Hizbulla’s last meeting (Audio)

ஊரில் இடம்பெற்ற இறுதி தேர்தல் கூட்டத்தில்  M. L. A. M. ஹிஸ்புல்லாஹ் அவர்களால் ஆற்றப்பட்ட உரைகளின் ஒலிப்பதிவு.

நாள் : 05-04-2010

இடம் : சென்ட்ரல் வீதி, காத்தான்குடி

Part 1

Part 2

மூன்று விருப்பு வாக்குகளையும் அளிப்பதன் மூலம் இரண்டு பிரதிநிதித்துவங்களைப் பெறலாம் – றவூப் ஹாஜியார் வேண்டுகோள்

http://vaarauraikal.files.wordpress.com/2010/04/rauff-haji-11.gifமட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் இம்மாவட்டத்தின் சகல முஸ்லிம் பிரதேசங்களிலுமுள்ள முஸ்லிம் வாக்காளர்கள் அவர்களது மூன்று விருப்பு வாக்குகளையும் அளிக்க வேண்டும்.

அவ்வாறு அளிப்பதன் மூலமே இம்மாவட்ட முஸ்லீம்கள் தமக்கான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதுடன் எமது பிரதேசவாதமற்ற தூய்மையான இந்த எண்ணத்தின் மூலமாக அல்லாஹ் நாடினால் இரண்டு பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பமும் நமக்கு உள்ளதென்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான அல்ஹாஜ் றவூப் ஏ. மஜீத் தெரிவித்தார். [Read more…]

ஆளுந்தரப்பு வேட்பாளரின் ஆதரவாளர்கள் புரியும் தாக்குதல்கள் குறித்து ஐ.தே.மு. வேட்பாளர் முபீன் பொலிஸில் புகார்!

http://vaarauraikal.files.wordpress.com/2010/04/mubeen-off.gifஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராகப் போட்டியிடும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிடும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் யூ.எல்.எம்.என். முபீன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்து முறைப்பாடுகளைச் செய்து வருகின்றார். [Read more…]

சூடுபிடிக்கும் காத்தான்குடி அரசியல் களம்

தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாட்களான கடந்த சில நாட்களாக அரசியல் களம் அதிக நடவடிக்கைகளை கொண்டு அமைந்திருந்தது. எனவே, எமது இறுதி அரசியல் கண்ணோட்டத்துக்கு பிந்தைய சில தகவல்களை தொகுத்து, வாசகர்களின் தகவல்களுக்காக இங்கு வழங்குகின்றோம்.

நேற்று முன்தினம் ஓட்டமாவடிப் பாலத்தை ஜனாதிபதி திறந்து வைக்கும் நிகழ்வுக்கான அழைப்பு ஹிஸ்புல்லாஹ்வுக்கு, அமீர் அலி தரப்பிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு சென்ற ஹிஸ்புல்லாஹ்வின் வாகனத் தொடரணி சரமாரியான கல்வீச்சுத் தாக்குதலுக்கு ஓட்டமாவடிப் பகுதியில் வைத்து இலக்கானது. வாகனங்கள் சேதமடைந்தன. இறுதியில் திரும்பும் முடிவு எடுத்த ஹிஸ்புல்லாஹ், அமீர் அலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட்டத்துக்கு சென்றார். அங்கும் பேச முயற்சித்த இவரை பெறும் இரைச்சல் செய்து இடையூறுகளுக்கு உட்படுத்தி பேச முடியாமல் தடுத்தனர் அமைச்சரின் ஆதரவாளர்கள்.

[Read more…]

Photos speak: Hizbullah election campaign at maraikar lane, Kattankudi

காத்தான்குடி அரசியல் கண்ணோட்டம் – 30.03.2010

முற்குறிப்புகள்:

எமது கடந்த அரசியல் கண்ணோட்டத்தை முக்கியத்துவம் கொடுத்து ஆசிரியர் தலையங்கத்துக்கு சமமான இடத்தில் பிரசுரித்திருந்த வார உரைகல் பத்திரிகைக்கு நன்றிகள்.

ஊரிலும் மாவட்டத்திலும் வெளிப்படியாக தெரிகின்ற நிலைகளை அடிப்படையாக வைத்தும் சாத்தியமான அனைத்து அரசியல் சார்ந்த செய்தி மூலங்களை ஆராய்ந்தும் வாசகர்களுக்கு அரசியல் நிலவரத்தை உண்மையாகவும் நடுநிலையாகவும் வெளிப்படுத்தும் நோக்கிக் கொண்டே எமது வாராந்த அரசியல் கண்ணோட்டங்கள் எழுதப்படுகின்றன.

வாசிப்பவர்கள் அனேகமாக ஒரு பக்கம் சார்ந்தவர்களாக இருக்கின்றனர் என்பதற்காக அவர்களது பக்கத்துக்கு சார்பான தகவல்களை மட்டும் எழுதவோ அல்லது பாதகமான விடயங்களை எழுதாமல் விடவோ எம்மால் முடியாது. சரியான ஊடகத்துக்குரிய தன்மையாகவும் அது அமையாது. எனவே எமது கட்டுரைகளில் கூறப்படும் விடயங்களில் பிழைகள் காணப்படின், பொறுப்புடன் சுட்டிக்காட்டும் உரிமை உங்களுக்கு உள்ளது. இதை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். ஆனால், நீங்கள் பக்கம் சார்கின்றீர்கள், எமது மண் வேட்பாளரை அவமானப் படுத்த வேண்டாம் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அனைவரின் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இனி, இவ்வார அரசியல் கண்ணோட்டத்துக்கு செல்வோம்.

மும்முரமான பிரச்சார நடவடிக்கைகளை கடந்த வாரம் அவதானிக்க முடிந்தது. தபால் மூல வாக்களிப்பு கடந்த வாரம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. மாகாண சபை உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வினால் பெண் அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிக்கச் செல்வதற்காக இலவச ஆட்டோ சேவை கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த 24ம் திகதி எதிர்பார்க்கப்பட்ட மட்டக்களப்புக்கான ஜனாதிபதி அவர்களின் விஜயம் ரத்துச் செய்யப்பட்டதை வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும். ஓட்டமாவடிப் புதிய பாலத்தை அண்மித்த பகுதி அவசர அவசரமாக வீதி, புகையிரதக் கடவை அமைக்கப்பட்டு, திறப்பு விழாவுடன் கூடிய பொதுக்கூட்ட ஏற்பாடுகள் ஜனாதிபதியின் வருகையை எதிர்பார்த்து செய்யப்பட்டிருந்தன. ஊரில் ஜனாதிபதியின் பங்குபற்றலுடன் தமக்கு ஆதரவு கோரும் கூட்டமொன்றை நடத்த ஹிஸ்புல்லாஹ் எதிர்பார்த்திருந்தார். எனினும் இவை ஒன்றும் சாத்தியப்படவில்லை. கண்டி மற்றும் நுவரெலியாப் பகுதிகளில் ஜனாதிபதி பங்குபற்றிய கூட்டங்களின்போது தோன்றிய விரும்பத்தகாத சூழ்நிலைகளே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை இரவு முஹ்சின் மௌலானா பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசின் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. தலைவர் ரவூப் ஹகீம், வேட்பாளர்களான பஷீர் சேகு தாவூத், முபீன் ஆகியோர் பங்குபற்றினர். முபீன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அவர் 10,000 வாக்குகளைப் பெற்றால் தேசியப் பட்டியல் கிடைக்கும் எனும் பிரச்சாரத்துக்கு ஆதரவாக ரவூப் ஹகீம் கருத்துத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப் பட்ட போதும், அவர் அவ்வாறான உறுதிமொழி எதையும் வழங்கவில்லை. ஆயினும் 10,000 வாக்குகள் – ஊருக்கு MP எனும் சுவரொட்டிகள் யானைச் சின்னத்தோடு ஊரெங்கும் ஒட்டப்பட்டுள்ளன. இந்தக் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது 10:15 அளவில் பொலிஸ்  தலையிட்டு ஒலிபெருக்கிப் பாவனையை நிறுத்தியிருந்தனர். கட்சித் தலைவர் பங்குபெறும் கூட்டங்களில் நள்ளிரவு வரை ஒலிபெருக்கி பாவிக்கலாம் எனும் நடைமுறை முஸ்லிம் காங்கிரஸ் நேரடியாக தேர்தலில் போட்டியிடவில்லை என்பதால், பொலிசாரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

தனது மூன்று பொதுக் கூட்டங்கள் என்ற நிகழ்ச்சி நிரலின் இரண்டாவது கூட்டத்தை ஹிஸ்புல்லாஹ் முதலாம் குறிச்சி மீரா ஜும்மாஹ் பள்ளிவாயல் முன்றலில் கடந்த வெள்ளி இரவு நடாத்தினார். இதில் மற்றவர்களின் மனம் புண்படும் படியான எவ்வித பிரச்சார நடவடிக்கைகளிலும் தான் இம்முறை ஈடுபடவில்லை என்றும், ஏனைய தனக்கு ஆதரவான சகோதரர்கள் இவ்வாறு ஏதும் பேசிவிடக் கூடாது என்பதற்காகவே பொதுக் கூட்டங்களை மூன்றாகக் குறைத்ததாகவும் கூறினார்.

காத்தான்குடி வய்த்தியசாலையை இந்தளவு நவீனமாக அபிவிருத்தி செய்தமைக்கு தானே முற்று முழுதாகப் பொறுப்பு என்றும், சம்பந்தமில்லாமல் வேறொரு சாரார் இதற்கு உரிமை கூறுவதால், தான் இதை இங்கு குறிப்பிடுவதாகவும் இல்லாவிட்டால் தான் இவ்வாறு பேசுபவனல்ல என்றும் குறிப்பிட்ட அவர், இதைப் பற்றி விரிவாகப் பேசினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் என்று பொய் கூறி மக்களிடம் வாகுக் கேட்பதாகவும், தலைமைத்துவம் இதுவரை ஐம்பது பேருக்காவது தேசியப்பட்டியல் தருவதாக கடிதம் கொடுத்துள்ளதாகவும் கூறிய ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி மக்கள் தன்மானம் மிக்கவர்கள் என்றும் தங்களது வாக்குப் பலத்தால் உறுப்பினரைப் பெறுவார்களே ஒழிய யாரும் கொடுக்கும் பிச்சையான தேசியப்பட்டியல் அவர்களுக்கு தேவையில்லை என்றும் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தின் போது பத்து மணிக்கே ஒலி பெருக்கிகள் (loud speakers) நிறுத்தப்பட்டு, சாதாரண speaker box வகை ஒலிபெருக்கிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. எனினும் 10:25 அளவில் வருகை தந்த பொலிஸ் குழு அதனையும் நிறுத்தியது. இது தொடர்பான விடயமும், ஒலிப்பதிவும் ஏற்கெனவே எமது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இறுதியாக 10:40 க்கு மேல் எவ்வித ஒலிபெருக்கிப் பாவனையையும் பொலிசார் அனுமதிக்காததால், மக்களை மேடையின் அருகில் வருமாறு கூட்டி சிறிது நேரம் உரையாற்றி தனது கூட்டத்தை ஹிஸ்புல்லாஹ் நிறைவு செய்தார். அல்லாஹு அக்பர் என்றும் தேசியத் தலைவர் ஆக்குவோம் என்றும் சில கோசங்கள் கேட்டன. இது ஒரு பொதுக்கூட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், சில நூறு பேரே பங்கு பற்றியதைக் காணக்கூடியதாக இருந்தது.

அதிகளவான கூட்டங்கள் ஹிஸ்புல்லாஹ்வாலேயே நடத்தப்படுகின்றன. தமிழ்ப் பகுதிகள் அடங்கலாக பத்து தொடக்கம் இருபது கூட்டங்களில் அவர் தினமும் பங்கு பெறுகிறார் என்று சொல்லப்படுகிறது. ஆயினும் ஊரில் தினமும் கூடியது ஐந்து கூட்டங்களில் பங்கு பெறுகிறார்.

தமிழ்ப் பகுதிகளில் பெருந்தொகைப் பணச் செலவில் உடனடியாக மக்கள் கேட்கும் தேவைகளான கோயில்கள் மற்றும் பொது இடங்களின் கட்டட வேலைக்கான பொருட்கள் மற்றும் ஒலிபெருக்கி உபகரணங்கள் போன்றவை ஹிஸ்புல்லாஹ் தரப்பினரால் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.

முதலாம் குறிச்சிக் கூட்டத்தின் பின்னர் பொலிசாரின் இடையூறு ஏதுமின்றி ஒலிபெருக்கிகள் கூட்டங்களில் இரவு 11 மணிக்கு மேலும் பயன்படுத்தப்படுகின்றன. மேல்மட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கக்கூடும்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சிறு கூட்டமொன்றில் ஹிஸ்புல்லாஹ்வும் அவரது பேச்சாளர்களும் முபீன் அவர்களை மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினர். பொய்களைக் கூறி வாக்குக் கேட்கிறார் என்றும் முனாபிக் போன்ற கடும் வார்த்தைப் பிரயோகங்களும் இதில் இடம்பெற்றிருந்தமை மக்களிடையே சலசலப்புகளைத் தோற்றுவித்திருந்தது.

ஹிஸ்புல்லாஹ் மேடைக்கு வருவதை ஒரு கொண்டாட்டமாகவே செய்கிறார்கள். அவர் வரும்போது யார் பேசிக்கொண்டிருந்தாலும் பேச்சு நிறுத்தப்படுகிறது. உடனடியாக வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற ‘புலி உறுமுது’ பாடலின் அதே இசையில் ஹிஸ்புல்லாவின் புகழ்பாடும் பாடல் ஒலிக்கிறது. பட்டாசுகள் முழங்குகின்றன.

கடந்த வார ஹிஸ்புல்லாஹ்வின் கூட்டங்களில் முக்கியமாக அவதானிக்கப்பட்ட விடயம் யாதெனில், எமது கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் என ஹிஸ்புல்லாஹ்வினால் அறிமுகப்படுத்தப்படும் டெலிகொம் ஹம்தூன் மற்றும் அண்மையில் ஹிஸ்புல்லாஹ்வுடன் இணைந்து கொண்ட றியாஸ் முஹம்மத் ஆகியோர் அடங்கலான முக்கிய பேச்சாளர்கள் அனைவரும் எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற்று முழு அமைச்சராக வரவிருக்கும் தாஜுல் மில்லத் என்றுதான் அவரை விழிக்கிறார்கள்.

ஞாயிறு இரவு மெத்தைப்பள்ளி அருகில் சுதந்திரக் கட்சி அமைப்பாளர் றவூப் ஏ மஜீட் அவர்களால் பொதுக்கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் மூவரும் ஒரே மேடையில் தோன்றுவார்கள் என விளம்பரப்படுத்தப்பட்டதாலோ என்னவோ மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. ஆனாலும் இதில் அமைச்சர் அமீர் அலியைத் தவிர வேட்பாளர்கள் யாரும் இதில் பங்கு பெறவில்லை. இக்கூட்டத்தில் மிகவும் உருக்கமான முறையில் அமீர் அலி ஆற்றிய உரை ஏற்கெனவே எமது இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதே தினம் மொடன் ஹாஜியார் வீதியில் இடம்பெற்ற ஹிஸ்புல்லாஹ்வின் சிறு கூட்டத்தில் அமீர் அலி தரப்பால் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டம் தொடர்பில் எவ்வித அறிவித்தலோ அழைப்போ ஹிஸ்புல்லாஹ்வுக்கு விடுக்கப்படவில்லை எனக் குறைகூறப்பட்டது.

முன்னதாக இரண்டு மூன்று தினங்கள் தமது ஆதரவாளர்களை குழுக்களாகக் களமிறக்கியும் சில பகுதிகளுக்கு தான் நேரில் சென்றும் நேரடி வாக்குக் கேட்கும் பிரச்சாரத்தில் காத்தான்குடியிலும் அண்டிய பிரதேசங்களிலும் அமீர் அலி ஈடுபட்டிருந்தார். ஓட்டமாவடிப் பகுதிகளில் ஹிஸ்புல்லாஹ்வோ அலி ஸாஹிர் மௌலானாவோ எவ்வாறான நேரடிப் பிரச்சாரத்திலும் இதுவரை ஈடுபடாமல் மர்மமான தடை ஒன்றை அராஜகமாகப் பேணி வரும் அமீர் அலி காத்தான்குடிப் பகுதியில் முழு வீச்சில் வாக்கு வேட்டையில் இறங்கியிருப்பதும், பிரதேசவாதத்தை ஒழிக்கப்போவதாகப் பேசி வருவதும் ஓட்டமாவடிப் பிரதேசத்தில் அவருக்கு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் செல்வாக்குச் சரிவை உறுதிசெய்வதாக அமைந்திருக்கின்றது.

அமீர் அலியின் இக்கூட்டத்தை அடுத்து உடனடியாக திங்கட்கிழமை பி.ப. கடற்கரை வீதியில் மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்பாக ஹிஸ்புல்லாஹ்வின் பொதுக்கூட்டமொன்று பசீர் (அஸாபியா) அவர்களின் தலைமையில் அறிவிக்கப்பட்டது. இது பொதுக்கூட்ட வரிசையில் இல்லாமல் திடீரென அறிவிக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. அமீர் அலியின் கூட்டம் பற்றியும், அவர் எமது துரோகியென்றும், இங்கு வந்து வாக்குக் கேட்க அவருக்கு உரிமை ஏதும் இல்லை என்றும் கூறப்பட்டது.

ஜௌபர் கான் அவர்களது பிரச்சாரமும் சளைப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் பத்தாயிரம் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் செல்வேன் என்ற அவரது கணக்கு விபரத்தை கடந்த வார உரைகல் பத்திரிகை வெளியிட்டிருந்தது. அதாவது அவரது சுயேட்சைக் குழுவிலுள்ள அவர் தவிர்ந்த 7 பேரும் சேர்ந்து 25,000 வாக்குகளைத் திரட்டுவார்கள் எனறும் தான் 10,000 பெறும்போது மொத்தம் 35,000 வாக்குகள் வரும் என்பதும்தான் அந்தக் கணக்கு. எனினும் இவரது சக வேட்பாளர்கள் பெறக்கூடிய சாத்தியம் குறித்து அதே பத்திரிகைச் செய்தி அவநம்பிக்கை தெரிவித்திருந்தது.

தேர்தலில் இருந்து ஒதுங்கியதன் பின்னர் அமைதியாக காணப்பட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்க முகாம் கடந்த வாரம் சற்று பரபரப்படைந்திருக்கிறது. மக்கள் இயக்க முக்கியஸ்தர்கள் பசீர் சேகு தாவூதைச் சந்தித்திருக்கிறார்கள். வெளிப்படையாக முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற பசீரின் கோரிக்கையை மக்கள் இயக்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. ஆனாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடுவதற்காக அவசரமாகத் தயாராகிவரும் பாராளுமன்றத் தேர்தல் விசேட வெளியீடான புதிய நாளை பத்திரிகை, வரும் தேர்தல் எவ்வாறு முஸ்லிம்களுக்கு ஆபத்தாக அமையும் என ஆராய்வதுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை யாருக்கும் வழங்கிவிடாமல் இருப்பதில் முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வண்ணமும் அமையவுள்ளதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன. இது சூசகமாக ஆளும்கட்சியை எதிர்க்க தமது ஆதரவாளர்களைக் கோரும் முயற்சியாகவே பார்க்கப்படலாம்.

பிந்திக்கிடைத்த செய்தியொன்று வாக்களிப்பில் கலந்து கொள்ள முடியாமல் போகும் என எதிர்பார்க்கப்படும் வெளியூரில் தங்கியிருந்து தொழில்செய்வோர் மற்றும் வெளிநாட்டில் வசிப்போர் ஆகியோரது 2000 முதல் 6000 வரையான பட்டியல் தயார்செய்யப்பட்டு அவர்களது வாக்குகளை அளிக்கத்தக்கதான ஆவணங்களைத் தயார் செய்யும் பணி அவசரகதியில் ஹிஸ்புல்லாஹ் தரப்பினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது. இதை அடுத்து அவரை எதிர்க்கும் தரப்புகள் இதை முறியடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன.

காத்தான்குடியிலிருந்து எமது செய்தியாளர்.

பிற்குறிப்பு:

அன்பான வாசகர்களே இவை நேரடியாக அவதானிக்கப்பட்ட மற்றும் செய்தி மூலங்களிலிருந்து தொகுக்கப்பட்ட விடயங்கள் மட்டுமே. கணிப்புகள், எதிர்வுகூறல்கள் மற்றும் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மக்களை பிழையாக வழிநடத்த முற்படும் அரசியாலாளர்களின் செயற்பாடுகளைச் சுட்டிக்காட்டல் ஆகியவை இக்கட்டுரையுடன் சேர்த்து வெளியிடப்பட இருந்தன ஆயினும், இன்னும் நேரம் தேவைப்படுவதால் வெளியிடப்படவில்லை. முடிந்தால் தேர்தலுக்கு முன்னர் வெளியிடப்படும். அசௌகரியத்துக்கு மன்னிக்கவும்.

Photos Speak: Hizbullah’s campaign

[Read more…]

ஊரில் இடம்பெற்ற கூட்டத்தில் M. S. S. அமீரலி அவர்களால் ஆற்றப்பட்ட உரை (Audio enclosed)

(click above link to play audio)

ஊரில் இடம்பெற்ற கூட்டத்தில்   அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் M. S. S. அமீரலி அவர்களால் ஆற்றப்பட்ட உரைகளின் ஒலிப்பதிவு.

நாள் : 28-03-2010

இடம் : Methai Palli Road, Kattankudi

முஸ்லிம்கள் வெற்றியின் பங்காளர்களாக வேண்டும்: அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா

ஆரம்ப காலம் தொட்டே இந்த நாட்டில் முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். அரசர்களுக்கு விசுவாசமாக அவர்கள் நடந்திருக்கிறார்கள். அரசவை மருத்துவர்களாக அவர்கள் சேவை செய்திருக்கிறார்கள். எமது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டுள்ளார்கள். அக்காலம் தொட்டு இன்று வரை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

இந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசும் சிறந்த அமைச்சுக்களை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளது. எனவே இம்முறை தேர்தலில் முஸ்லிம்கள் வெற்றியின் பங்காளர்களாக வேண்டுமே தவிர தோல்வியின் பங்காளர்களாக ஆகக்கூடாதென அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். [Read more…]

சனத் ஜயசூரியவிற்கு மங்கள சமரவீர ஒத்துழைப்பு!

ஐக்கிய தேசிய முன்னணியின் பிரசாரக் கூட்டத்திற்காக நாளைய தினம் (31) மங்கள சமரவீரவினால் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்கு ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் சனத் ஜயசூரியவின் கோரிக்கைக்கமைய ஜனாதிபதியின் கூட்டத்திற்காக மைதானத்தைப் பெற்றுக்கொடுக்க மங்கள சமரவீர இணங்கியிருப்பதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக அங்கு சென்றிருந்த சனத் ஜயசூரிய தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்காக இலங்கைக்குத் திரும்ப போட்டி ஏற்பாட்டாளர்கள் அண்மைய நாட்களில் அனுமதி வழங்கியிருக்கவில்லை. இதன் காரணமாக ஜனத் ஜயசூரியவின் தேர்தல் பிரசாரங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. [Read more…]

28.03.2010 அன்று ஊரில் இடம்பெற்ற கூட்டத்தில் M. L. A. M. ஹிஸ்புல்லாஹ் அவர்களால் ஆற்றப்பட்ட உரை (Audio enclosed)

ஊரில் இடம்பெற்ற கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் M. L. A. M. ஹிஸ்புல்லாஹ் அவர்களால் ஆற்றப்பட்ட உரைகளின் ஒலிப்பதிவு.

நாள் : 28-03-2010

இடம் : மொடன் ஹாஜியார் வீதி, New Kattankudi

[Read more…]

உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் ஏறாவூர் மக்கள் – சுபைர்

பொதுத் தேர்தலானது, ஏறாவூர் மக்கள் அமைச்சர் அமீர் அலிக்கு நன்றிக் கடன் தீர்க்கக் கிடைத்த பொன்னான சந்தர்ப்பமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூரில் இடம்பெற்ற ஐ.ம.சு.மு. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய சுபைர், [Read more…]

சுயமரியாதையாளர்களின் வெற்றி நிச்சயம்! -வேட்பாளர் புவி. றஹ்மதுல்லாஹ் நம்பிக்கை-

http://vaarauraikal.files.wordpress.com/2010/03/puvi-21.gifகாத்தான்குடிப் பிரதேசத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களிலும் சுய மரியாதையாளர்களின் வெற்றியே நிச்சயமானதாகும் என்று ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரும், ‘ஒக்கம வெசியோ ஒக்கம ரஜவரு’ (எல்லோரும் பிரஜைகள் எல்லோரும் மன்னர்கள்) கட்சியின் 5ம் இலக்க வேட்பாளருமான புவி. எம்.ஐ. றஹ்மதுல்லாஹ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது பத்திரிகை மற்றும் இணையதள வாசகர்களுக்கும், காத்தான்குடிப் பிரதேச வாக்காளர்களுக்கும் விடுத்திருக்கும் தேர்தல் பிரச்சார அறிக்கையின் விபரமாவது: [Read more…]

General Election- Batticaloa District: Sample Ballot Paper

Basmala Junction (Goodwin) concept images from Hizbiullah fanpage (fb)

[Read more…]

காத்தான்குடிப் பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை அரசுக்கு ஆதரவளிக்க முடியாது!- புவி றஹ்மதுல்லாஹ்

http://vaarauraikal.files.wordpress.com/2010/03/puvi-rahmath1.gifபிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் ஒழித்ததன் மூலம் இலங்கையில் கடந்த 30 வருடங்களாக நீடித்து வந்த பயங்கரவாதத்தை ஒழித்து விட்டதாக அரசாங்கம் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பிரச்சாரம் செய்து வருகின்றது. எனினும் காத்தான்குடிப் பிரதேசத்தில் அரச தரப்பு பயங்கரவாதம் இன்னும் நீடித்தே வருகின்றது. அது முற்றாக இப்பிரதேசத்தில் ஒழிக்கப்படும் வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்க முடியாது என ‘எல்லோரும் மன்னர்கள் எல்லோரும் பிரஜைகள்’ கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும், ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான புவி. எம்.ஐ. றஹ்மதுல்லாஹ் தெரிவித்தார்.

கடந்த 11ம் திகதி வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்ஸெய்யித் அலிசாஹிர் மௌலானா அவர்கள்,  ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரைச் சந்தித்து தமக்கான அரசியல் ஆதரவைக் கோரியபோது மேற்கண்டவாறு அவரிடம் நேரில் தெரிவித்த வேட்பாளர் புவி. றஹ்மதுல்லாஹ் மேலும் அவரிடம் தெரிவித்ததாவது: [Read more…]

35000 வாக்குகள் பெறுவது உறுதிப்படுத்தப்படுமானால் தேர்தலில் இருந்து விலகத் தயார்! -சுயேட்சை வேட்பாளர் ஜௌபர்கான் சவால்

http://vaarauraikal.files.wordpress.com/2010/03/jaw-meet-21.gif35,000 விருப்பு வாக்குகளைப் பெறுவதற்கான சாத்தியமான வழியை சகோதரர் ஹிஸ்புல்லாஹ் உறுதிப்படுத்துவாரானால் நான் இத்தேர்தல் களத்திலிருந்து ஒதுங்கிக்கொள்ளத் தயாராக இருக்கின்றேன். எம்மால் நினைத்துப் பார்ப்பதற்குக்கூடச் சாத்தியப்படாத இப்பெருந்தொகை விருப்பு வாக்குகளை அவர் ஒருவர் தனியாகப் பெற்று இம்மாவட்டத்தின் பிரதிநிதியாக வருவதற்கு அவருக்கு எந்தவிதமான முகாந்திரமும் என்னுடைய 30 வருட அரசியல் அனுபவத்தில் தென்படவேயில்லையென சுயேட்சைக்குழு – 16ன் தலைமை வேட்பாளாரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்ஹாஜ் ரி.எல். ஜவ்பர்கான் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி கடற்கரை முன்றலில் இச்சுயேட்சைக் குழுவினரின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் அக்கட்சியின் வேட்பாளர் ஏ.எம். சிராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதன்போது மேற்கண்டவாறு தெரிவித்த தலைமை வேட்பாளர் ஜௌபர்கான் மேலும் தெரிவித்ததாவது: [Read more…]

Photos speak: Hizbullah’s Election Menifest ceremony

[Read more…]

காத்தான்குடி அரசியல் கண்ணோட்டம் – 22.03.2010

கடந்த வார அரசியல் நிலைகள் வாசகர்களுக்காக தொகுத்துத் தரப்படுகின்றன.

பிரதான வேட்பாளர்களான ஹிஸ்புல்லாஹ், முபீன் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஜவ்பர் கான் ஆகியோர் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்களை இலக்கு வைத்து நேரடியான பிரச்சாரத்தில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. பாடசாலைகள், அரச அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இவர்கள் ஆதரவாளர்கள் புடை சூழ நேரடியாக விஜயம் செய்து வாக்காளர்களை சந்தித்து தமக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

ஹிஸ்புல்லாஹ் அவர்களது பிரச்சாரத்தை நோக்குவோமாயின், மூன்று பெரிய பொதுக் கூட்டங்களையே நடத்தவிருப்பதாக ஏற்கெனவே இவர் தீர்மானித்திருந்தார். ஒரு கூட்டம் கடற்கரைப் பகுதியில் ஏற்கெனவே நடத்தப்பட்டுவிட்டது. இரண்டாவது கூட்டம் ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்யும் தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு  அதில் ஜனாதிபதியை பங்கேற்கச் செய்ய முயற்சிப்பது என்று ஹிஸ்புல்லாஹ்வின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருப்பவர்களுள் ஒருவர் கூறினார். மூன்றாவது கூட்டம் பிரச்சார நடவடிக்கைகள் முடிவுறும் இறுதி இரவு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய அனைத்து கூட்டங்களும் சிறு சிறு பிரதேசங்களை மையப்படுத்தி சிறு கூட்டங்களாகவே நடாத்தப்படுகின்றன.

[Read more…]

Concept images released by Hizbullah fanpage (facebook)

We found some concept images of road construction on Hizbullah’s facebook fanpage. Images are re-published for our viewers with thanks to the fanpage.

(This is under construction now)

[Read more…]