Advertisements

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக எம் ஐ எம் மன்சூர் தனது அமைச்சின் கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்..

பைஷல் இஸ்மாயில் –

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக நேற்று காலை நியமனம் பெற்ற கிழக்கு மாகாண சகாதார அமைச்சர் எம் ஐ எம் மன்சூர் தனது அமைச்சுப்பொறுப்புக்களை நேற்று காலை 10.00 மணியளவில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சுகாதார அமைச்சர் தனது கடமைபெற்பதற்காக அமைச்சுக்கு வருகை தந்தபோது அமைச்சின் உத்தியோகத்தர்கள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பளித்தனர். அதனைத்தொடர்ந்து அமைச்சர் தனது அமைச்சின் கடமைகளை உத்தியோக பூர்வமாக [Read more…]

கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்கள் உரை

பைஷல் இஸ்மாயில் –

 மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும் தாய் நாட்டை அபிவிருத்தி செய்வதற்குமான தனது முயற்சியில் அனைத்து சமூகங்களையும் குழுவினர்களையும் அரவணைத்து பங்குபெறச் செய்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதிலும் எல்லா அரசியல் கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதிலும் மிக திறமையாக புத்திசாதூரியமாக பல முன்னெடுப்புக்கள் முன்னெடுத்து வருகின்ற எமது நாட்டின் ஜனாதிபதியை வரவேற்பதற்கு கிடைத்த இச்சந்தர்ப்பத்தை நான் பெருமையாகக் கருதுகிறேன் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கடந்த 03.03.2015 செவ்வாய்க்கிழமை மாலை திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வில் [Read more…]

ஊடகவியலாளர்களுடன் ஐக்கிய அமெரிக்காவின் இலங்கை தூதுவர் ஆலயத்தின் சினேகபூர்வ சந்திப்பு

(பஹ்மி யூஸூப்)

ஐக்கிய அமெரிக்காவின் இலங்கை தூதுவர் ஆலயத்தின் கல்வி, கலசாரம் மற்றும் ஊடகம் விவகாரப்பணிப்பாளர் NICOLE CHULICK  க்கும் திருகோணமலை மாவட்ட ஊடகவியளாளர்க்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பு 04.03.2015 ஆம் திகதி Chaaya Blu Hotel  இல் இடம்பெற்றது இந்நிகழ்வில் தூதுவர் ஆலயத்தின் உதவி தொடர்பாடல் அதிகாரி Omar Rajarathnam  அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

DSC_0027 [Read more…]

சாய்ந்தமருதில் ஒஸ்டா அமைப்பின் கல்விக் கருத்தரங்கு

-எம்.வை.அமீர் –
மக்களும் பிரதேசமும் பயன்படும் வகையில் பல்வேறு செயற்திட்டன்களை செயற்படுத்தி வரும் சமூக அபிவிருத்திக்கும் உதவிக்குமான (OSDA) என்ற அமைப்பு 2015-02-22 ல் சாய்ந்தமருது இளைஞர் வளநிலையத்தில் தகவல் தொழில்நுட்பம் சம்மந்தமான கல்விக்கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

இதில் இப்பிராந்தியத்தில் பாடசாலைவிட்டு விலகிய மாணவ மாணவிகள் பங்கு கொண்டனர் நிகழ்வில் தகவல் தொழில்நுட்பம் சம்மந்தமான கற்பித்தலில் வளவாளராக ஏ.எம்.சஜீப் கலந்து கொண்டார்.

a

DSC_0001

25 வருட காலம் பேஷ் இமாமாக கடமையாற்றிய மௌலவி எம்.பீ.எம்.ஆதம்பாவா பலாஹியின் சேவை பாராட்டு நிகழ்வும் பிரியாவிடை வைபவமும்

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பெரிய மௌலானா பள்ளிவாயலில் கடந்த 25 வருட காலம் தொடர்ச்சியாக பேஷ் இமாமாக கடமையாற்றிய மௌலவி எம்.பீ.எம்.ஆதம்பாவா (பலாஹி) தனது பணியிலிருந்து ஒய்வு பெற்றுள்ள நிலையில் அவரின் சேவையை கௌரவித்து பெரிய மௌலானா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் சேவை பாராட்டு நிகழ்வும் பிரியாவிடை வைபவமும் 21-02-2015 நேற்று சனிக்கிழமை பெரிய மௌலானா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

பெரிய மௌலானா பள்ளிவாயலின் நிருவாக சபையின் செயலாளர் விரிவுரையாளர் எம்.எச்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும்,  காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி), காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் [Read more…]

தாய்சேய் சிகிச்சை நிலைய கட்டட வேலைக்கு தடங்கல் – மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்..

எம்.எம்.இர்பான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண்ணோடை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தாய்சேய் சிகிச்சை நிலையத்தின் கட்டிட வேலைகளை தொடரவிடாமல் சிலர் தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவ்வாரனவர்களை சட்டத்தின்முன் நிருத்துவதோடு எங்களது பிரதேசத்திற்காக தாய்சேய் நிலையத்தை அமைத்துத் தருமாரும் கோறி செம்மண்ணோடை மக்கள் இன்று (புதன்கிழமை) பகல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் ஐரோப்பிய யூனியனின் 45 லட்சம் ரூபா நிதியளிப்பில் யுனிசப் நிறுவனத்தின் நடைமுறையப்படுத்தலில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினதும் மேற்பார்வையில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது. [Read more…]

கானல்நீராய் கல்முனையின் அபிவிருத்தி??? அங்கலாய்க்கும் மக்கள்

-எம்.வை.அமீர் –

கல்முனைத்தாய் தனது கடந்தகால வரலாற்றில் பல்வேறுபட்ட தலைவர்களையும்இ சிறந்த அடைவுகளையும், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பேசும் அளவுக்குஇ முஸ்லிம்களின் தலைநகர், என்ற அந்தஸ்த்தையும் ஏன் பல்வேறுபட்ட அபிவிருத்திகளையும் கண்டாள்.

கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் முதல் எம்.சீ.அகமட், ஏ.ஆர்.எம்.மன்சூர், எம்.எச்.எம்.அஷ்ரப், எம்.எம்.முஸ்தபா (மையோன்) எச்.எம்.எம்.ஹரீஸ் வரை பாரளமன்ற உறுப்பினர்களையும் கல்முனைத்தாய் ஈன்றாள். அத்துடன் உயர் கல்வியாளர்கள்இ சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், விவசாயிகள்இ மீனவர்கள் என பல்வேறு தரப்பினரையும் தன்னகத்தே உள்ளடக்கினாள்.

கல்முனைத்தாய் பெற்ற மக்கள் ஒற்றுமைக்கு பெயர்போனவர்கள். அவர்களுக்குள் முரன்பட்டுக்கொன்டாலும் இறுதியில் ஒன்றுபட்டு விடுவார்கள். இதற்க்கு பல்வேறு [Read more…]

போராட்டத்திற்கெதிராக போராட்டம்…

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு- வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக இன்று 18.02.2015 பிற்பகல் இருவேறு தரப்பினர் ஏட்டிக்குப் போட்டியாக கறுப்புப் பட்டி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கருப்படும் ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிப்பதற்காக ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவேண்டுமென அரசாங்கத்தைக்கோரி ஒரு குழுவினர் துண்டுப்பிரசுரம் விநியோகித்தனர்.

[Read more…]

தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மை கட்சிகளுக்கு பாதகமாக அமையக்கூடாது – ஜனாதிபதி உறுதி என்கிறார் மனோ கணேசன்

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

இன்றைய தேர்தல் முறைக்கு சீர்திருத்தம் எப்போது கொண்டுவரப்பட்டாலும், அது ஒருபோmano29_11_2009_033_001_042தும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கும், சிறு கட்சிகளுக்கும் பாதகமாக அமைந்து விடக்கூடாது. தேர்தல் மூலம் தங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு மறுக்கப்படும் போதுதான் சட்டவிரோத வன்முறை சார்ந்த வழிமுறைகளை நாடும் நிலைமைக்கு சிறுபான்மை பிரிவினர் தள்ளப்படுகிறார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய நிறைவேற்று சபை கூட்டத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்ததாவது, [Read more…]

விடிவெள்ளி பத்திரிகை நாளை திங்கட்கிழமை முதல் தினசரி பத்திரிகையாக…

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

முஸ்?????????????????????????லிம் சமூகத்தின் முதன்மைக் குரல் என்று அழைக்கப்படும் உங்கள் அபிமான விடிவெள்ளி பத்திரிகை 16-02-2015 நாளை திங்கட்கிழமை முதல் தினசரி பத்திரிகையாக வெளிவருகின்றது.

மேற்படி பத்திரிகை திங்கள் முதல் வியாழன் வரை தினசரி விலை 15 ரூபாவுக்கும் வெள்ளிக்கிழமைகளில் வார இதழ் 30 ரூபாவுக்கும் உங்கள் பிரதேசத்திலுள்ள அனைத்து பத்திரிகை முகவர்களிடம் பெற முடியுமென விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம்.பைரூஸ் தெரிவித்தார்.

புதிய அரசின் அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றி கலாநிதி ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்…

– கலாநிதி ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் –

அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் அரசியல் யாப்பில் மிகவும் முக்கியமான மாற்றங்கள் இடம் பெறவுள்ளன. குறிப்பாக ஜனாதிபதிக்க் உள்ள நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தி தேசத்தின் தலைவராக ஜனாதிபதியும், பாராளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரித்து அரசின் தலைவராக பிரதமரும் இருக்கின்ற வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

அதேபோன்று தேர்தல், பொது சேவைகள், பொலிஸ், நீதித்துறை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு போன்ற துறைகள் சுயாதீனமான கமிஷன்களுக்கு கீழ் கொண்டு வரப்படவுள்ளன.

தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது, தற்பொழுது அமுலில் உள்ள விகிதாசார முறைக்குப் பதிலாக, பழைய தொகுதிவாரி முறையுடன் மாவட்ட மற்றும் [Read more…]

குடிநீர் இன்றி வாங்காமம் வாழ் மக்கள் படும் அவலநிலை!

படங்களும்-தகவலும் ரோஷான் ஏ.ஜிப்ரி

இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வாங்காமம் 10/ஏ,11/ஏ,எட்டாம் கட்டை, ஒன்பதாம் கட்டை போன்ற கிராமங்களில் வாழும் மக்கள் குடிநீர் வசதியற்று மிக மோசமான துயர நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது எந்த அரசியல்வாதிகளுக்கோ, அரச அலுவலக கள அதிகாரிகளுக்கோ தனியார் தொண்டு நிறுவனங்களுக்கோ புலப்படாமல் இருப்பது கவலையை தருகின்றது.

வானம் பொய்த்த மண்ணில் வாடும் மக்கள் அவலம்

வலது கை வாய்க்காலோ வரண்டு வெறிச்சோடிய வீதியாய், ஆளக் கிணறுகளும் கைவிட காண சகிக்கவொண்ண கண்ணீர் கதை அரங்கேறுகிறது உங்கள் அயல் கிராமத்தில். ஆகவே அறியுங்கள் அதிகாரிகளே, வாக்குகளுக்காக மட்டும் வந்து போகாமல் மனித வாழ்விலும் வந்து போங்கள் அரசியல் ஆளுமைகளே, ஆதரவு கொடுங்கள் தொண்டு நிறுவனங்களே.

குளக்கரை வாசலுடனும், குழாய்நீர் வசதியுடனும் வாழும் ஒவ்வொருவரும் சிந்தியுங்கள் வானத்தையும், வாய்க்காலையும் நம்பி வாழும் உங்கள் உறவுகளின் வாழ்க்கையை.

வருடத்தில் எப்போதாவது வந்து பொழியும் மழையைப் போல் “வவுஷர்” நீர் அனுப்பாமல் தினமும் காலை, மாலை இரு வேளையும் “வவுஷர்” குடிநீர் அனுப்ப ஆவனம் செய்யுங்கள் அத்துடன் பொருத்தியும்,பொருத்தாமலும் கைவிடப்பட்டிருக்கும் குழாய்நீர் திட்டத்தினை துரித கதியில் செயல் படுத்த ஆவனம் செய்யுங்கள். உபயோகத்திற்கு உப்பு நீர் கூட இல்லாமல் இருக்கும் மக்களுக்கு உதவ முன் வந்து வாய்க்காலில் நீர் திறக்க வழி செய்யுங்கள் என மிக தாழ்மையுடன் வேண்டிகொள்கிறேன்.

தாங்களின் மேலான பார்வைக்காய் நேரடி நிலை உணர்த்தும் புகைப்படங்கள்

image-a474918e02b9d6b1538a47bf89e8e2901b7fafdc6f125f1016e4b61547f13343-V image-afe712814536cd814ae1f75199f00934a66924dca012beea252bae7a4b21e86b-V image-d53613d85ce000a1ca3398e962d782687c3c00501b6c72f3dacb0ab1b1ffaa1d-V image-da4cbe799f03c1815fc438e433ce0deab120fc7c16a4c3ff578204987b31f839-V

புலிகளின் தடை நீக்கம் இலங்கை அரசின் திட்டமிட்ட சதி!

EU Courtஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் புலிகளுக்கு எதிராகத் தடை விதிக்கப்பட்டதற்கு கையளப்பட்ட வழிமுறைகள் தவறானவை என்பதால் அத் தடை செல்லுபடியாகாது எனத் தெரிவித்திருந்தது. இதன் காரணமாகப் புலிகளுக்கு எதிரான தடைக்கான காரணத்தை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முன்வைக்குமாறு ஐரோப்பியப் பாராளுமன்றைத்த நீதிமன்றம் கோரியுள்ளது.

புலிகள், பிரபாகரன், புலிகளின் அடையாளங்கள் என்பன இலங்கை அரசும் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்த் தலைவர்களும் இணைந்து வியாபாரத்தில் ஈடுபடுவதற்காகப் பயன்படுகிறது என்று 2009 ஆம் ஆண்டிலிருந்து இனியொரு எழுதிவந்துள்ளது.

புலிகளின் தடை நீக்க வழக்கில் எதிர்த்தரப்பான இலங்கை அரசிடமிருந்து எவ்வகையான வாதங்களும் முன்வைக்கப்படவில்லை. இலங்கை அரச தரப்பிலிருந்து வழக்கில் ஒருவரும் கலந்துகொள்ளவில்லை. தவிர வழக்கு நடைபெறுவதற்கு சில மாதங்களின் முன்னர் கே.பி தனது பிரதிநிதிகளை ஐரோப்ப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புலிகள் இருக்கும் வரை தான் ஆட்சியிலிருப்பேன் என புலிகளின் தடை நீக்கம் அறிவிக்கப்படுவதற்கு சரியாக ஒரு வாரத்தின் முன்பு மகிந்த ராஜபக்ச கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஆக, புலிகளைக் காரணம் காட்டி தொடர்ந்து ஆட்சியில் நிலைப்பதற்கான அரசியல் வெளியை மகிந்த ராஜபக்ச ஏற்படுத்திக்கொள்ள தடை நீக்கம் வழிசெய்கிறது.

இதனைத் தவிர புலம்பெயர் நாடுகளிலுள்ள புலிகளின் மில்லியன் கணக்கான சொத்துக்களைக் கையகப்படுத்தவும் தடை நீக்கம் சார்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் பருதி கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் சொத்து விவகாரம் பிரதான காரணமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரியளவிலான சொத்துக்களை பெற்றுக்கொள்ளக் கூடிய சட்ட ரீதியான உரிமை முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனுக்கு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே பல பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை கைப்பற்றிக்கொள்வதே அரசாங்கத்தின் முயற்சி எனவும், இதன் காரணமாகவே புலிகள் மீதான தடை நீக்கப்படுவதனை அரசாங்கம் தடுக்க முயற்சிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் குறித்த வழக்கு விசாரணைகளில் ஆஜராகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு எதிரான தடை முற்றாக நீக்கப்பட்டால் பெருமளவு பணமும் சொத்துக்களும் கிடைக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தடை நீக்கம் என்பது இலங்கை அரசு, புலம்பெயர் புலி வியாபாரிகள் போன்றோர் இணைந்த சதியே என்பது இப்போது துலங்கத் தொடங்கியுள்ளது.

(இனியொரு)

களனி பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய மாணவர்கள் சங்க ஒன்றுகூடல்

அஷ்ரப் ஏ சமத்-

களனிப் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம்பெற்று வெளியேறிய பழைய முஸ்லீம் மாணவர்களுடன்  இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் முஸ்லீம் மஜ்லிஸ் மாணவர்கள் நடாத்திய ஒன்றுகூடல் நிகழ்வு மருதானை அல்ஷாப் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

பழைய மற்றும் உள்ளக மாணவர்கள் அமைப்பை இணைத்து களனி பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய மாணவர்கள் சங்கம் ஒன்றை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந் நிகழ்வில் பழைய மாணவர்களான முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், என்.எம் அமீன், பேராசிரியர் நஜீத், சட்டத்தரணி முனீர், சட்டத்தரணி கண்டி புகாரி, மௌலவி அஷ்ஷேக்  அர்கம் ராபீத் ஆகியோருடன் 50 பழைய மாணவ மாணவிகளுடன், தற்பொழுது பல்கலைக்கழத்தில் கல்விகற்கும் 70 முஸ்லீம் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

இவ் அமைப்பு தற்போதைய களனி பல்கழைக்கழகத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு ஆலோசனை, புலமைப்பரிசில்திட்டம், தொழில்வாய்ப்பு முஸ்லீம் சமுத்திற்கான சமுக சேவைத் திட்டங்களை இந்த அமைப்பினுடாக செயல்படுத்தமுடியும்.

இதன்போது, தற்போதைய களனி பல்கலைக்கழகத்தின் முஸ்லீம் மாணவர் அமைப்பின் தலைவர்  ஹாசீப் மறைக்கார் உரைநிகழ்த்துகையில், சகல பல்கழைக்கழகத்திலும் இவ்வாறானொதுரு அமைப்பை ஏற்படுத்தி தேசிய ரீதியில் சகல பல்கலைக்கழக அமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்று தெரிவித்தார்.

SAMSUNG CSC SAMSUNG CSC SAMSUNG CSC SAMSUNG CSC SAMSUNG CSC

சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மாநாட்டை பகிஸ்கரிக்கின்றோம்

-முனையூரான்-

அப்துல் ஜவாத் ஆலிம் நம்பிக்கை பொறுப்பு அமைப்பின் அணுசரணையில் எதிர்வரும் 18.10.2014 சனிக்கிழமை நடாத்தவிருக்கும் “சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மாநாட்டை” அம்பாரை மாவட்ட அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத் உலமா சபை பகிஸ்கரிப்பதாக பகிரங்கமாக அறிவித்தல் ஒன்றை விடுப்பதாக அம்பாரை மாவட்ட அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் தலைவர் எஸ்.ஆர்.எம். கலீல் மௌலானா தெரிவித்தார்.

இது விடயமாக அவர் விடுத்துள்ள பகிரங்க அறிவித்தலில் மேலும் குறிப்பிடும்போது,

எம்மால் இந்த மாநாடு தொடர்பாக அறிவிக்கப்பட்டபோது அதில் எமது அம்பாரை மாவட்ட அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத் உலமா சபையும் கலந்து கொள்வதென்றால் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

அந்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படாததாலும், அதற்கான முடிவை உரிய நேரத்தில் அனுப்பத் தவறியதனாலுமே அம்மானாட்டில் எமது சபை கலந்துகொள்வதில்லை எனவும், அப்துல் ஜவாத் ஆலிம் நம்பிக்கை பொறுப்பு அமைப்பிற்கும் எமது அம்பாரை மாவட்ட அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத் உலமா சபைக்கும் எவ்வித தொடர்புமில்லை. என்பதை ஸூன்னத் வல் ஜமாஅத் உலமாக்களுக்கும் ஏனைய நல்லுள்ளம் படைத்த பொதுமக்களுக்கும் அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தேசிய ஷூறா சபையின் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்

-தேசிய ஷூறா சபை தலைவர் தாரிக் மஹ்மூத் அவர்களின் தலைமையில் 2014 ஆகஸ்ட் 17 அன்று நடைபெற்ற அதன் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

தேசிய மட்டத்திலாக முஸ்லிம் அமைப்புக்கள், துறை சார் நிபுணர்கள், கல்விமான்கள் மற்றும் சமூக ஆர்வளர்களை உள்ளடக்கிய ஒரு ஆலோசனை சபையாகிய தேசிய ஷூறா சபையின் 2014 ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில், பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல் காரணமாகப் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு ஒரு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியமைக்காக அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவித்து அதனை வரவேற்கும் வகையிலான ஒரு தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது. [Read more…]

கரிமலையூற்று பள்ளியை 2 வார காலத்திற்குள் புனரமைக்க இராணுவம் உறுதி: நஜீப் ஏ. மஜீத்

திருகோணமலை வெள்ளைமணல் கரிமலையூற்று பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதி லால் பெரேராவை சந்தித்து தான் முக்கிய பேச்சுவார்த்தை  நடாத்தியுள்ளதாகவும் இந்தப் பள்ளியை இரண்டு வார காலத்திற்குள் புனரமைத்து தருவதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீம் ஏ. மஜீத் தெரிவித்துள்ளார்.

கரிமலையூற்று பள்ளிவாயல் இராணுவத்தினரால் உடைக்கப்பட்டது தொடர்பாக அறிந்தவுடன் இதன் உண்மை நிலையை அறிவதற்காக அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள இப்பள்ளிவாசல் பிரதேசத்திற்கு உடனடியாக விஜயம் செய்து  பள்ளியைப் பார்வையிட்டு உண்மை நிலையை அறிந்த பின்னர் கிழக்கு மாகாண இராணுவத் தளபதி திருமலை மாவட்டத்திற்கு பொறுப்பான இராணுவத்தளபதி மற்றும் கரிமலை ஊற்று முகாமுக்கு பொறுப்பான இராணுவத் தளபதி ஆகியோர்களை அவரது உத்தியோக பூர்வ வாசஸ்தளத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளதுடன் முஸ்லிம்களின் மனநிலை குறித்து 400 வருடங்கள் பழமை வாய்ந்த பள்ளியின் வரலாறு குறித்தும் படை உயர் அதிகாரிகளுக்கு தெரிவுபடுத்தியதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

[Read more…]

ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு உருவாகின்றது

anjuvadhum-எஸ்.அஷ்ரப்கான்-

இலங்கை தவ்ஹீத்வாதிகளின் ஒற்றுமையை பலப்படுத்தி அதனூடாக தவ்ஹீதுக்கெதிரான சவால்களை முறியடிக்கும் வகையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு எனும் அமைப்பு உருவாகவுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) கல்முனையில் இவ்வமைப்புக்கான அங்குரார்ப்பண வைபவம் நடைபெறவுள்ளது. தவ்ஹீத்வாதிகள் மத்தியில் சமீப காலமாக ஏற்பட்டிருக்கும் கருத்து முரண்பாடுகள் காரணமாக அவர்கள் மத்தியில் எழுந்துள்ள மனக்கிலேசங்களை நீக்குமுகாமாக தவ்ஹீத் வாதிகளின் ஒற்றுமையூடாக பலம் பெறல் எனும் நோக்கத்தில் இவ்வமைப்பு செயற்படவுள்ளது.

[Read more…]

குளத்தில் நீர் வற்றியதால் ஊருக்குள் நுளைந்த முதலை!

Photo1589 (1)-வெருகல் சிவா-

கிழக்கில் தற்போது கடும் வரட்சி நிலவுவதால் நீர் நிலைகளும் சிறு குளங்களும் வற்றி வரண்டு வருகின்றன. இந்நிலையில் வெருகல் பிரதேசத்திலுள்ள சின்னக்குளம் வற்றிவருகின்ற நிலையில் அங்கிருந்த 10 அடி நீளமான முதலையொன்று குளத்திலிருந்து வெளிக்கிளம்பி அருகிலுள்ள விநாயகபுரம் ஊருக்குள் புகுந்துள்ளது.

கிராமப் பெண்ணொருவரின் வீட்டுக்குள் முதலை புகுந்ததும் அவர் அலறியடித்துக் கொண்டு கூக்குரலிடவே ஊரவர்கள் திரண்டு வந்து முதலையைக் கட்டிப் போட்டுள்ளனர்.

[Read more…]

ஒமான் தூதுவர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

DSC_0016யுத்தத்தின் பின்னர் விரைவாக அபிவிருத்தியடைந்து வரும் இலங்கையில் பயனுள்ள வர்த்தக மற்றும் தொழில் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தம்மைச் சந்தித்த ஒமான் நாட்டின் தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கையில் புதிதாக நேரடி இராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒமான் நாட்டிற்கான தூதுவர் அல்ஷெய்க் ஜூமாஹ் ஹம்தான் ஹஸன் அல் ஷெஹ்ஹி, நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை திங்கள் கிழமை (31) முற்பகல் நீதியமைச்சில் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பில் உரையாடிய போது இவ்வாறான பல விடயங்கள் பற்றி கருத்துப் பறிமாற்றம் இடம்பெற்றது.

[Read more…]

யுவதிகளை கேலி செய்த இருவருக்கு கிடைத்த வித்தியாசமான தண்டனை

ladies-walkingஅபூஹக்

வெயிலில்  சென்று கொண்டிருந்த இரு யுவதிகளை கேலி செய்த நடைபாதை வியாபாரிகளுக்கு அந்த யுவதிகள் இருவருக்கும் குடை வாங்கிக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டமை தொடர்பான தகவலொன்று மாத்தறை நகரில் பதிவாகியுள்ளது.

நகைச்சுவை உணர்வுடைய நடுத்தர வயதைத் தாண்டியிருந்த இரு வியாபாரிகளும் நடைபாதையில் ஆடை விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது முன்னால் நடந்து சென்றுகொண்டிருந்த இரு  யுவதிகள் மீது இவர்களது கவனம் திரும்பியது.

[Read more…]

யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்று நுால் புத்தளத்தில் வெளியீடு

DSC03148-புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா –

இலங்கையின்  வரலாற்றில் யாழ்ப்பாணம் என்பது காலச்சுவடுகளால் அழிக்க முடியாததொன்றாகும். இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பீட்டு அளவில் நோக்குகையில் யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் சிறப்பபான பணி ஏனையவர்களுக்கு எடுத்துக்காட்டுவனவாக அமைந்திருப்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும். இப்படிப்பட்ட மண்ணின் வாசனைகளை இக்காலத்து மக்களும் அறிந்து கொள்ள எடுக்கப்பட்ட ஒரு முயற்சியின் வெளிப்பாடு தான் தற்போது வெளிவந்துள்ள முஹம்மத் சரீப் முஹம்மத் ஜான்ஸின் தொகுத்துள்ள ‘மணிபல்லவத்தார் சுவடுகள்’ என்னும் வரலாற்று நுாலாகும்.

ஒரு சமூகம் தமது இறந்த காலத்தை மறந்து நிகழ்காலத்தில் நின்று கொண்டு எதிர்காலம் பற்றி கனவு காண்பது என்பது வெறும் கானல் நீராகத்தான இருக்கும் என்பதை பல அறிஞர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துரைத்துள்ளனர். இறந்த கால வரலாற்றினை மீட்டிப்பாரப்பதன் மூலம் எம்மில் எத்தனையோ புதிய சிந்தனைகளும்,ஆற்றல்களும் ஏற்படும்,அதனை வைத்து எதிர்கால சமூகத்திற்கு சிறந்ததொரு அடித்தளத்தை இட முடியும். ஒரு சமூகத்தின் வரலாறு பேசப்படுமெனில் அப்போது தான் அதன் மகத்துவமும், மகிமையும் ஒளி வீசும். இந்த வகையில் இந்த ஆக்கம் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு முன்மாதிரிமிக்கதாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஒவ்வொரு முஸ்லிம் பாடசாலைகளின் நுாலகத்தில் இந்த தொகுப்பு இருக்குமெனில் அது கற்றலுடன் தொடர்புபட்ட மாணாக்கருக்கும், ஆசிரியர்களும் ஒரு பொக்கிஷமாகவே விளங்கும். [Read more…]