Advertisements

சாய்ந்தமருதில் ஒஸ்டா அமைப்பின் கல்விக் கருத்தரங்கு

-எம்.வை.அமீர் –
மக்களும் பிரதேசமும் பயன்படும் வகையில் பல்வேறு செயற்திட்டன்களை செயற்படுத்தி வரும் சமூக அபிவிருத்திக்கும் உதவிக்குமான (OSDA) என்ற அமைப்பு 2015-02-22 ல் சாய்ந்தமருது இளைஞர் வளநிலையத்தில் தகவல் தொழில்நுட்பம் சம்மந்தமான கல்விக்கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

இதில் இப்பிராந்தியத்தில் பாடசாலைவிட்டு விலகிய மாணவ மாணவிகள் பங்கு கொண்டனர் நிகழ்வில் தகவல் தொழில்நுட்பம் சம்மந்தமான கற்பித்தலில் வளவாளராக ஏ.எம்.சஜீப் கலந்து கொண்டார்.

a

DSC_0001

புலமைப்பரிசில்: மலேசியாவில் கல்வி கற்க ஓர் அறியவாய்ப்பு

scholarshipதகவல்: மாபாஹிர் மஹ்ரூப், மலேசியா

மலேசியா அல்-புஹாரி பௌண்டேசனானது தனது அல்-புஹாரி சர்வதேச பல்கலைக்கழகத்தில் 2013 கல்வி ஆண்டில் கல்வி கற்பதற்காக முஸ்லிம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குகின்றது.

ஒவ்வொரு நாட்டுக்கும் 1o புலமைப்பரிசில்களை வழங்க அல்-புஹாரி பௌண்டேசன் உத்தேசித்துள்ளது. இந்த புலமைப்பரிசில் மலேசியா அல்-புஹாரி சர்வதேச பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற வழங்கப்படவுள்ளது.

[Read more…]

மக்களும் மாண்பும் – மௌலவி.எம்.ஏ .எம்.மஸ்ஊத் அஹ்மத் -ஹாஷிமி

download– எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் –

காத்தான்குடி 3ம் குறிச்சியைச் சேர்ந்த மௌலவி.எம்.ஏ .எம்.மஸ்ஊத் அஹ்மத் -ஹாஷிமி அவர்கள் அன்மையில் சமாதான நீதவானாக நியமனம் பெற்றார்.இவர் மர்ஹூம் ஏ .எம்.அபூபக்கர் ஹாஜியார்,பாத்தும்மா ஆகியோரின் புதல்வராவார்.

காத்தான்குடி மெத்தைப் பள்ளி வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியையும்,மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியைக் கற்று, சன்மார்க்கக் கல்வியை ஜாமியதுள் ஜமாலிய்யா, நாவலப்பிட்டி, தாருல் உலூம் அல் -ஹாஷிமிய்யா அரபுக்கல்லூரியில் கற்று மௌலவி-ஆலிம் பட்டம் பெற்றார். [Read more…]

ஜனாஸா பற்றிய அறிவித்தல்

innalillahiமட்டக்களப்பு ஒல்லிக்குளம் அக்ரம் லேர்னர்ஸின் உரிமையாளர் ஏ.ஜீ.எம்.கலீல் (49) இன்று வியாழக்கிழமை காலமாணார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 8.00 மணிக்கு ஒல்லிக்குளம் பாக்கியத்துஸ் ஸாலிஹ் பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு கீச்சாம்பள்ளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

ஜனாஸா பற்றிய அறிவித்தல் – எம்.எச்.எம். ஜூனைத் (பலாஹி) வபாத்தானார்கள் (update)

– எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் –

காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரியின் தலைவரும், ஜாமியுழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலின் முன்னால் தலைவரும், கொழும்பு தெஹிவளை முகைதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் (மர்கஸ்) முன்னால் கதீப் மௌலவி எம்.எச்.எம். ஜூனைத் பலாஹி அவர்கள் நேற்று இரவு 12.00மணியளவில் கொழும்பில் அவர்களது இல்லத்தில் காலமானார்கள். இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜிஊன்.

[Read more…]

மக்களும் மாண்பும் – கல்வித் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுக் கொண்ட எமதூர் சகோதரர் அஷ்ஷெய்க் அலவி ஷரீப்தீன்

தகவல் – எம்.எம்.ஏ.ஷாகிர்

மஞ்சந்தொடுவாய்க் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் எமதூர் சகோதரருமான அஷ்ஷெய்க் செய்யத் அலவி ஷரீப்தீன் (நளீமி) அவர்கள் கடந்த 2012 மே 31ம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரிலுள்ள விக்டோரியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கல்வித் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

[Read more…]

சம்மேளனத்தில் போட்டோ பிரதி (Photo Copy) இயந்திரம் விற்பனைக்கு

– எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் –

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் பாவிக்கப்பட்ட ஓரளவு பழுதடைந்த நிலையில் காணப்படும் Cannon IR-1600 ரக போட்டோ பிரதி (Photo Copy) இயந்திரம் விற்பனைக்கு உள்ளது. இதன் ஆரம்ப கேள்விக்கூறல் தொகையாக ரூபா 25000.00 மதிப்பிடப்பட்டுள்ளது. கூடிய கேள்விக்கூரல் விலைக்கு இது விற்பனை செய்யப்படும்.

இதனை எதிர்வரும் 15.05.2012 வரை அலுவலக நேரங்களில் பார்வையிட முடியும் என சம்மேளன செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ அன்சார் முகம்மட் நளீமி காத்தான்குடி இன்போவுக்கு தெரிவித்தார்

நான்கு மில்லியன் மொத்த வருகைகளில் இன்போ: தகவல் விளக்க அட்டவணை

– மின்ஹாஜ் முஹம்மத் –

கடந்த வாரம் காத்தான்குடி இன்போ நான்கு மில்லியன் மொத்த வருகைகளைக் கடந்த போது உள்ளவாறான தகவல்கள் மற்றும் புள்ளி விபரங்களை விளக்கும் விளக்க அட்டவணை ஒன்றை மின்ஹாஜ் முஹம்மத் வடிவமைத்து அனுப்பியிருந்தார்.

[Read more…]

பிஸ்ஸா ஹட் (Pizza Hut) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஹலால் சான்றிதழ் காலாவதி

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவினால் உலகப்பிரசித்தி பெற்ற துரித உணவகமான பிஸ்ஸா ஹட் நிறுவனத்தின் இலங்கையில் இயங்கி வந்த கிளைகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஹலால் சான்றிதழ் காலாவதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. [Read more…]

ரமழான் மாத விஷேட போட்டி முடிவுகள் – காத்தான்குடியை சேர்ந்த பலபேருக்கு ஆறுதல் பரிசுகள்

சவுதி அரேபியா ரியாத் நகரில் உள்ள தமிழ் தஃவா ஒன்றியம் மாபெரும் “முஸாபகதுர் ரமழான்” எனும் ரமழான் மாத விஷேட போட்டி ஒன்றை நடாத்தியது. உலகளாவியரீதியில் நடாத்தப்படும் இந்த விசேட போட்டிக்கு காத்தான்குடி இன்போ ஊடக அனுசரணையாளராக செயற்பட்டது. [Read more…]

நூல் அறிமுகம்: இஸ்லாத்தில் இசை

-ஏ.பி.எம். இத்ரீஸ்-

‘இஸ்லாத்தில் இசை’ என்ற கருத்தாக்கம் அறபு முஸ்லிம் சிந்தனைப் பரப்பில் மட்டுமல்ல இஸ்லாம் பரவிய ஆசிய சமூகங்களிலும் பெரும் வாதவிவாதங்களை இன்றுவரை கிளறிவிட்டுள்ள ஒரு விவகாரம் என்பதை நாம் நன்கறிவோம்.

[Read more…]

இன்போவின் Twitter ஊடான SMS – follow kattankudiinfo

எமது இணையத்தளத்தின் இலவச குறுந்தகவல் (SMS) செய்திச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டவுடன் தலைப்பை கையடக்கத் தொலைபேசியில் வாசகர்களுக்குக் கிடைக்கச் செய்யும் இந்தச் சேவையில் முதற்கட்டமாக காத்தான்குடி தொடர்பான செய்தித் தலைப்புகள் தமிழை ஆங்கிலத்தில் எழுதும் முறையிலும் அவற்றுக்குரிய இணைப்புகளும் வாசகர்களுக்கு SMS ஆக அனுப்பப்படும்.

[Read more…]

யாழ் முஸ்லிம் வலைத்தள கவிதைப் போட்டி முடிவுகள்..!

இலங்கையின் வடக்கு முஸ்லிம்கள் அவர்களின் தாயகப் பிரதெசத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 21 வருடங்கள் நிறைவடைவதையிட்டு புலம்பெயர்ந்த இலங்கை வடக்கு முஸ்லிம் சம்மேளனமும், யாழ் முஸ்லிம் வலைத்தளமும் இணைந்து நடத்திய கவிதைப் போட்டி  ஒன்றினை அண்மையில் நடத்தியிருந்தது.

[Read more…]

காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் புதிய மாணவர் அனுமதி

-தகவல்: பளுலுல்லாஹ் பர்ஹான்-

காலியில் உள்ள இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2012 ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப் பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி தீனுல் ஹஸன் ( பஹ்ஜி ) தெரிவித்தார்.

[Read more…]

காத்தான்குடியில் ‘சோனகத் தேசம்’ நூல் வெளியீடு

எதிர்வரும் ஞாயிறு (25.9.2011) அன்று காலை 9.30 மணியளவில் காத்தான்குடி அந்-நாஸர் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் ‘சோனகத் தேசம்: மிகச்சுருக்கமான அறிமுகம்’  என்ற அஷ்ஷேக் ஏபிஎம். இத்ரீஸ் (நளீமி) அவர்களின் மூன்றாவது நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற இருக்கிறது.

வாசகர்கள், ஆர்வலர்களை இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்.

[Read more…]

விஷேட மார்க்கச் சொற்பொழிவு

இன்ஷா அழ்ழாஹ் இவ்வாரம் தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பினால் விஷேட பயான் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் உளவியல் ஆய்வாளரும், IRO கல்வி நிறுவனத்தின் பணிப்பாளரும், இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் பல்வேறு முஸ்லிம் நிகழ்ச்சிகளை வழங்குபவருமான சகோதரர் MSHM. ஆதில் ஹஸன் அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றவுள்ளார்கள்.

[Read more…]

கருப்பு ஒக்டோபர்: கவிதைப் போட்டி

இலங்கையின் வடபுலத்து முஸ்லிம்கள் அவர்களின் தாயகப் பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு எதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் 21 வருடங்கள் நிறைவடைகின்றன.

இதனை முன்னிட்டு புலம்பெயர்ந்த இலங்கை முஸ்லிம் சம்மேளனமும், யாழ் முஸ்லிம் (www.yarlmuslim.blogspot.com) வலைத்தளமும்  இணைந்து கவிதைப் போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளன.

[Read more…]

மக்களும் மாண்பும் – எம்.ஐ. நிஸாம்டீன் வணிக நிர்வாகத்துரையில் BA (Hons) பட்டம் பெற்றார்

-எம்.எம்.ஜெலீஸ், UK-

இங்கிலாந்தின் பிறிஸ்டன் (Preston)  நகரில் உள்ள  சென்றல் லண்கசெயர் பல்கலைக் கழகத்தில் (University of Central Lancashire)  அண்மையில்  காத்தான்குடியைச் சேர்ந்த மாணவர் எம்.ஐ. நிஸாம்டீன் வணிக நிர்வாகத்துரையில் (Business Administration)   BA (Hons)  பட்டம் பெற்றார்.

[Read more…]

ஏபிஎம். இத்ரீஸ் எழுதிய பத்து நூல்கள் வெளியீடு

இணைய வாசிப்பு இன்னும் எம்மத்தியில் பரவலடையாததன் காரணமாக புத்தகப் பதிப்பும் வாசிப்புப் பண்பாட்டின் தேவையும் இருந்து கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் ஏபிஎம். இத்ரீஸ் (நளீமி) எழுதிய புதிய பத்து நூல்களை ‘சோனகம்’ பதிப்பகம் வெளியிட திட்டமிட்டுள்ளது.

[Read more…]

ஆங்கிலம் தெரியாதவரா…? ஆங்கில செய்திகளை வாசிக்க விரும்புகின்றீர்களா…? கவலையை விடுங்கள்

– M L M. றிப்கி –

கூகிழின் முக்கிய சேவைகளில் ஒன்றான மொழிமாற்றி (Google Translate) உலகில் காணப்படும் பல மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு சேவையை இலவசமாக வழங்கிவருகின்றது. கூகில் இச்சேவையை மேலும் விஸ்தரிக்கும் முகமாக தமிழுக்கான மொழிபெயர்ப்பு பொறிமுறையையும் இச்வேவையுடன் இணைத்துள்ளது.

[Read more…]

இலங்கை மாணவர்களுக்கு துருக்கியின் புலமைப்பரிசில்

Large animated flag of Turkey

துருக்கி அரசாங்கத்தில் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2011/2012 கல்வியாண்டுக்கான பட்டப்படிப்பு புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்களை உயர் கல்வியமைச்சு கோரியுள்ளது.

மருத்துவ விஞ்ஞானம் தவிர்ந்த வேறெந்தத் துறைக்கும் உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க முடியுமெனவும் உயர் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

[Read more…]

தாருல் அதர் அத்தஅவிய்யா – கட்டார் கிளையின் தர்பியா நிகழ்வு (09/06/2011)

அஸ்ஸலாமு அலைகும் (வறஹ்)…

எமது கிளையின் தர்பியா நிகழ்வு வழமை போல் எதிர்வரும் வியாழக்கிழமை (09/06/2011) அன்று இரவு 8:30 மணியளவில் AIRPORT PARKல் நடைபெற உள்ளது என்பதை மகிழ்சியுடன் அறியத்தருகிறோம்.

இந்த வார தர்பியா தலைப்பு – “ஒஸாமா தியாகியா? அல்லது தீவிர வாதியா?”

உரை – மௌலவி நௌபர் (காசிபி)

[Read more…]

காத்தான்குடிப் பிரதேசத்துக்கான இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர் விபரம் (2011ஆம் ஆண்டுக்கானது).

கடந்த வெள்ளிக்கிழமை (01.04.2011) அன்று காத்தான்குடிப் பிரதேசத்துக்கான இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர் தெரிவு இடம்பெற்றது. அதில் தெரிவு செய்யப்பட சம்மேளன உறுப்பினர் விபரம் இங்கே தரப்படுகிறது.

குறிப்பு : காத்தான்குடியில் மொத்தம் 17 பதிவு செய்யப்பட இளைஞர் கழகங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

[Read more…]

புதிய மாணவர் பிரவேசப் பரீட்சை – 2011, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – பேருவளை

2011ம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் (முஸ்லிம்-ஆண்) ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் ஏப்ரல் மாதம் 4ஆம், 5ஆம், 6ஆம் திகதிகளில் காலை 08.30 மணி முதல் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளன. எழுத்துப் பரீட்சையில் மாணவரின் மொழித்திறன், பொது அறிவு, விவேகம் என்பன பரீட்சிக்கப்படும்.

[Read more…]

முன்னாள் சமுக சேவையாளரும் ஓய்வு பெற்ற அதிபருமான H.M.அலி அவர்கள் வபாத்து – ஜனாஸா நல்லடக்கம் இன்று (12.2.2011)- காணொளிகள் இணைப்பு

innalillahi-அபூஜுரைப்-

பல பாடசாலைகளில் அதிபராகவும், பல சமுக சேவை நிறுவனங்களில் முன்னர் தன்னை இணைத்து பல சேவைகளைப் புரிந்தவருமான அதிபர் H.M. அலி அவர்கள் சில காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில்  நேற்று இரவு காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.

இவர் மில்லத் மகளிர் மகா வித்தியாலய ஆசிரியர் M.A. ஹஸன்அலி, தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் M.A. ஹுசைன்அலி, மீராபாலிகா மகாவித்தியாலய ஆசிரியர் M.A. ஹைதர்அலி ஆகியோர் உட்பட நான்கு பிள்ளைககளின் தந்தையாவார்.

[Read more…]

Comment துஸ்பிரயோகம் தொடர்பான வாசகரின் கருத்து

kattankudi.info இணையத்தளம் கடந்த இரண்டு வருட காலங்களாக தமது இணையத்தள சேவையை மிகச் சிறப்பாக செய்துவருவதை நாம் அனைவரும் நன்கறிவோம் அந்த வகையில் அதன் வாசகன் என்ற வகையில் அதன் செயற்பாட்டை நன்றியுடன் இந்த இடத்தில் மிகவும் நினைவு கூறுகின்றேன்.

பல சிரமங்களுக்கு மத்தியில் எமது சகோதரர்கள் தியாகத்தோடு இப்பணியைச் செய்து வருகின்றார்கள். இச்சேவை எவ்வளவு பெறுமதிமிக்கது என்பதை ஒரு வெளிநாட்டில் வசிக்கும் இக்குழும வாசகனிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம் அந்தளவு மிகப் பெரிய பிரயோசனமான பணிதான் இது. இதற்கான கூலியை அல்லாஹ்வை தவிர வேறு யாராலும் அவர்களுக்கு அளித்துவிடமுடியாது. இருந்தாலும் சிலர் இதனை அதன் பெறுமதி விளங்காது கேலிக் கூத்தாக நினைக்கின்றனர். தரக் குறைவான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். தனிநபர்களின் உள்ளங்கள் புண்படும்படியான கருத்துக்களை முன்வைக்கின்றனர். இதனையும் மீறி சிலர் மோசடி வேலைகளையும் செய்கின்றனர்.

[Read more…]

கத்தாரிலுள்ள சகோதரர்களுக்கு………

அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்…..

இன்ஷா அல்லாஹ்,  எதிர் வரும் தினங்களில்  இலங்கை,கல்குடா  – ஜம்இய்யது  தாவதில்  இஸ்லாமிய்யாவின்(JDIK )  இன் தலைவரும், இஸ்லாமிய பிரச்சாரகருமான மௌலவி அஷ்ஷெய்க் ஏ.எல். பீர்முகம்மது காஸிமி  எம்.ஏ அவர்களின் மார்க்க சொற்ப்பொழிவு  நிகழ்ச்சிகள்  கத்தார் நகரங்களில் நடை பெறவுள்ளது.

நிகழ்ச்சி விபரம்

1 .o4 .06 .2010 வெள்ளிக்கிழமை  சனபிய்யா 4ம்  இலக்க வீதியில் மக்ரிப் தொழுகை முதல் இஷா தொழுகை வரை பான் நிகழ்ச்சி.

[Read more…]

அகவை இரண்டில் காத்தான்குடி இணையச் சமூகம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

எதிர்வரும் ஏப்ரல் 14ம் திகதியுடன் காத்தான்குடி இணையச் சமூகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும். தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக எமது அங்கத்தவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் விபரிப்பதோடு, அவர்களின் தொடர் பங்களிப்புகளையும் ஆதரவையும் கோரும் நோக்கத்துடன் எழுதப்படும் இப்பதிவு சற்று நீண்டதாக அமைகிறது.

ஆரம்பத்தில் யாஹூ குழு மாத்திரமே எமது ஒரே நடவடிக்கையாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள். பின்னர் ஒரு இணையத்தளமும் கருத்தாடல் இணையமும் (web forum) பல அங்கத்தவர்களுடைய உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு, ஒரு வருடம் இயங்கிய போதும், ஊரிலிருந்து போதிய உள்ளீடுகள் இல்லாததாலும், இயக்குனர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்ததாலும், வாசகர் பங்களிப்பு போதியளவு இல்லாமையாலும் இவை இரண்டும் கைவிடப்பட்டன. [Read more…]

JABIR (B.Com) joined UPFA: An explanation from bro. Sabeel (Naleemi)

அன்பின் இணையத்தள அன்பர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

தற்போது தேர்தல் காலம்.  ஒருவர் தும்மினால்  கூட அவர் ஏதாவது கட்சி சார்பாகத்தான் தும்மி இருக்க வேண்டும் என்று வியாக்கியானம் கொடுக்கும் காலம்.  உண்மையில் தும்மியவர் நினைத்தும் இருக்கமாட்டார் நமது தும்மல் இவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்தி வெப் தளத்தில் பிரசுரமாகும் என்று. இது தேர்தல் காலங்களில் சகஜமப்பா.  என்னிடம் ஒரு நுஆ கட்சியைச் சார்ந்த  அன்பர்  வந்து பேசிக்கொண்டு இருந்தார். இதனைப் பார்த்த இன்னும் ஒருவர் குட்வின் சந்தியில் வைத்து எனது நண்பரிடம் நான் நுஆவில் சேர்ந்து விட்டதாக சொல்லிச் சென்றிருக்கிறார்.  இப்போது யாரிடம் சொல்லி நான் ஒப்பாரி வைப்பது நுஆ என்ற கட்சி மகிந்தவின் சாக்கடைக்குள் சங்கமித்துக் கொண்டது என்பது கூட அவருக்குத் தெரியாது. இதுபோலதான் சகோ. ஜாபிர் அவர்களின் கட்சி மாறுதல் என நான் நினைக்கின்றேன்.  இதற்கெல்லாம் நாம் கட்டார் துபாய் போன்ற நகரங்களில் இருந்து தொலைபேசி எடுத்து  அவரிடம் வினவி நமது பணத்தை வீணாக்கத் தேவையில்லை. [Read more…]

An email from Safeel Naleemi

அன்பார்ந்த இணையத்தள அங்கத்தவர்களே,

தாருள் அதர் நிறுவனத்தினால் தொடங்கப்போகும் ஜூம்ஆ சம்பந்தமாக தங்களுடன் சில கருத்துக்களை பகிரந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

நமது பிரதேசம் அனைத்து விடயத்திலும் பல முன்மாதிரிகளை ஏனைய பிரதேசங்களுக்கு காட்டிக் கொடுக்கின்ற ஒரு ஊர்.  உண்மையில், ஒவ்வொரு செயற்பாடுகளுக்குப் பின்னாலும் அதனை உருவாக்கியவர்கள் மிகக் கவனமாக அதனைத் திட்டமிட்டு செய்திருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது.

இவ்வகையில்தான் நமது பிரதேச மக்களின் நன்மை கருதி எவ்வாறு ஜூம்ஆக்கள் அமைய வேண்டும் என்று ஒப்பந்தங்களும் நிபந்தனைகளும் காணப்படுகின்றன. ஆனால், சிலர் இக்கட்டுக் கோப்புகளை மார்க்கத்தின் பெயரால் சிதைக்க முற்படுவது மனவேதனையாகும்.  ஏனெனில், ஒன்றை மிகச் சிறப்பாக உருவாக்குவதென்பது மிகக் கடினமான விடயம். ஆனால் அதை சிதைத்து விடுவது என்பது மிக இலகுவான காரியம். [Read more…]