பாராளுமன்ற தேர்தல்: சில்லு சின்னத்தில் மஹிந்த ராஜபக்ஸ ?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இரத்தினபுரி மாவட்டத்தில் எதிர்வரும் பாரர்ளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஆசியன் மிரர் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன தேர்தல் தொகுதியின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி கட்சியின் சில்லு சின்னத்தில் போட்டியிடுவார் என குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ, ராஜபக்ஸ குடும்பத்தின் கோட்டையாக வர்ணிக்கப்படும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட உள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேலும் சில முக்கியஸ்தர்களும் முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொலன்ன தேர்தல் தொகுதியுடன் ஜனாதிபதிக்கு எந்தவிதமான குடும்ப உறவோ அல்லது வேறும் வகையிலான தொடர்போ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், 1970களில் இளம் சட்டத்தரணியாக எம்பிலிபிட்டி நீதிமன்றில் கடமையாற்றி உள்ளதாகவும், எம்பிலிபிட்டிக்கு அருகாமையில் கொலன்ன தேர்தல் தொகுதி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

  1. We need people like Mahinda Rajapkashe in parliament. His contributions to the country cannot be under estimated. Contesting under MEP Wheel symbol in Kolonne is suicidal. He should contest under UPFA in Hambantota electorate.
    Dr M.L.Najimudeen

Leave a comment