முதியோர் இல்லம், சிறுவர் இல்லம் தொடர்பாக ஆராயும் கூட்டம்

 -எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்-

இலங்கையில் முஸ்லிம்களுக்கென்று ஒரே ஒரு முதியோர் இல்லம் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவருகின்ற முதியோர் இல்லமாகும். இங்கு காத்தான்குடியைச் சேர்ந்தவர்களும் ஏனைய வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுமாக 17முதியவர்கள் பராமரிக்கப்பட்டுவருகின்றனர். இலங்கையில் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு முன்மாதிரியாக காணப்படும் காத்தான்குடியில் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத இவ்வாரான முதியோர் இல்லம் ஒன்று இருப்பதை பலரும் சுட்டிக்காட்டிவருவதை அடுத்து இது தொடர்பாக சம்மேளனம் ஜம்இயத்துல் உலமாசபையுடன் கலந்துரையாடல் ஒன்றினை 2012.02.21 செவ்வாய்க்கிழமை நடாத்தியது.

சம்மேளன தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் சம்மேளன சபா மண்டபத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் ஜம்இயத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி ஏ.எம்.அலியார் பலாஹி உட்பட ஜம்இய்யா பிரதிநிதிகள், சம்மேளன அவசர குழு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இஸ்லாத்தில் தாய் தந்தை இல்லாத பிள்ளைகள், மனைவி பிள்ளைகள் உறவினர்கள் இல்லாத அனாதரவற்ற முதியவர்களை பராமரிக்க வேண்டியது சமூகத்தின் கடமை என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீர்மானங்கள் பல எடுக்கப்பட்டன.

வெளியூர்களில் இருந்து இங்கு தங்கியிருப்பவர்கள் தொடர்பாக விசேடமாக ஆராய்தல்.

பராமரிப்போருக்கான தன்மைகளை நிர்ணயித்தல்

பெயர் மாற்றம் செய்தல் தொடர்பாக ஆராய்தல், ஒருவருடத்திற்குள் இதன் தேவை அவசியமானதா என தீர்மானித்தல்.

இதற்காக மௌலவி எம்.எச்.எம்.புஹாரி பலாஹி, அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நளீமி, எம்.ஐ.உசனார், மௌலவி எம்.அப்துல் காதர் பலாஹி, அஷ்ஷெய்க் எம்.எச்.ஜிப்ரி மதனி ஆகியோர்களைக் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. இதே போன்று அனாதை இல்லம் தொடர்பாகவும் ஆரயப்பட்டது. இங்கு தாய் தந்தை இல்லாத சிறுவர்களும் தந்தை அல்லது தாயை மட்டும் இழந்த சிறுவர்கள் போன்ற பலதரப்பட்ட சிறுவர்கள் இங்கு காணப்படுவதால் அனாதை என்ற பெயரினைப் பயன்படுத்தி நிதிகளை பெற்று ஏனைய சிறுவர்களையும் அந்த நிதியில் பராமரிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. சிறுவர் இல்லம் என பெயர் மாற்றம் செய்து சிறுவர் இல்லமாக செயற்படுகின்ற போது நிதிகளை அங்குள்ள அனைத்து சிறுவர்களுக்கும் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இவ்விடயங்கள் தொடர்பாக இதன் இயக்குனர்களுடன் பேசுவது என தீர்மானிக்கப்பட்டது.


 

This slideshow requires JavaScript.

Comments

  1. உலமாக்களின் கவனத்துக்கு : அனாதை இல்லத்துக்கு மாதாந்தம் கிடைக்கும் வருமான கணக்குகளையும் மறவாமல் உங்கள் கவனத்துக்கு கொண்டுவரவும். ……………………………………………………………………………………………………………..அன்னதைகளின் உணவை உண்பவன் மறுமை நாளில் நெருப்பை வயற்றில் நீரப்புவர்களாக அல்லாஹ் திருக் குரானில் குறிஉள்ளான். அதனை பரிசோதிப்பது உலமாக்களின் கடமை அல்லவா?

Leave a comment