Advertisements

பொது தேர்தல் 2015: மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக்க முனைகிறார் விமல்

vimalவிமல் வீரவன்ச உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பல தரப்புகள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தெரிய வருகின்றது.

விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, மற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் சுசில் பிரேம் ஜயந்த இவ்வாறான திட்டம் எதுவும் தம்மிடம் இல்லை என மறுத்துள்ளார்.

இது பற்றி சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த மஹிந்த ராஜபக்சவிடம் வினவிய போது, தான் இன்றுதான் தனது ஊரில் இருந்து வந்ததாகவும் அவ்வாறான அழைப்பு எதுவும் தமக்கு விடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தல்: சில்லு சின்னத்தில் மஹிந்த ராஜபக்ஸ ?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இரத்தினபுரி மாவட்டத்தில் எதிர்வரும் பாரர்ளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஆசியன் மிரர் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன தேர்தல் தொகுதியின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி கட்சியின் சில்லு சின்னத்தில் போட்டியிடுவார் என குறிப்பிடப்படுகிறது.

[Read more…]

கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது

பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் இன்று (10) அனைத்துக் கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 

கிழக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று காலை 10 மணிக்கு தவிசாளர் ஆரியபதி கலபதி தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சபை அமர்வில் புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் மற்றும் புதிய உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ஆகியோரை வரவேற்று 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது வரவு செலவுத்திட்டம் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீரினால் வாசிக்கப்பட்டபோது அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று தங்களின் ஆரவினை தெரிவித்தனர். [Read more…]

கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கு முதல்வர்

ஏ.எஸ்.எம்.தாணீஸ்

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பொறியியலாளர் அல்ஹாபிழ் நசீர் அஹமத் தனது கடமைகளை முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (10) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும்,முன்னால் இம்மாகாண சபையின் விவசாய, சுற்றுலாத்துறை அமைச்சருமாவார்.

[Read more…]

புத்தளம் M.P விவகாரம்! தலையிடிக்கு தலையணையை மாற்றிப் பயனில்லை !!

M. ரஹ்மத்துல்லாஹ்

புத்தளம் மாவட்டத்தில்1989 முதல் 2010 வரை இடம் பெற்ற ஆறு பொதுத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், ஐக்கிய தேசிய கட்சியிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மர்ஹூம் M.I. பிஷ்ருல் ஹாபி, M.H.M. நவவி, K.A. பாயிஸ், S.A. யஹ்யா, T.M.இஸ்மாயில், A.M. கமர்தீன் முதலானோர் இவ்வாறு போட்டியிட்டனர்.

[Read more…]

காத்தான்குடியில் டெங்கு தொடர்பாக பெண்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு

தற்போது எமதூரில் மிக வேகமாக பரவிவருகின்ற டெங்கின் பாதிப்பிலிருந்து எமது குழந்தைச் செல்வங்களையும் எம்மையும் பாதுகாத்து ஆரோக்கியான சமூக சூழலை கட்டியெழுப்ப
இஸ்லாம் வழியுறுத்தும் சுத்தம் ‘பேணுவோம்! டெங்கை ஒழிப்போம்!!’ எனும் கருப்பொருளில் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த டெங்கு தொடர்பாக பெண்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு நேற்று 09.02.2015 திங்கட்கிழமை பி.ப. 4.00 தொடக்கம் 6.00 மணிவரை புதிய காத்தான்குடி 06 ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், டெங்கு நுளம்பின் பெருக்கமும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களும் எனும் தலைப்பில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி Dr. U.L. நஸீர்தீன் அவர்களும் உடல், உள, சமூக ஆரோக்கியத்திற்கு இஸ்லாம் வழியுறுத்தும் சுத்தம் எனும் தலைப்பில் ஓட்டமாவடி தாறுஸ் ஸலாம் கலாபீடத்தின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் A.L. முஸ்தபா (ஸலாமி) BA அவர்களும் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றினர்.

இந்நிகழ்வில் இஸ்லாமிக் சென்றர் நிருவாகிகள், மற்றும் பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் நிருவாகத்தின் கீழ் இயங்கும் ஜம்இய்யதுந் நிஸா (பெண்கள் அமைப்பு) இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

IMG_2207 IMG_2213 IMG_2217 IMG_2220 IMG_2223 IMG_2225

வெளிநாட்டு பண நோட்டுக்களுடன் சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய வர்த்தகர்

எம்.ஐ.அப்துல் நஸார்

எழுபத்தேழு இலட்ச ரூபாய் பெறுமதியான பவுண், யூரோ மற்றும் ஜப்பானிய யென் ஆகியவற்றுடன் சிங்கப்பூர் செல்வதற்காக வந்திருந்த தொலைபேசி உதிரிப்பாக வர்த்தகரொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

சந்தேக நபர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயது வர்த்தகராவார்.

[Read more…]

கிழக்கு முதல்வரை வரவேற்கும் நிகழ்வு

பைஷல் இஸ்மாயில் –

கிழக்கு மாகாண சபைக்கு வருகை தந்த புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் வரவேற்கும் இன்று நிகழ்வு மாகாண சபையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் புதிய முதலமைச்சர் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர்களை முதலமைச்சின் நிருவாகத்தினர் வரவேற்றனர்.  [Read more…]

கிழக்கு மாகாண சபையில் இன்று பெரும் அமலிதுமளி

கிழக்க மாகாண சபை அமர்வு சபையின் தவிசாளர் ஆரியபதி பலபதி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டன.

இந்த அமர்வின்போது புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டினால் மாகாண சபையின் நான்கு அமைச்சுக்களினதும் அத்துடன் முதமைச்சின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பித்து முடிந்ததும் அனைத்து கட்சிகளின் குழுத் தலைவர்களுக்கு சபையில் உரையாற்ற சுமார் 5 நிமிடங்கள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டன. [Read more…]

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் நூதன திருட்டு

NUA-முஹம்மட் றிஃப்கி-

மறைந்த எமது பெரும் தலைவர் அஸ்ரப் அவர்கள் தனது மரணத்திற்கு முன்பு தேசிய ஐக்கிய முன்னணி (NUA) எனும் கட்சியை ஆரம்பித்து அதனூடாக முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால அரசியலை விஸ்தரிப்பதற்கு உரிய முயற்சிகளை எடுத்திருந்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் எனும் பெயரில் தேசிய அரசியலை செய்ய முடியாது என்ற காரணத்தினால் அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டதாக கருப்பட்டது.

[Read more…]

நிரந்தரம்

தேர்தலில் வென்றது தந்திரம்

தோற்றுப் போனது மந்திரம்

சுடச்சுட வந்தது சுதந்திரம்

சத்தியம் என்றும் நிரந்தரம்.

 தொகுப்பு-செரண்டிப் முஸ்தபா

 

கிழக்கு மாகாண சபை: TNA, SLMC மீண்டும் பேச்சுவார்த்தை

-அஸ்லம் எஸ்.மௌலானா-

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்படுத்தியுள்ள புதிய ஆட்சியில் தமிழ்த் தேசியக்’ கூட்டமைப்பு பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கமொன்றை உருவாக்கி மூவின மக்களும் ஒன்றாகச் செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக்’ கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமது ஆட்சியில் இணைந்து கொள்ள முன்வர வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். [Read more…]

பதவியை தக்கவைப்பதற்காக எந்த பேயுடனும் முஸ்லிம் காங்கிரஸ் சேரும் – ஜனா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது பதவிகளை தக்கவைப்பதற்காக எந்தபேயுடனும் கூட்டுச்சேருமே தவிர அவர்களுக்கு இனம் சார்ந்த செயற்பாடுகள் எதுவும் இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

Janaஇன்று அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

[Read more…]

கோட்டைவிடும் தமிழ் தேசிய தலைமைகள்

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் மிக சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். அதே போல புதிய சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

ஆனால் தமிழ் தேசிய தலைமைகள் இரு விடயங்களையும் கோட்டை விட்டே வந்து இருக்கின்றன என்பது கடந்த கால வரலாறாகவும், நிகழ் கால நிதர்சனமாகவும் உள்ளது. [Read more…]

யாருக்கு தொப்பி?

எஸ்.எம்.எம்.பஷீர் 

“அதிகாரம் சீரழிப்பதால் , பதவிக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் பொழுது ,  அறவழி  அதிகாரத்துக்கும் சிறப்பியல்களுக்குமான  சமுதாயத்தின் தேவைகள் அதிகரிக்கின்றன”  –  ஜான் அடம்ஸ் 

( Because power corrupts, society’s demands for moral authority and character increase as the importance of the position increases. –  John Adams )

ecmகிழக்கு மாகான சபைக்கான முதல்வர் நியமன இழுபறி இறுதியில் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. ஒருபுறம் மைத்ரி ஜனாதிபதியாக நாங்களும்  காரணம் என்ற தமிழர்களும் முஸ்லிம்களும்  ஆளுக்கு ஆள் வீராப்பு கதை பேசித் திரிய, தமிழர் கூட்டமைப்பு மைத்ரீயை சந்தித்து தங்களின் கட்சியிலில் இருந்தே கிழக்கு முதல்வர் நியமிக்கபட வேண்டும் என்று கோரப் போவதாக செய்திகள் ஊடகங்களில் ஊடாட, இந்நாள் வரை இரண்டரை வருடக் கதையை, இலேசாக அவ்வப்போது ஞாபகம் ஊட்டிக்  கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் திடீரெண்டு எங்களுக்கே முதல்வர் பதவி தரப்பட வேண்டும் என்று அட்டகாசமாக அவரோகணத்தில் தங்களின் முதல்வர் கோரிக்கையை முன்னெடுத்த பொழுது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் சொன்ன இரண்டரை வருட முதல்வர் சமாச்சாரம் உண்மைதான் என்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு முதல்வர் பதவி வழங்கி உறுதி செய்திருக்கிறார்கள். [Read more…]

காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலயத்தின் 85 வது ஆண்டு நிறைவு விழா

mmv-logo-டீன் பைரோஸ்-

காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையின் 85 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் விழா ஒன்றினை மிக விரைவில் பாடசாலையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக (08.02.2015 ஞாயிறு) நடைபெற்ற விசேட ஊகவியாலர்கள் சந்திப்பின் போது பாடசாலை அதிபர் U.L.M. முபாறக் (SLEAS) தெரிவித்தார்.

உலகை வெல்லும் கல்வியை நோக்கி  எனும் நோக்கை பொருளாக கொண்டு மேற்படி நிகழ்வுகள் இடம்பெற உள்ளதுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழா தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

விழாவின் ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பமாக இருப்பதுடன் பின்வரும் விடயங்கள் தொடராக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

01) பாடசாலையின் 85 வது நிறைவினை முன்னிட்டு நிணைவுப்படிவம்.

02) மார்ச்சு மாதம் தமிழ், முஸ்லிம் பெரிய பாடசாலைகளுக்கிடையில் விவாத போட்டிகளை நடாத்துதல்.

03) ஏப்ரல் மாதம் கழகங்களுக்கிடையில் கிரிக்கட், உதைபந்தாட்டப் போட்டிகளை நடாத்துதல்.

04) மே மாதம் மூதுர் தொடக்கம் பொத்துவில் வரை கவன ஈர்ப்பு வாகன தொடர் அணியினை ஏற்பாடு செய்தல்.

05) ஜூன் மாதம் பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்களின் ஒத்துழைப்புடன் பாரிய சிரமதான பணி ஒன்றினை மேற் கொள்ளல்.

06) ஜூலை மாதம் பாடசாலையில் மாபெரும் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்தல்.

07) பாடசாலை ஸ்தாபகர் முதலியார் சின்னலெப்பை ஞாபகார்த்த முத்திரை ஒன்றினை வெளயிடல்.

08) பாடசாலை தொடர்பாக தேசிய பத்திரிகைகளில் அனுபந்தம் வெளயிடல்.

09) கல்வி விழிப்புனர்ச்சி கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல்.

மேலும் பல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக மேற்படி பாடசாலையின் அதிபர் U.L.M. முபாறக் தெரிவித்தார்.

காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) சுமார் 14 ஏக்கர் நில பரப்பலவில் 1930.01.06 இல் திரு கந்தசாமி என்பவரை முதலாவது அதிபராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கான நிலத்தை வழங்கியவர் மர்ஹூம் முதலியார் சின்னலெப்பை ஆவார். இலங்கையின் தேசியக் கொடியை பாராளுமன்றத்தில் பிரகடனப்படுத்திய பெருமையும் அன்னாரையே சாரும்.

மேற்படி பாடசாலையில் கல்வி கற்ற பல ஆயிரக்கணக்கான பழைய மாணவர்கள் உலகின் பல நாடுகளில் பலதரப்பட்ட பதவிகளுடன் தொழில் வாய்ப்புகளை மெற் கொண்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.

குhத்தான்குடி மத்திய மஹா வித்தியாலயமானது பல கல்விமான்கள், புத்தி ஜிவிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சாதனையாளர்கள் என பலதரப்பட்டவர்களையும் உருவாக்கி உள்ளது என்ற பெருமையான செய்தியையும் நாம் சொல்லாமல் உலகம் தெரிந்து கொள்ளும்.

மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பின்  போது;

01) ULA.Mubarak SLEAS (Principal)

02) SMM.Baseer Tr (secretary SDC)

03) ALM.Rahmathulla PHI (Member SDC)

04) Dr-DM.Mahir (Member PPA)

05) ACA.Azees Hrig (Secretary PPA)

ஆகியோர்களும் விழா தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

மேற்படி பாடசாலையின் 85 வது விழா தொடர்பாக பல்வேறு பட்ட விடயங்கள் முன்னெடுக்கப்படவுள்ள அதே நேரம் இப்பாடசாலையின் பழைய மாணவர்களின் மேலான ஆலோசனைகளையும, உதவிகளையும் வேண்டி நிற்கின்றது மேற்படி பாடசாலை நிர்வாகம்.

விழா தொடரபில் நீங்களும் உங்கள் மேலான கருத்துக்களையும் உதவிகளையும் வழங்கிட பின்வரும இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி – 0652245726.

மின்னஞ்சல் –info@ncckky.sch.lk /lafir.mlm@gmail.com

நல்லாட்சிக்கு இன்றுடன் வயது ஒரு மாதம்

அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான நல்லாட்சிக்கு இன்றுடன் வயது ஒரு மாதமாகிறது. இலங்கையில் நல்லாட்சி ஒன்று மலர வேண்டுமென்று முஸ்லிம்கள் இறையச்சம் மேலோங்க நோன்பு நோற்று, தஹஜ்ஜதில் மன்றாடியதன் பலாபலனே இன்று சாத்தியமாகியிருக்கும் மைத்திரி யுகமாகும்.

[Read more…]

ஷிப்லியை பதவி விலக்குவேன் – றிஷாத்

Siddeek-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

அகில இலங்கை மக்கள் மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனுடன் எனது தொலைபேசி உரையாடல்

நான்:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஜெமீல் உங்களைச் சந்தித்து பேசிய விடயங்களை கூற முடியுமா?

ரிஷாத் பதியுதீன்:– ஆம், அவர் என்னைச் சந்தித்தார். கடந்த நான்கு வருடங்களாக மட்டக்களப்பைச் சேர்ந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலவராக செயற்பட்டார். அதன் பின்னர் இரண்டரை வருடங்கள் திருகோணமலையைச் சேர்ந்த நஜீப் ஏ. மஜீத் கிழக்கு முதல்வராக இருந்தார். இப்போது எனக்கு தருவதாக கூறிய எமது தலைவர் என்னை ஏமாற்றி விட்டார். எனவே. அம்பாறையைச் சேர்ந்த ஒருவரே இனி வரவேண்டும். அதற்காக எனக்கு ஆதரவு வழங்க முடியுமா என கேட்டார். அதற்கு நான், எங்களுக்குப் பிரச்சினை இல்லை. முஸ்லிம் காங்கிரஸுக்குத்தான் முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றேன். ஆதரவு வழங்குவதாகவும் கூறினேன். அத்துடன் ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின்னர் தான் இணக்க அரசியலையே விரும்புவதாகவும் அவரிடம் கூறினேன். இது தவிர ஜெமீலை எனது கட்சியில் சேருமாறு நான் கேட்கவோ அல்லது ஜெமீல் எமது கட்சியில் இணையப் போவதாக கூறவில்லை.

நான்:- உங்களது கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உங்களிடம் அனுமதி பெற்றா ஹாபிஸ் நஸீரை முதலமைச்சராக நியமிப்பதற்கு இணக்க கையொப்பமிட்டார்? மேலும் நீங்கள் அவரது கையொப்பத்தை வாபஸ் செய்யும்படி கூறினீர்களா?

rishard badurdeenரிஷாத் பதியுதீன்:- கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் தலைவர் என்னிடம் அவர் அனுமதி கேட்டிருக்க வேண்டும். கட்சியின் தலைமையுடன் கலந்தரையாடியே கையொப்பமிட்டிருக்கவும் வேண்டும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. மேலும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் அதிகாரத்தை பெற்றுக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீமிடம் ஐந்துக்கு மேற்பட்ட முறைகள் நான் கூறியிருந்தேன். அத்துடன் இது தொடர்பில் எமது கட்சியுடனும் பேசுமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். அதற்கு ஹக்கீம் அனைத்துக்கும் பேசுவோம்.. பேசுவோம் என்று கூறினாரே தவிர எம்முடன் கலந்துரையாடவில்லை. மாறாக எமது கட்சியைச் சேர்ந்த சிப்லி பாறூக்கிடம் இரகசியமாக கையொப்பத்தை பெற்றுக் கொண்டனர்.

நேற்று முன்தினம் அமீர் அலியின் அமைச்சுக்கு நான் சென்றிருந்த போது சிப்லி பாறூக் காணப்பட்டார். அப்போது கையொப்பமிட்ட விவகாரம் தொடர்பில் அவரிடம் கேள்வியெழுப்பினேன். கட்சியின் அனுமதி இல்லாமல் எவ்வாறு கையொப்பமிட்டீர்கள் என்று நான் கேட்டதுடன் கடிதத்தை வாபஸ் பெறுமாறும் அவரைக் வேண்டினேன். இரு கட்சி தலைமைகளும் பேசி நாங்கள் முடிவெடுப்போம். முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்றும் அவரிடம் தெளிவாக கூறினேன்.

ஆனால் அவர் அதற்கு எவ்வித பதிலையும் வழங்கவில்லை. அவரது தொலைபேசியையும் செலிழக்கச் செய்திருந்தார். பின்னர் அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையப் போவதாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன். அவ்வாறு அவர் இணைந்து கொண்டால் கட்சியின் யாப்பையும் கட்சித் தலைமையையும் மீறிய குற்றச்சாட்டில் அவரை பதவி விலக்குவோம்.

நான்:- நீங்கள் கிழக்கு மாகாண சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு வாக்களிப்பீர்களா?

ரிஷாத் பதியுதீன் :- இது தொடர்பில் கட்சி கூடியே முடிவெடுக்கும்.கட்சியின் முடிவை மீறி யாரும் நடந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.

நான்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்தே கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தை முன்னெடுக்க வேண்டுமென நீங்கள் கூறினீர்களா?

ரிஷாத் பதியுதீன்:- ஆம். இதில் தவறில்லை. நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பங்காளியாக சேர்த்துக் கொள்ளவே வேண்டும். இதுவே சாலச் சிறந்தது. இந்த விடயத்தில் ரவூப் ஹக்கீமும் சம்பந்தன் ஐயாவும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். 30 வீதமான சிறுபான்மையின மக்கள் வாக்களித்தே இந்த ஜனாதிபதியை வெற்றி பெற வைத்தோம். அதேவேளை முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் வடக்கிலும் கிழக்கிலும் இல்லாமல் இல்லை என்பதனையும் நான் மறுக்கவில்லை. 30 வருட போரில் முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட்டது. இருப்பினும் இன்றுள்ள சமாதான மற்றும் நல்லாட்சி களநிலையில் கிழக்கில் ஆட்சியமைக்கும் விடயத்தில் நாங்கள் பிரிந்து நின்று பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு

நான்:- உங்களது கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை முஸ்லிம் காங்கிரஸ் உள்வாங்க முயற்சிக்கிறதா?

ரிஷாத் பதியுதீன்:- அவ்வாறு அவர்கள் தங்கள் கட்சிக்குள் எமது உறுப்பினர்களை உள்வாங்கினால் இணைபவர்கள் மீது சட்ட நடவடிக்கையை முன்னெடுப்போம். ஆனால், அவர்களது கட்சி பலவீனமடைந்ததன் காரணமாகவே எங்களது உறுப்பினர்களை உள்வாங்குகிறார்கள் என்றால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. மேலும், முஸ்லிம் கங்கிரஸ் உறுப்பினர்களோ அல்லது பிற கட்சி உறுப்பினர்களோ எமது கட்சியில் சேர்வதற்காக அவர்கள் சார்ந்த கட்சியின் உறுப்புரிமையுடன் வந்தால் நாம் ஏற்றுக் கொள்ளவே மாட்டோம். நான் இணக்க அரசியலையே விரும்புகிறேன்.

(இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் ராஜாங்க அமைச்சருமான ஹஸன் அலி அவர்களின் கருத்தினையும் பெற்று பதிவிடுவேன்)

சிகரம் கிராம மக்களுக்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான சிகரம் கிராமத்தில் ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தினால் வசதி குறைந்த 50 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (08-03-2015) சிகரம் கிராமத்தில் இடம்பெற்றது.

[Read more…]

ஏறாவூர் மாணவன் இரயிலில் மோதுண்டு மரணம்

-ஷப்ராஸ்-மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் வண்டியில் மோதுன்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் வண்டியில் மோதுன்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

[Read more…]

S.S.M. அபூபக்கர் வயதானாலும் மனம் தளராதவர்

S.S.M. அபூபக்கர் அவர்கள் சத்திய இஸ்லாத்தை திறம்பட ஆய்வு செய்து, இஸ்லாத்தை குடும்பம் சகிதம் ஏற்றுக் கொண்டவர். இன்றும் அவர் தான் பெற்ற பெரும் பாக்கியம் பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்ற தீராத வேட்கையில், உன்னத நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்.

[Read more…]

நேற்று பேசிய ஜெமீலா இது?

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நடத்தப்பட்ட இந்த வருடத்தின் முதலாவது பாரிய நாடகம் மேடையேற்றப்பட்டது. அமைச்சர் ஹக்கீம் பிரதான பாத்திரம் ஏற்க கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜெமீல், அன்வர் ஆகியோர் துணை நடிகர்களாக அற்புதமாக நடித்திருந்தனர்.

IMG_0816மக்களோ பாவம்… பழைய படங்களில் எம்.ஜி. ஆருக்கு நம்பியார் ஒரு அடிவிட்டாலே (நடிப்புக்காக) உண்மை என நினைத்து கொதித்தெழும் ரசிகர்கள் நிலையில்தான் காணப்பட்டனர். ஹாபிஸ் நஸீருக்கு முதலமைச்சர் பதவி வழங்கியதற்காகவும் அம்பாறை மாவட்டத்தைப் புறக்கணித்ததற்காகவும் ஜெமீலுக்கு அந்தப் பதவியை வழங்கவில்லை என்றும் கல்முனை மகக்ள் கொதிந்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் அமைச்சர் ஹக்கீமின் கொடும்பாவியையும் எரித்து நின்றனர்.

தாங்கள் அரகேற்றிய நாடகத்தை மக்கள் உண்மையாக நம்பி விட்டனர் என்ற கேலித்தனத்தில் இவர்கள் காணப்பட்டனர். ஆனால் மக்களோ உண்மையென நம்பியே அனைத்தையும் செய்து தங்களை வருத்தி, பிரிந்து கொண்டனர்.

இவர்கள் தங்களது நாடகத்துக்கு கௌரவ நடிகர்களாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான எம். சுபைரையும் வலிந்து எடுத்துக் கொண்டனர்.

இந்த நாடகத்துக்கு திரைக்கதை வசனம் எழுதி தயாரித்த கல்முனையின் குறுநில மன்னர் தலைமறைவாகியிருந்தார். பாவம் இறுதியில் அனைத்துப் பழிகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான தவம் அவர்கள் தலையில் கட்ட வேண்டியதாகி விட்டது.

sa2இவர்கள் ஆடிய நாடகத்தின் உண்மை நிலை இன்றைய ஊடகவியலாளர் மகாநாட்டில் அம்பலத்துக்கு வந்து விட்டது. ஜெமீல் மன்னிப்புக் கேட்டாராம். ஹக்கீம் மன்னித்து விட்டாராம்.. எவ்வளவு வெட்கம்.. இந்தப் போலி நாடகத்தின் உண்மையைத் தன்மையை இன்று அம்பலப்படுத்தாமல் கொஞ்சக் காலம் தாமதித்தாவது வெளிப்படுத்தியிருந்தால் முஸ்லிம் காங்கிரஸினால் பாவப்பட்டு போயுள்ள முஸ்லிம் மக்கள் சற்று மறந்த நிலையில் நிம்மதியடைந்திருப்பர். வெள்ளிக்கிழமை நாடகத்தையின் உண்மையை ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே அவர்கள் அரங்கேற்றி அசிங்கப்படுத்தி விட்டனர்.

பிரதேச வாதத்தையும் சமூகத்தில் பிரிவினையையும் ஏற்படுத்தி மக்களை பிரித்தவர்கள் இன்று சேர்ந்து விட்டனர். ஆனால் அவர்களை நம்பிய மக்களோ இன்று பிரிந்து நின்று மனக் கசப்புடன் காணப்படுகிறனர்.

கிழக்கு மகாண சபை உறுப்பினரான சர்ச்சைக்குரிய ஜெமீல் அவர்கள் பல தடவைகள் என்னுடன் நேற்று தொடர்பு கொண்டு பல விடயங்கைளத் தெரிவித்திருந்தார். அவற்றினை நான் நாகரிகமான முறையில் மறைத்துக் கொண்டேன். ஹாபிஸ் நஸீர் தொடர்பில் அவர் என்னிடம் தெரிவித்தவைகளை நான் இப்போது நினைத்துப் பார்க்கும் போது என்னுடன் நேற்று பேசியது இன்று அவருடன் இணைந்து கொண்ட ஜெமீலா என்று சந்தேகிக்கவும் தோன்றுகிறது. அத்துடன் அமைச்சர் ஹக்கீம் தொடர்பிலும் அவர் சில கருத்துகளை என்னிடம் தெரிவித்தார். அதனைக் கூட ஜெமீல்தான் சொன்னாரா என்பதும் எனக்கு இன்னும் அதிர்ச்சியாக உள்ளது.

இறுதியாக ஜெமீல் மன்னிப்புக் கேட்டாராம் ஹக்கீம் மன்னித்து விட்டாராம். வெட்கம் வெட்கம்.. மக்களை இறைவன் மன்னித்துக் கொள்ளட்டும்! வாழ்க, வளர்க முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்

[Read more…]

சிப்லியின் அரசியல் ஆலோசகர்கள் மத்தியில் மனமுரண்பாடு

சிப்லியின் அரசியல் ஆலோசகர்கள் மத்தியில் அவரின் முடிவு தொடர்பாக மனமுரண்பாடு ஏற்படுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் நேற்று முஸ்லிம் காங்கிரசில் இணைந்தது தொடர்பாக தனது அரசியல் ஆலோசகர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றுள்ளது.

[Read more…]

ஜெமீலுக்கு எதிரான தடை நீக்கம்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படவுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தற்போது தாருஸ்ஸலாமில்  நடைபெறும் ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்தார்.

இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஏ.எம்.ஜெமீல் கலந்துகொண்டு தான் நடந்து கொண்ட முறை தவறானது என ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோரினார். [Read more…]

முஸ்லிம் காங்கிரசில் இணைந்தார் சிப்லி – படம் இணைப்பு

அகில இலங்கை காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஷிப்லி பாறூக் நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமை கொழும்பில் சந்தித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

இந்த நிகழ்வு நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இங்கே பிரசுரிக்கப்படுகின்றது. [Read more…]

கிழக்கு மாகாண சபையில் பிள்ளையானுக்கு அமைச்சிப் பதவி

கிழக்கு மாகாண விவசாய அமைச்சராக முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) நியமிக்கப்படுவார் என்று அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, பிள்ளையான் மற்றும் அவருடன் புதிதாக இணைந்துள்ள இனியபாரதி ஆகியோருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை பேச்சு நடத்தினர்.

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழர் ஒருவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கி நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பிள்ளையானுக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்க அரசுத்தரப்பு முன்வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தில் ஐக்கிய மாகாண ஆட்சியே உடனடித் தேவை

எம். பௌசர்

கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கும் விவகாரம் சமூகங்களையும், கிழக்கு வாழ் மக்களையும் இரு துருவ நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஜனநாயக அடிப்படைக் கட்டுமாணங்களுக்கு வெளியில், எதோச்சதிகாரப் போக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை செயல்பட்டு நிலைமையை சிக்கலாக்கி உள்ளது.

[Read more…]

எனது முதல் வெளிநாட்டு பயணம் தமிழ்நாட்டுக்குத்தான்: ஹாபீஸ் நசீர் அகமது

இலங்கை கிழக்கு மாகாண முதல்-மந்திரி ஹாபீஸ் நசீர் அகமது, 2 வாரத்திற்குள் தமிழ்நாட்டிற்கு வந்து, தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக ‘தினத்தந்திக்கு’ அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.

இலங்கையின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை போன்ற பகுதிகளை உள்ளடக்கியது கிழக்கு மாகாணம். இதன் புதிய முதல்-மந்திரியாக, ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்’ துணை தலைவரான ஹாபீஸ் நசீர் அகமது நேற்று முன்தினம் பதவியேற்றார். [Read more…]

கிழக்கு மாகாண முதலமைச்சர் : முரண்பாட்டு அரசியலின் இனவாத அடையாளம்

 நவாஸ் சௌபி

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த நிலையில் கிழக்கு மாகாண சபை ஆட்சியை தொடர்வது சம்மந்தமாக இதுவரை இருந்துவந்த முதலமைச்சர் சர்ச்சை முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக ஒருமுடிவுக்கு வந்திருக்கிறது.

கிழக்கில் ஒரு முதலமைச்சர் பதவியை வழங்குவதற்கு தலைமைத்துவ சவால் ஒரு தடையாக இருப்பதாகக் கருதி வூப் ஹக்கீம் அதனை வழங்காதிருக்கின்றார் என்ற விமர்சனம் மிகவும் பலமாக முன்வைக்கப்பட்டுவந்த நிலையில் அதனை முற்றாக மறுப்பதாகவும் அக்கருததை அடியோடு அழிப்பதாகவும் இன்று முதலமைச்சர் பதவி கிழக்கிற்கு வழங்கப்பட்டிருப்பது முதலில் நாங்கள் பாராட்ட வேண்டிய விடயம். [Read more…]

ஷிப்லி பாறூக், அலி ஸாஹிர் மௌலானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

shib moulanaஅகில இலங்கை காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஷிப்லி பாறூக் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா (ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு) ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று (07) கொழும்பு சந்தித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டனர். இந்த்த் தகவலை கட்சியின் செயலாளர் நாயகமும் ராஜாங்க அமைச்சருமான எம்.ரீ. ஹஸன் அலி சற்று நேரத்துக்கு முன்னர் என்னிடம் தெரிவித்தார்

நாளை (08) காலையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் இவர்கள் இவர்கள் இது தொடர்பில் அறிவிக்கவுள்ளனர்.

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஹிஸ்புல்லாஹ் உள்ளே! சிப்லி வெளியே! : அரங்கத்திற்கு வரும் அந்தரங்கம்

HSR-Info Exclusive-

தற்பொழுது மட்டக்களப்பு முஸ்லிம் அரசியல் மேடையில் சூடுபிடித்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியேற்பும் அதற்கு  சிப்லி பாருக்கின் ஆதரவும் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் ஹிஸ்புல்லாவின் இணைவு தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அதி முக்கிய பிரமுகரை காத்தான்குடி இன்போ தொடர்புகொண்டு பல உள்ளக தகவல்களை பெற்றது. (அந்த பிரமுகரின் நிபந்தனைக்கு ஏற்ப அவரது பெயர் இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது).

கேள்வி: பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் உங்கள் கட்சியில் இணைந்து விட்டாரா?

பதில்: முதல் கேள்வியிலேயே நீங்கள் என்னை தர்மசங்கடத்தில் உள்ளாக்க முயற்சி செய்கின்றீர்கள். அவர் இன்னும் எமது கட்சியில் இணையவோ, இணைக்கப்படவோ இல்லை.

கேள்வி: அப்படியானால் அவர் உங்கள் கட்சியில் இணைவாரா?

பதில்: இப்போது என்னால் எந்த கருத்தும் கூறமுடியாது.

கேள்வி: ஹிஸ்புல்லாஹ் உங்கள் கட்சியில் இணைவது தொடர்பாக ஏதாவது பேச்சுவார்த்தை நடைபெருகின்றாதா?  மற்றும் இணக்கப்பாடு அல்லது ஒப்பந்தம் ஏதாவது இதுவரையில் ஏற்பட்டதா?

பதில்: இந்த கேள்விக்கு மௌனமே எனது பதில்

கேள்வி: ஹிஸ்புல்லாஹ்வை கட்சியில் மீள் இணைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சி பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்களா?

பதில்: அவர்கள் எமது கட்சியின் தலைமைதுவத்திற்கு கட்டுப்பட்டு நடப்பார்கள்

கேள்வி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் முஸ்லிம் காங்கிரஸ்சில் இணைந்துவிட்டதாக தகவல்கள் வருகின்றேதே உண்மையா?

பதில்: அவர் இன்னும் எங்கள் கட்சியிலேயே இருக்கின்றார்.

கேள்வி: உங்கள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரசிற்கு எதிராக செயற்பட்டதாகவும் தமிழ் முதல் அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கு முயற்சித்ததாகவும் கூறப்படுகின்றதே?

பதில்: ஜானதிபதி தேர்தலுக்கு பின் அரசியல் கட்சி என்ற ரீதியில் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தினோம். கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பாக சில சம்பாசனைகளே நடைபெற்றது. இதன் போது பெரும்பான்மை ஆசனத்தை பெற்ற கட்சி தாங்கள் என்ற ரீதியில் எங்கள் கட்சிக்கே முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியது. அதற்கு எங்கள் ஆதரவையும் கோரினார்கள்.

நாங்கள் கட்சி ரீதியாக அவர்களுக்கு எந்தவிதமான வாக்குறுதிகளையும் வழங்கவில்லை. அத்துடன், கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வசிப்பதால் முதலமைச்சர் பதவிக்கு தான் வரவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரான தயா கமகே எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தார், இதனை நாங்கள் சம்பந்தன் ஐயாவிடம் தெரிவித்தோம்.

ஆனால் இதற்கு அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார், கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழரே முதலமைச்சராக வரவேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டார்.

கேள்வி: முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவதை உங்கள் கட்சி விரும்பியதா?

பதில்: முதலமைச்சர் பதவி விடயத்தில் ஏனைய கட்சிகளின் கருத்துக்களை பெறாமல் அவர்கள் அவசர அவசரமாக செயற்பட்டுள்ளர்கள்.

கேள்வி: முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த நசீர் ஹாபிஸ் அவர்கள் முதலமைச்சராக வருவதற்கு ஆதரவு வழங்கிய சிப்லி பாறுக் மீது ஆதரவை வாபஸ்பெறுமாறு அழுத்தம் பிரயோகிகப்படுவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றதே?

பதில்: அவர் மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது உண்மையே, எனினும் அவர் தரப்பில் இருந்து பல தகவல்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன.

அவர் எமது கட்சியில் எவருக்கும் தெரியாமல் நசீர் ஹாபிஸ் முதமைச்சராக வருவதற்கு ஆதரவு தெரிவித்து திரைமறைவில் உறுதிப்பத்திரத்தில் கையொப்பம் இட்டுள்ளார்.

இது மிகவும் ஒரு பிழையான செயல், ஒரு கட்சியில் முக்கிய இடத்தில் இருப்பவர் நடந்துகொள்ளக்கூடிய முறை இதுவல்ல. ஒரு கூட்டுப்பொறுப்பில் இருப்பவர், கட்சியின் தலைமைத்துவத்துடன் கட்டயாம் மசூரா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

அவர் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்ட விடயத்தை முற்றாக கட்சி தலைமைக்கு மறைத்து விட்டார்.

பின்னர், முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஹாபிஸ் நசீர் முதலமைச்சராக தெரிவு செய்யப்படவுள்ளார் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். எனினும் எங்கள் கட்சியின் ஆதரவு இல்லாமல் அவர் எப்படி முதலமைச்சராக பதவியேற்க முடியும் என்று விசாரித்த போதுதான் தெரிந்தது, சிப்லி பாறுக் அவருக்கு ஆதரவாக திரைமறைவில் உறுதிப்பத்திரத்தில் கையொப்பம் இட்டது.

அவரை நாங்கள் அழைத்து தமது ஆதரவை வாபஸ் பெறுமாறு கோரினோம்.

ஏனெனில், நாங்கள் முஸ்லிம் காகிரசுடன் கட்சி ரீதியாக பேச்சுவார்த்தை நடாத்தி ஒப்பந்த ரீதியிலேயே அவர்களுக்கு ஆதரவு வழங்க விரும்பிஇருந்தோம்.

எனினும் சிப்ளியின் செயல் கட்சிக்கும், அவருக்கும் இழுக்கை ஏற்படுத்திவிட்டது.

கேள்வி: சிப்லிக்கு எதிராக ஏதாவது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்: அதுபற்றி எதுவும் இப்போது எதுவும் கூறமுடியாது.

கேள்வி: இறுதியாக ஹிஸ்புல்லாஹ் இணைவாரா? மாட்டாரா?

பதில்: ……………………………………………………………………………”சிரிப்பொலி”

ஹிருணிகா அம்பாறை மாவட்டத்துக்கு சூறாவளிப் பயணம்

hirun-எம்.வை.அமீர்-  

அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபத்தி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வெற்றிக்காக வாக்களித்த அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேச மக்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத்துங்க அவர்களது சார்பில் நன்றி சொல்வதற்காக மேல்மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்கள் உள்ளிட்ட குழுவினர் வருகைதருகிறனர்.

ஹிருணிகாவின்  அம்பாறை மாவட்டத்துக்கான விஜயத்தின் போது சாய்ந்தமருது  லீமெரிடியன் வரவேட்பு மண்டபத்தில், ஏ.ஆர்.எம்.அஸீம் தலைமையில் இடம்பெறும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.

ஹிஸ்புல்லாஹ் மீண்டும் றிசாத்துடன் இணைந்தார், ஷிப்லி முஸ்லிம் காங்கிரசில்?

HSRஅரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்று சொல்வதற்கினங்க தற்பொழுது முஸ்லிம் அரசியல்வாதிகளின் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

கடந்த ஜானாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு இடை நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் MLAM. ஹிஸ்புல்லாஹ் மீண்டும் அந்த கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார் என்று அந்த கட்சின் அதியுயர் பீட உறுப்பினர் ஒருவர் காத்தான்குடி இன்போவிற்கு தெரிவித்தார்.

[Read more…]

ரவூப் ஹக்கீமுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை: ஜெமீல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு எதிராக சாய்ந்தமருதில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பாக தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் நான் நேரடியாக விவாதித்தேனே தவிர கட்சிக்கு வெளியே போராட்டம் எதனையும் முன்னெடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். [Read more…]

கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயம் மிகப்பெரிய ஓட்டை: மசூர் மௌலானா

நாட்டின் ஒருபகுதியில் முஸ்லிம் சமூகத்தின் உள் வீட்டுப் பிரச்சினை பூதாகரமாகியிருக்கும் இந்தச் சூழலில் நாம் மாற்று சமூகத்தாரிடம் இருந்து எவ்வாறு நல்லிணக்கத்தையும்,ஒருமைப்பாட்டையும் எதிர்பார்க்க முடியும்? இலங்கையில் இனவாதத்தையும் விட கொடிய அரக்கன் பிரதேச வாதமாகும்.

[Read more…]

கிழக்கு முதல்வருக்கான ஆதரவை வாபஸ் பெறுமாறு சிப்லிக்கு றிசாத், அமீர் அலி அழுத்தம்

கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹாபிஸ் நஸீர் அஹமட்டை நியமிப்பதற்கு வழங்கிய ஆதரவை உடனடியாக வாபஸ்பெறுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் மீது பல்வேறு அழுத்தங்களை அமைச்சர்களான றிசாத் பதியுதீன் மற்றும் அமீர் அலி ஆகியோர்  பிரயோகிப்பதாக சிப்லி பாறுகிற்கு நெருக்கமான வட்டாரங்கள் காத்தான்குடி இன்போவிற்கு தெரிவித்தது. [Read more…]

கிழக்கு மாகாண சபை உறுப்பினராக அலி ஸாஹிர் மௌலானா சத்தியப்பிரமாணம்

கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக செய்யித் அலி ஸாஹிர் மௌலானா இன்று ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினராக இருந்த எம்எஸ்எஸ் அமீர்அலி பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து ஏற்பட்டவெற்றிடத்திற்கு செய்யித் அலி ஸாஹிர் மௌலானா மாகாணசபை உறுப்பினர் பதவிற்கு தேர்தல்கள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டார். [Read more…]

அமீர் அலி முயற்சியால் வடமுனை கிராம மக்களின் நலன் கருதி பஸ் சேவை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஊத்துச்சேனை வடமுனை கிராம மக்களின் போக்குவரத்து நலன் கருதி சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியால் ரிதிதென்ன இலங்கை போக்குவரத்துசாலையால் பஸ் சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. [Read more…]

அமைச்சர் ரிஷாத்தை சந்தித்தது உண்மையே ஆனால் அவர் எந்தப் பொதியையும் தரவில்லை: ஜெமீல்

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர் தன்னைச் சந்தித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனிடம் அழைத்துச் சென்றார் என்றும் இதற்கான ஏற்பாடுகளை மாகாண சபை உறுப்பினரான அன்வரே செய்ததாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஏ.எம். ஜெமீல் என்னிடம் தெரிவித்தார்.

என்னுடனான அவரது தொலைபேசி உரையாடலை அப்படியே தருகிறேன்…. [Read more…]

‘முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியமைப்பு மக்கள் ஆணைக்கு முரணானது- சம்பந்தன்

2012-ம் ஆண்டு நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை அமைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் புதிய ஆட்சியமைப்பு நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்ட மக்களின் ஆணைக்கும் முரணானது என்றும் சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது, அரசாங்கக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரம் செய்திருந்ததையும் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
[Read more…]