Advertisements

கானல்நீராய் கல்முனையின் அபிவிருத்தி??? அங்கலாய்க்கும் மக்கள்

-எம்.வை.அமீர் –

கல்முனைத்தாய் தனது கடந்தகால வரலாற்றில் பல்வேறுபட்ட தலைவர்களையும்இ சிறந்த அடைவுகளையும், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பேசும் அளவுக்குஇ முஸ்லிம்களின் தலைநகர், என்ற அந்தஸ்த்தையும் ஏன் பல்வேறுபட்ட அபிவிருத்திகளையும் கண்டாள்.

கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் முதல் எம்.சீ.அகமட், ஏ.ஆர்.எம்.மன்சூர், எம்.எச்.எம்.அஷ்ரப், எம்.எம்.முஸ்தபா (மையோன்) எச்.எம்.எம்.ஹரீஸ் வரை பாரளமன்ற உறுப்பினர்களையும் கல்முனைத்தாய் ஈன்றாள். அத்துடன் உயர் கல்வியாளர்கள்இ சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், விவசாயிகள்இ மீனவர்கள் என பல்வேறு தரப்பினரையும் தன்னகத்தே உள்ளடக்கினாள்.

கல்முனைத்தாய் பெற்ற மக்கள் ஒற்றுமைக்கு பெயர்போனவர்கள். அவர்களுக்குள் முரன்பட்டுக்கொன்டாலும் இறுதியில் ஒன்றுபட்டு விடுவார்கள். இதற்க்கு பல்வேறு [Read more…]

கிழக்கு முதல்வர் நியமனம் தொடர்பாக நடந்தது என்ன – ஷிப்லியின் ஊடகஅறிக்கை…

தற்போது கிழக்குமாகாண சபையின் புதிய முதலமைச்சராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் நஸீர் ஹாபிஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் என்னை சம்பந்தப்படுத்தி பலதரப்பட்ட கருத்துக்களும், விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை எனக்கிருக்கின்றது என்ற காரணத்தினால், இவ்வூடக அறிக்கையானது என்னால் வெளியிடப்படுகின்றது.
[Read more…]

கிழக்கு மாகாண சபை: TNA, SLMC மீண்டும் பேச்சுவார்த்தை

-அஸ்லம் எஸ்.மௌலானா-

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்படுத்தியுள்ள புதிய ஆட்சியில் தமிழ்த் தேசியக்’ கூட்டமைப்பு பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கமொன்றை உருவாக்கி மூவின மக்களும் ஒன்றாகச் செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக்’ கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமது ஆட்சியில் இணைந்து கொள்ள முன்வர வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். [Read more…]

பதவியை தக்கவைப்பதற்காக எந்த பேயுடனும் முஸ்லிம் காங்கிரஸ் சேரும் – ஜனா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது பதவிகளை தக்கவைப்பதற்காக எந்தபேயுடனும் கூட்டுச்சேருமே தவிர அவர்களுக்கு இனம் சார்ந்த செயற்பாடுகள் எதுவும் இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

Janaஇன்று அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

[Read more…]

நேற்று பேசிய ஜெமீலா இது?

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நடத்தப்பட்ட இந்த வருடத்தின் முதலாவது பாரிய நாடகம் மேடையேற்றப்பட்டது. அமைச்சர் ஹக்கீம் பிரதான பாத்திரம் ஏற்க கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜெமீல், அன்வர் ஆகியோர் துணை நடிகர்களாக அற்புதமாக நடித்திருந்தனர்.

IMG_0816மக்களோ பாவம்… பழைய படங்களில் எம்.ஜி. ஆருக்கு நம்பியார் ஒரு அடிவிட்டாலே (நடிப்புக்காக) உண்மை என நினைத்து கொதித்தெழும் ரசிகர்கள் நிலையில்தான் காணப்பட்டனர். ஹாபிஸ் நஸீருக்கு முதலமைச்சர் பதவி வழங்கியதற்காகவும் அம்பாறை மாவட்டத்தைப் புறக்கணித்ததற்காகவும் ஜெமீலுக்கு அந்தப் பதவியை வழங்கவில்லை என்றும் கல்முனை மகக்ள் கொதிந்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் அமைச்சர் ஹக்கீமின் கொடும்பாவியையும் எரித்து நின்றனர்.

தாங்கள் அரகேற்றிய நாடகத்தை மக்கள் உண்மையாக நம்பி விட்டனர் என்ற கேலித்தனத்தில் இவர்கள் காணப்பட்டனர். ஆனால் மக்களோ உண்மையென நம்பியே அனைத்தையும் செய்து தங்களை வருத்தி, பிரிந்து கொண்டனர்.

இவர்கள் தங்களது நாடகத்துக்கு கௌரவ நடிகர்களாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான எம். சுபைரையும் வலிந்து எடுத்துக் கொண்டனர்.

இந்த நாடகத்துக்கு திரைக்கதை வசனம் எழுதி தயாரித்த கல்முனையின் குறுநில மன்னர் தலைமறைவாகியிருந்தார். பாவம் இறுதியில் அனைத்துப் பழிகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான தவம் அவர்கள் தலையில் கட்ட வேண்டியதாகி விட்டது.

sa2இவர்கள் ஆடிய நாடகத்தின் உண்மை நிலை இன்றைய ஊடகவியலாளர் மகாநாட்டில் அம்பலத்துக்கு வந்து விட்டது. ஜெமீல் மன்னிப்புக் கேட்டாராம். ஹக்கீம் மன்னித்து விட்டாராம்.. எவ்வளவு வெட்கம்.. இந்தப் போலி நாடகத்தின் உண்மையைத் தன்மையை இன்று அம்பலப்படுத்தாமல் கொஞ்சக் காலம் தாமதித்தாவது வெளிப்படுத்தியிருந்தால் முஸ்லிம் காங்கிரஸினால் பாவப்பட்டு போயுள்ள முஸ்லிம் மக்கள் சற்று மறந்த நிலையில் நிம்மதியடைந்திருப்பர். வெள்ளிக்கிழமை நாடகத்தையின் உண்மையை ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே அவர்கள் அரங்கேற்றி அசிங்கப்படுத்தி விட்டனர்.

பிரதேச வாதத்தையும் சமூகத்தில் பிரிவினையையும் ஏற்படுத்தி மக்களை பிரித்தவர்கள் இன்று சேர்ந்து விட்டனர். ஆனால் அவர்களை நம்பிய மக்களோ இன்று பிரிந்து நின்று மனக் கசப்புடன் காணப்படுகிறனர்.

கிழக்கு மகாண சபை உறுப்பினரான சர்ச்சைக்குரிய ஜெமீல் அவர்கள் பல தடவைகள் என்னுடன் நேற்று தொடர்பு கொண்டு பல விடயங்கைளத் தெரிவித்திருந்தார். அவற்றினை நான் நாகரிகமான முறையில் மறைத்துக் கொண்டேன். ஹாபிஸ் நஸீர் தொடர்பில் அவர் என்னிடம் தெரிவித்தவைகளை நான் இப்போது நினைத்துப் பார்க்கும் போது என்னுடன் நேற்று பேசியது இன்று அவருடன் இணைந்து கொண்ட ஜெமீலா என்று சந்தேகிக்கவும் தோன்றுகிறது. அத்துடன் அமைச்சர் ஹக்கீம் தொடர்பிலும் அவர் சில கருத்துகளை என்னிடம் தெரிவித்தார். அதனைக் கூட ஜெமீல்தான் சொன்னாரா என்பதும் எனக்கு இன்னும் அதிர்ச்சியாக உள்ளது.

இறுதியாக ஜெமீல் மன்னிப்புக் கேட்டாராம் ஹக்கீம் மன்னித்து விட்டாராம். வெட்கம் வெட்கம்.. மக்களை இறைவன் மன்னித்துக் கொள்ளட்டும்! வாழ்க, வளர்க முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்

[Read more…]

ஜெமீலுக்கு எதிரான தடை நீக்கம்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படவுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தற்போது தாருஸ்ஸலாமில்  நடைபெறும் ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்தார்.

இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஏ.எம்.ஜெமீல் கலந்துகொண்டு தான் நடந்து கொண்ட முறை தவறானது என ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோரினார். [Read more…]

ஷிப்லி பாறூக், அலி ஸாஹிர் மௌலானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

shib moulanaஅகில இலங்கை காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஷிப்லி பாறூக் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா (ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு) ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று (07) கொழும்பு சந்தித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டனர். இந்த்த் தகவலை கட்சியின் செயலாளர் நாயகமும் ராஜாங்க அமைச்சருமான எம்.ரீ. ஹஸன் அலி சற்று நேரத்துக்கு முன்னர் என்னிடம் தெரிவித்தார்

நாளை (08) காலையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் இவர்கள் இவர்கள் இது தொடர்பில் அறிவிக்கவுள்ளனர்.

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஹிஸ்புல்லாஹ் உள்ளே! சிப்லி வெளியே! : அரங்கத்திற்கு வரும் அந்தரங்கம்

HSR-Info Exclusive-

தற்பொழுது மட்டக்களப்பு முஸ்லிம் அரசியல் மேடையில் சூடுபிடித்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியேற்பும் அதற்கு  சிப்லி பாருக்கின் ஆதரவும் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் ஹிஸ்புல்லாவின் இணைவு தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அதி முக்கிய பிரமுகரை காத்தான்குடி இன்போ தொடர்புகொண்டு பல உள்ளக தகவல்களை பெற்றது. (அந்த பிரமுகரின் நிபந்தனைக்கு ஏற்ப அவரது பெயர் இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது).

கேள்வி: பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் உங்கள் கட்சியில் இணைந்து விட்டாரா?

பதில்: முதல் கேள்வியிலேயே நீங்கள் என்னை தர்மசங்கடத்தில் உள்ளாக்க முயற்சி செய்கின்றீர்கள். அவர் இன்னும் எமது கட்சியில் இணையவோ, இணைக்கப்படவோ இல்லை.

கேள்வி: அப்படியானால் அவர் உங்கள் கட்சியில் இணைவாரா?

பதில்: இப்போது என்னால் எந்த கருத்தும் கூறமுடியாது.

கேள்வி: ஹிஸ்புல்லாஹ் உங்கள் கட்சியில் இணைவது தொடர்பாக ஏதாவது பேச்சுவார்த்தை நடைபெருகின்றாதா?  மற்றும் இணக்கப்பாடு அல்லது ஒப்பந்தம் ஏதாவது இதுவரையில் ஏற்பட்டதா?

பதில்: இந்த கேள்விக்கு மௌனமே எனது பதில்

கேள்வி: ஹிஸ்புல்லாஹ்வை கட்சியில் மீள் இணைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சி பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்களா?

பதில்: அவர்கள் எமது கட்சியின் தலைமைதுவத்திற்கு கட்டுப்பட்டு நடப்பார்கள்

கேள்வி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் முஸ்லிம் காங்கிரஸ்சில் இணைந்துவிட்டதாக தகவல்கள் வருகின்றேதே உண்மையா?

பதில்: அவர் இன்னும் எங்கள் கட்சியிலேயே இருக்கின்றார்.

கேள்வி: உங்கள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரசிற்கு எதிராக செயற்பட்டதாகவும் தமிழ் முதல் அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கு முயற்சித்ததாகவும் கூறப்படுகின்றதே?

பதில்: ஜானதிபதி தேர்தலுக்கு பின் அரசியல் கட்சி என்ற ரீதியில் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தினோம். கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பாக சில சம்பாசனைகளே நடைபெற்றது. இதன் போது பெரும்பான்மை ஆசனத்தை பெற்ற கட்சி தாங்கள் என்ற ரீதியில் எங்கள் கட்சிக்கே முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியது. அதற்கு எங்கள் ஆதரவையும் கோரினார்கள்.

நாங்கள் கட்சி ரீதியாக அவர்களுக்கு எந்தவிதமான வாக்குறுதிகளையும் வழங்கவில்லை. அத்துடன், கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வசிப்பதால் முதலமைச்சர் பதவிக்கு தான் வரவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரான தயா கமகே எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தார், இதனை நாங்கள் சம்பந்தன் ஐயாவிடம் தெரிவித்தோம்.

ஆனால் இதற்கு அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார், கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழரே முதலமைச்சராக வரவேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டார்.

கேள்வி: முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவதை உங்கள் கட்சி விரும்பியதா?

பதில்: முதலமைச்சர் பதவி விடயத்தில் ஏனைய கட்சிகளின் கருத்துக்களை பெறாமல் அவர்கள் அவசர அவசரமாக செயற்பட்டுள்ளர்கள்.

கேள்வி: முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த நசீர் ஹாபிஸ் அவர்கள் முதலமைச்சராக வருவதற்கு ஆதரவு வழங்கிய சிப்லி பாறுக் மீது ஆதரவை வாபஸ்பெறுமாறு அழுத்தம் பிரயோகிகப்படுவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றதே?

பதில்: அவர் மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது உண்மையே, எனினும் அவர் தரப்பில் இருந்து பல தகவல்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன.

அவர் எமது கட்சியில் எவருக்கும் தெரியாமல் நசீர் ஹாபிஸ் முதமைச்சராக வருவதற்கு ஆதரவு தெரிவித்து திரைமறைவில் உறுதிப்பத்திரத்தில் கையொப்பம் இட்டுள்ளார்.

இது மிகவும் ஒரு பிழையான செயல், ஒரு கட்சியில் முக்கிய இடத்தில் இருப்பவர் நடந்துகொள்ளக்கூடிய முறை இதுவல்ல. ஒரு கூட்டுப்பொறுப்பில் இருப்பவர், கட்சியின் தலைமைத்துவத்துடன் கட்டயாம் மசூரா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

அவர் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்ட விடயத்தை முற்றாக கட்சி தலைமைக்கு மறைத்து விட்டார்.

பின்னர், முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஹாபிஸ் நசீர் முதலமைச்சராக தெரிவு செய்யப்படவுள்ளார் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். எனினும் எங்கள் கட்சியின் ஆதரவு இல்லாமல் அவர் எப்படி முதலமைச்சராக பதவியேற்க முடியும் என்று விசாரித்த போதுதான் தெரிந்தது, சிப்லி பாறுக் அவருக்கு ஆதரவாக திரைமறைவில் உறுதிப்பத்திரத்தில் கையொப்பம் இட்டது.

அவரை நாங்கள் அழைத்து தமது ஆதரவை வாபஸ் பெறுமாறு கோரினோம்.

ஏனெனில், நாங்கள் முஸ்லிம் காகிரசுடன் கட்சி ரீதியாக பேச்சுவார்த்தை நடாத்தி ஒப்பந்த ரீதியிலேயே அவர்களுக்கு ஆதரவு வழங்க விரும்பிஇருந்தோம்.

எனினும் சிப்ளியின் செயல் கட்சிக்கும், அவருக்கும் இழுக்கை ஏற்படுத்திவிட்டது.

கேள்வி: சிப்லிக்கு எதிராக ஏதாவது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்: அதுபற்றி எதுவும் இப்போது எதுவும் கூறமுடியாது.

கேள்வி: இறுதியாக ஹிஸ்புல்லாஹ் இணைவாரா? மாட்டாரா?

பதில்: ……………………………………………………………………………”சிரிப்பொலி”

ரவூப் ஹக்கீமுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை: ஜெமீல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு எதிராக சாய்ந்தமருதில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பாக தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் நான் நேரடியாக விவாதித்தேனே தவிர கட்சிக்கு வெளியே போராட்டம் எதனையும் முன்னெடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். [Read more…]

‘முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியமைப்பு மக்கள் ஆணைக்கு முரணானது- சம்பந்தன்

2012-ம் ஆண்டு நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை அமைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் புதிய ஆட்சியமைப்பு நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்ட மக்களின் ஆணைக்கும் முரணானது என்றும் சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது, அரசாங்கக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரம் செய்திருந்ததையும் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
[Read more…]

கிழக்கு மாகாண முதலமைச்சராக நசீர் அஹமட் பதவியேற்றார்

இலங்கையில் கிழக்கு மாகாண முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஹாபிஸ் நசீர் அஹமட் நேற்று மாலை ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

[Read more…]

சாய்ந்தமருதில் அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமிக்கு எதிராக சாய்ந்தமருதில் இன்று ஜூம்ஆ தொழுகையை தொடந்து ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலிலுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியினை வழங்கப்படாதனைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் கொடும்பாவிக்கு செருப்பினால் மாலை அணிவித்து தலைவர் ஒளிக என்ற கோஷத்துடன் செருப்பால் அடித்தனர்.

[Read more…]

ஹஸனலி மீது சேறு பூசவேண்டாம்

-மீரா அலி ரஜாய்-

கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அதில் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸனலி தொடர்பான விடயங்களும் இடம் பெற்றிருப்பது மிகுந்த வேதனைக்குரியது.

[Read more…]

முதலமைச்சர் பதவியை ஜெமீலுக்கே வழங்கவேண்டும் சாய்ந்தமருது மத்தியகுழு தீர்மானம்

-எம்.வை.அமீர் –

கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதிவியை முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் ஒருவருக்கு வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ள இந்தசந்தர்ப்பத்தில், குறித்த பதவியை மட்டக்களப்பைச் சேர்ந்த ஹாபீஸ் நஸீர் அவர்களுக்கு வழங்க அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் தீர்மாநித்துள்ளதாகக் கூறப்படும் இச்சந்தர்ப்பத்தில், அவசர அவசரமாக ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரசின் சாய்ந்தமருது மத்தியகுழு விசேட கூட்டம் ஒன்றை சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலையத்தில் 2015-02-05 ல் கூட்டியது.

[Read more…]

அம்பாறையில் றஊப் ஹக்கீமுக்கு கொடும்பாவி எரிப்பு…

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றஊப் ஹக்கிமினால் அம்பாறை மாவட்டம் தொடர்ச்சியாக புறக்கனிக்கப்பட்டு வருகின்றதை கண்டித்து நாளை அம்பாறை மாவட்டம் முழுவதும் பாரிய எதிர்ப்பு ஊர்வலமும், அமைச்சர் றஊப் ஹக்கிமுக்கு கொடும்பாவி எரித்தலும் இடம்பெறவுள்ளது. [Read more…]

கிழக்கு முதலமைச்சர் தெரிவு : நடந்தது என்ன? உள்வீட்டு தகவல்கள்

கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்றிரவு (04) கிழக்கு மாகாண புதிய முதலமைச்சர் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். அதன்போது முடிவுகள் பெரிதாக எட்டப்படவில்லை.

இந்த நிலையில் இன்று (05) காலையில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ஹக்கீமின் கொள்ளுப்பிட்டி வீடு பரபரப்பாக காணப்பட்டது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஹாபிஸ் நஸீர், தவம், ஜெமீல் ஆகியோர் அங்கிருக்கவில்லை. (மன்சூரும் காணப்படவில்லை என கூறப்டுகிறது) ஜெமீலுடன் அமைச்சர் ஹக்கீம் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பலனளிக்கவில்லை. தவம் காலையிலேயே வந்து விட்டு சென்றதாக தகவல் வழங்கப்பட்டதனையடுத்து அவர் மீண்டும் அழைக்கப்படவில்லை. [Read more…]

கிழக்கின் முதலமைச்சர்!!! அம்பாறைக்கு ஆப்பு

எம்.வை.அமீர்

கிழக்கு மாகாண சபையில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட அமைச்சரவைகளில், அம்பாறை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கிய மாகாண சபையில், தொடராக அம்பாறை மாவட்டம் முதலமைச்சர் ஒருவரை பெறும் தகைமையை இழந்து வருகின்றது.

கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள மொத்த சனத்தொகையை எடுத்துக்கொண்டாலும் சரி கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்களின் தொகையை எடுத்துக்கொண்டாலும் சரி அம்பாறை மாவட்டமே முன்னிலையில் இருக்கின்றது. இருந்தபோதும் கிழக்கின் முதலமைச்சர் என்ற அந்தஸ்த்து மாறிமாறி திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்குமே வழங்கப்பட்டு வரும் செயற்பாடானது அம்பாறை மாவட்டத்தில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. [Read more…]

கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹாபீஸ் நசீர் அஹமட்?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற உடன்படிக்கைக்கு அமைய இறுதி இரண்டரை வருடங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சு பதவி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்பட வேண்டும் [Read more…]

கிழக்கின் முதலமைச்சர் பதவியும் ஆட்டம்காணப்போகும் கட்சியின் தளமும்

எம்.வை.அமீர்-

கிழக்கின் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசை தெரிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ள இவ்வேளையில் அண்மையில் மருதமுனையில் இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இன்னும் 72 மணிநேரத்தில் முதலமைச்சரை அறிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றவூப்ஹக்கீம் அறிவித்திருந்தார்.

முதலமைச்சரை அறிவிப்பதற்கு வழங்கப்பட்ட 72 மணிநேரம் என்ற காலக்கெடு முடிவதற்கு இன்னும் சில மணிநேரமே இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரசின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட 7 மாகாணசபை உறுப்பினர்களின் ஆதரவாளர்களும் தங்களது சார்பான உறுப்பினரே முதலமைச்சர் ஆவார் என கூறிவருகின்றனர். [Read more…]

அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் – முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

அஸ்லம் எஸ்.மௌலானா

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று செவ்வாய்க்கிழமை மதியம் சந்தித்து கலந்துரையாடினார். 

[Read more…]

புதிய சட்ட திருத்தங்களை அமுல்படுத்த அரசாங்கம் தயார் – றவூப் ஹக்கீம்

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

கடந்த அரசின் காலத்தில் ஏற்பட்ட அநியாய ஆட்சியின் அட்டூழியங்களை முடிவுக்கு கொண்டுவர புதிய சட்ட திருத்தங்களை அமுல்படுத்த புதிய அரசாங்கம் தயாரகி வருகின்றது. இதன் மூலம் பெண்களுக்கான வன்முறைகள், சிறுவர்களுக்கான துஷ்பிரயோகம் போன்றவைகளை ஒழிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. [Read more…]

முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு கிடைத்த காலம் கடந்த ஞானம்: றம்ழான்

காலம் கடந்தேனும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக முன்னால் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் NK றம்ழான் தெரிவித்தார்,

காத்தான்குடி மத்திய குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கட்சியின்  முக்கியஸ்தர்கள் சந்திப்பின் போது உரையபற்றுகையில் தெரிவித்தார். [Read more…]

மைத்திரிபால, முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று புதன்கிழமை நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

02[1]ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்பட கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் பலர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கட்சியின் சார்பில் தலைவர்- அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றியதுடன் தலைவரின் வேண்டுகோளின் பேரில் கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடுகளையும் கருத்துகளையும் முன்வைத்து உரையாற்றினார்.

இதன்போது 100 நாள் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் இருந்து சில தெளிவுகளையும் முதல்வர் நிஸாம் காரியப்பர் கோரினார். அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால பதிலளித்ததுடன் சில விடயங்களையும் தெளிவுபடுத்தினார்.

அதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களினால் கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அவர்களது வாகனப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டு- அதற்கான ஒத்துழைப்பு கோரப்பட்டது.

இது விடயத்தில் தான் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால உறுதியளித்தார் என இச்சந்திப்பில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

2015/01/img_0765.jpg

2015/01/img_0764.jpg

SLMC ஐ சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்க ஹகீமுக்கு விருப்பம் இல்லையா?

rauff hakeem cartoonகிழக்கு மாகாண முதலமைச்சர் ஆசனத்தில் SLMC ஐ சேர்ந்த ஒருவரை அமர்த்தும் போது அவர் தன்னை விட பெரியவர் ஆகிவிடுவார் என்ற அச்சத்தில்தான் தலைவர் அதை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்க முனைகின்றார். அந்த ஆசனத்தில் தான் உட்கார வேண்டும் என்ற எண்ணத்தில்தான் முதலாவது கிழக்கு மாகாண தேர்தலில் அவர் போட்டி இட்டார். ஆனால் அவருடைய  கனவு பலிக்கவில்லை. அதனால் மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.

[Read more…]

கரையோர மாவட்டம்: எழுத்து மூலம் உத்தரவாதம் இல்லாமல் அமைச்சுப்பதவி ஏற்கப்போவதில்லை – ஹஸன்அலி

SLMC இன் கோரிக்கையான கரையோர மாவட்டம் தொடர்பாக இந்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் SLMC இன் செயலாளருமான ஹசன் அலி தெரிவித்தார். அவ்வாறான எழுத்து மூல உத்தரவாதம் வழங்கப்படும் வரை தான் எவ்வித அமைச்சுப்பதவிகளையும் ஏற்க போவதில்லை என்று தெரிவித்தார்.

[Read more…]

ஆரம்பிக்கின்றது முஸ்லிம் காங்கிரசில் பதவிப் போட்டி

பைஷல் இஸ்மாயில்

அம்பாறை மாவட்ட இறக்காமம் பிரதேசத்திலுள்ள பல அமைப்புக்கள் இணைந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருக்கு கிழக்கு மாகாண சபையில் அதிகாரமுள்ள ஒரு பதவியினை வழங்கக் கோரி நேற்று காலை (17) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீமுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.

[Read more…]

ஜெமிலுக்கு கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி வழங்கக்கூடாது

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவிக்கு பலரும் குறிவைத்துக் கொண்டிருக்கின்ற வேளையில் மாகாண சபை உறுப்பினர் A.M.ஜெமில் அவர்கள் பிரதானமானவர். SLMC க்கு முதலமைச்சர் பதவி கிடைக்குமேயானால் அப்பதவி கௌரவ உறுப்பினர் A.M.ஜெமிலுக்கு வழங்கப்படக்கூடாது என்பதில் பொத்துவில் இளைஞர் ஒன்றியமும், பெரும்பான்மையான பொத்துவில் மக்களும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள்.

[Read more…]

கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் அடுத்த கட்ட பேச்சுக்கு முன் வடமாகாணத்துக்கான விஜயம்!

TNA_SLMC_CIதமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரக்கும் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் வடமாகாணத்துக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

[Read more…]

அரசை விட்டு விலகுங்கள்; ஹக்கீமுக்கு அழுத்தம்

அரசாங்கத்தை விட்டு விலகி பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு கட்சி உறுப்பினர்கள் அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் ஒன்றயை மேற்கொண்டிருந்தார் அதன்போதே கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள் மேற்கணடவாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
குறித்த விஜயத்தின் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

[Read more…]

‘தனி மாவட்டம் கோருவது நாட்டுப் பிரிவினை அல்ல’ – ஹசன் அலி

முஸ்லிம்களுக்காக ஒரு தனி நிர்வாக மாவட்டத்தை ஏற்படுத்துமாறு கோருவதை ஒரு தனி நாட்டுக் கோரிக்கையாகக் கொள்ளக் கூடாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனையை மையமாகக் கொண்டு கரையோரமாக வாழும் முஸ்லிம்களுக்கான தனியான மாவட்டம் ஒன்றை ஏற்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையை இலங்கை பிரதமர் திமு ஜயரட்ண அவர்கள் நிராகரித்தது குறித்து கருத்துக் கூறும் போதே ஹசன் அலி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

அம்பாறை முஸ்லிம்கள் தமது காரியங்களை தமது சொந்த மொழியிலேயே செய்துகொள்வதற்கு வசதியாக முஸ்லிம் காங்கிரஸினால், முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை ஒரு புதிய கோரிக்கை அல்ல என்று கூறும் ஹசன் அலி அவர்கள், கிழக்கு மாகாண ஆட்சியமைப்பதற்கான நிபந்தனையாகக் கூட இதனை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்றிருந்ததாகக் கூறுகிறார்.

அனைத்து முஸ்லிம்களையும் தலிபான்களாகவும், அல்கைதாகவும் பள்ளிவாசல்களை பயங்கரவாதிகளை உருவாக்கும் நிலையங்களாகவும் பார்க்கும் ஒரு போக்கு பெரும்பான்மைக் கட்சிகளின் மத்தியில் வலுத்துள்ளதாகக் கூறும் ஹசன் அலி அவர்கள் இந்த விடயத்தில் முஸ்லிம் மக்கள் கொதித்துப் போய் இருப்பதாகவும் கூறுகிறார்.

இந்த விடயம் குறித்து அவர் வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

BBC

 

கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் இடையே சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையே நேற்று சுமார் ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராஜா, எஸ்.வினோநோகராதலிங்கம், ஈ.சரவணபவன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் ஜனா ஆகியோரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பொதுச்செயலாளர் ஹசன் அலி, சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

[Read more…]

முஸ்லிம்களுக்கு தனி மாவட்டம் கிடையாது! – பிரதமர் ஜயரத்ன

இன அடிப்படையில் நிர்வாக மாவட்டங்களை அமைக்க முடியாது என்று அரசாங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. வரவு-செலவு திட்ட குழு நிலை விவாதத்தின்போது உரையாற்றிய பிரதமர் தி.மு.ஜயரத்ன இதனைத் தெளிவாக கூறினார். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள தொகுதிகளை சேர்த்து தனியான நிர்வாக மாவட்டம் உருவாக்கப்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேட்டுள்ளது குறித்து ஐ.தே.க எம்.பி விஜயதாஸ ராஜபக்ஷ விமர்சித்த போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

[Read more…]

கட்சிகளை உடைக்கும் அரசாங்கம், எங்களை பகடைக்காய்களாக பாவிக்க இடங்கொடுக்கமாட்டோம்: ஹக்கீம்

எங்களை மற்றவர்கள் பகடைக்காய்களாக பாவிக்க இடங்கொடுக்காமலும், அடுத்த கட்சிகளின் முன்னெடுப்புகளை கூர்மையாக அவதானித்தவர்களாகவும் தான் நாங்கள் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அந்த முடிவு ஈற்றில் இந்த நாட்டு முஸ்லிம்களின் விமோசனத்திற்கு வழிவகுக்கின்ற முடிவாகவும் இருக்க வேண்டும். இதற்கு முன்னைய தேர்தல்களை விடவும் இந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் முடிவு என்னவாக இருக்கப் போகின்றது என மிகவும் அவதானமாக நோக்கப்படுகின்றது. 

இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அட்டாளைச்சேனையில் ஞாயிற்றுக்கிழமை (2) மாலை நடைபெற்ற கட்சியின் அம்பாறை மாவட்ட மத்திய குழு கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது,

இன்று அரசியலைப் பொறுத்தவரை எல்லாத் தரப்புகளிலும் ஒருவிதமான தடுமாற்றம் காணப்படுகின்றது. இது எங்களுக்குள் மாத்திரம் உள்ளதல்ல. சனிக்கிழமை அரசாங்கத்திலுள்ள கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உருமய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அதேபோன்று லங்கா சமசமாஜக் கட்சி ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது என்ற தனது தீர்மானத்தை அறிவித்துள்ளதை தொடர்ந்து அக் கட்சி இரு கூறுகளாக பிளவுபடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது.

வரவு செலவு திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத ஜாதிக ஹெல உருமயவினர் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல்    அரசாங்கத்திற்கு ஆதரவாக தீர்மானம் எடுத்தால் அந்தக் கட்சியும் இரண்டாக உடையும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

எல்லாக் கட்சிகளும் உடைந்து சிதறுண்டு போகின்ற நிலைமை உருவாகிக் கொண்டு வருகின்றது. எல்லாக் கட்சியினரும் மாறி மாறி ஜனாதிபதியோடு உறவாடி உடைந்து தான் போயிருக்கிறார்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நிபந்தனையின்றி ஜனாதிபதியை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறார். ஆனால், அவரது கட்சியினரும் உடைக்கப்பட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். பதுளையில் வடிவேல் சுரேஸ் என்பவரை இணைத்து வைத்துக்கொள்கிறார்கள். அமைச்சர் தொண்டமான் அவர்களோடு இணங்கி போக முடியாதவர்களுக்கு அரசாங்கத்தில் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.  இவற்றையெல்லாம் ஜீரணித்துக் கொண்டுதான் அவரும் இருக்கிறார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலும் அரசாங்கம் கை வைக்கப் போய் அதிலுள்ள கஷ்டமும், பாரதூரமும் ஒரு ஜனாதிபதி தேர்தல் நெருங்குகின்ற போது தான் அவர்களுக்கு புலப்படுகின்றது. இந்தப் பின்னணியில் நாம் ஒரு விடயத்தை தெளிவாக கண்டு கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி சந்திரிகாவுக்கு ஆரம்பத்தில் ஒரு ஆசன வித்தியாசத்தில் நாம் பாராளுமன்ற பெரும்பான்மையை எடுத்துக் கொடுத்தோம். அந்த ஆட்சி நடந்தது. 62 சதவீத வாக்குகளால் அவர் ஜனாதிபதி தேர்தலில் வென்றார் என்ற காரணத்தினால் அவ்வாறு நடந்தது. இந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை வென்றும் கூட அந்த அளவு வாக்கு வீதம் கிடைக்கவில்லை.

அந்த சந்திரிகாவுடைய ஆட்சியின் இரண்டாந்தவணைக் காலத்தின் போது 1999 ஆம் ஆண்டு அவரும் தன்னுடைய பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பு தான் தேர்தலுக்கு போனார். அதில் நாங்கள் அவரை ஆதரித்தோம்.

2000 ஆம் ஆண்டு தேர்தல் வந்த போது மறைந்த தலைவர் அஷ்ரப் ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்படுவதற்கு முன்பு பத்திரிகைகளில் கொடுத்த பேட்டியில் நல்லதொரு பாடத்தை அரசாங்கத்திற்கு புகட்டப் போவதாக கூறியிருந்தார். மிகவும் ஆத்திரத்தோடு தான் சந்திரிகாவை ஜனாதிபதி ஆட்சியில் அமர்த்திவிட்டு பாராளுமன்றத் தேர்தலில் ஒரு கை பார்க்க இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

சமகாலப் பிரச்சினைகளை முன்னைய சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது அவற்றில் நிறைய ஒற்றுமை இருப்பதாக பார்க்கிறேன்.

இந்த இயக்கம்  ஒரு கையாலாகாத நிலைக்கு வந்திருக்கிறது என்பதுதான் எமது கட்சியினருக்கு இன்றிருக்கின்ற கவலையாகும். இதை சரிசெய்கின்ற வியூகம் இல்லாமல், நாங்கள் போட்டியிடாத ஒரு தேர்தலில் கட்சிக்கு வாக்கு கேட்பது என்பதே மக்கள்; ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இதனை மீறி நாங்கள் முடிவெடுக்க முடியாதததால், மிகப் பக்குவமாகவும் நேர்மையாகவும் இதனைச்  செய்ய வேண்டும். இந்த விடயங்களைப் பற்றி பேச வேண்டும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஒரு மாயாஜால வித்தைக்காரர் அல்ல. மந்திரத்தினால் சாதித்து விட முடியாது. மிகத் திறந்த மனதோடு நாம் கலந்துரையாட வேண்டும். மக்களது விருப்பத்தை புர்ந்து கொள்ளாமல் புறந்தள்ளி தேர்தல் பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது. அது செய்யக் கூடாத காரியம்.

ஒரு விடயத்தில் தெளிவு இருக்கிறது. நான் வகுத்த வியூகங்கள் மக்களை எங்களை நோக்கி வரவழைக்கின்ற வியூகங்களாகத் தான் இருந்தன. நாங்கள் வகித்த வியூகங்கள் உரிய அரசியல் அதிகாரங்களை எங்களுக்கு தராமல் விட்டிருக்கலாம். கை நழுவிப் போயிருக்கலாம். ஆனால் மக்கள் எமது வியூகங்களுக்கு பின்னால் வரவில்லை என யாரும் எந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது.

அரசாங்கம் ஏதோ ஒரு கணிப்பை போட்டு முஸ்லிம் காங்கிரஸ் தன்னோடு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது. மற்றக் கட்சிகளைப் போலவே முஸ்லிம் காங்கிரஸ் தன்னோடு வராவிட்டால் அதனை உடைக்க தனக்குத் தெரியும் என எண்ணலாம். அவ்வாறு அகங்காரமும் ஆணவமும் தான் அதற்கு காரணம். அந்த ஆணவத்திலும் அகங்காரத்திலும் தான் இந்த ஆட்சியாளர்களுடைய வியூகங்கள் இருப்பது இன்று மற்றக் கட்சிகளுக்கு நேரும் கதியைப் பார்க்கின்ற பொழுது தெளிவாக தெரிகின்றது.

ஜாதிக ஹெல உருமய ஒரு கோரிக்கைப் பட்டியலை முன் வைத்திருக்கிறார்கள். அந்த கோரிக்கைகள் எல்லாவற்றிலும் நல்லாட்சிக்கானவற்றைத் தவிர ஏனையவற்றில் முஸ்லிம் காங்கிரஸிற்கு உடன்பாடில்லை. அவற்றில் முஸ்லிம்களை குறிப்பாக இலக்கு வைத்த கோரிக்கைகளும் அடங்கியுள்ளன. நல்லாட்சிக்கான அவர்களது கோரிக்கைகள் ஜனநாயக நாடொன்றில் வரவேற்கத்தக்கனவாகும். அதனால் அவற்றைப் பற்றி நாங்கள் பெரிதாக பேசவில்லை.

வழமையாகவே முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைப் பட்டியல்களை நிராகரிப்பதன் மூலம் தங்களது வாக்கு வங்கியின் சரிவை சரி செய்து கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் இந்த அரசாங்கத்தில் இருக்கிறார்கள். அரசாங்கத்தின் தலைமைப் பீடமே அவ்வாறான எண்ணத்தில் தான் இருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கி, அதன் கோரிக்கைப் பட்டியல் ஒன்றுக்கும் தாங்கள் செவி சாய்து அங்கீகாரம் கொடுத்து விட்டால் தங்களது சொந்த வாக்கு வங்கியை இழக்க வேண்டிய வரும் என்கின்ற ஒருவிதமான பீதியிலிருக்கின்ற ஓர் அரசாங்கத்தில் இருந்து கொண்டுதான் நாங்கள் கோரிக்கைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால், அதே அரசாங்கம் ஒன்றை நினைக்க வேண்டும். நாங்கள் போட்டியிடாத ஒரு தேர்தலில் அதுவும் இதுவரையும் எமது மக்களை வாக்களிக்கச் சொல்லாத ஒரு சின்னத்திற்கு வாக்களிக்கச் சொல்லுவதன் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு காரியத்தை நாங்கள் செய்ய வேண்டுமா? இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு கூறுவதன் மூலம் ஏற்படுகின்ற இடைவெளிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி புகுந்து கொள்ள இடமளிப்பதன் ஆதங்கம் எங்கள் கட்சியினர் மத்தியில் உள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை இழந்து, அரசாங்கத்தால் வாக்களிப்பட்டவற்றையும் செய்யாத நிலையில் அவர்களை ஆட்சியில் நிலை நிற்க வைப்பதற்கு எங்களுக்கு என்ன தேவையிருக்கிறது என்பதுதான் இன்று எழுந்துள்ள கேள்வியாகும். இதை புரிந்து கொள்ளாத ஆட்சித் தலைமையோடு இணைந்திருப்பது பற்றித்தான் மக்கள் ஆத்திரத்தோடும், ஆவேசத்தோடும் எங்களிடம் கேட்கிறார்கள். இவ்வாறான விடயங்களில் தான் எமது கட்சியினர் தலைமையோடு முரண்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நியாயங்களை முழுமையாக உள்வாங்காமல் வெறும் பூச்சாண்டி அரசியலை இந்த அரசாங்கத்தோடு செய்ய முடியாது என்பதுதான் இன்றுள்ள நிலைமையாகும்.

எல்லாவிதமான ஆசை வார்த்தைகளையும் இந்த அரசாங்கம் அள்ளிக்கொட்டுகின்ற காலகட்டமாக இது இருக்கின்றது. எதைக் கேட்டாலும் கொடுக்கின்ற நிலைமை. தாராளமாக எவற்றையும் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதை நாம் காண்கிறோம்.

எதிர்த்தரப்பின் அரசியல் இப்பொழுது எவ்வாறு திரண்டு வருகிறது என்பதிலும் நாம் அலட்சியமாக இருக்க முடியாது. சாத்தியமானவற்றை சாதிக்கின்ற கலை தான் அரசியல் என்று நாங்கள் அடிக்கடி பேசுவதுண்டு. ஆனால், சாதிப்பதற்கான சாதகமான களநிலவரம் வேண்டும்.

ஆட்சிக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கத்தக்கதாக எதிர்க்கட்சியிலும் இருக்கின்ற புகைச்சல்கள் வெளியே தெரியாது விட்டாலும், பல விடயங்களை நாங்கள் மிகக் கூர்மையாக அவதானித்துக் கொண்டு வருகிறோம். மற்றக் கட்சிகளுக்குள் நடக்கின்ற பிரச்சினைகளுக்குள் விரல் நுழைக்கின்ற அல்லது அதை தூண்டிவிட்டு கூத்துப் பார்க்கின்ற காரியத்தில் ஒரு போதும் செய்ததில்லை.

இந்த அரசாங்கத்திற்குள்ளும் விரக்தி உணர்வுகளோடு பலரும் பல விடயங்களை இப்பொழுது பேசி வருகிறார்கள். முஸ்லிம் காங்கிரஸ் முதலில் கழுத்தைக் கொடுக்க வேண்டும். அப்படியானால் அதன் முதுகில் ஏறி தாங்கள் சவாரி செய்யலாம் என நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

அன்றும், இன்றும் முஸ்லிம் காங்கிரஸை அடிப்பதற்கென்று கங்கணம் கட்டப்படுவதனால் நாங்கள் ஆத்திரமடைகிறோம். முஸ்லிம் காங்கிரஸின் இருப்பிற்கு ஆபத்து ஏற்படுவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். எங்களை அதட்டி, அடிபணிய வைக்க முயற்சிப்பவர்களுக்கு நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது.

எங்களுக்கென்று ஒரு கட்;டம் வரும். அதுவரை நாம் பொறுமை காக்கிறோம். இதன் பிறகு அவ்வாறு ஒரு கட்டம் வராது. மூன்றாம் முறையாக இங்கு ஒரு ஜனாதிபதி வந்ததில்லை. ஆனால், நான்காம் முறையாக எந்த விதத்திலும் நிச்சயமாக வர முடியாது. 

அதிகாரங்கள் குவிகின்ற பொழுது ஆணவமும் அகங்காரமும் மேலோங்குகின்றன. அதனை வைத்துக்கொண்டு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடாத்த பழக்கப்பட்டிருக்கிறார்கள். காலம் தாண்டினால் அரசியல் செல்வாக்கில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டு விடும் அதற்கான பிரதான காரணமாகும்.

நாங்கள் மத்திய அரசாங்கத்தில் மட்டும் ஆட்சியின் பங்காளர்கள் அல்ல. கிழக்கிலும் ஆட்சியின் பங்காளர்கள். கிழக்கில் ஆட்சியின் பங்காளர்களாக வர நேர்ந்ததே வட கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான். இவ்வளவு பங்களிப்புச் செய்தும் எங்கள் சமூகத்திற்கு எதுவும் உருப்படியாக நடக்கவில்லை என்பதனால் தான் எங்களது ஆத்திரமும், ஆவேசமும் இரட்டிப்பாக அதிகரித்திருக்கிறது.

எங்களை மற்றவர்கள் பகடைக்காய்களாக பாவிக்க இடங்கொடுக்காமலும் அடுத்த கட்சிகளின் முன்னெடுப்புகளை கூர்மையாக அவதானித்தவர்களாகவும் தான் நாங்கள் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அந்த முடிவு ஈற்றில் இந்த நாட்டு முஸ்லிம்களின் விமோசனத்திற்கு வழிவகுக்கின்ற முடிவாகவும் இருக்க வேண்டும். இதற்கு முன்னைய தேர்தல்களை விடவும் இந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் முடிவு என்னவாக இருக்கப் போகின்றது என மிகவும் அவதானமாக நோக்கப்படுகின்றது என்றார்.

இந்த அம்பாறை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம் ஆகியோர் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் பலர் உத்தேச ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய தீர்மானம் பற்றி தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

 

இனி பதவிகள் மீதான எதிர்பார்ப்பு இருக்க மாட்டாது: ரவூப் ஹக்கீம்

Rauf Hakeemஇனிமேல் எமது கட்சியைப் பொறுத்தமட்டில் பதவிகள் மீதான எதிர்பார்ப்பு இருக்க மாட்டாது. அவ்வாறன்றி எமது பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் காண முடியாது என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஞாயிற்றுக்கிழமை (2/11/2014) பொத்துவில் பசறிச்சேனை பத்ரியா பள்ளிவாசலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் உரையாற்றுகையில் தெரிவித்தார்

மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முடியாத அரசில் தொடர்ந்தும் நீடிக்கக் கூடாது என்ற அங்கலாய்ப்பு எமது ஆதரவாளர்கள் மத்தியில் இருக்கிறது.

[Read more…]

ஹக்கீம் – ஹசன் அலி முறுகல்?

Hasan Ali MPஏ.எச்.எம். பூமுதீன்

முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு வெள்ளிக்கிழமை கூடி தீர்மானித்ததற்கு இணங்க இன்று (02) நடைபெறவுள்ள அம்பாரை மாவட்ட மு.கா மத்திய குழு கூட்டத்திற்கு கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி சமுகமளிக்கமாட்டார் என நம்பகரமாக தெரியவருகின்றது.

முகா தலைவர் ரவுப் ஹக்கீம் – மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்க திரைமறைவில் எடுத்துள்ள தீர்மானித்தை அறிந்ததன் பிற்பாடே ஹசன் அலி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது. 

மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட அம்பாரை மாவட்ட மு.கா. பிரமுகர்கள் பலர் தற்போது அம்பாரை மாவட்டத்தி;ற்கு விஜயம் செய்துள்ள இத்தருணத்தில் செயலாளர் நாயம் ஹசன் அலி எம்.பி. கடும் ஆத்திரம் மேலோங்கியவராக கொழும்பு – கல்கிஸ்ஸயில் உள்ள அவரது இல்லத்தில் இருப்பதாக அறியமுடிகின்றது.

மு.கா. உயர் பீட கூட்டம் இடம்பெற்ற வேளை கல்முனை கரைரயோர மாவட்டம் மற்றும் அம்பாரை, திருமலை மாவட்டங்களுக்கு முஸ்லிம் அரச அதிபரை நியமித்தல் தொடர்பிலான ஆவணங்களை தயார்படுத்தி அதனை அரசுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு அந்த ஆவணத்தில் கையொப்பம் இடுமாறு கேட்டிருந்த போது அதற்கு ஹக்கீம் எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் ஹசன் அலி இன்றைய கூட்டதில் கலந்து கொள்ளாமைக்கான காரணத்தில் ஒன்றாகும்.  

அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் ஹசன் அலி மிகவும் உறுதியாய் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தவத்தின் சிறுபிள்ளைத்தனம் முகநூலில் வெளிப்பட்டது

Thavam11ஏ.எம். ஹூசைனி

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி கடும்போக்குடைய பேரினவாத அமைப்புக்களுடன் பேசத் தயாராகவுள்ளது என்ற அறிக்கையை வைத்துக் கொண்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம், அரசாங்கத்திற்கு தனது மறைமுக ஆதரவினை அவரது முகநூலில் வெளியிட்டிருப்பதன் உள்நோக்கம் என்ன? என கேள்வி எழுப்பி அகில இலங்கை இஸ்லாமிய சம்மேளனம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதானது,

[Read more…]

SLFP – SLMC சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பால் ரத்து

SLMC Flag-ஏ.எம். ஹூசைனி-

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்டக் குழுவினருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருக்குமிடையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை மு.கா பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது விடயமாக மேலும் தெரியவருவதானது,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் அமைசர்களான மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, அனுர பியதர்சன யாப்பா, சுசில் பிரேம் ஜயந்த, நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்டக் குழுவினருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருக்குமிடையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை 6.00 மணிக்கு பேச்சுவார்த்தை இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது.

இச்சந்திப்புக்கு முன்னதாக மு.கா தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்; கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில கூட்டி இப்பேச்சுவார்த்தை சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளார்.

இக்கூட்டத்தில் அரசாங்கத்தினால்; வழங்கப்பட்ட கரையோரம் மாவட்ட வாக்குறுதி இரண்டு வருடங்களாகியும் பெற்றுத்தரவில்லை, முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்து எந்த நடவடிக்கையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை, முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் குழுக்களை அரசாங்கம் கட்டுப்படுத்த தவறிவிட்;டது போன்ற குற்றச்சாட்டுக்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததுடன் இதனால் இன்று முஸ்லிம்கள் ஆத்திரமடைந்துள்ளனர் எனவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இச்செயற்பாடுகளை அரசாங்கம் தடுத்து நிறுத்தி நம்பிக்கை ஊட்டும் வகையில் நடந்து கொள்ளாத சூழ்நிலையில் இப்பேச்சுவார்த்தைக்கு செல்லக்கூடாது என திட்டவட்டமாக மு.கா பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுத்துள்ளதாக தெரியவருகிறது. இதனை அடுத்து இப்பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இப்பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதி மாளிகையில் காத்திருந்த அரச உயர்மட்ட அமைச்சர்கள் குழுவினருக்கு ஏமாற்றத்துடன் கூடிய கவலையை தோற்றிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அம்பாறை கரையோர மாவட்ட கோரிக்கை விடயமாக தங்களது நிலைப்பாட்டினை மு.கா தலைவருக்கு அழுத்தமாக தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

ஜனாதிபதித் தேர்தல்: முஸ்லீம் காங்கிரஸ் எந்த முடிவும் எடுக்கவில்லை

hafiz-nazeerஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதித் தலைவரும் மாகாணசபை அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமத்தின் ஊடக அறிக்கை 

-அஷ்ரப் ஏ. சமத்-

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் ஆதரிப்பது பற்றி இன்னும் எந்தவொரு தீர்க்கமானதொரு முடிபையும் மேற்கொள்ளவில்லையெனவும் விஷமத்தனமான பிரச்சாரங்களை நம்பி வீணாக அலட்டிக் கொள்ள வேண்டாம்  எனவும் முஸ்லீம் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் சமுக நடத்தையில் அக்கறை கொண்டவர்களுக்கும் பகிரங்கமாக வேண்டுகோள் விடுப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதித் தலைவரும் மாகாணசபை அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமத்தின் தெரிவித்துள்ளார்.

மக்காவில் உம்றா கடமையை முடித்துவிட்டு நேற்று நாடு திரும்பிய அவர் ஜனாதிபதித் தேர்தலையும் முஸ்லீம் காங்கிரசின் தலைமையையும் சம்பந்தப்படுத்தி வெளிவந்திருக்கும் உண்மைக்கு புறம்பான ஜோடிக்கப்பட்ட கதைகள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

கட்சிக்குள்ளேயே உள்ள ஒரு சிலரும், கட்சிக்கு எதிரான சிலரும் தலைவர் ரவுப்ஹக்கீமை வீழ்த்துவதற்காக மேற்கொண்டுவரும் சதியின் ஒரு வடிவமே இது என அவர் தெரிவித்தார்.

முஸ்லீம் காங்கிரஸ் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் வாக்குக் கொடுக்க வில்லை. முஸ்லீம் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்ய முன்வரும் வேற்பாளர் ஒருவருக்கே ஆதரவு வழங்கப்படும். தனது இந்த நிலைப்பாட்டில் இம்மியளவும் விலகாது முஸ்லீம் சமுதாயத்தை ஒருபோதும் காட்டிக் கொடுக்காது. முஸ்லீம் காங்கிரசின் அடிமட்டத்தில் இருந்து உயர்மட்டம் வரை நன்கு பரீசீலிக்கப்பட்ட பின்னரே சமுதயாத்திற்கு பொருத்தமான முடிபொன்றை எடுக்கும்.

எனவே கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம். தேர்தல் காலங்களில் மு.கா. தலைவர் ஹக்கீமை குறிவைத்து இவ்வாறன திரைப்படங்கள் வெளிவருவது வழமையே. அந்த வகையில் முஸ்லீம் வாக்காளர்களாகிய  நீங்கள் இந்தப்படத்தை பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடுங்கள். இதில் நிஜம் அல்ல என்பதை மனதில் நிறுத்துங்கள். என ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.

மகிந்தவின் சலுகைகளுக்கு விலைபோகிறது முஸ்லிம் காங்கிரஸ்?

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மகிந்த ராஜபக்ச இதற்குப் பிரதி உபகாரமாக அந்தக் கட்சிக்கு சலுகைகளை அள்ளிக் கொடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளது. முதற்கட்டமாக கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளது.

ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ். தௌபீக், அஸ்லம் ஆகியோர் இதன் மூலம் பிரதியமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

மேலும் கட்சித் தலைவரின் உறவினர்களில் ஒருவருக்கு வெளிநாடொன்றுக்கான தூதுவர் பதவியும், இன்னொருவருக்கு கூட்டுத்தாபனமொன்றின் தலைவர் பதவியும் அளிக்கப்படவுள்ளது.

rauff hakeem cartoonஅமைச்சர் ரவூப் ஹக்கீமும் தற்போதைய அமைச்சினை விட அதிகாரம் கொண்ட அமைச்சுப் பதவியொன்றுக்கு நியமிக்கப்படவுள்ளார். பெரும்பாலும் கல்வித்துறையுடன் அல்லது அபிவிருத்தி சம்பந்தப்பட்ட அமைச்சுப் பதவியொன்று அவருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வழங்கும் ஆதரவுக்கு நன்றிக்கடனாக அக்கட்சியின் ஊடக ஆலோசகரை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது சுதந்திரக் கட்சியின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இவற்றோடு இணைந்ததாக கிழக்கு மற்றும் மேல் மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் இருவருக்கு அதிகாரமற்ற, வசதிவாய்ப்புகள் கொண்ட பதவிகள் வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-seithy-

ஜனாதிபதித் தேர்தல்: மௌனம் காக்கும் முஸ்லிம் காங்கிரஸ்

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும் வரையில் கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்த தீர்மானத்தை வெளியிடுவதில்லையென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் அறிவிக்கப்படும் வரையில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்து செயற்படும் என அக்கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசியல் ரீதியில் அவசர கால நிலைமையொன்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கருத்தில் கொள்ளுமே தவிர, இல்லாதபட்சத்தில் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்தே கருமமாற்றும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கட்சியின் பொதுச் சபை கூடி கலந்துரையாடி தீர்மானங்களுக்கு வரும் எனவும் அவர் மேலும் கூறியள்ளார்