Advertisements

பதவியை தக்கவைப்பதற்காக எந்த பேயுடனும் முஸ்லிம் காங்கிரஸ் சேரும் – ஜனா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது பதவிகளை தக்கவைப்பதற்காக எந்தபேயுடனும் கூட்டுச்சேருமே தவிர அவர்களுக்கு இனம் சார்ந்த செயற்பாடுகள் எதுவும் இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

Janaஇன்று அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

[Read more…]

காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலயத்தின் 85 வது ஆண்டு நிறைவு விழா

mmv-logo-டீன் பைரோஸ்-

காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையின் 85 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் விழா ஒன்றினை மிக விரைவில் பாடசாலையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக (08.02.2015 ஞாயிறு) நடைபெற்ற விசேட ஊகவியாலர்கள் சந்திப்பின் போது பாடசாலை அதிபர் U.L.M. முபாறக் (SLEAS) தெரிவித்தார்.

உலகை வெல்லும் கல்வியை நோக்கி  எனும் நோக்கை பொருளாக கொண்டு மேற்படி நிகழ்வுகள் இடம்பெற உள்ளதுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழா தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

விழாவின் ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பமாக இருப்பதுடன் பின்வரும் விடயங்கள் தொடராக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

01) பாடசாலையின் 85 வது நிறைவினை முன்னிட்டு நிணைவுப்படிவம்.

02) மார்ச்சு மாதம் தமிழ், முஸ்லிம் பெரிய பாடசாலைகளுக்கிடையில் விவாத போட்டிகளை நடாத்துதல்.

03) ஏப்ரல் மாதம் கழகங்களுக்கிடையில் கிரிக்கட், உதைபந்தாட்டப் போட்டிகளை நடாத்துதல்.

04) மே மாதம் மூதுர் தொடக்கம் பொத்துவில் வரை கவன ஈர்ப்பு வாகன தொடர் அணியினை ஏற்பாடு செய்தல்.

05) ஜூன் மாதம் பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்களின் ஒத்துழைப்புடன் பாரிய சிரமதான பணி ஒன்றினை மேற் கொள்ளல்.

06) ஜூலை மாதம் பாடசாலையில் மாபெரும் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்தல்.

07) பாடசாலை ஸ்தாபகர் முதலியார் சின்னலெப்பை ஞாபகார்த்த முத்திரை ஒன்றினை வெளயிடல்.

08) பாடசாலை தொடர்பாக தேசிய பத்திரிகைகளில் அனுபந்தம் வெளயிடல்.

09) கல்வி விழிப்புனர்ச்சி கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல்.

மேலும் பல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக மேற்படி பாடசாலையின் அதிபர் U.L.M. முபாறக் தெரிவித்தார்.

காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) சுமார் 14 ஏக்கர் நில பரப்பலவில் 1930.01.06 இல் திரு கந்தசாமி என்பவரை முதலாவது அதிபராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கான நிலத்தை வழங்கியவர் மர்ஹூம் முதலியார் சின்னலெப்பை ஆவார். இலங்கையின் தேசியக் கொடியை பாராளுமன்றத்தில் பிரகடனப்படுத்திய பெருமையும் அன்னாரையே சாரும்.

மேற்படி பாடசாலையில் கல்வி கற்ற பல ஆயிரக்கணக்கான பழைய மாணவர்கள் உலகின் பல நாடுகளில் பலதரப்பட்ட பதவிகளுடன் தொழில் வாய்ப்புகளை மெற் கொண்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.

குhத்தான்குடி மத்திய மஹா வித்தியாலயமானது பல கல்விமான்கள், புத்தி ஜிவிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சாதனையாளர்கள் என பலதரப்பட்டவர்களையும் உருவாக்கி உள்ளது என்ற பெருமையான செய்தியையும் நாம் சொல்லாமல் உலகம் தெரிந்து கொள்ளும்.

மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பின்  போது;

01) ULA.Mubarak SLEAS (Principal)

02) SMM.Baseer Tr (secretary SDC)

03) ALM.Rahmathulla PHI (Member SDC)

04) Dr-DM.Mahir (Member PPA)

05) ACA.Azees Hrig (Secretary PPA)

ஆகியோர்களும் விழா தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

மேற்படி பாடசாலையின் 85 வது விழா தொடர்பாக பல்வேறு பட்ட விடயங்கள் முன்னெடுக்கப்படவுள்ள அதே நேரம் இப்பாடசாலையின் பழைய மாணவர்களின் மேலான ஆலோசனைகளையும, உதவிகளையும் வேண்டி நிற்கின்றது மேற்படி பாடசாலை நிர்வாகம்.

விழா தொடரபில் நீங்களும் உங்கள் மேலான கருத்துக்களையும் உதவிகளையும் வழங்கிட பின்வரும இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி – 0652245726.

மின்னஞ்சல் –info@ncckky.sch.lk /lafir.mlm@gmail.com

ஷிப்லியை பதவி விலக்குவேன் – றிஷாத்

Siddeek-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

அகில இலங்கை மக்கள் மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனுடன் எனது தொலைபேசி உரையாடல்

நான்:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஜெமீல் உங்களைச் சந்தித்து பேசிய விடயங்களை கூற முடியுமா?

ரிஷாத் பதியுதீன்:– ஆம், அவர் என்னைச் சந்தித்தார். கடந்த நான்கு வருடங்களாக மட்டக்களப்பைச் சேர்ந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலவராக செயற்பட்டார். அதன் பின்னர் இரண்டரை வருடங்கள் திருகோணமலையைச் சேர்ந்த நஜீப் ஏ. மஜீத் கிழக்கு முதல்வராக இருந்தார். இப்போது எனக்கு தருவதாக கூறிய எமது தலைவர் என்னை ஏமாற்றி விட்டார். எனவே. அம்பாறையைச் சேர்ந்த ஒருவரே இனி வரவேண்டும். அதற்காக எனக்கு ஆதரவு வழங்க முடியுமா என கேட்டார். அதற்கு நான், எங்களுக்குப் பிரச்சினை இல்லை. முஸ்லிம் காங்கிரஸுக்குத்தான் முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றேன். ஆதரவு வழங்குவதாகவும் கூறினேன். அத்துடன் ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின்னர் தான் இணக்க அரசியலையே விரும்புவதாகவும் அவரிடம் கூறினேன். இது தவிர ஜெமீலை எனது கட்சியில் சேருமாறு நான் கேட்கவோ அல்லது ஜெமீல் எமது கட்சியில் இணையப் போவதாக கூறவில்லை.

நான்:- உங்களது கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உங்களிடம் அனுமதி பெற்றா ஹாபிஸ் நஸீரை முதலமைச்சராக நியமிப்பதற்கு இணக்க கையொப்பமிட்டார்? மேலும் நீங்கள் அவரது கையொப்பத்தை வாபஸ் செய்யும்படி கூறினீர்களா?

rishard badurdeenரிஷாத் பதியுதீன்:- கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் தலைவர் என்னிடம் அவர் அனுமதி கேட்டிருக்க வேண்டும். கட்சியின் தலைமையுடன் கலந்தரையாடியே கையொப்பமிட்டிருக்கவும் வேண்டும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. மேலும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் அதிகாரத்தை பெற்றுக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீமிடம் ஐந்துக்கு மேற்பட்ட முறைகள் நான் கூறியிருந்தேன். அத்துடன் இது தொடர்பில் எமது கட்சியுடனும் பேசுமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். அதற்கு ஹக்கீம் அனைத்துக்கும் பேசுவோம்.. பேசுவோம் என்று கூறினாரே தவிர எம்முடன் கலந்துரையாடவில்லை. மாறாக எமது கட்சியைச் சேர்ந்த சிப்லி பாறூக்கிடம் இரகசியமாக கையொப்பத்தை பெற்றுக் கொண்டனர்.

நேற்று முன்தினம் அமீர் அலியின் அமைச்சுக்கு நான் சென்றிருந்த போது சிப்லி பாறூக் காணப்பட்டார். அப்போது கையொப்பமிட்ட விவகாரம் தொடர்பில் அவரிடம் கேள்வியெழுப்பினேன். கட்சியின் அனுமதி இல்லாமல் எவ்வாறு கையொப்பமிட்டீர்கள் என்று நான் கேட்டதுடன் கடிதத்தை வாபஸ் பெறுமாறும் அவரைக் வேண்டினேன். இரு கட்சி தலைமைகளும் பேசி நாங்கள் முடிவெடுப்போம். முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்றும் அவரிடம் தெளிவாக கூறினேன்.

ஆனால் அவர் அதற்கு எவ்வித பதிலையும் வழங்கவில்லை. அவரது தொலைபேசியையும் செலிழக்கச் செய்திருந்தார். பின்னர் அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையப் போவதாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன். அவ்வாறு அவர் இணைந்து கொண்டால் கட்சியின் யாப்பையும் கட்சித் தலைமையையும் மீறிய குற்றச்சாட்டில் அவரை பதவி விலக்குவோம்.

நான்:- நீங்கள் கிழக்கு மாகாண சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு வாக்களிப்பீர்களா?

ரிஷாத் பதியுதீன் :- இது தொடர்பில் கட்சி கூடியே முடிவெடுக்கும்.கட்சியின் முடிவை மீறி யாரும் நடந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.

நான்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்தே கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தை முன்னெடுக்க வேண்டுமென நீங்கள் கூறினீர்களா?

ரிஷாத் பதியுதீன்:- ஆம். இதில் தவறில்லை. நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பங்காளியாக சேர்த்துக் கொள்ளவே வேண்டும். இதுவே சாலச் சிறந்தது. இந்த விடயத்தில் ரவூப் ஹக்கீமும் சம்பந்தன் ஐயாவும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். 30 வீதமான சிறுபான்மையின மக்கள் வாக்களித்தே இந்த ஜனாதிபதியை வெற்றி பெற வைத்தோம். அதேவேளை முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் வடக்கிலும் கிழக்கிலும் இல்லாமல் இல்லை என்பதனையும் நான் மறுக்கவில்லை. 30 வருட போரில் முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட்டது. இருப்பினும் இன்றுள்ள சமாதான மற்றும் நல்லாட்சி களநிலையில் கிழக்கில் ஆட்சியமைக்கும் விடயத்தில் நாங்கள் பிரிந்து நின்று பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு

நான்:- உங்களது கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை முஸ்லிம் காங்கிரஸ் உள்வாங்க முயற்சிக்கிறதா?

ரிஷாத் பதியுதீன்:- அவ்வாறு அவர்கள் தங்கள் கட்சிக்குள் எமது உறுப்பினர்களை உள்வாங்கினால் இணைபவர்கள் மீது சட்ட நடவடிக்கையை முன்னெடுப்போம். ஆனால், அவர்களது கட்சி பலவீனமடைந்ததன் காரணமாகவே எங்களது உறுப்பினர்களை உள்வாங்குகிறார்கள் என்றால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. மேலும், முஸ்லிம் கங்கிரஸ் உறுப்பினர்களோ அல்லது பிற கட்சி உறுப்பினர்களோ எமது கட்சியில் சேர்வதற்காக அவர்கள் சார்ந்த கட்சியின் உறுப்புரிமையுடன் வந்தால் நாம் ஏற்றுக் கொள்ளவே மாட்டோம். நான் இணக்க அரசியலையே விரும்புகிறேன்.

(இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் ராஜாங்க அமைச்சருமான ஹஸன் அலி அவர்களின் கருத்தினையும் பெற்று பதிவிடுவேன்)

சிகரம் கிராம மக்களுக்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான சிகரம் கிராமத்தில் ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தினால் வசதி குறைந்த 50 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (08-03-2015) சிகரம் கிராமத்தில் இடம்பெற்றது.

[Read more…]

ஏறாவூர் மாணவன் இரயிலில் மோதுண்டு மரணம்

-ஷப்ராஸ்-மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் வண்டியில் மோதுன்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் வண்டியில் மோதுன்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

[Read more…]

சாய்ந்த-மருதை நிமிர்த்த ஹிருணிகா களத்தில்…

எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன் –

கடந்த ஜனாதிபத்தி தேர்தல் காலத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்காக அம்பாறை மாவட்டத்துக்கு பல்வேறுசந்தர்ப்பங்களில் வருகைதரவிருந்த மேல்மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்கள், இன்று அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளுக்கு 2015-02-08 ல் வருகைதந்திருந்தார். [Read more…]

சிப்லியின் அரசியல் ஆலோசகர்கள் மத்தியில் மனமுரண்பாடு

சிப்லியின் அரசியல் ஆலோசகர்கள் மத்தியில் அவரின் முடிவு தொடர்பாக மனமுரண்பாடு ஏற்படுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் நேற்று முஸ்லிம் காங்கிரசில் இணைந்தது தொடர்பாக தனது அரசியல் ஆலோசகர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றுள்ளது.

[Read more…]

ஜெமீலுக்கு எதிரான தடை நீக்கம்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படவுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தற்போது தாருஸ்ஸலாமில்  நடைபெறும் ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்தார்.

இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஏ.எம்.ஜெமீல் கலந்துகொண்டு தான் நடந்து கொண்ட முறை தவறானது என ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோரினார். [Read more…]

முஸ்லிம் காங்கிரசில் இணைந்தார் சிப்லி – படம் இணைப்பு

அகில இலங்கை காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஷிப்லி பாறூக் நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமை கொழும்பில் சந்தித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

இந்த நிகழ்வு நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இங்கே பிரசுரிக்கப்படுகின்றது. [Read more…]

கிழக்கு மாகாண சபையில் பிள்ளையானுக்கு அமைச்சிப் பதவி

கிழக்கு மாகாண விவசாய அமைச்சராக முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) நியமிக்கப்படுவார் என்று அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, பிள்ளையான் மற்றும் அவருடன் புதிதாக இணைந்துள்ள இனியபாரதி ஆகியோருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை பேச்சு நடத்தினர்.

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழர் ஒருவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கி நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பிள்ளையானுக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்க அரசுத்தரப்பு முன்வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

எனது முதல் வெளிநாட்டு பயணம் தமிழ்நாட்டுக்குத்தான்: ஹாபீஸ் நசீர் அகமது

இலங்கை கிழக்கு மாகாண முதல்-மந்திரி ஹாபீஸ் நசீர் அகமது, 2 வாரத்திற்குள் தமிழ்நாட்டிற்கு வந்து, தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக ‘தினத்தந்திக்கு’ அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.

இலங்கையின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை போன்ற பகுதிகளை உள்ளடக்கியது கிழக்கு மாகாணம். இதன் புதிய முதல்-மந்திரியாக, ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்’ துணை தலைவரான ஹாபீஸ் நசீர் அகமது நேற்று முன்தினம் பதவியேற்றார். [Read more…]

ஷிப்லி பாறூக், அலி ஸாஹிர் மௌலானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

shib moulanaஅகில இலங்கை காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஷிப்லி பாறூக் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா (ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு) ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று (07) கொழும்பு சந்தித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டனர். இந்த்த் தகவலை கட்சியின் செயலாளர் நாயகமும் ராஜாங்க அமைச்சருமான எம்.ரீ. ஹஸன் அலி சற்று நேரத்துக்கு முன்னர் என்னிடம் தெரிவித்தார்

நாளை (08) காலையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் இவர்கள் இவர்கள் இது தொடர்பில் அறிவிக்கவுள்ளனர்.

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஹிஸ்புல்லாஹ் உள்ளே! சிப்லி வெளியே! : அரங்கத்திற்கு வரும் அந்தரங்கம்

HSR-Info Exclusive-

தற்பொழுது மட்டக்களப்பு முஸ்லிம் அரசியல் மேடையில் சூடுபிடித்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியேற்பும் அதற்கு  சிப்லி பாருக்கின் ஆதரவும் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் ஹிஸ்புல்லாவின் இணைவு தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அதி முக்கிய பிரமுகரை காத்தான்குடி இன்போ தொடர்புகொண்டு பல உள்ளக தகவல்களை பெற்றது. (அந்த பிரமுகரின் நிபந்தனைக்கு ஏற்ப அவரது பெயர் இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது).

கேள்வி: பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் உங்கள் கட்சியில் இணைந்து விட்டாரா?

பதில்: முதல் கேள்வியிலேயே நீங்கள் என்னை தர்மசங்கடத்தில் உள்ளாக்க முயற்சி செய்கின்றீர்கள். அவர் இன்னும் எமது கட்சியில் இணையவோ, இணைக்கப்படவோ இல்லை.

கேள்வி: அப்படியானால் அவர் உங்கள் கட்சியில் இணைவாரா?

பதில்: இப்போது என்னால் எந்த கருத்தும் கூறமுடியாது.

கேள்வி: ஹிஸ்புல்லாஹ் உங்கள் கட்சியில் இணைவது தொடர்பாக ஏதாவது பேச்சுவார்த்தை நடைபெருகின்றாதா?  மற்றும் இணக்கப்பாடு அல்லது ஒப்பந்தம் ஏதாவது இதுவரையில் ஏற்பட்டதா?

பதில்: இந்த கேள்விக்கு மௌனமே எனது பதில்

கேள்வி: ஹிஸ்புல்லாஹ்வை கட்சியில் மீள் இணைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சி பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்களா?

பதில்: அவர்கள் எமது கட்சியின் தலைமைதுவத்திற்கு கட்டுப்பட்டு நடப்பார்கள்

கேள்வி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் முஸ்லிம் காங்கிரஸ்சில் இணைந்துவிட்டதாக தகவல்கள் வருகின்றேதே உண்மையா?

பதில்: அவர் இன்னும் எங்கள் கட்சியிலேயே இருக்கின்றார்.

கேள்வி: உங்கள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரசிற்கு எதிராக செயற்பட்டதாகவும் தமிழ் முதல் அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கு முயற்சித்ததாகவும் கூறப்படுகின்றதே?

பதில்: ஜானதிபதி தேர்தலுக்கு பின் அரசியல் கட்சி என்ற ரீதியில் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தினோம். கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பாக சில சம்பாசனைகளே நடைபெற்றது. இதன் போது பெரும்பான்மை ஆசனத்தை பெற்ற கட்சி தாங்கள் என்ற ரீதியில் எங்கள் கட்சிக்கே முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியது. அதற்கு எங்கள் ஆதரவையும் கோரினார்கள்.

நாங்கள் கட்சி ரீதியாக அவர்களுக்கு எந்தவிதமான வாக்குறுதிகளையும் வழங்கவில்லை. அத்துடன், கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வசிப்பதால் முதலமைச்சர் பதவிக்கு தான் வரவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரான தயா கமகே எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தார், இதனை நாங்கள் சம்பந்தன் ஐயாவிடம் தெரிவித்தோம்.

ஆனால் இதற்கு அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார், கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழரே முதலமைச்சராக வரவேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டார்.

கேள்வி: முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவதை உங்கள் கட்சி விரும்பியதா?

பதில்: முதலமைச்சர் பதவி விடயத்தில் ஏனைய கட்சிகளின் கருத்துக்களை பெறாமல் அவர்கள் அவசர அவசரமாக செயற்பட்டுள்ளர்கள்.

கேள்வி: முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த நசீர் ஹாபிஸ் அவர்கள் முதலமைச்சராக வருவதற்கு ஆதரவு வழங்கிய சிப்லி பாறுக் மீது ஆதரவை வாபஸ்பெறுமாறு அழுத்தம் பிரயோகிகப்படுவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றதே?

பதில்: அவர் மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது உண்மையே, எனினும் அவர் தரப்பில் இருந்து பல தகவல்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன.

அவர் எமது கட்சியில் எவருக்கும் தெரியாமல் நசீர் ஹாபிஸ் முதமைச்சராக வருவதற்கு ஆதரவு தெரிவித்து திரைமறைவில் உறுதிப்பத்திரத்தில் கையொப்பம் இட்டுள்ளார்.

இது மிகவும் ஒரு பிழையான செயல், ஒரு கட்சியில் முக்கிய இடத்தில் இருப்பவர் நடந்துகொள்ளக்கூடிய முறை இதுவல்ல. ஒரு கூட்டுப்பொறுப்பில் இருப்பவர், கட்சியின் தலைமைத்துவத்துடன் கட்டயாம் மசூரா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

அவர் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்ட விடயத்தை முற்றாக கட்சி தலைமைக்கு மறைத்து விட்டார்.

பின்னர், முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஹாபிஸ் நசீர் முதலமைச்சராக தெரிவு செய்யப்படவுள்ளார் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். எனினும் எங்கள் கட்சியின் ஆதரவு இல்லாமல் அவர் எப்படி முதலமைச்சராக பதவியேற்க முடியும் என்று விசாரித்த போதுதான் தெரிந்தது, சிப்லி பாறுக் அவருக்கு ஆதரவாக திரைமறைவில் உறுதிப்பத்திரத்தில் கையொப்பம் இட்டது.

அவரை நாங்கள் அழைத்து தமது ஆதரவை வாபஸ் பெறுமாறு கோரினோம்.

ஏனெனில், நாங்கள் முஸ்லிம் காகிரசுடன் கட்சி ரீதியாக பேச்சுவார்த்தை நடாத்தி ஒப்பந்த ரீதியிலேயே அவர்களுக்கு ஆதரவு வழங்க விரும்பிஇருந்தோம்.

எனினும் சிப்ளியின் செயல் கட்சிக்கும், அவருக்கும் இழுக்கை ஏற்படுத்திவிட்டது.

கேள்வி: சிப்லிக்கு எதிராக ஏதாவது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்: அதுபற்றி எதுவும் இப்போது எதுவும் கூறமுடியாது.

கேள்வி: இறுதியாக ஹிஸ்புல்லாஹ் இணைவாரா? மாட்டாரா?

பதில்: ……………………………………………………………………………”சிரிப்பொலி”

ஹிருணிகா அம்பாறை மாவட்டத்துக்கு சூறாவளிப் பயணம்

hirun-எம்.வை.அமீர்-  

அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபத்தி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வெற்றிக்காக வாக்களித்த அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேச மக்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத்துங்க அவர்களது சார்பில் நன்றி சொல்வதற்காக மேல்மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்கள் உள்ளிட்ட குழுவினர் வருகைதருகிறனர்.

ஹிருணிகாவின்  அம்பாறை மாவட்டத்துக்கான விஜயத்தின் போது சாய்ந்தமருது  லீமெரிடியன் வரவேட்பு மண்டபத்தில், ஏ.ஆர்.எம்.அஸீம் தலைமையில் இடம்பெறும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.

ஹிஸ்புல்லாஹ் மீண்டும் றிசாத்துடன் இணைந்தார், ஷிப்லி முஸ்லிம் காங்கிரசில்?

HSRஅரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்று சொல்வதற்கினங்க தற்பொழுது முஸ்லிம் அரசியல்வாதிகளின் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

கடந்த ஜானாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு இடை நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் MLAM. ஹிஸ்புல்லாஹ் மீண்டும் அந்த கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார் என்று அந்த கட்சின் அதியுயர் பீட உறுப்பினர் ஒருவர் காத்தான்குடி இன்போவிற்கு தெரிவித்தார்.

[Read more…]

ரவூப் ஹக்கீமுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை: ஜெமீல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு எதிராக சாய்ந்தமருதில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பாக தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் நான் நேரடியாக விவாதித்தேனே தவிர கட்சிக்கு வெளியே போராட்டம் எதனையும் முன்னெடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். [Read more…]

கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயம் மிகப்பெரிய ஓட்டை: மசூர் மௌலானா

நாட்டின் ஒருபகுதியில் முஸ்லிம் சமூகத்தின் உள் வீட்டுப் பிரச்சினை பூதாகரமாகியிருக்கும் இந்தச் சூழலில் நாம் மாற்று சமூகத்தாரிடம் இருந்து எவ்வாறு நல்லிணக்கத்தையும்,ஒருமைப்பாட்டையும் எதிர்பார்க்க முடியும்? இலங்கையில் இனவாதத்தையும் விட கொடிய அரக்கன் பிரதேச வாதமாகும்.

[Read more…]

கிழக்கு முதல்வருக்கான ஆதரவை வாபஸ் பெறுமாறு சிப்லிக்கு றிசாத், அமீர் அலி அழுத்தம்

கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹாபிஸ் நஸீர் அஹமட்டை நியமிப்பதற்கு வழங்கிய ஆதரவை உடனடியாக வாபஸ்பெறுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் மீது பல்வேறு அழுத்தங்களை அமைச்சர்களான றிசாத் பதியுதீன் மற்றும் அமீர் அலி ஆகியோர்  பிரயோகிப்பதாக சிப்லி பாறுகிற்கு நெருக்கமான வட்டாரங்கள் காத்தான்குடி இன்போவிற்கு தெரிவித்தது. [Read more…]

கிழக்கு மாகாண சபை உறுப்பினராக அலி ஸாஹிர் மௌலானா சத்தியப்பிரமாணம்

கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக செய்யித் அலி ஸாஹிர் மௌலானா இன்று ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினராக இருந்த எம்எஸ்எஸ் அமீர்அலி பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து ஏற்பட்டவெற்றிடத்திற்கு செய்யித் அலி ஸாஹிர் மௌலானா மாகாணசபை உறுப்பினர் பதவிற்கு தேர்தல்கள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டார். [Read more…]

அமீர் அலி முயற்சியால் வடமுனை கிராம மக்களின் நலன் கருதி பஸ் சேவை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஊத்துச்சேனை வடமுனை கிராம மக்களின் போக்குவரத்து நலன் கருதி சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியால் ரிதிதென்ன இலங்கை போக்குவரத்துசாலையால் பஸ் சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. [Read more…]

அமைச்சர் ரிஷாத்தை சந்தித்தது உண்மையே ஆனால் அவர் எந்தப் பொதியையும் தரவில்லை: ஜெமீல்

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர் தன்னைச் சந்தித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனிடம் அழைத்துச் சென்றார் என்றும் இதற்கான ஏற்பாடுகளை மாகாண சபை உறுப்பினரான அன்வரே செய்ததாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஏ.எம். ஜெமீல் என்னிடம் தெரிவித்தார்.

என்னுடனான அவரது தொலைபேசி உரையாடலை அப்படியே தருகிறேன்…. [Read more…]

‘முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியமைப்பு மக்கள் ஆணைக்கு முரணானது- சம்பந்தன்

2012-ம் ஆண்டு நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை அமைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் புதிய ஆட்சியமைப்பு நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்ட மக்களின் ஆணைக்கும் முரணானது என்றும் சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது, அரசாங்கக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரம் செய்திருந்ததையும் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
[Read more…]

ஜும்ஆ ஒலிப்பதிவு – புதிய காத்தான்குடி பதுரியா ஜும்ஆப் பள்ளிவாயல்

ஒலிப்பதிவு – M.N. அஹமட் ஆஸிர்

காலம் – 06.02.2015

பயான் நிகழ்த்தியவர் – மௌலவி அஷ் ஷெய்க் அனஸ் (ரஷாதி), (விரிவுரையாளர், ஹிழுரியா அரபுக் கல்லூரி, வெலிகம)

தலைப்பு – மஸ்ஜிதுடைய பங்களிப்பும் அதன் நிருவாகிகளின் தகுதிகளும் கடமைகளும்

[Read more…]

கல்முனை மாநகரின் ஆட்சி முஸ்லிம் காங்கிரசிடம் இருந்து கைமாறும் நிலையில்!

கல்முனை மாநகரின் முஸ்லிம் காங்கிரஸ் மாநகரா சபை உறுப்பினர்கள் இருவர் அக்கட்சியில் இருந்து விலகி மாற்று அணி ஒன்றில் இணையவுள்ளதாக நம்பகமாக தெரிய வருகிறது.

சாய்ந்தமருதை சேர்ந்த ஒரு உறுப்பினரும் மருதமுனையை சேர்ந்த  மற்றொரு மாநகர சபை உறுப்பினர் ஒருவருமே இவ்வாறு முஸ்லிம் காங்கிரசில் இருந்து விலகி மாற்று அணியில் இனைய திட்டமிட்டுள்ளனர். [Read more…]

காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் மாணவர் ஒன்றியத்தினால் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு நேற்று 06.02.2015 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. காத்தான்குடி மத்திய கல்லூரியின் நுழைவாயில் உட்பகுதி சிரமதானம் செய்யப்பட்டு சுத்திகரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், இஸ்லாமிக் சென்றர் நிருவாகிகள், பாடசாலை அதிபர், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, நகர சபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். [Read more…]

மங்களகம கிராம மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய முயற்சிப்பேன்: அமீர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான மங்களகம கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று வீடமைப்பு சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மங்களகம பிரதேச மக்களுடனான சந்திப்பு மங்களகம மங்கராம விகாரையில் விகாராதிபதி தெஹிகம ஞானரத்ன தேரர் தலைமையில் (04.02.2015) புதன்கிழமை இடம் பெற்ற போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். [Read more…]

கிழக்கு மாகாண முதலமைச்சராக நசீர் அஹமட் பதவியேற்றார்

இலங்கையில் கிழக்கு மாகாண முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஹாபிஸ் நசீர் அஹமட் நேற்று மாலை ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

[Read more…]

கர்பலா வீதி அபிவிருத்தி மகநெகும செயற்திட்டம் : உண்மை நிலை என்ன?

ALM.Rifas

ALM.Rifas

ALM.றிபாஸ்

கடந்த ஜானதிபதி தேர்தலுக்கு முன்பு மகநெகும செயத்திட்டதின் கீழ் கர்பலா வீதி அபிவிருத்திக்கென அப்போதைய ஜானாதிபதியால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது இதற்கான வேண்டு கோளும், முயற்சியும் கௌரவ பாரளுமன்ற  உறுப்பினர் MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது  என்பது உண்மை . [Read more…]

சாய்ந்தமருதில் அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமிக்கு எதிராக சாய்ந்தமருதில் இன்று ஜூம்ஆ தொழுகையை தொடந்து ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலிலுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியினை வழங்கப்படாதனைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் கொடும்பாவிக்கு செருப்பினால் மாலை அணிவித்து தலைவர் ஒளிக என்ற கோஷத்துடன் செருப்பால் அடித்தனர்.

[Read more…]

முஸ்லிம் காங்கிரசில் இருந்து இடைநிருத்தப்பட்டார் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலை கட்சியின் உறுப்புரிமைகளிலிருந்தும் அவர் கட்சியில் வகித்த சகல பதவிகளிலிருந்தும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் பிரதி அமைச்சர் எம்.ரி.ஹஸனலி தெரிவித்துள்ளார்.

[Read more…]

ஹஸனலி மீது சேறு பூசவேண்டாம்

-மீரா அலி ரஜாய்-

கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அதில் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸனலி தொடர்பான விடயங்களும் இடம் பெற்றிருப்பது மிகுந்த வேதனைக்குரியது.

[Read more…]

முதலமைச்சர் பதவியை ஜெமீலுக்கே வழங்கவேண்டும் சாய்ந்தமருது மத்தியகுழு தீர்மானம்

-எம்.வை.அமீர் –

கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதிவியை முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் ஒருவருக்கு வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ள இந்தசந்தர்ப்பத்தில், குறித்த பதவியை மட்டக்களப்பைச் சேர்ந்த ஹாபீஸ் நஸீர் அவர்களுக்கு வழங்க அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் தீர்மாநித்துள்ளதாகக் கூறப்படும் இச்சந்தர்ப்பத்தில், அவசர அவசரமாக ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரசின் சாய்ந்தமருது மத்தியகுழு விசேட கூட்டம் ஒன்றை சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலையத்தில் 2015-02-05 ல் கூட்டியது.

[Read more…]

காத்தான்குடி நகரபிதாவின் உல்டா: போட்டுடைக்கின்றார் ஒப்பந்தக்காரர்

காத்தான்குடி பாம் வீதி உள்ளிட்ட பல்வேறு வீதியின் அபிவிருத்தி தொடர்பில் இருக்கின்ற பிரச்சினை தொடர்பாக காத்தான்குடி நகர முதல்வர் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்து வருவதாக அந்த வீதியினை நிர்மாண பணிக்கு ஒப்பந்தம் செய்த கொந்துராதுகாரர் தெரிவித்தார். அவர் தெரிவித்த கருத்துக்கள் இங்கே காணொளியாக பதிவிடப்படுகின்றது. [Read more…]

அம்பாறையில் றஊப் ஹக்கீமுக்கு கொடும்பாவி எரிப்பு…

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றஊப் ஹக்கிமினால் அம்பாறை மாவட்டம் தொடர்ச்சியாக புறக்கனிக்கப்பட்டு வருகின்றதை கண்டித்து நாளை அம்பாறை மாவட்டம் முழுவதும் பாரிய எதிர்ப்பு ஊர்வலமும், அமைச்சர் றஊப் ஹக்கிமுக்கு கொடும்பாவி எரித்தலும் இடம்பெறவுள்ளது. [Read more…]

கிழக்கு முதலமைச்சர் தெரிவு : நடந்தது என்ன? உள்வீட்டு தகவல்கள்

கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்றிரவு (04) கிழக்கு மாகாண புதிய முதலமைச்சர் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். அதன்போது முடிவுகள் பெரிதாக எட்டப்படவில்லை.

இந்த நிலையில் இன்று (05) காலையில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ஹக்கீமின் கொள்ளுப்பிட்டி வீடு பரபரப்பாக காணப்பட்டது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஹாபிஸ் நஸீர், தவம், ஜெமீல் ஆகியோர் அங்கிருக்கவில்லை. (மன்சூரும் காணப்படவில்லை என கூறப்டுகிறது) ஜெமீலுடன் அமைச்சர் ஹக்கீம் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பலனளிக்கவில்லை. தவம் காலையிலேயே வந்து விட்டு சென்றதாக தகவல் வழங்கப்பட்டதனையடுத்து அவர் மீண்டும் அழைக்கப்படவில்லை. [Read more…]

பதவி ஆசையில் மூழ்­கிப்­போயிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்: முஜிபுர் ரஹ்மான்

இலங்­கையின் முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளுக்கு முன்பிருந்த பெரும் மரி­யாதையினால் சமூகம் தலை­நி­மிர்ந்து வாழ்ந்­தது. ஆனால் இன்­றைய தலை­மைகள் பதவி ஆசையில் மூழ்­கிப்­போ­யி­ருப்­ப­தும் மோசமான அரசியல் செயற்பாடுகளினாலும் எமது சமூகத்திற்கு பெரும் இழுக்கு ஏற்­ப­டுத்­து­வ­தாக மேல்­மா­காண சபை உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்­தினார்.

[Read more…]

கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹாபீஸ் நசீர் அஹமட்?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற உடன்படிக்கைக்கு அமைய இறுதி இரண்டரை வருடங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சு பதவி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்பட வேண்டும் [Read more…]

நல்லிணக்கத்தை ஏற்படுத்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளது – சந்திரிகா

நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்பி நல்லிணக்கத்தை ஏற்படுத்த மீண்டும் நல்லதொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது எனத் தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.

இலங்கையில் 67ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூறா சபையின் ஏற்பாட்டி நேற்றுப் பிற்பகல் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

[Read more…]

கிழக்கு முதலமைச்சர் பதவியை பங்கு போட்டுக் கொள்வோம் – சம்பந்தன், ஹக்கீமுக்கு பசீர் கடிதம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியின் எஞ்சியிருக்கும் காலத்தை தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் பங்கிட்டுக் கொள்ளலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

[Read more…]

துபாயில் இடம் பெற்ற 67வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

இலங்கையின் 67வது சுதந்திர தின உத்தியோக பூர்வ கொண்டாட்டம் இன்று காலை (பெப்ரவரி நான்காம் திகதி) துபாயில் உள்ள இலங்கை பிரதி தூதுவராலயத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

தூபாயில் உள்ள இலங்கை பிரதித்தூதுவர் அப்துல் றஹீம் தேசிய கொடியை ஏற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். தேசிய கீதம் மங்கள விளக்கேற்றல், தேசிய வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி மற்றும் ஜனாதிபதி , பிரதம மந்திரி , வெளிவிவகார அமைச்சர் அவர்களின் ஆசிச்செய்திகள் ஆங்கிலம், சிங்களம், தமிழ் மொழிகளில் பிரதித்தூதுவர் அப்துல் றஹீம் மற்றும் ஏனைய உத்தியோகத்தினரால் வாசிக்கப்பட்டது. மேலும் பௌத்த இந்து இஸ்லாமிய கிறீஸ்தவ சமயப்பெரியார்கள் நாட்டுக்கும் துபாய் வாழ் இலங்கையர் அனைவருக்கும் மும் மொழிகளிலும் ஆசி வழங்கினர். [Read more…]