Advertisements

கிழக்கு மாகாண சபை: TNA, SLMC மீண்டும் பேச்சுவார்த்தை

-அஸ்லம் எஸ்.மௌலானா-

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்படுத்தியுள்ள புதிய ஆட்சியில் தமிழ்த் தேசியக்’ கூட்டமைப்பு பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கமொன்றை உருவாக்கி மூவின மக்களும் ஒன்றாகச் செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக்’ கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமது ஆட்சியில் இணைந்து கொள்ள முன்வர வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். [Read more…]

பதவியை தக்கவைப்பதற்காக எந்த பேயுடனும் முஸ்லிம் காங்கிரஸ் சேரும் – ஜனா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது பதவிகளை தக்கவைப்பதற்காக எந்தபேயுடனும் கூட்டுச்சேருமே தவிர அவர்களுக்கு இனம் சார்ந்த செயற்பாடுகள் எதுவும் இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

Janaஇன்று அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

[Read more…]

‘முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியமைப்பு மக்கள் ஆணைக்கு முரணானது- சம்பந்தன்

2012-ம் ஆண்டு நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை அமைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் புதிய ஆட்சியமைப்பு நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்ட மக்களின் ஆணைக்கும் முரணானது என்றும் சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது, அரசாங்கக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரம் செய்திருந்ததையும் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
[Read more…]

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பதில்லை – த.தே. கூட்டமைப்பு

கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டும். அதனை வேறு யாருக்கும் விட்டுக்கொடுப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேச்சுயை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார். [Read more…]

தமிழர் முதலமைச்சராக வர கூட்டமைப்புக்கு த.ம.வி.பு. நிபந்தனையற்ற ஆதரவு!

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  [Read more…]

‘கிழக்கு முதலமைச்சர் பதவியில் விட்டுக்கொடுப்பு வேண்டாம்’

TNA_SLMC_CIஇலங்கையில் கிழக்கு மாகாணசபையில் ஏற்படவுள்ள ஆட்சி மாற்றத்தின்போது, முதலமைச்சர் பதவியில் விட்டுக் கொடுப்புக்கு இடமளிக்க வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் கட்சித் தலைமையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

[Read more…]

கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் அடுத்த கட்ட பேச்சுக்கு முன் வடமாகாணத்துக்கான விஜயம்!

TNA_SLMC_CIதமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரக்கும் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் வடமாகாணத்துக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

[Read more…]

கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் இடையே சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையே நேற்று சுமார் ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராஜா, எஸ்.வினோநோகராதலிங்கம், ஈ.சரவணபவன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் ஜனா ஆகியோரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பொதுச்செயலாளர் ஹசன் அலி, சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

[Read more…]

TNA, SLMC பேச்சுவார்தை சந்தேகங்களை களைவதற்கு வழிவகுக்க வேண்டும்

‘தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் முன்னெடுக்கவிருக்கின்ற தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பேச்சுவார்த்தையின் போது இவ்விரு சமூகங்களிலும் வாழுகின்ற சாதாரண பொது மக்களின் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்ற வழிமுறைகள் பற்றி ஆராய்வதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

யுத்த காலத்தில் மட்டுமல்லாது அதனை அண்டிய காலங்களிலும் இவ்விரு சமூகங்களும் பாதிப்புக்குள்ளானதும் அக்கசப்புணர்வுகள் இன்னும் நீறு பூத்த நெருப்பாக இருந்து வருவதையும் எவரும் மறுக்க முடியாது. எனவே இவ்விரு சமூகங்களின் அரசியல் தலைவர்களின் மேல்மட்டப் பேச்சு வார்த்தைகள் அடிமட்ட மக்கள் மத்தியில் இருக்கின்ற கசப்புணர்வுகளையும், சந்தேகங்களையும் களைவதற்கு வழி வகுக்க வேண்டும்’.

இவ்வாறு ஸ்ரீ.மு.காங்கிரஸின் தலைவர்களுக்கும் த.தே.கூட்டமைப்பின் தலைவர்களுக்கிடையில் நடைபெறவிருக்கின்ற பேச்சுவார்த்தைகள் பற்றி வழங்கிய ஊடக அறிக்கையில் கட்சியின் ஊடகப் பணிப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனிபா மதனி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:-

பேரினவாதத்தின் அரசியல் காய் நகர்த்தல்களை புரிந்து கொள்ள போதாமலிருகின்ற இம்மக்களில் பெரும்பான்மையானவர்கள் தமக்குள் முரண்பாடான கருத்துக்களுடனேயே காணப்படுவார்கள். எனவே தமக்கு இருக்கின்ற அரசியல், அதிகாரம், கல்வி, தொழில் வாய்ப்பு, காணி, வர்த்தகம், வறுமை போன்ற அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரு சமூகம் மற்ற சமூகத்தின் மீது சாட்டிக் கொண்டிருக்கின்ற நிலையே காணப்படுகின்றது.

வடகிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களின் மத்தியில் காணப்படுகின்ற இவ்வாறான ஆறாப்புண்புகளை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுகின்ற பேரினவாத சக்திகள் தொடர்ந்தும் இவ்விரு இனங்களின் தோழேறி சவாரி செய்து கொண்டியிருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. இவ்வாறான நிலை தொடருகின்ற போது இவ்விரு சமூகங்களும் தமது இருப்பைக் கூட எதிர்காலத்தில் கேள்விக்குறியாக்கும் அபாயநிலை ஏற்படும்.

இந்த விதமான அரசியல் சித்து விளையாட்டுக்களை புரிந்து கொள்ள தரணியற்றுக் காணப்படுகின்ற இச்சமூகங்களின் அடிமட்ட மக்களும், பொது மக்களில் பலரும் வெகுவாக பேரினவாதிகளின் கைக்கூலிகளினாலும், தமிழ், முஸ்லிம் உறவினை விரும்பாத சக்திகளாலும் குறிவைக்கப்பட்டு குளப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவ்விரு சமூகங்களில் வாழ்கின்ற பாமர மக்கள் மத்தயில் காணப்படுகின்ற சந்தேகங்களையும், அவர்கள் அடி மனங்களில் புதைந்து கிடுக்கின்ற கிலேச உணர்வுகளையும் இதற்கு எதிராகப் பாவிக்க முற்படும் சக்திகளை தோற்கடிக்கும் வகையில் இவ்விரு சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் இது பற்றிய பல்வேறு கலந்துரையாடல்களை முன் கூட்டியே நடாத்த வேண்டியது தமிழ் தேசிய கூட்டமைப்பினதும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் மிக முக்கிய பொறுப்பாகும்.

இவ்வாறாக விரிவான கலந்துரையாடல்களின் பின்பு வெளியிடப்படுகின்ற தீர்மானங்களுக்கும், அல்லது ஒப்பந்தங்களுக்கும் நல்ல வரவேற்பும் உற்சாகமும் கிடைப்பதோடு இதற்கு எதிரான சக்திகளின் நடவடிக்கைகளும் பொது மக்களாலேயே முறியடிக்கப்படும் நிலை உருவாகும்.

இயல்பாகவே இவ்விரு சமூகங்களின் வியாபாரிகள், அரசியல்வாதிகள், விவசாயிகள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களுக்கிடையில் இருக்கின்ற முரண்பாடுகளே இவ்விதமான முயற்சிகளுக்கு முன்னிருக்கின்ற மிகப் பெரிய சவாலாகும். இது நாம் எல்லோரும் நன்கு தெரிந்து கொண்ட கசப்பான உண்மையுமாகும்.

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் முன்னெடுக்க நினைக்கின்ற இந்த முயற்சி காலத்தின் தேவையாக இருக்கும் அதே வேளை பாரிய சவால்களையும் எதிர்கொண்டு நிற்கின்றது.

இவ்வாறான முயற்சி ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம் சமூகங்களின் விமோசனத்திற்கே மேற் கொள்ளப்படுகின்றது எனும் உண்மையை சகல மட்டத்திலுள்ளவர்களும் புரிந்து கொள்ளும் போதுதான் இதன் வெற்றி இலகுவாக அமையும்.