இஸ்லாமிய அரசியலும், ஆட்சியும் – பகுதி 01

Ramsin-முஹமட் றம்சின் ஓட்டமாவடி-

இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள்.

நான் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். கரைப்பகுதி கடினமான நஜ்ரான் நாட்டுப் போர்வை ஒன்றை அவர்கள் அணிந்திருந்தார்கள். அப்போது எதிரே வந்த கிராமவாசி நபிகள் நாயகம் (ஸல்)அவர்களைப் போர்வையுடன் சேர்த்து கடும் வேகமாக இழுத்தார். இழுத்த வேகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிராமவாசியின் மார்பில் சாய்ந்தார்கள்.

அந்த கிராமவாசி கடுமையாக இழுத்ததன் காரணமாகப் போர்வையின் கனத்த கரைப்பகுதி அவர்களின் தோள்பட்டயைக்   கன்றிப்போக செய்தது. பிறகு கிராமவாசி,முஹம்மதே! உம்மிடமுள்ள செல்வத்தில் எனக்கும் தருமாறு கட்டளையிடுவீராக! என்று கூறினார். நபிகள் (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள். பிறகு அவருக்கு ஏதேனும் வழங்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புஹாரி,முஸ்லிம்

விளக்கம் (நவீன தலைமைகள்):

மதத் தலைவராகவும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதிபராகவும் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளரான அனஸ் எனும் சிறுவருடன் தனியாக வீதியில் நடந்து சென்றதாக இந்த வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.

சாதாரண மனிதர்கள் சர்வ சாதாரணமாக நடந்து செல்வதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஒரு மதத்தின், ஆட்சியின் மாபெரும் தலைவராக இருப்பவர் முன்னறிவிப்பின்றி – பக்தகோடிகள் புடை சூழாமல்,  பந்தாக்கள் செய்யாமல் – சர்வசாதாரணமாக நடந்து செல்வதை உலக வரலாற்றில் நீங்கள் கண்டதுண்டா?

 அவரையும் அவரது மார்கத்தையும் அழித்தொழிக்க எதிரிகள் சமயம் பார்த்துக் கொண்டிருந்த அச்சம் சூழ்ந்த நேரத்தில் இப்படி நடந்து செல்வதை கற்பனையாவது செய்ய முடியுமா?

சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சியின் தலைமைகள், பொறுப்பாளர்கள் நடத்தும் பந்தாக்களைப்  பார்த்துவரும் மக்களே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு  நடந்து சென்றபோது அகில உலகும் அஞ்சக் கூடிய மாபெரும் வல்லரசின் அதிபர் என்பதை கவனத்தில் வையுங்கள்.

இந்த மாமனிதர் அணிந்திருந்த ஆடை என்ன? அரசுக் கருவூலத்தில்  ஆபரணங்களும்,ஆடைகளும் குவிந்து கிடக்கும் போது – மக்களெல்லாம்  அவர்களிடம் வந்து அதைப் பெற்றுச் செல்லுமளவுக்கு அரசுள் கருவூலம் நிரம்பியிருந்த போது – ஒரு மேல் துண்டை மட்டுமே  போர்த்திக்கொண்டு வீதியில் நடந்து செல்கிறார்கள்.அலங்காரம் இல்லை! உயர்ரக ஆடைகள் அணியவில்லை! தைக்கப்பட்ட சட்டை போன்ற ஆடை கூட அணியவில்லை! அணிந்திருந்த  மேல் துண்டு கூட  மேனியை உறுத்தாத வகையில் உயர்தரமாக,மென்மையாக இருந்ததா என்றால் அதுவுமில்லை!

முரட்டுத்துணியை – மேனியை உறுத்தக் கூடிய துணியைச் சுற்றிக் கொண்டு வாழ்ந்த அதிசய வாழ்க்கை அந்த மாமனிதருடயது. நம்மைப் போல சாதாரணமானவர்கள் கூட அணிந்து வெளியே செல்ல வெட்கப்படும் ஆடையை அணிந்து வெளியே செல்வதற்கு அசாத்தியமான மனவுறுதி வேண்டும். நேர்மையாக வாழ்வதில் எவரைப் பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாத – மற்றவர்களிடம் தமது இமேஜ் – மதிப்பு – பாதிக்குமே என்பதைப் பற்றிப் பொருப்படுத்தாமல் வாழ்ந்த அந்த மாமனிதரிடம் இந்த உலகம் படிக்க வேண்டிய பாடகள் ஏராளம் ஏராளம் உள்ளன.

முன்பின் தெரியாதவர் – நாட்டுப்புறத்தைச் சார்ந்தவர் – ஆட்சித்தலைவரை நேரடியாக நெருங்க முடிகின்றது. சட்டையைப் பிடித்து. கீழே விழும் அளவுக்குப் படுவேகமாக இழுக்க முடிகின்றது.அந்த நிலையிலும் கூட அவர்களால் சிரிக்க முடிகின்றது! என்றால் எப்படி பட்ட அற்புத வாழ்கை.

தனது அதிகாரத்தை வைத்து  தனக்கு வாக்களித்த மக்கள் என்றும் பாராது  தனது சுயமரியாதைக்காக, பதவிக்காக  மக்களுக்கு நோவினை செய்கின்ற அதிகார வர்க்கங்கள் இந்த இடத்தில் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதிபராக இருந்த நபிகள் நாயகத்தின் சட்டையைப் பிடித்து முன்பின் அறிமுகமில்லாதவர் இழுத்தும் அந்த நேரத்தில் கடுகளவு அதிருப்தியைக்கூட வெளிப்படுத்தாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்ததும் அவர் மாமனிதர் என்பதற்க்கு மகத்தான சான்று.

இப்படிப் பட்ட மகத்தான பண்பாடு உள்ள தலைவர்கள்  எமது சமூகத்தில் உள்ளார்களா? என்று தனக்குள் வினா? எழும் நிலைதான் இன்றைய அரசியல் தலைமைகளின் நிலைப்பாடு.

அந்தக் கிராமவாசி,சட்டையை பிடித்து இழுத்து ஏதேனும் நியாயம் கேட்க வந்தாரா? நபிகள் நாயகம் செய்த தவறைச் சுட்டிக்காட்டுவதற்காக இப்படி இழுத்தாரா? இல்லை.

நபிகள் நாயகத்திடம் உதவி கேட்டுத்தான் இழுத்திருக்குறார்.

உதவி கேட்டு வருபவரிடம் அடக்கம் இருக்க வேண்டும்,பணிந்து,குழைந்து கோரிக்கையை முன் வைக்க வேண்டும்.

அரசில் இருக்கின்ற பொதுப்பணத்தை கேட்பதென்றாலும் கொடுப்பவரை புகழ்ந்து தள்ள வேண்டும், இல்லை என்றால் பெற முடியாது என்பது பொதுவான உலகியல் நடப்பு.

இந்த மாமனிதரைத்  தலைவராகக் கொண்ட சமுதாயம் தரங்கெட்ட அரசியல்வாதிகளைத் தலைவர்களாக ஏற்று அவர்களின் பின்னே சென்று கொண்டிருக்கும் அவர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

(தொடரும்)

Comments

  1. உலமாக்களே! பொதுமக்களே! அரசியல்வாதிகளே! இச்சிறிய கட்டுரையை பார்க்கத்தவறாதீர்கள்.

    இஸ்லாமிய அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும்?
    ஓர் சுருக்கமான ஆய்வு:

    அல்லாஹ்வினுடைய தூதர் காட்டிச் சென்ற சிறந்த இஸ்லாமிய அரசியல் நாகரீகத்தை தற்காலத்தில் உலகில் ஜமாஅதுல் முஸ்லிமீன்
    மட்டுமே பறைசாற்றிக்கொண்டிருக்கறது.

    கேள்வி : 4 3
    ஒவ்வொரு சமூகமும் தங்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத் தங்களால் முடிந்த வகையில் இன்று உலகில் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு இன்று உலகில் திட்டமிடப்பட்டு அநீதம் இழைக்கப்படுகின்றது. இந்த நிலையில் எமக்கு இருக்கின்ற வாய்ப்பு வசதிகளையும்கூடப் பயன்படுத்தக்கூடாது என்பதாக நீங்கள் மக்களுக்குக் கூறுகின்றீர்கள். அதாவது எமக்கு இருக்கும் வாக்குரிமை மூலம் எமது உரிமைகளை வென்றெடுப்பது கூடாது என்றதொரு கருத்தை முன்வைக்கின்றீர்கள். நீங்கள் இவ்வாறானதொரு கருத்தை முன்வைப்பதற்கான உண்மையான காரணம் என்ன………………….?

    பதில் :
    நாம் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் ஆவோம். முஸ்லிம்கள் என்பதன் பொருள் அல்லாஹ்விடம் முற்றிலும் சரணடைந்துவிட்டவர்கள் என்பதாகும். எனவே வாழ்வின் எந்தவொரு துறையாக இருந்தாலும் அதிலே அல்லாஹ்வின் வரம்புகள் எவை என்பதனை அறிந்து அவற்றை செயல்படுத்தியபின்னரே அவற்றுடன் முரண்படாத ஏனைய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அல்லாஹ் எங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளான்.

    முழுமையான ஆட்சியதிகாரம் அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் கிடையாது. இது இஸ்லாம் கூறும் அடிப்படை உண்மைகளில் ஒன்றாகும். எனவே உலகில் எவராவது ஆட்சியாளராக விரும்பினால் அவர் அல்லாஹ்வின் சட்டங்களை நிலை நாட்டும் அல்லாஹ்வின் பிரதிநிதியாக இருந்துகொண்டே ஆட்சி நடாத்த வேண்டும். சட்டம் இயற்றும் அதிகாரத்தைத் தனது கையில் எடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது. அந்த உரிமையைப் பிறருக்கு வழங்குகின்ற உரிமையும் எவருக்கும் கிடையாது. அல்லாஹ் தனது துாதர்களை அனுப்பிய நோக்கங்களில் ஒன்று அவனது தீனை இந்தப் பூமியில் மேலோங்கச் செய்வதற்காக அவர்கள் போராட வேண்டும் என்பதாகும்.

    கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
    அவன்தான் தனது தூதரை நேர்வழியைக் கொண்டும், சத்திய தீனைக் கொண்டும்: அதனை அனைத்து தீன்களை விடவும் மேலோங்கச் செய்வதற்காக அனுப்பி வைத்தான். இணைவைப்போர் வெறுத்தாலும் சரியே! ( 0 9 : 3 3 )

    வாக்குரிமை என்பது ஜனநாயக ஆட்சிமுறை மக்களுக்கு வழங்கியுள்ள ஒரு உரிமையாகும். இந்த உரிமையின் மூலம் மக்களை ஆட்சி செய்வதற்கு ஒருசிலர் தேர்வுசெய்யப்படுகின்றார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் சேர்ந்து மக்களை ஆட்சி செய்யக்கூடிய ஒரு மன்றத்தை அமைப்பார்கள். அந்த மன்றத்திற்கு எந்தவொரு சட்டத்தையும் இயற்றுகின்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதி பதியைத் தவிர அந்த மன்றத்தின் முடிவுகளை மறுக்கின்ற அதிகாரம் எவருக்கும் கிடையாது. இத்தகையதொரு சபையை தோற்றுவிப்பதற்கு எமது விருப்பைத் தெரிவிப்பதே நாம் அளிக்கும் வாக்குகளாகும்.

    எனவே மக்களை ஆட்சிப் பொறுப்பிற்குத் தேர்வு செய்வதற்காக வாக்குகளை அளிப்பதென்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான சட்டமியற்றும் அதிகாரத்தை அவனல்லாதவர்களுக்கு வழங்குவதாகும். அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மேலோங்கச் செய்வதற் காகப் போராடும் கட்சியில் உடன்படிக்கை செய்து இணைந்து கொண்ட முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு மாத்திரம் உள்ள அதிகாரத்தை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு எவ்வாறு வழங்க முடியும்……….? அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரியவற்றை ஏனையோருக்கு வழங்குவதுதானே இஸ்லாத்தின் பார்வையில் இணைவைத்தல் எனப்படுகின்றது. இணைவைத்தலிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களே முஸ்லிம்களாவார்கள். இணைவைத்தலைச் செய்பவர்கள் ஒருபோதும் முஸ்லிம்களாக இருக்க முடியாது. இணைவைப்பவர்களுக்கு சுவனம் ஹராம் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.

    கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
    (நபியே! நீர்) கூறுவீராக! அல்லாஹ் உண்மையையே கூறியுள்ளான். எனவே முற்றிலும் கட்டுப்படக்கூடியவராக இருந்த இப்ராஹீமுடைய வழிமுறையைப் பின்பற்றுவீராக! (அவர்) இணைவைப்போரினின்றும் உள்ளவராக இருக்கவில்லை. ( 0 3 : 9 5 )

    மேலும் அல்லாஹ் கூறுவதாவது:-
    அறிவீனர்களே! அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அடிபணியும் படியா என்னை (நீங்கள்) ஏவுகின்றீர்கள்? என (நபியே! நீர்) கேட்பீராக! மேலும் உமக்கும் உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் நிச்சயமாக வஹிமூலம் அறிவிக்கப் பெற்றதாவது : (நீர்) இணைவைத்தால் நிச்சயமாக உமது (நற்)செயல்கள் அழிந்துவிடும். அத்துடன் நிச்சயமாக (நீர்) நஷ;டமடைபவர்களில் ஆகிவிடுவீர் (என்பதாகும்.)
    ( 3 9 : 6 4, 6 5 )

    மனிதனையும் அவன் வாழும் பூமியையும் படைத்தவன் அல்லாஹ்வேயாவான். அவனது சட்டத்தின்படி திருடியவனின் கை வெட்டப்பட வேண்டும். ஆனால் ஜனநாயகத்தின் தீர்ப்பு அவனைக் குறிப்பிட்ட காலம் சிறையில் அடைப்பதாகும். இவ்வாறான சட்டங் களைக் கொண்டு தீர்ப்பு வழங்குவது, அந்த சட்டங்களிடம் தீர்ப்புக் கேட்டுச் செல்வது, அத்தகைய சட்டங்களை இயற்றுவதற்கு எமது விருப்பைத் தெரிவிப்பது அனைத்துமே நிராகரிப்பையும், இணை வைத்தலையும் ஏற்படுத்தும் காரியங்களாகும். அல்லாஹ்வின் சட்டங்களைத்தான் அடியார்கள் செயல்படுத்த வேண்டும் என்பது உலகம் தோன்றியது முதல் இருந்துவரக்கூடிய இஸ்லாத்தின் சட்டமாகும். எனவேதான் யூஸுப்(அலை) அவர்கள் எகிப்திய அரசரின் ஆட்சியைப் பொறுப்பேற்றிருந்தபோது அந்த அரசர் இயற்றிய தண்டனையை நிறைவேற்றவில்லை. அது அவர்களுக்கு ஆகுமானதல்ல என்பது பற்றி அல்லாஹ் கூறுவதாவது:-

    அவ்வாறுதான் யூஸுபிற்காக (நாம்) சூழ்ச்சி செய்தோம். அல்லாஹ் நாடினாலேயன்றி (அந்த) அரசரின் தீனிலே (உள்ள சட்டப்படி) தனது சகோதரரைப் பிடிப்பது (அவருக்கு) ஆகுமானதல்ல. (நாம்) நாடுபவர்களின் பதவிகளை (நாம்) உயர்த்துகின்றோம். அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலே (அவரைவிட) அறிவுள்ள ஒருவர் இருக்கின்றார். ( 1 2 : 7 6 )

    ஏற்கனவே எகிப்தை ஆட்சிசெய்த முஸ்லிமல்லாத அரசர் திருடனுக்கு அவராகவே ஒரு தண்டனையை நிர்ணயித்திருந்தார். அதனை அந்த அரசரது தீன் என்பதாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். முஸ்லிம்களின் கடமை அல்லாஹ்வின் தீனை மேலோங்கச் செய்வதாகும். முஸ்லிம்களில் ஒருவரான நபி யூஸுப் (அலை) அல்லாஹ்வின் தீனை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக அரசரின் தீனை நடைமுறைப்படுத்துவது யூஸுப் (அலை) அவர்களுக்கு ஆகுமானதல்ல. அதனையும் அல்லாஹ் இந்த வசனத்தில் கூறியுள்ளான்.

    எகிப்தை ஆட்சிசெய்த முஸ்லிமல்லாத அரசர் யூஸுப் (அலை) அவர்களுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்திருந்தார். இருந்தும்கூட யூஸுப் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் சட்டங்களுக்கு முரணான அந்த அரசரின் எந்தவொரு சட்டத்தையும் அமுல்படுத்தவில்லை. ஏனெனில் அல்லாஹ்வுக்கு முரணான சட்டங்களை செயல்படுத்துவது நிராகரிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.

    முஸ்லிமல்லாத அரசர் ஏற்படுத்திய சட்டத்தைப் புறக் கணிப்பதற்கு யூஸுப் (அலை) கையாண்ட வழிமுறை நபியாகிய யஃகூப் (அலை) திருடருக்கு என்ன தண்டனை வழங்குகின்றார் என்பதைத் தங்களது சகோதரர்கள் மூலம் அறிந்து செயல்படுத்தியதாகும். யூஸுப் (அலை) அவர்களுக்கு முன்னர் எகிப்தை ஆட்சி செய்த அரசர் செய்திருந்த அதே செயலைத்தான் இன்று ஜனநாயக அரசுகள் செய்துகொண்டிருக்கின்றன. அதாவது அல்லாஹ் இறக்கிய சட்டத்தை ஏற்றுச் செயல்படுத்துவதற்குப் பதிலாக தாமாகவே சட்டமியற்றும் ஒரு சபையைத் தோற்றுவிக்கின்றார்கள். அல்லாஹ்வின் தீனுக்கு எதிராக மற்றொரு தீனை உருவாக்கிய குற்றம் ஜனநாயகத்தை அங்கீகரிக்கும் ஒவ்வொருவர் மீதும் ஏற்படுகின்றது.

    வாக்குக் கேட்பவர்கள் தீனை உருவாக்குவதற்கு மக்களின் ஆணையைக் கேட்கின்றார்கள். அதாவது அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாமல் சுயமாக எந்தவொரு சட்டத்தையும் உருவாக்கும் அதிகாரத்தை மக்களிடம் கேட்கின்றார்கள். அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரிய சட்டமியற்றும் அதிகாரத்தை வாக்காளர்கள் வாக்களிப்பதன் மூலம் வாக்குக் கேட்பவர்களுக்கு வழங்குகின்றார்கள்.

    யூஸுப் (அலை) அவர்கள் ஆட்சிக்கு வரும்போது எகிப்தை ஆட்சி செய்துகொண்டிருந்த அரசர் எப்படி அல்லாஹ்வின் சட்டத்துக்கு முரணான சட்டத்தை உருவாக்கி ஒரு தீனை உருவாக்கியிருந்தாரோ அதேபோன்று இன்றைய ஜனநாயக அரசுகளும் திருடனின் கையை வெட்டுவதற்குப் பதிலாக வேறு தண்டனைகளை நிர்ணயித்து மாற்று தீனை உருவாக்கியுள்ளார்கள்.

    ஜனநாயக ஆட்சிமுறையில் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குரிமை என்பது அல்லாஹ்வுக்கு அடிபணிவதிலிருந்து விடுபட்டு, சுயமாக சட்டமியற்றும் ஒரு குழுவைத் தேர்வுசெய்யும் அதிகாரமாகும். மக்கள் தேர்வு செய்யும் அந்தக் குழுவில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் எதனைச் சொன்னாலும் அதுவே அவர்களது சட்டமாக அமையும். இவ்வாறு உருவாக்கப்படும் சட்டங்கள் அவர்களது தீன் என்பது அல்லாஹ்வின் தீர்ப்பாகும். எனவே வாக்களிப்பதன் மூலம் தங்களுக்கென தீனை உருவாக்கும் ஒரு குழுவை ஏற்படுத்திக் கொண்டவர்கள் எப்படி அல்லாஹ்வின் தீனை ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள்………………..?

    ஜனநாயக ஆட்சி முறையில் வாக்குக் கேட்கும் வேட்பாளர் களுக்கு வாக்களிப்பது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயல் என்பதாக நாம் ஏன் கூறுகின்றோம் என்பது இப்போது உங்களுக்குத் தெளிவாயிருக்கும் என நம்புகின்றோம். இந்தத் தெளிவு கிடைக்கப் பெற்ற பின்னர் எந்தவொரு முஸ்லிமும் சுயமாக சட்டமியற்றும் சபையைத் தேர்வு செய்யும் வாக்குப் பதிவை ஒதுபோதும் செய்ய மாட்டான். தெரிந்துகொண்டே எவராவது ஒரு முஸ்லிம் அதனைச் செய்தால் அவர் தவ்பாச் செய்யாத வரையில் அவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்த குற்றத்திலிருந்து விடுபடமுடியாது.

    உரிமைகளை வென்றெடுப்பதற்காக வாக்குரிமையைப் பயன்படுத்துவதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். வாக்குரிமையைப் பயன்படுத்துவதால் உலகில் இலாபங்கள் கிடைக்கின்றன என்பதில் எமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. உலக இலாப நஷ்டங்களின் அடிப்படையில் வாக்களிப்பது பற்றி இங்கு நாம் அலசவில்லை. மாறாக இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சுயமாக சட்டம் இயற்றும் ஒரு சபையை உருவாக்குவது ஆகுமானதா? அல்லது தவறானதா? என்பது பற்றியே இங்கு நாம் அலசுகின்றோம்.

    அனைத்திற்கும் முதலாக ஒவ்வொரு மனிதனும் அவனது இலட்சியத்தை சரியாகத் தீர்மானித்துக்கொள்வது அவசியமாகும். முஸ்லிம்களின் இலட்சியம் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்று, அதன்மூலம் சுவனத்தை அடைவதைத் தவிர வேறு ஒன்றாக இருக்க முடியாது. அதற்காக அவர்கள் செய்யவேண்டிய ஒரே விடயம் அல்லாஹ்வுக்கு எந்தவொன்றையும் இணையாக்காது அவனை மாத்திரம் அடிபணிவதாகும். ஜனநாயகம் என்பதும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகையால் அதனை விட்டும் தவிர்ந்து கொள்ளாத வரையில் இணைவைத்தலிலிருந்து முற்றாக விடுபட முடியாது. இதன் மூலம் உலக இலாபங்கள் கிடைக்காமல் போவது அல்லாஹ்வின் திருப்தியை நோக்காகக் கொண்டவர்களுக்கு பெரிதாக இருக்கப்பொவதில்லை. ஏனெனில் சுவனத்தின் விலை எமது உயிரும், எமது உடமைகளும் என்பதனை முஸ்லிம்கள் அறிந்தேயுள்ளனர். கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-

    உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டதுபோன்ற (சோதனைகள்) உங்களுக்கு வராதவரையில் (நீங்கள்) சுவனத்தில் நுழைந்துவிடலாம் எனத் தப்பாக நினைத்துக் கொண்டீர்களா? அவர்களை சோதனைகளும், தீங்குகளும் பீடித்தன. தூதரும் அவருடன் உள்ளவர்களும் ஷஷஅல்லாஹ்வின் உதவி எப்போது (வரும்)?|| எக் கேட்கும் வரை (அவர்கள்) ஆட்டுவிக்கப்பட்டார்கள். அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபமாகவே உள்ளது.
    ( 0 2 : 2 1 4 )

    கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
    நிச்சயமாக (நாம்) உங்களை ஓரளவு பயத்தாலும், பட்டினியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றில் குறைவைக் கொண்டும் சோதிப்போம். (நபியே! சோதனைகளின்போது) பொறுமையாக இருப்போருக்கு நன்மாராயம் கூறுவீராக!
    ( 0 2 : 1 5 5 )

    கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
    உங்களினின்றும் (அல்லாஹ்வுக்காகப்) போராடியவர்களையும், பொறுமையைக் கைக்கொள்பவர்களையும் அல்லாஹ் அறியாத வரையில் (நீங்கள்) சுவனம் நுழைந்துவிடலாம் எனத் தப்பாக எண்ணிவிட்டீர்களா?
    ( 0 3 : 1 4 2 )

    கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
    உங்களினின்றும் (அல்லாஹ்வுக்காகப்) போராடியவர்களையும், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விசுவாசிகளையும் தவிர (மற்றெவரையும்) நெருங்கிய நண்பர்களாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும் அல்லாஹ் அறிந்துகொள்ளாதவரையில் நீங்கள் விட்டுவிடப்படுவீர்கள் எனத் தப்பாக எண்ணிக் கொண்டீர்களா? (நீங்கள்) செய்பவற்றை அல்லாஹ் நன்கு அறிபவனாக உள்ளான்.
    ( 0 9 : 1 6 )

    ……………………………………………………………………………………………………………

    கேள்வி : 4 4
    இன்று உலகில் எத்தனையோ இஸ்லாமிய நாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் சஊதி அரேபியா முதன்மையானதாகும். ஆனால் இவற்றில் எந்தவொரு நாட்டையும் நீங்கள் இஸ்லாமிய நாடாக அங்கீகரிப்பதில்லை. இவை இஸ்லாமிய நாடுகள் அல்ல என நீங்கள் கூறுவதற்குரிய உண்மையான காரணம் என்ன?

    பதில் :
    இஸ்லாம் என்பது ஒரு கொள்கையாகும். அந்தக் கொள்கையை ஏற்றுப் பின்பற்றுகின்றவர்கள் முஸ்லிம்கள் எனப்படுவார்கள். இஸ்லாமிய வழிகாட்டலின் அடிப்படையில் முஸ்லிம்களால் நிர்வகிக்கப்படும் நாடு இஸ்லாமிய நாடு எனக் கூறப்படும். இஸ்லாமிய நாட்டின் மிக முக்கியமான அடையாளம் அங்கு அல்லாஹ்வின் சட்டங்களுக்கு முரணான எந்தவொரு சட்டத்தைக் கொண்டும் தீர்ப்பு வழங்கப்படமாட்டாது. ஒரே தலைமைத்துவத்தைக் கொண்ட ஒரே சமூகமாக அவர்கள் இருப்பார்கள்.

    அந்தத் தலைமைத்துவத்தை ஏற்காத எவரையும் அவர்கள் முஸ்லிம்களாக அங்கீகரிக்க மாட்டார்கள். அவர்களது சமூகத்தை அவர்கள் ஜமாஅதுல் முஸ்லிமீன் (முஸ்லிம்களின் கூட்டமைப்பு) என அடையாளப் படுத்துவர்கள். அந்தத் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பின்பற்ற முடியாமல் அந்நிய ஆட்சியின் கீழ் வாழ்வார்களானால் அவர்களைத் தங்களது நாட்டிற்கு வருமாறு அழைப்பார்கள். முழு மனித சமுதாயத்தையும் தங்களது ஒரே தலைமைத்துவத்தின் வருமாறு இஸ்லாமிய அழைப்பு விடுப்பார்கள்.

    இஸ்லாமிய ஆட்சியைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகத்தை மேலே தந்துள்ளோம். அதன் மூலம் இன்று இஸ்லாமிய நாடு எனக் கூறப்படுவதற்குத் தகுதியான எந்தவொரு நாடும் உலகில் இல்லை என்பதனை நீங்களே உணர்ந்துகொள்ள முடியும். ஸஊதி அரேபியா ஒரு இஸ்லாமிய நாடு எனப் பொதுவாக எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். விNஷடமாக ஸஊதி அரேபியாவின் நிதியை நம்பி வாழ்பவர்கள் அந்த நாட்டை இஸ்லாமிய நாடு என வாதாடுகின்றார்கள். இந்த வாதம் உண்மையானது என இவர்கள் உள்ளத்தால் நம்புவதானால் இவர்கள் நரவாதிகள் என்பதையும் இவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    உலகிலே ஒரு இஸ்லாமிய ஆட்சி இருக்கும்போது அதனை நோக்கி ஹிஜ்ரத் செய்யாமல் அந்நிய நாட்டில் பாவங்களை செய்துகொண்டு வாழுபவர்கள் நரகம் செல்வார்கள் என்பதை அல்குர்ஆன் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றது:-

    (இஸ்லாமிய ஆட்சி தோன்றிய பின் இஸ்லாத்தைப் பின்பற்ற முடியாத அந்நிய நாட்டில் வாழ்ந்து) தமக்குத் தாமே அநீதம் இழைத்துக்கொள்வோரில் எவர்களை வானவர்கள் மரணிக்கச் செய்கின்றார்களோ (அவர்களை நோக்கி) ‘எந்த (நிலையில்) இருந்தீர்கள்?” எனக் கேட்பார்கள். (அதற்கு) ‘பூமியில் (நாங்கள்) பலவீனமானவர்களாக இருந்தோம்.” எனக் கூறுவார்கள். (அப்போது) ‘அல்லாஹ்வின் பூமி : அதிலே (நீங்கள்) ஹிஜ்ரத் செய்யும் விதத்தில் விசாலமானதாக இருக்கவில்லையா?” என (வானவர்கள்) கேட்பார்கள். எனவே அவர்களது தங்குமிடம் நரகமேயாகும். செல்லுமிடங்களில் (அது மிகக்) கெட்டதாகும். ( 0 4 : 9 7 )

    மதீனாவிலே இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்டதன் பின்னரும் அந்நியரின் ஆட்சியின் கீழிருந்த மக்காவிலே பாவங்களைச் செய்து கொண்டு வாழ்ந்தவர்களைத்தான் அல்லாஹ் தமக்குத் தாமே அநீதம் இழைத்துக் கொண்டவர்கள் என்பதாகக் கூறுகின்றான். இதன் அடிப்படையில் ஸஊதி அரேபியாவை இஸ்லாமிய ஆட்சி என வாதிப்பவர்கள் அந்நிய நாட்டில் பாவங்களுக்கு மத்தியில் வாழுவதன் காரணமாகத் தங்களை நரகவாதிகள் என ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது உலகிலே இன்று எந்தவொரு இஸ்லாமிய ஆட்சியும் கிடையாது எனும் உண்மையை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    அந்நிய ஆட்சியிலே வசிக்கும் முஸ்லிம்களை தமது நாட்டிற்கு அழைக்கவேண்டிய ஸஊதி அரசாங்கம் மார்க்கக் கடமைகளைச் செய்வோரைக்கூட அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லைக்குப் பின்னர் மேலதிகமாக அங்கு தங்குவதற்கு அனுமதிப்பதில்லை.

    ரஸூலுழ்ழாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
    மதீனாவிலே மரணிப்பதற்கு யாருக்கு முடியுமோ (அவர்) அதிலே மரணிக்கட்டும். ஏனெனில் நிச்சயமாக நான் அதிலே மரணிப்பவருக்காக சிபாரிசு செய்வேன்.
    (இப்னு மாஜா, திர்மிதி கி.மனாகிப் ப.மதீனா – ஸஹீஹ்)

    எவரேனும் ஒருவர் இந்த ஹதீஸைக் கையிலே எடுத்துக் கொண்டு ஸஊதி அரேபியாவின் தூதரகங்களுக்குச் சென்று ஸஊதி அரேபியா செல்வதற்குத் தனக்கு அனுமதிக்குமாறு கேட்டுப்பாருங்கள். அப்போது ஸஊதி அரேபியாவில் இஸ்லாமிய ஆட்சி நடக்கின்றதா? அல்லது ஜாஹிலிய்ய ஆட்சி நடக்கின்றதா? என்பதை நீங்கள் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

    அந்நிய ஆட்சியில் வசிக்கும் நண்பரொருவர் உம்ராச் செய்வதற்கான அனுமதியைப் பெறுவதற்காக ஸஊதி அரேபியாவின் தூதரகத்தில் தனது கடவுச் சீட்டை ஒப்படைத்தார். உம்ராச் செய்வதற்குரிய அனுமதியை வழங்குவதற்குப் பதிலாக அவரது கடவுச் சீட்டையே திருப்பித்தர மறுத்த செய்தியை நேரடியாகக் காணக்கூடியதாக இருந்தது. அவரது கடவுச் சீட்டில் முஹம்மத் என்பது குறிக்கப்பட்டிருந்தாலும் “பௌத்த நாட்டில் வசிக்கும் நீயும் பௌத்தன்” என்பதே அவர்கள் கடவுச் சீட்டைத் திருப்பிக்கொடுக்க மறுத்ததற்குக் கூறிய காரணமாகும்.

    தீமைகளின் வாயிலான மதுபானம் சர்வசாதாரணமாக ஸஊதி அரேபியாவிலே கிடைக்கின்றது. சமூகத்தைக் குட்டிச் சுவராக்கும் விபச்சாரம் நினைத்துப்பார்க்க முடியாத அளவு தலைவிரித்தாடுகின்றது.ஆபாச சினிமாவிற்கு அங்கு எல்லையே கிடையாது. ஆபாசங் களையும் குற்றச்செயல்களையும் விதைக்கும் வலைப்பின்னலுக்கும் தொலைக்காட்சி ஒலிபரப்புகளுக்கும் அங்கு கதவு அகலத் திறந்து விடப்பட்டுள்ளது.

    அனைத்து அசிங்கங்களையும் அள்ளித்தரும் “டிஷ“ என்டனா” கட்டிடங்களின் கூரைகளில் இஸ்லாமிய ஆட்சியின் (?) இலட்சனத்தை பறைசாற்றிக்கொண்டிருக்கின்றது. அவர்களது அதிகாரத்துக்கு எதிராக செயல்படுவோரைக் கண்காணிப்பதற்காக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளில் பத்து சத வீதமாவது அல்லாஹ் வின் சட்டங்களை சீர்குலைப்போரைக் கண்காணிப்பதற்கு அங்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. வங்கிகளிலும், வியாபார நடவடிக் கைகளிலும் வட்டி சர்வசாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இஸ்லாமிய ஆட்சி நடக்கின்றது என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் ஸஊதி அரேபியாவின் உண்மை நிலையில் ஒரு சிறிதை உங்களுக்கு அறியத்தந்துள்ளோம்.

    கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
    நிச்சயமாக அல்லாஹ் தனக்கு உதவிசெய்வோருக்கு உதவி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் சக்திவாய்ந்தவனும், யாவரையும் மிகைத்தவனுமாவான். (அல்லாஹ்வுக்கு உதவி செய்யும்) அவர்களுக்கு (நாம்) பூமியில் அதிகாரத்தைக் கொடுத்தால் தொழுகையை நிலைநாட்டுவார்கள், ஸகாத்தையும் கொடுப்பார்கள், நன்மையை ஏவுவார்கள், தீமையைத் தடுப்பார்கள். அத்துடன் (சகல) காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கின்றது.
    ( 2 2 : 4 0, 4 1 )

    உலகில் எந்தவொரு நாடும் இஸ்லாமியத் தலைமைத் துவமாகவோ அல்லது இஸ்லாமியத் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட்டதாகவோ இல்லாதது உலகிலே இஸ்லாமிய ஆட்சி இல்லை என்பதற்குரிய தெளிவான ஆதாரங்களில் ஒன்றாகும். இஸ்லாமிய சட்டங்களைக் கொண்டு தீhப்பு வழங்காமல் அதனைப் புறக்கணித்திருப்பது அதற்குரிய இரண்டாவது ஆதாரமாகும்.

  2. risan says:

    இன்றைய முஸ்லிம்கள் ஷைத்தானுக்கு தாராளமாக இடம் கொடுத்து விட்டதால் ஷைத்தான் உலகை தனது பக்கம் இழுத்துக் கொண்டு தனது தோழர்கள் மூலம் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறான்.

Leave a comment