குருடர்களாகவும் , ஊமைகளாகவும் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது கல் வீசவேண்டாம்

– lankamuslim.org –

இந்த வருடம் பல்கலைக்கழகத்துக்கு நுழையவுள்ள 22 ஆயிரம் மாணவர்களுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி நாட்டின் 28 முகாம்களில் நடாத்த தீர்மாணிக்கபட்டு முதல் கட்டத்தில் தெரிவான சுமார் 12 ஆயிரம் பேருக்கு நாட்டில் 28 முகாம்களில் மூன்று வாரகால வதிவிட தலைமைத்துவ பயிற்சி இடம்பெற்று கொண்டிருகின்றது இந்த பயிற்சி நெறி 18 இராணுவ முகாம்களிலும் 2 கடற் படை முகாமிலும் 2 விமான படை முகாமிலும் 4 காலால் படை முகாமிலும் 2 போலீஸ் முகாமிலும் இடம்பெறுகின்றது ஒரு முகாமிற்கு சுமார் 430 மாணவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

மாணவர்களுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி தொடர்பாக கருத்துரைத்துள்ள டாக்டர் அஷ்ஷேய்க் மசீஹுத்தீன் இனாமுல்லாஹ் முகாம்களில் பயிற்சி பெரும் மாணவ மாணவியர் ஆண்கள் , பெண்கள் என்ற வித்தியாசம் இன்றி 25 பயிற்சி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அனைத்து பயிற்சி நடவடிக்கைகளும் இடம்பெறுவதாகவும்  இந்த விடயத்தில் குருடர்களாகவும், ஊமைகளாகவும் இருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு கல் வீசவேண்டாம் என்றும் தான் முஸ்லிம்களுக்கு ஆலோசனை தெரிவிப்பதாகவும் விரைவாக அடுத்த கட்ட மாணவர் பயிற்சி ஜூன் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை அனைத்து பல்கலை கழகங்களின் முஸ்லிம் மஸ்லிஸ் மற்றும் ஏனையோர் கண்டிப்பாக அமைச்சர் எஸ். பி .திசாநாயகாவை சந்தித்து ஆண் , பெண்களை பயிற்சி நடவடிக்கைகளில் வேறுபடுத்துவது பற்றி சீரியசாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை முஸ்லிம் அரசியல் வாதிகளை சந்திக்க அவசர அழைப்பு விடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆண் பெண் கலந்த உடல் பயிற்சி, முஸ்லிம் பெண்களின் உடை, வதிவிடம், ஐந்து வேளைத் தொழுகை , ஜும்மாஹ் தொழுகை ஹலால் உணவு என்பன முஸ்லிம் மாணவ மாணவியரை பெரிதும் பாதிக்கும் பிரச்சினையாக இருக்க மாணவர்களுக்காக தலைமைத்துவ பயிற்சி நெறி இராணுவ முகாம்களின் நடாத்தப்படுவது பொதுவான அனைத்து மாணவ மாணவர்களுக்குமான பிரச்சினையாக சுட்டிகாட்டப்பட்டது.

மாணவ மாணவியரை பாதிக்கும் விடையங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகள் மற்றும் அனைத்து பல்கலை கழகங்களின் முஸ்லிம் மஸ்லிஸ் பிரதிநிதிகள் கடந்த 22.05.2011- அன்று அமைச்சர் எஸ். பி .திசாநாயகாவை அவரின் இல்லத்தில் சந்தித்து பிரச்சினைகளை தெளிவு படுத்தினர் இதன் பின்னர் கருத்துரைத்த அமைச்சர் முஸ்லிம் மாணவருக்கு சமய கடமைகளை நிறைவேற்ற வசதி: ஹலால் உணவுக்கும் ஏற்பாடு முஸ்லிம் மாணவிகள் கலாசாரப்படி உடை அணியவும் அனுமதி என்று தெரிவித்தார் என்பது குறிபிடத்தக்கது.

Comments

  1. Mohammed Jalees says:

    இவ்வாறான ஒரு நிகழ்வு மாணவ தலைவர்களுக்கு 1992-1994 காலப்பகுதியில் நாடு பூராகவும் நடைபெற்றன. எமது ம.ம.வி இல் இருந்தும் நாங்கள் சென்றிருந்தோம்.(ஆண்கள்) அப்போதைய பிரிகேடியராக இருந்த நலின் செணிவிரத்ண இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார். இங்கும் ஆண் பெண் கலப்புக்கள் இடம் பெற்றன. பாடசாலைகளில் நாட்கணக்கில் முகாமிட்டு தலைமைத்துவப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அங்கும் தொழுகைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
    மேற்குலகின் நடைமுறைக்கமைவாக அரசாங்கம் தலைமைத்துவப் பயிற்சியை அளிக்க முற்படுவது எமது முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிர்காலத்தில் இருக்கும் ஆபத்தினை கோடிட்டுக் காட்டுகின்றது. ஆண் பெண் கலப்பு, நட்பு, உரையாடல் என்று பற் பல கோணங்களில் காய் நகர்த்தப்படும். தேர்தல் காலங்களில் மேடைக்கு மேடை அல்லாஹ்வையும் சமுகத்தையும் ஞாகப்படுத்தும் அரசியல் வாதிகளும் அகில இலங்கை ஜமி இய்யத்துல் உலமாவும் ஏனைய முஸ்லிம் இயக்கங்களும் இவ்விடயத்தில் முன்னிற்க வேண்டியது அவசியமானதாகும்.

  2. Aasiyaniyas says:

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    நமது முஸ்லிம் (பெயர்தாங்கி) அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில்,அவர்களிடம் யாரும் ஈமானிய உணர்வையோ,முஸ்லிம் என்ற தனித்துவத்தையோ எதிர்பார்க்க வேண்டாம்.ஒரு அரசியல்வாதி என்ற அந்தஸ்த்தைத்தவிர வேறு எந்த அந்தஸ்த்தையும் அவர்களுக்குக் கொடுக்கவும் வேண்டம்.
    எதிர்க் கட்சியிலிருக்கும் போது ஒரு நிலை,ஆளுந்தரப்பிலிருக்கும் போது ஒருநிலை.
    இன்று ஆளுந்தரப்பிலிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இப்போது எதிர்க் கட்சியில் இருந்திருந்தால் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எப்படி செயல்ப்பட்டிருப்பார்கள்?
    அரசியலில் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கின்ற மன தைரியம் நமது அரசியல்வாதிகளைத்தவிர வேறு எவருக்கும் இருக்காது.
    மார்க்கம்,கலாச்சாரம்,தனித்துவம் என எதை வேண்டுமானாலும் அந்நியர்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதில் நமது முஸ்லிம்(பெயர்தாங்கி)அரசியல்வாதிகளை தோற்கடிக்க எவராலும் முடியாது.
    சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கப்பம் அறவிடுவதற்காக கடத்தப்பட்டபோது,சில முஸ்லிம் ஊடகங்கள் அதற்கெதிராகக் குரல் எழுப்பின .ஆனால் இப்போது நீதியமைச்சராக நியமிக்கப் பட்டிருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதியோ “அது ஒருவரைத்தானே கடத்தியிருக்கிறார்கள்”என்று மிகவும் பொறுப்பு(?) டன்
    பதில் சொன்னார்.அந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களும் நமது அரசியல்வாதிகள்தான் சகோதரர்களே.
    ஆஸியாநியாஸ்.

  3. mafas says:

    nalla visayam nallathu nadakkaddum

  4. mmsa says:

    i am agreed with these two comments sorry for my inability to type in tamil

  5. ABDUL KAYOOM says:

    பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற முஸ்லிம் மாணவர்கள் தலைமைத்துவ பயிற்சிக்கு செல்வதா,இல்லையா நம் பிரச்சனை பற்றி அரசுடன் இணைந்திருக்கும் நம் கட்சி பேச்சுவார்தை நடத்துமா? என்று நம் மாணவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில்.அக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலேசியாவில் கூத்தாட்டம்.இதுதான் நம் சமூகத்தின் நிலவரம்.

  6. AL ZAM says:

    ஆண் பெண் கலப்பு என்பது பல்கலைக்கழகங்களிலும் உள்ளதுதான். காலா காலமாக எமது மாணவிகளும் வெளியூர்களிலும் படிக்க செல்வது சமுக அங்கீகாரத்துடன்தான். எமது மாணவர்களும் சரி மாணவிகளும் சரி பக்குவமானவர்கள். தவறு நடக்காது என்று நாம் நம்புவோம்.எமது இஸ்லாமிய ஒழுக்கம் எமது மாணவர்களால் ஏனைய சமுகங்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

  7. Cassim says:

    கல் எறிய வேண்டாம் என்று கூறினால், எரிய வேண்டும் என்று அர்த்தமோ? இவ்வாறு தானே அரசியல் வாதிகளும் தம் சீடர்களுக்கு சொல்கிறார்கள்? சார்.. நீங்களும் ஒன்றுதான் அவர்களும் ஒன்றுதான்

Leave a comment