்பட்டுள்ளது

Master of Science in Envt Sc – 10.12.2013 அன்று அனுமதிக்கப்பட்டுள்ளது

Master of Development Economics -17.07.2014 அன்று அனுமதிக்கப்பட்டுள்ளது

கடந்த 2011 / 2012 கல்வி ஆண்டுகளில் மேலதிகமாக 545 தமிழ் மொழி மாணவர்கள் உள்வாங்கப்பட்டமை.

24.10.2013 அன்று இந்து நாகரிக திணைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

உள்வழிப்பாதைகள் புனருத்தானம் மற்றும் இயற்கைக்காட்சிகள் மூலம் கற்றலுக்கான சூழலை உருவாக்கல்

2012 செப்டம்பர் மாதம் விவசாய பீடத்திற்கான hatchery பிரிவு மீள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பின்வரும் குறிப்பிடதக்க நிகழ்வுகள் விவசாய பீடத்தில் நடாத்தப்பட்டுள்ளன.

2013 ஜுனில் விவசாயிகள் கள தினம் மற்றும் விலங்கியல் விஞ்ஞான தினம் 2012 மே Floriculture சம்பந்தப்பட்ட பயிற்சி பட்டறை ஜனவரி 2014 விவசாயிகளின் தேவைகள் மதிப்பீடு என்பகைவள் நடாத்தப்பட்டுள்ளன.

கல்வி முன்னேற்றத்திற்கான பின்வரும் (MOU) உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

Long Logistics முகாமைத்துவம் தொடர்பாக இலங்கை Naval Maritime Academy உடன்  உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமானா வங்கி லிமிடட் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Institute of Policy Studies

விவசாய பீடம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீடங்களினால் 25 மற்றும் 20 மில்லியன் ரூபாய் QIC மானியம் வெல்லப்பட்டுள்ளது.

பின்வரும் பதவி உயர்வுகள் மற்றும் வேலைக்கமர்த்துதல்கள் இடம் பெற்றுள்ளன.

30 புதிய கல்விசார் உத்தியோகத்தர்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளதுடன்  சிரேஸ்ட விரிவுரையாளருக்கான பதவியுயர்வு தரம் 11 – 23 மற்றும் 01 சிரேஸ்ட விரிவுரையாளருக்கான பதவியுயர்வு தரம் 1 – 11

மற்றும் 85 பேராசிரியருக்கான பதவியுயர்வு –கல்விசாரா நியமனங்கள் –

சகல கற்கை நிகழ்சி திட்டங்களுக்கான by-laws தயாரித்தல் முடிவுறும் தருவாயில் உள்ளமை போன்றவற்றை குறிப்பிடுவதுடன்

தேசிய மட்டத்தில் மற்றும் உள்ளக பீட மட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கலை, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் ஊக்குவிப்புகள் ஆசிரியர் மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி நிகழ்சிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இது வரை காலமும் இருந்த ஊழியர்கள், ஆசியரியர்கள் நியமனங்களின் போது தலையீடுகள் இருந்தன்.

தற்போது எந்தவித தலையீடுகளுமின்றி மிகவும் திறமையானவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

பெறுபேறுகளை முன்னிறுத்தி மாணவர்கள் மையப்படுத்தப்பட்ட கல்விமுறைகள் பற்றி கூறமுடிமா?

85 வீதமான விரிவுரை மண்டபங்களில் multimedia projector வசதி செய்யப்பட்டுள்ளது அத்தோடு வீடீயோ நேர்முக உரையாடல் வசதிகள்; ஏற்படுத்தப்பட்டுள்ளது e-learning முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது,

மாணவர்கள் மையப்படுத்தப்பட்ட கல்விமுறை சம்பந்தமாக பின்வரும் பயிற்சி பட்டறைகள் நடாத்தப்பட்டுள்ளன.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் – 26 பிப்ரவரி 2014 (உயர்கல்வி அமைச்சு செயலாலரின் நெறிபடுத்தலின் கீழ் / MOHE)

வயம்ப பல்கலைக்கழகத்தில்- 29 – 30 மார்ச் 2014

கற்றல் முகாமைதுவ முறைமை – 07 பயிற்சி பட்டறைகள் கிழக்கு பல்கலைக்கழகத்தில்

சகல பீடத்திற்குமான பாடதிட்ட (Curriculum) மீளாய்வு

ICT அபிவிருத்திகள் தொடர்பாக என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

பல்கலைக்கழக நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் கற்றல் முகாமைத்துவ முறைமை (LMS) அறிமுகபடுத்தப்பட்டதுடன் இது தொடர்பான பலதரபட்ட பயிற்சிப் பட்டறைகளும் மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது

Google உடன் இணைந்து புதிய மின்னஞ்சல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் முறைமை முன்னதை விட கூடிய தரம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் தரத்தினை உலகளாவிய ரீதியில் அதிகரிக்கும் நோக்கில் புதிய இணையத்தளம் உருவாக்கப்பட்டு அதில் உத்தியோகத்தர்களின் விபரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

Internet Server இன் வேலைநேரம் 24 மணி நேரமும் அதிகரித்துள்ளதுடன் வாரத்தில் 7 நாட்களும் இயங்குகின்றது. என்னுடைய காலத்திற்கு முன்னர் காலை 8.30 மணியிலிருந்து  மாலை 4.30 மணி வரை வரையறுக்கப்பட்டிருந்தது

Internet Bandwidth இன் அளவு 5 mbps இலிருந்து 36 mbps க்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரதான பல்கலைக்கழகத்தின் மின்னஞ்சல் வேகத்தினை அதிகரிப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

கணிதவியல் பகுதி, இரசாயனவியல் பகுதி, ஒன்றுகூடல் பகுதி மற்றும் பௌதீக கல்வி பகுதிக்கான மின்னஞ்சல் வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது

பிரதான பல்கலைக்கழகத்திற்கான Wi-Fi  வசதிகள் வழங்கல் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வினைதிறன் மிக்க தகவல் தொழிநுட்ப (IT) பகுதியினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமிருந்து அனுமதி பெறுவதற்கான திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது.

விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கென 60 கணனிகள் அடங்கிய கணனி ஆய்வு கூடம் CICT கட்டிடத்தின் கீழ்  மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. (தற்பொழுது வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது)

மின்னஞ்சல் முறைமையில் அதன் கொள்ளளவினை அதிகரிக்கவும் வேகத்தினை கூட்டவும் Blade Server பொருத்தப்பட்டுள்ளது.

சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் LEARN Connectivity Online தரமுயர்த்தப்பட்டுள்ளது.

Online நூலக வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. (e-repository, Library Management Automation Integrate software and etc…)

கிழக்கு பல்கலைக்கழக நிதி மற்றும் நிர்வாக முன்னேற்றங்கள் எப்படி உள்ளன?

கடந்த காலங்களில் பல்கலைக்கழகத்தின் சகல மட்டங்களிலும் காணப்பட்ட ஊழல் மோசடி நிலைமைகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளன. உதாரணமாக 2012-ம் ஆண்டு நான் உப உபவேந்தராக  பதவியேற்கும் போதுது சுமாராக 34 பதிலளிக்கப்பட முடியாத கணக்காய்வு சார் கேள்விகள் (Audit Query) முன் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது 2014 செப்டம்பர் மாதத்தில் எந்தவொரு பதிலளிக்கப்பட முடியாத கணக்காய்வு சார் கேள்விகளும் இல்லை.

கணக்கறிக்கைகள் நேரத்திற்கு சமர்பிக்கப்படுகின்றன.

கொள்வனவு மற்றும் நிதி சார்ந்த விடயங்களில் காணப்பட்ட தாமதங்கள் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.சகல நிர்வாக சம்மந்தப்பட்ட வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது (AR/SAR/AB)

2008 தொடக்கம் 2013 வரையான Board of Survey பதியப்பட்டுள்ளது

பல்கலைக்கழகத்தினுடைய பிரதான திட்டம், இணைந்த திட்டம் மற்றும் கொள்கை வகுப்பு அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தனியான கொள்கை வகுப்பு அபிவிருத்தி திட்ட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு அந்தப்பகுதிக்கான ஓரு உதவி பதிவாளர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்

2012 லிருந்து 2014 வரையிலான காலப்பகுதியில் பொதுத்திறைசேரியிலிருந்து அதிகளவு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை.

பெற்றுக்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் சரியாகவும், வினைத்திறனாகவும், இரசாயன மற்றும் கற்பித்தல் உபகரண கொள்வனவு மற்றும் மாணவர் நலன்புரி செயற்பாடுகளுக்கும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலதிக ஒதுக்கீடுகள் கற்பித்தல் உபகரண கொள்வனவு மற்றும் மாணவர் நலன்புரி செயற்பாடுகளுக்கும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

ஊழியருக்கான கடன் வழங்களில் ஏற்பட்ட தாமதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

பலதரப்பட் நீண்ட கால சட்ட ரீதியான பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

பேரவை, Audit Committee, மற்றும் நிதிக்குழு போன்ற குறிப்பிடத்தக்க முக்கிய கூட்டங்கள் சரியான கால இடைவெளியில் நடாத்தப்பட்டு வருகிறன.

கிழக்கு பலக்லைக்கழகத்தில் சமூக ஒற்றுமை மற்றும் LLRC Recommendations வேலைத்திட்டங்களை மேற் கொள்கின்றீர்களா?

2012 / 2013 தமிழ் மாணவர்களுக்கு அடிப்படை சிங்கள மொழியறிவு அதே போன்று சிங்கள மாணவர்களுக்கு அடிப்படை தமிழ் மொழியறிவு நிகழ்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பிடத்தக்க சமய கலாச்சார நிகழ்வுகள் பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

அண்மையிலும் இப்தார் முஸ்லிம் சமய நிகழ்வு நிர்வாக பிரிவின் அனுசரணையுடன் நடத்தப்பட்டது.

சமயங்களுக்கிடையில் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் சகல மதங்களுக்கான வணக்கஸ்தலங்கள் அமைப்பதற்கென நில ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இன ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகளுக்கு நிதியுதவி வழங்கல்

மாணவர் நலன்புரி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றனவா?

விளையாட்டு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 20 மில்லியன் ரூபாய் செலவில உடல் வலுவூட்டல் நிலையம் ஜனாதிபதி அவர்களால் கடந்த மே மாதம் திறந்து வைக்கப்பட்டது

10 மில்லியன் ரூபாய் செலவில் சிற்றுண்டிச்சாலை விரிவாக்கம் செய்யபப்படுகிறது (கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன)

கணினி ஆய்வு கூடம் மேலும் 200 கணனிகள் வழங்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் மகாபொல நிறுவன நிதியமிடமிருந்து கிடைக்கும் மகாபொல மற்றும் மானியம் தொடர்பான கொடுப்பனவுகள் அனைத்து மாணவர்களுக்கும் உடனுக்குடன் பெறுவதற்கும் மற்றும் மீளப்பெறுவதற்கும் ஆவண செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் மாணவ விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மென்திறன் அபிவிருத்தி, சாதகமான மனப்பாங்கு மற்றும் ஆளுமை விருத்தி போன்ற பலதரப்பட்ட பயிற்சி பட்டறைகள் மாணவர்களுக்கு நடாத்தப்பட்டுள்ளன.

மாணவர்கள் கற்கை விடையங்களை பெற்றுக்கொள்வதற்காக நூலகத்தில் 6 தகவல் மையங்கள் பொருத்தப்பட்டுள்ளன

விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கான வசதி அளித்தல்

சில வருடங்களாக தாமதப்பட்டுக் கொண்டிருந்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவிற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது

மாணவர்கள் தங்களுடைய மென்திறன் மற்றும் தொடர்பாடல் அறிவுகளை அபிவிருத்தி செய்ய பலதரப்பட்ட பயிற்சி பட்டறைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது

ஊழியர் நலன்புரி நடவடிக்கைகள் எவ்வாறுள்ளன?

உள்ளக பீடங்களின் கற்பித்தல் கொடுப்பனவுகள் மணித்தியாலத்திற்கு ரூபா 150 இலிருந்து ரூபா 500 ஆக நிதிக்குழுவின் அனுமதியுடன் அதிகரிக்கப்பட்டுள்ளது

கல்விசார் ஊழியர்களின் ஆண்டிற்குரிய ஆய்வுக்கான ஒதுக்கீடுகள் அவர்களின் ஆய்வு மாநாட்டு பதிவுகள் மற்றும் வெளியிடலுக்கான செலவீனக்களுக்கென ஆண்டிற்கான கொடுப்பனவு ரூபாய் 25000 ஆக அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு கல்விசார் ஊழியருக்கென கணினி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன

ஊழயர்களுக்கான சம்பளம் மற்றும் கடன் வசதி வழங்களில் காணப்பட்ட தாமதம் குறைக்கப்பட்டுள்ளது

ஊழியர்கள் மத்தியில் குழுச்செயற்பாடு மற்றும் நேர் மனப்பாங்கினை விருத்தி செய்யும் வகையில் இரண்டு தங்குமிடம் பயிற்சி பட்டறைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது

ஊழியர்களின் மரணச்சடங்கு செலவீனங்களுக்கென உபவேந்தர் நிதியிலிருந்து ரூபா 25000 பெறுமதியான நிதி வழங்கப்படுகிறது

மாணவர்கள் அல்லது ஊழியர்களுக்கு ஏதேனும் பாரதூரமான உடல் உபாதைகள் ஏற்படுமிடத்து ஆகக் கூடுதலாக ரூபாய் 100,000 பண உதவி வழங்கப்படுகிறது

நீங்கள் படித்த இப் பல்கலைக்கழகத்துக்கு உப வேந்தராக நியமிக்கப்பட்டு கனடாவிலிருந்து வந்த போது எவ்வாறான கற்பனையுடன் வந்தீர்கள்?

நான் இந்த பலக்லைக்கழகத்தில் கல்வி கற்றவன் என்ற வகையில் எனக்கு கல்வி கற்கும் போதே தெரியும் இங்கு எங்கே பிரச்சினை இருக்கின்றது. அதை எப்படி சரிசெய்ய வேண்டும் என்பது.

குறிப்பிட்ட காலத்திற்குள் இங்கு காணப்பட்ட ஊழலை முழுமையாக இல்லாமல் செய்து விட்டேன். இதை நான் பெருமையாக கூறமுடியும்.

நிருவாகத்தில் சகல மட்டங்களிலும் இங்கு இருந்த ஊழல்கள் இன்று பூஜ்யத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.

எனது நிருவாகத்தில் நடந்த பாரிய மாற்றம் என இதை குறிப்பிட முடியும்.

இந்த ஊழலை இல்லாமல் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நான் இச் சந்தாப்பத்தில் நன்றி கூறுகின்றேன்.

நான் இங்கு வந்து செய்த முதல் வேலை கேள்விப்பத்திர பெட்டியை எனது முன்னிலையில் எடுத்து எனது செயலாளரின் பொறுப்பில் கொடுத்தேன்.

கேள்விப்பத்திர பெட்டியை உரிய நேரத்திற்கு மாத்திரம்தான் உடைக்க வேண்டும் என கூறினேன்.

நான் உப வேந்தராக வருவதற்கு முன்பெல்லாம் கேள்விபத்திரத்தைக் கோரும் விடயம் ஊழல் நிறைந்ததாக காணப்பட்டது.

அதை ஒழுங்கு படுத்தினேன். இதனால் என் மீது சிலர் ஆத்திரப்பட்டனர்.

இதிலிருந்த ஊழலை முதலாவதாக இல்லாமல் செய்தேன்.

 நீங்கள் ஒரு கடினமானவர் என சிலர் குறை கூறுகின்றனரே இது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

அதை நான் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் ஏனென்றால் கடந்த மூன்று வருடங்களிலும் இங்கு கடினமாக நான் நடந்து கொள்ளாமல்  மென்மையாக நடந்திருந்தால் இந்த மாற்றத்தினை இங்கு கொண்டு வந்திருக்க முடியாது.

கடுமையாக இருந்த தால் தான் இந்த மாற்றனத்தினை ஏற்படுத்த முடிந்தது.

இப்போது பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளேன். இனி வரும் காலங்களில் நிச்சயமாக மென்மையான போக்கினை கடைப்பிடிப்பேன்.

கிழக்கு பலக்லைக்கழகம் ஒரு ஒழுங்கு படுத்தலுக்கு கீழ் தற்போது வந்து விட்டது. அதனால் இனி மென்மையான போக்கையே கடைப்பிடிப்பேன்.

நெல்சன் மண்டேலா உலகம் போற்றும் அமைதியான தலைவர் அவர் சிறையிலிருந்து வந்து தென்னாபிரிக்காவை ஒரு முறை தான் ஆட்சி செய்தார் அவரின் ஆட்சிக்காலத்தில் அங்கு பாரிய கொலையும் கொள்ளையும் இடம் பெற்றது.

ஆனால் அவரினால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதற்கு பின்னர் வந்த தலைவர் முதல் வருடங்களிலேயே கடுமையான போக்கை கடைப்பிடித்து நைஜீரியாக்காரர்களை பொலிசாரை பலப்படுத்தி கைது செய்து ஒரு கடினமான போக்கை கடைப்படித்ததனால் தென்னாபிரிக்கா ஒரு ஸ்த்திரத்தன்மைக்கு வந்து விட்டது. அந்த நிலையைத்தான் இங்கு நான் கடைப்பிடித்தேன்

ஊழியர்கள் ஆரம்பத்தில் என்னை ஏசினாலும் இன்று எனது நடவடிக்கையை ஏற்றுக் கொண்டு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினை கருத்திற் கொண்டு என்னுடன் நிற்கின்றார்கள்.

பத்து அல்லது பதினைந்து ஊழியர்களைத் தவிர ஏனைய அனைத்து ஊழியர்களும் என்னுடன் நிற்கின்றார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் விஸேடமாக கிழக்குப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களுக்கு நன்றி கூறவேண்டும்.

இவ்வளவு அபிவிருத்திகளையும் இங்கு செய்வதற்கு உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருந்துவரும் பேரவை உறுப்பினர்களுக்கு நான் விஸேடமாக நன்றி கூறுகின்றேன்.

அவர்களின் ஒத்துழைப்பில்லாமல் இவற்றை நான் செய்திருக்க முடியாது.

Dr Kitnan Kobintharajah (3)

உங்களது கல்வி நிலையை குறிப்பிடமுடியுமா?

நான் அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறை முஸ்லிம் பிரதேசத்திலேயே கல்வி கற்றேன். எனது ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகம் செல்லும் வரை சம்மாந்துறையிலேயே எனது கல்வி நடவடிக்கை இருந்தது.

பின்னர் கிழக்குப் பலக்லைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து 23.12.1993 ம் ஆண்டு வெளியேறினேன். கிழக்குப் பலக்லைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த எனக்கு ஏழே ஏழு தினங்களில்  விரிவுரையாளராக நான் கற்ற கிழக்கு பல்கலைக்கழகத்திலேயே வேலை கிடைத்தது.

1994.1.1 அன்று நான் விரிவுரையளராக கடமைக்குச் சென்றேன். 1998ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு உயர் கல்விக்காக சென்றேன்.

முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களை அங்கு பெற்றேன்.

2001ல் நான் நாட்டுக்கு வந்தேன். பின்னர் 2004ல் இங்கு நிலவிய அசாதரண சூழ்நிலையால் நாட்டை விட்டு வெளியேறினேன். நான் வெளியேறும் போது இங்கு சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றினேன்.

பின்னர் கனடாவுக்குச் சென்று அங்குள்ள யோக் பலக்லைக்கழகத்தில் ஒரு சிறு காலம் வருகை தரு ஆராய்ச்சியாளராக கடமையாற்றினேன்.

பின்னர் 2005ம் ஆண்டு மீண்டும் நான் கல்வி கற்ற தென்னாபிரிக்கா பல்கலைக்கழகத்திற்கு விரிவுரையாளராக வேலை பெற்றுச் சென்றேன்.

மீண்டும் 2006ல் திரும்பவும் கனடாவுக்குச் சென்றேன். 2006லிருந்து 2008 வரைக்கும் நியுபவுன்லன் மாநிலத்திலுள்ள மெமோரியம் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் ஒப்பந்த அடிப்படையிலான பேராசிரியராக கடமையாற்றினேன்.

2009ல் மீண்டும் கனடா யோக் பல்கலைக்கழகத்தில் கல்வி மாணிப்பட்டத்தின் மேலதிகமான நாலாவது பட்டப்படிப்பையும் முடித்தேன்.

B.Sc (Hons) EUSL, Sri Lanka மற்றும்  B.Ed (York, Canada) மற்றும் M. Sc. / Ph. D (South Africa) ஆகிய பட்டங்களைப் பெற்றேன்.

பின்னர் 2009 லிருந்து 2012 நான் இங்கு வரும் வரைக்கும் கனடா ஒண்டாரியாவிலுள்ள University of Ontario Institute of Technology  (UOIT)  எனப்படும் பலக்லைக்கழகத்தில் பருவகால பேராசிரியராக கடமையாற்றினேன்.

இங்கு நான் வரும் போது சஊதி அரேபியாவிலுள்ள ஜுபைல் பலக்லைக்கழகத்திற்கு உதவி பேராசிரியராக நிரந்தர வேலை கிடைத்தது.

அப்படியானால் அதை விட்டு விட்டு ஏன் இங்கு வந்தீர்கள்?

நான் இந்த நாட்டின் இலவசக் கல்வியைப் பெற்றவன் என்ற வகையில் அதற்கு நன்றி கூறும் வகையிலும் அநத இலவசக்கல்வியை தந்த இந்த நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் நான் கல்வி கற்ற பல்கலைக்கழகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக நான் இங்கு வந்தேன்.

இறுதியாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?

இந்த பலக்லைக்கழக அபிவிருத்திக்காக மிகையான உதவிகளை செய்து வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா அத்தோடு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவி பேராசிரியரியை  ஷானிகா ஹிரும்புரேகம மற்றும் உயர் கல்வியமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ண ஆகியோருக்கு நன்றிகளை கூறுவதுடன் இதன் வளர்ச்சிக்கு உதவும்  இம்மாவட்டத்தில் இருக்கின்ற அமைச்சர் பசீர் சேகுதாவூத் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட மாவட்டத்திலுள்ள அரசியல் வாதிகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

அஸ்பர் – த. வி. கூ. எம்.பிக்கள் இடையே வாய்த்தர்க்கம் – மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமளி

– எமது செய்தியாளர் – 

காத்தான்குடி நகரசபை தவிசாளர் அஸ்பர் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை (29.09.2014) மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

அண்மைக்காலமாக காத்தான்குடி நகரசபைப் பிரிவுக்குள் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் இந்த இரு தரப்புகளுக்கும் இடையே அடிக்கடி தர்க்கம் இடம்பெற்று வரும் நிலையில், கடந்த கூட்டத்தில் இது வலுத்து நீண்டநேரம் வாய்த்தர்க்கம் இடம்பெற்றது

இதன்போது பதிவுசெய்யப்பட்ட காணொளி பதிவேற்றப்படுகின்றது.

[youtube https://www.youtube.com/watch?v=EWpQoZ_C4GM]

குருக்கல்மடம் மனிதப்புதைகுழி தோண்டும் நடவடிக்கை மீண்டும் ஒத்திவைப்பு

– நமது செய்தியாளர் –

குருக்கல்மடம் மனிதப்புதைகுழி தோண்டும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் 24ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

சட்டமா அதிபர் திணைக்களம் உட்பட சம்பந்தப்பட்ட பிரிவுகளால் கோரப்பட்ட கால அவகாசத்தை ஏற்றுக்கொண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி இதற்கான உத்தரவை பிறப்பித்ததாக தெரியவருகிறது

மேலதிக விபரங்கள் பின்னர் பதிவேற்றப்படும்

மட்டக்களப்பிற்கு கஞ்சா பிடிக்கும் விஷேட நாய் கொண்டுவரப்பட்டுள்ளது

DRUGSறிதா

மட்டக்களப்புக்கு கஞ்சா பிடிக்கும் விஷேட பொலிஸ் நாய் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். [Read more…]

மட்டு சமுர்த்தி உத்தியோகத்தர்களின் மறைவு அதிர்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது -பசீர் சேகுதாவுத்

Basheer Segu Dawoodறப்தான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மூவரின் உயிரிழப்பானது அதிர்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என ஊக்குவிப்பு உற்பத்தி திறன் விருத்தி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். [Read more…]

மன்னம்பிட்டி விபத்தில் சிக்கியவர்கள் மட்டு போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்

accident1றிதா

மன்னம்பிட்டி வாகன விபத்தில் காயமடைந்து பொலனறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 15 சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். [Read more…]

மாகாண மீலாத் போட்டிகளில் மட்டக்களப்பு மத்தி வலயம் முதலிடம்

first-place– றப்தான் –

கிழக்கு மாகாண மீலாத் போட்டியில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் 147 புள்ளிகளை பெற்று முதலாமிடத்தை பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் இஸ்லாம் பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர் அஷ்ஷெய்ஹ் எம்.ஐ.அப்துல் கபூர் மதனீ தெரிவித்தார்.

தேசிய மீலாத் விழாவையொட்டி கிழக்கு மாகாண மட்டத்திலான மீலாத் போட்டி 4ம், மற்றும் 5ம் திகதிகளில் கல்முனையில் நடைபெற்றது.

[Read more…]

மணவறையை அலங்கரிக்க வேண்டிய மாப்பிள்ளை வைத்தியசாலையில்

accident1மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் முதன்முறையாக விபத்து ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  [Read more…]

தேசிய புத்தாக்குனர் போட்டியில் ஏறாவூர் அலிகார் தெரிவு

Photo-0024ஏறாவூர் அபூ பயாஸ் 

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை (க .பொ .த) சாதாரணதர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் அப்துல் சலாம் முஹம்மது நஸீம் இன்று(05-07-2013) திருகோணமலை மனித வள முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்ற ‘தேசிய புத்தாக்குனருக்கான’ மாகாணமட்ட போட்டியில் மட்டக்களப்பு மத்தி வலயத்தில் ஒரே ஒரு சாதனை வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இப்போட்டி நிகழ்வில் மாகாண ரீதியாக 300 போட்டியாளர்கள் பங்குபற்றிய போதும் 30 பேர் மட்டுமே புதிய ஆக்குனர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

[Read more…]

மட்டக்களப்பு கோவில் உடைப்பு கவன ஈர்ப்பு பேரணி பொலிசாரின் தலையீட்டால் ஒத்திவைப்பு

Batti Kovil– றிதா –

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு மற்றும் புதுக்குடியிருப்பு களுதாவளை போன்ற பிரதேசங்களில் இந்து கோவில்கள் உடைக்கப்பட்டு கோவில் உடமைகள் கொள்ளையிடப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாங்காடு புதுக்குடியிருப்பு, போன்ற பகுதிகளில் நடைபெறவிருந்த கவனஈர்ப்பு பேரணியை களுவாஞ்சிகுடி பொலிசாரின் வேண்டுகோளின் பேரில் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

[Read more…]

தாழங்குடா பனங்கைப்பணி மாதிரிக்கிராமத்தின் பெயர்ப்பலகையை டக்ளஸ் தேவானந்தா திரைநீக்கம் செய்து வைத்தார்

daklas visit at thalankudah (3)றிதா

மட்டக்களப்பு தாழங்குடா பனங்கைப்பணி மாதிரிக்கிராமத்தின் பெயர்ப்பலகையை இன்று(2.7.2013)மாலை பாரம்பறிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திரைநீக்கம் செய்து வைத்தார். [Read more…]

தனியார் நிறுவனங்களிடம் வட்டிக்கு பணம் பெற்ற இருவர் தற்கொலை செய்துள்ளனர்-திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ்

GA Battiறப்தான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதாலான வட்டிக்கு சில தனியார் நிறுவனங்களிடம் தொழில் முயற்சிக்காக கடன் பெற்ற இருவர் அதை செலுத்த முடியாத நிலையில் அன்மையில் தற்கொலை செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். [Read more…]

எனது அமைச்சு நாடு பூராவும் சேவையாற்ற வேண்டிய அமைச்சாகும்-டக்ளஸ் தேவானந்தா

daklas visit at batti (3)றிதா

எனது அமைச்சு நாடு பூராவும் சேவையாற்ற வேண்டிய அமைச்சாகும் எனினும் அரசியல் சூழ் நிலை காரணமாக ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மத்திரம் சேவையாற்ற வேண்டியுள்ளது எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திலும் எனது அமைச்சு செயற்திட்டங்களை மேற் கொள்ளும் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். [Read more…]

முன்னாள் முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டில் முனைக்காட்டு கிராமம் அவிருத்தி

imageறிதா

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முனைக்காட்டு கிராமம் முன்னாள் முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதற்கான ஆரம்பக் கூட்டம் நேற்று ஞாயிற்றக்கிழமை விவேகானந்தா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

[Read more…]

நாவலடியில் தடைசெய்யப்பட்ட வலையைப் பாவித்து மீன்பிடித்தோர் கைது

fishing-nets1– றிதா –

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மீன்பிடி வலையை பாவித்து மீன் பிடித்த நான்கு மீனவர்களை பொலிசார் நேற்று கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து சட்டவிரோத வலைகலையும் கைப்பற்றியதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி கடற்கரையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் குறி;ப்பிட்டனர்.

[Read more…]

மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக வளாகத்தில் நூலகம் திறந்துவைப்பு

Police Library (5)– றப்தான் –

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முதலாக மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் (17.06.2013) திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட பொலிசாரினதும் மற்றும் பொலிஸ் ஊழியர்களினதும் நன்மை கருதி நூலகத்தை கிழக்குப் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர நினைவுப் படிகத்தை திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார்.

[Read more…]

பொது பல சேனாவுக்கு ஒரு நியாயம் ஏனையோருக்கு ஒரு நியாயம் – யோகேஸ்பரன்

DSC06776– றப்தான் –

பொது பல சேனா அமைப்பு ஊர்வலங்கள் பேரணிகள் நடாத்துவதாயின் எந்தவொரு பொலிஸ் அனுமதியும் பெறத்தேவையில்லை ஆனால் தமிழர்கள் முஸ்லிம்கள் கிறிஸ்த்தவர்கள் ஊர்வலங்கள் பேரணிகள் நடாத்துவதாயின் பொலிஸ் அனுமதி தேவைப்படுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.யோகேஸ்பரன் தெரிவித்தார்.

[Read more…]

ஏறாவூர் இ. போ. ச. சாலை பஸ் சாரதி மீது தாக்குதல்

04– கல்குடா செய்தியாளர் –

வாழைச்சேனையில் இருந்து ஏறாவூர் நோக்கி பயனித்த இலங்கை போக்குவரத்துச் சாலையின் ஏறாவூர் சாலை சாரதி மீது இன்று (15.06.2013) பிற்பகல் 05.30 மணியளவில் நடாத்திய தாக்குதலில் காயம் அடைந்த சாரதியான எம்.ஐ.எம்.லாபீர் (வயது – 45) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதியை இலக்கு வைத்து சோடா போத்தலினால் தாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் இரண்டு பயணிகள் சிறு காயமடைந்ததாகவும் அறிய முடிகின்றது.

[Read more…]

ஏறாவூரில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் உறவினர்களிடத்தில் ஒப்படைப்பு

Photo-0018– அபூ பயாஸ் –

நேற்று மாலை ஏறாவூர் பொலிஸ் பிரிவில் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் இன்று அவரது குடும்ப உறவினர்களிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

பிரதான வீதி ஏறாவூர் 4 எனும் முகவரியில் வசித்து வரும் மேரி அல்பினாஸ் ஹலர் எனும் 40வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

[Read more…]

கச்சான் காற்று: வேடர்குடியிருப்பில் வீடுகள் சேதம்

Bt strong wind (1)– றிதா –

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வீசிய கச்சான் சுழல் காற்றினால் தாழங்குடா வேடர்குடியிருப்பு கிராமத்தில் இரண்டு வீடுகளின் கூரைகள் விழுந்ததில் வீடுகள் பகுதியளவு சேதத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த கச்சான் சுழல் காற்றினால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சில வீட்டு வேலிகள் மற்றும் மரங்களும் விழுந்துள்ளன.

[Read more…]

காத்தான்குடி நகர சபை தலைவர் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை தலைவர் ஆகியோர் ஜெர்மன் விஜயம்

flightறிதா

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை தலைவர் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை தலைவர் ஆகியோர் இம் மாதம் 17ம் திகதி ஜேர்மன் நாட்டுக்கு செல்லவுள்ளனர்.

ஜேர்மனில் நடைபெறும் நிலையான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே இவர்கள் ஜேர்மன் செல்லவுள்ளனர்.

[Read more…]

விசேட தேவையுடைய மாணவர்களுக்கிடையில் ‘இளைஞர் பரிமாற்று சிநேகபூர்வ சந்திப்பு’

06கல்குடா செய்தியாளர்

இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கிடையில் ‘இளைஞர் பரிமாற்று சிநேகபூர்வ சந்திப்பு’ எனும் வேலைத்திட்டத்தில் கண்டி மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள விசேட தேவையுடையவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று  (02.06.2013) இடம்பெற்றது .

[Read more…]

ஆரையம்பதியில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர் கைது

DSC05855 றிதா

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் கடந்த மாதம் வீடொன்றில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் நேற்று (26.5.2013)பொலிசாரினால் கைப்பற்றப்பட்டதுடன் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரையும் காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளனர்.

[Read more…]

ஆரையம்பதி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை கைகலப்பு

clash-logoறப்தான்

மட்டக்களப்பு மாவட்டத்தின ஆரையம்பதி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை இடம் பெற்ற விளையாட்டுப்போட்டியின் போது ஏற்பட்ட கைகலப்பினால் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். [Read more…]

மட்டுவில் புத்தர் சிலை வைப்பை தடுக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்-பா.அரியநேந்திரன்

ariyanenthiranறிதா

மட்டக்களப்பு நகரின் நுழைவாயில் திட்டமிட்ட முறையில் புத்த சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த அனைத்துவழிகளிலும் முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்:

[Read more…]

மட்டு வவுணதீவில் வெடிக்காத குண்டு கண்டுபிடிப்பு

BO-3முகம்மட்

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் நேற்று வெடிக்காத குண்டு ஒன்றை  பொலிசார் மீட்டெடுத்துள்ளனர்.

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள [Read more…]

மட்டுவில் தனியார் தொலைகாட்சி ஒன்று ஆரம்பம்

IMG_0106றப்தான்

மட்டக்களப்பின் தனியார் தொலைக்காட்சி யொன்று தனது சேவையை அதிகாரபூர்வமாக ஆரம்பித்துள்ளது. மட்டுஒளி என்ற நாமத்துடன் இந்த சேவை மட்டக்களப்பு பூம்புகாரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் கலை,கலாசார நிகழ்வுகள்,நடைபெறும் சம்பவங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. [Read more…]

கிராமிய பாரம்பரிய உணவு முறைகள் மட்டக்களப்பில் அறிமுகம்

DSC05505– றிதா –

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமிய பாரம்பரிய உணவு முறையினை மட்டக்களப்பு நகர்ப்பகுதயிலும் அறிமுகம் செய்யும் வேலைத்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணியகமும், காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிலையமும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றது.

திவிநெகும திட்டத்தின் கீழ் கிரமிய பெண்களின் சுய தொழில் முயற்சியாக இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. [Read more…]

மட்டுவில் கடல் கொந்தளிப்பு வீதியை தொடுகிறது

mini  (6)றிதா

மகெசன் சூறாவளி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தலுள்ள கடல் நேற்று நள்ளிரவு தொடக்கம் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் கடல் அலை கரையிலுள்ள வீதிகளுக்கும் வந்து செல்கின்றது. [Read more…]

மகிழவெட்டுவானில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

???????????????????????????????– ஏறாவூர் அபூ பயாஸ் –

மட்டக்களப்பு ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் கல்குடா கிராமத்தில் இளம் பெண்ணொருவரின் சடலத்தைப் பொலிஸார் நேற்று 02.05.2013 இரவு மீட்டனர்.

மாலை 5 மணியளவில் வீட்டிற்குள் சடலம் ஒன்று கிடப்பதாக சிறுமி ஒருத்தி கூறிய தகவலை அடுத்தே இந்த இளம் பெண்ணின் சடலம் தகரக் கொட்டிலுக்குள்ளிருந்து நேற்றிரவு மீட்கப்பட்டது. [Read more…]

வறுமையான குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பனவு

DSC05175– றப்தான் –

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையான குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பனவு இன்று (3.5.2013) மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் பி.குணரட்னம் உட்பட பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள், சமுர்த்தி முகாமையாளர்கள் கலந்து கொண்டனர். [Read more…]

ஏறாவூர் நகரசபையில் ஊழல் மோசடி: உறுப்பினர் பெரோஸ்

செய்தி விரைவில்

மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான கராத்தே போட்டிகள் ஆரம்பம்

karathe (3)றப்தான்

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான கராத்தே போட்டிகள் இன்று (28.4.2013) காலை மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் ஆரம்பமானது.

இதன் ஆரம்ப வைபவத்தில் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.மணிமாறன், மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன், பிரதான தேசிய நடுவர் உபாலி சிறிசேனா, மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்வரன், விளையாட்டு பிரதான போதனாசிரியர் கே.ரி.பிரகாஸ் உட்பட கராத்தே நடுவர்கள் கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர்.

[Read more…]

வெளியான க. பொ. த. சாதாரண தர பரீட்சை முடிவுகளில் மட்டக்களப்பு மத்தி வலயம் தேசிய ரீதியில் முதலிடம்

விபரங்கள் விரைவில் ……..

போதை வஸ்த்து பாவணையில் மட்டு மாவட்டம் முதலிடம்

DSC04468– றிதா –

மட்டக்களப்பு மாவட்டம் போதை வஸ்த்து பாவணையில் முதலாவது இடத்திலுள்ளது. போதை வஸ்த்து பாவணைக்குகெதிரக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்பரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பிலுள்ள பாடசாலை உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான இந்து சமய மேம்பாட்டு தலைமைத்துவ பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்து உயைராற்றுகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்பரன் மேற்கண்டவாறு கூறினார். [Read more…]

UNICEF நிதியுதவியில் கோறளைப்பற்று மத்தியில் வறிய மாணவர்களுக்கான உதவிகள்

Assistance to students (3)– கல்குடா செய்தியாளர் –

வசதி குறைந்த மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வினியோகமும் மருத்துவ உதவிக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நேற்று (11.04.2013) இடம் பெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் ஹாபீஸ் நஸீர் அஹமட் ஆகியோர் கலந்து கொண்டதுடனர்.

[Read more…]