வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும்-காத்தான்குடி நகர சபை தலைவர் அஸ்பர்

வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். வாசிப்பு அவசியமாகும் வாசிப்பு ஒரு மனிதனை முன்னேற்றும். வாசிப்பின் மூலம் பல்வேறு வகையான அறிவையும் நாம் கற்றுக் கொள்கின்றோம்
காத்தான்குடியில் அடுத்த ஆண்டு கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய நூலகமொன்றை திறக்கவுள்ளோம என காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளின் இறுதி பரிசளிப்பு வைபவம் நேற்று காத்தான்குடி நகர சபையின் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே காத்தான்குடி நகர சபை தலைவர் அஸ்பர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். வாசிப்பு அவசியமாகும் வாசிப்பு ஒரு மனிதனை முன்னேற்றும். வாசிப்பின் மூலம் பல்வேறு வகையான அறிவையும் நாம் கற்றுக் கொள்கின்றோம்.

காத்தான்குடியில் இன்று ஒரு சிறிய நுலகமே உண்டு. நாங்கள் நூலகமொன்றை நிர்மானித்து வருகின்றோம்.
அடுத்த ஆண்டு இந்த நூலகத்தின் நிர்மானப்பணிகள் முடிவடைந்து விடும் இது கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய நூலகமாக திகழும். அடுத்த ஆண்டில் காத்தான்குடி நகர சபை பிரிவின் பல்வேறு பகுதிகளிலும் புதிய ஆறு சிறிய நூலகங்களை காத்தான்குடி நகர சபையினால் திறந்து வைக்கவுள்ளோம். இதற்கான மும்மொழிவுகள் 2015ம் ஆண்டின் காத்தான்குடி நகர சபை வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தற்போது காத்தான்குடி நகர சபை பிரிவில் நடமாடும் நூலக வாகனத்தின் மூலம் வீட்டிலிருக்கும் வீட்டுத்தலைவிகளும் பெண் பிள்ளைகளும் அதிகம் நன்மையடைந்து வருகின்றனர்.

நூலகத்திற்கு சென்று புத்தங்களை பெற்றுக் கொள்ள முடியாத வீட்டுத்தலைவிகள் மற்றும் பெண்கள் இந்த நடமாடும் நூலக வாகனத்தில் நூல்களை பெற்று வாசிப்பதுடன் தமக்கு தேவையான புத்தங்களையும் கேட்டுப் பெறுகின்றனர்.
இந்த நடமாடும் நூலக வாகனத்தில் இது வரைக்கும் 3500 அங்கத்தவர்கள் சேர்ந்துள்ளனர். இது வாசிப்பின் அதிகரிப்பை காட்டுகின்றது என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும் காத்தான்குடி நகர சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் தற்கால இளைஞர்கள் வாசிப்பில் ஆர்வம் காட்டுகின்றனர் அல்லது தற்கால இளைஞர்கள் வாசிப்பில் ஆர்வம் காட்டவில்லை எனும் தலைப்பில் பெரியவர்களுக்கான திறந்த விவாதப் போட்டியும் நடைபெற்றது.

SAM_2184 (1)SAM_2178 (1) SAM_2175 (1)

Leave a comment