சர்வதேச மருத்துவ ஆய்வு மாநாட்டு விருது இலங்கைத் தமிழ் பெண் கல்விமானுக்கு

-அபூ ஜுமைல்-

இலங்கையில் நடைபெற்ற உலகில் 22 நாடுகளின் பல்கலைகழகங்கள்  பங்குகொண்ட சர்வதேச மருத்துவ ஆராய்ச்சி மாநாட்டு  விருது முதன்முறையாக கிழக்கு பல்கலை கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி திருமதி பாலாம்பிகை இராஜேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா அவுஸ்திரேலியா, இந்தியா, பாக்கிஸ்தான், நோர்வே, கிறீஸ், ஈரான் உள்ளிட்ட 22 நாடுகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் இசைமூலம் மருத்துவம் என்ற ஆராய்ச்சிக்கே இவ்விருது கிடைத்துள்ளது. இவ்விருதைப்பெற்றுக்கொண்ட ஒரே இலங்கைத்தமிழர் இவராவார்.

ஸ்ரீஜெயவர்த்தனபுர, களனி, அனுராதபுரம், பாளி  ஆகிய பல்கலைகழகங்களைப் பிரதிநிதிநித்துவப்படுத்திய ஆராய்ச்சியாளர்களுக்கும் இவ்விருதுகள் வழங்கப்படடுள்ளன.

திருமதி பாலாம்பிகை ராஜேஸ்வரன் முன்னர் சுவாமி விபுலானந்தா இசை நடனக்கல்லூரியாகவிருந்தபோது இதன் அதிபராகவும் பின்னர் கிழக்கு பல்கலை கழகத்துடன் இணைந்தபோது அதன் பணிப்பாளராகவும் கடமைபுரிவது குறிப்படத்தக்கது.

Comments

  1. salma hamza says:

    congratulations.we are very proud of you.

  2. Mazaa says:

    கலாநிதி திருமதி பாலாம்பிகை இராஜேஸ்வரன் அவர்கள், இதுபோன்று இன்னும் பல சாதனைகள் புரிந்து எமது நாட்டிற்கும் கிழக்கு மண்ணுக்கும் பெருமைசேர்க்க எமது வாழ்த்துக்கள்..

Leave a comment