Advertisements

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக எம் ஐ எம் மன்சூர் தனது அமைச்சின் கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்..

பைஷல் இஸ்மாயில் –

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக நேற்று காலை நியமனம் பெற்ற கிழக்கு மாகாண சகாதார அமைச்சர் எம் ஐ எம் மன்சூர் தனது அமைச்சுப்பொறுப்புக்களை நேற்று காலை 10.00 மணியளவில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சுகாதார அமைச்சர் தனது கடமைபெற்பதற்காக அமைச்சுக்கு வருகை தந்தபோது அமைச்சின் உத்தியோகத்தர்கள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பளித்தனர். அதனைத்தொடர்ந்து அமைச்சர் தனது அமைச்சின் கடமைகளை உத்தியோக பூர்வமாக [Read more…]

கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்கள் உரை

பைஷல் இஸ்மாயில் –

 மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும் தாய் நாட்டை அபிவிருத்தி செய்வதற்குமான தனது முயற்சியில் அனைத்து சமூகங்களையும் குழுவினர்களையும் அரவணைத்து பங்குபெறச் செய்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதிலும் எல்லா அரசியல் கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதிலும் மிக திறமையாக புத்திசாதூரியமாக பல முன்னெடுப்புக்கள் முன்னெடுத்து வருகின்ற எமது நாட்டின் ஜனாதிபதியை வரவேற்பதற்கு கிடைத்த இச்சந்தர்ப்பத்தை நான் பெருமையாகக் கருதுகிறேன் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கடந்த 03.03.2015 செவ்வாய்க்கிழமை மாலை திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வில் [Read more…]

சாய்ந்தமருதில் ஒஸ்டா அமைப்பின் கல்விக் கருத்தரங்கு

-எம்.வை.அமீர் –
மக்களும் பிரதேசமும் பயன்படும் வகையில் பல்வேறு செயற்திட்டன்களை செயற்படுத்தி வரும் சமூக அபிவிருத்திக்கும் உதவிக்குமான (OSDA) என்ற அமைப்பு 2015-02-22 ல் சாய்ந்தமருது இளைஞர் வளநிலையத்தில் தகவல் தொழில்நுட்பம் சம்மந்தமான கல்விக்கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

இதில் இப்பிராந்தியத்தில் பாடசாலைவிட்டு விலகிய மாணவ மாணவிகள் பங்கு கொண்டனர் நிகழ்வில் தகவல் தொழில்நுட்பம் சம்மந்தமான கற்பித்தலில் வளவாளராக ஏ.எம்.சஜீப் கலந்து கொண்டார்.

a

DSC_0001

துருவம் ஊடக வலையமைப்பு நடாத்தும் இலவச ஊடக செயலமர்வு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

துருவம் ஊடக வலையமைப்பு இரண்டாவது தடவையாக கிழக்கு மாகாணத்தில் ஊடக செயலமர்வு ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. ‘ஊடகங்கள் வாயிலாக இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்’ எனும் தலைப்பில் இச்செயலமர்வு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளது. இது முற்றிலும் இலவசமானது.

இந்த ஊடக செயலமர்வில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர்கள்இ சமூக வலைத்தளங்களில் ஆர்வமுள்ளவர்கள், செய்தி இணையத்தளங்களை நடாத்துவோர், டுவிட்டர் சேவைகளை நடாத்துவோர் மற்றும் ஊடகத்துறையில் ஆவர்வமுள்ள மாணவஇ மாணவிகளும் கலந்துகொள்ள முடியும். இச்செயலமர்வில் ஆண்கள்இ பெண்கள் என இருபாலாரும் கலந்துகொள்ள முடியும். [Read more…]

ஏறாவூரில் காணாமற்போன வாலிபர் சடலமாக மீட்பு

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமற்போனதாகக் கருதப்படும் வாலிபர் ஒருவரது சடலம் மட்டக்களப்பு-செங்கலடி கறுத்தப்பாலத்தின் கீழ் கிடந்து இன்று 18.02.2015 புதன்கிழமை காலை மீட்கப்பஏறாவுட்டதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

உருக்குலைந்து துர்வாடை வீசிய நிலையில் காணப்பட்ட இச்சடலம் மட்டக்களப்பு-கொம்மாதுறை உமா மில் வீதியைச்சேர்ந்த 27 வயதுடைய சுந்தரம் மகேந்திர ராஜா என்பவருடையதென்றும் [Read more…]

சாய்ந்த-மருதை நிமிர்த்த ஹிருணிகா களத்தில்…

எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன் –

கடந்த ஜனாதிபத்தி தேர்தல் காலத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்காக அம்பாறை மாவட்டத்துக்கு பல்வேறுசந்தர்ப்பங்களில் வருகைதரவிருந்த மேல்மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்கள், இன்று அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளுக்கு 2015-02-08 ல் வருகைதந்திருந்தார். [Read more…]

கிழக்கு மாகாண சபையில் பிள்ளையானுக்கு அமைச்சிப் பதவி

கிழக்கு மாகாண விவசாய அமைச்சராக முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) நியமிக்கப்படுவார் என்று அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, பிள்ளையான் மற்றும் அவருடன் புதிதாக இணைந்துள்ள இனியபாரதி ஆகியோருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை பேச்சு நடத்தினர்.

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழர் ஒருவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கி நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பிள்ளையானுக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்க அரசுத்தரப்பு முன்வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

கிழக்கு மாகாண சபையின் ஆட்சி தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமா..

அஸ்லம் எஸ்.மௌலானா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பக்க பலத்துடன் கோலோச்சுகின்ற கிழக்கு மாகாண சபையின் ஆட்சி தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமா என்பதை கட்சியின் உயர்பீடம் அவசரமாகக் கூடி தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவரும் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

[Read more…]

சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் வாரம்

பி.எம்.எம்.ஏ.காதர்)

சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் வாரத்தையொட்டி கிழக்கு மாகாண சுகாதார சமூக சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த மூன்று இனங்களையும் ஒன்றிணைத்த இனநல்லுறவுக்கான ‘சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும், கலாச்சார நிகழ்வுகளும்’; இன்று (11-10-2014) காலை 9.00 மணி தொடக்கம் பி.ப. 3.00 மணிவரை மருதமுனையில் அமைந்துள்ள கல்முனை பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலையத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் எம்.பி.சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கலந்து கொண்டார்;.

கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.தவம், ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோரும், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.கருனாகரன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் கே.விமலநாதன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், பொத்துவில் பிரதேச செயலாளர் என்.என்.எம்.முஸ்ஸர்ரட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இருபது பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம், தமிழ், சிங்கள்; சிரேஷ்ட பிரஜைகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட முஸ்லீம், தமிழ், சிங்கள்; சிரேஷ்ட பிரஜைகளின் நடனம், நாடகம், பாட்டு, கவிதை, மற்றும் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்சிகளும் அரங்கேற்றப்பட்டன.

இருபது பிதேச செயலகப் பிரிவுகளில் இருந்தும் இருபது சிரேஷ்ட பிரஜைகள் தெரிவு செய்யப்பட்டு பிரதமஅதிதி, கௌரவ, விசேஷட, அதிதிகளால்; நினைவுச் சின்னம், சான்றிதழ் மற்றும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் மேலும் அம்பாறை மாவட்டதில் சிறப்பாக இயங்கும் இருபது சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்திற்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்;பட்டன

நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து சிரேஷ்ட பிரஜைகளுக்கும் பரிசுகளும்; சிற்றூண்;டி மற்றும் மதிய போசனமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலேயே முதல் முறையாக இந்த நிகழ்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சினாஸ் தமிழிலும், யூ.எல்.எம்.பைசர் சிங்களத்திலும் நிகழ்சிகளைத் தொகுத்து வழங்கினார்கள். மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களும, அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

29 5 16

வரட்சியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு விதை நெல் நிவாரணம்

ஹாசிப் யாஸீன்

அம்பாறை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நிவாரணமாக விதை நெல் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

காரைதீவூ பிரதேச செயலகத்துக்குட்பட்ட விவசாயப் பிரதிநிதிகளை அமைச்சர் தலைமையிலான குழுவினர் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.

தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சர் கலாநிதி சரத் வீரசேகரவின் இணைப்பாளர் ஏ.எம். ஜாஹிரின் அழைப்பின் பேரில் வருகைதந்த விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன மாளிகைக்காடு அல்ஹூசைன் வித்தியாலயத்தில் விவசாயப் பிரதிநிதிகளைச் சந்தித்து விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார்.

???????????????????????????????இதன்போது விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளால் விவசாயிகளின் குறைபாடுகள் பற்றி அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது.

வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பெரும்போக நெற் செய்கைக்காக விதை நெல் நிவாரணமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தபோது ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் விவசாயிகள் நன்றியை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டவுள்யூ.டீ.வீரசிங்க உள்ளிட்ட அமைச்சு அதிகாரிகளும், விவசாய மற்றும் கமநலத் திணக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சா் உள்ளிட்ட குழுவினா் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டி வைத்தனர்.

காரைதீவு விபுலானந்த சதுக்கத்தில் பள்ளிவாசலா?

Dr Arifடாக்டர் என். ஆரிப்

காரைதீவு விபுலானந்த சதுக்கத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு பொதுபல சேனா உதவ வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா இந்து சம்மேளனத்தின் தலைவர் என். அருண்காந்த் சுகததாச உள்ளக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை(28) இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் தேசிய மாநாட்டில் உரையாற்றுகையில் தெரிவித்ததாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது.

குறித்த பிரச்சினை என்னவென்று தெரியாமல், அதன் வரலாறு தெரியாமல், முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போடுவது போல அருண்காந்த் உரையாற்றியிருக்கிறார்.

சம்பந்தப்பட்ட  இடத்திலே அண்மைக்காலம் வரை ஸியாரமும், பள்ளிவாசலும் அமைந்திருந்தது என்ற உண்மை தெரியாதவராக அல்லது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சித்திருக்கிறார்.

அங்கிருந்த ஸியாரமும், பள்ளிவாசலும் கடந்த காலத்தில் நிலவிய பயங்கரவாதப் பிரச்சினையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சில பிற்போக்கு எண்ணம் கொண்ட விசமிகளால் அழிக்கப்பட்டது என்பதை காரைதீவு தமிழ் சகோதரர்களே சாட்சி கூறுவார்கள்.

இதற்குப் பிரதானமான ஆதாரம் தான் வயதானாலும் ஞாபகசக்தியில் தொய்வில்லாத நடுநிலையான முற்போக்கு சிந்தனையுள்ள காரைதீவு தமிழ் சகோதர பெரியார்கள். அவர்களிடம் கேட்டுப்பார்த்தாலே போதும். குறித்த காணியில் ஸியாரத்துடனான பள்ளிவாசலும் கடைகளும் இருந்தன என்பதையும், அவ்விடத்தில் தமது நேரத்தை எவ்வாறு கழித்தார்கள் என்ற தமது பசுமையான நினைவுகளையும் தமது மனங்களில் வஞ்சகமில்லாதவர்களாக கொட்டித் தீர்ப்பார்கள். ஆனாலும், இந்த உண்மைகளைச் சொல்வதற்கு தீவிரப்போக்குடைய பிற்போக்கு சிந்தனையுடைய சில அதிகாரமிக்கவர்கள் விடுவார்களா என்பது சந்தேகம் தான்.

மேலும், காரைதீவு முச்சந்தி தைக்காப்பள்ளி சில விசமிகளால் தாக்கப்பட்டமை தொடர்பாக 01.10.1983ல் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர், சாய்ந்தமருது ஜூம்மாப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் மாவடிப்பள்ளி, நிந்தவூர், சம்மாந்துறை பள்ளிவாசல்கள் நம்பிக்கையாளர் சபையினரும், தமிழ் தரப்பில் காரைதீவு கோவில் தர்மகர்த்தாக்களும், ஊர்ப்பிரமுகர்களும் கலந்து பேசிய விடயம் சம்பந்தமாக 12.04.1984ம் திகதி தினகரன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியில், காரைதீவு கிராமசபை முன்னாள் தலைவரும், அம்பாறை மாவட்ட முன்னாள் அபிவிருத்தி சபை உறுப்பினருமான திரு. இ. விநாயகமூர்த்தி மற்றும் முன்னாள் காரைதீவு கிராமசபைத் தலைவரும் வைத்தியக்கலாநிதியுமான திரு. எம். பரசுராமன் ஆகிய இருவரும் பேசிய உரையின் தொகுப்பு வருமாறு.

‘பக்கீர்ச் சேனைத் தைக்கா மற்றும் காரைதீவு முச்சந்தித் தைக்கா ஆகிய இரண்டும் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலால் பல நூறு வருடங்களாக நிருவகிக்கப்பட்டு வந்துள்ளதாகவும், அத்தைக்காக்களில் நடைபெற்ற விழாக்களில் தாங்களும் கலந்துகொண்டதாகவும, சாய்ந்தமருது மற்றும் காரைதீவு மக்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததாகவும் எடுத்துக்கூறி குறித்த தைக்காப்பள்ளிகளை திரும்பக் கட்டிக்கொள்ள சாய்ந்தமருது பள்ளி நிருவாகத்துக்கு எந்தவித தடையும் இல்லை எனவும், மேலும் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க எங்களால் இயன்ற ஒத்துழைப்பைத் தருவோம்’ எனவும் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, காரைதீவைச் சேர்ந்த தமிழ் சகோதரர்களே குறித்த காணி சம்பந்தமான உண்மைத்தன்மையை தங்களது நூலிலேயே அண்மையில்  எழுத்துருவிலே கொணர்ந்துள்ளதையும் யாரால் தான் மறுதலித்திட முடியும்.

காரைதீவு பிரதேச செயலகத்தின் பிரதேச கலாசார பேரவையினால் 20.08.2009ம் திகதி நடைபெற்ற காரைதீவு பிரதேச கலாசார விழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்ட ‘காரணீகம்’ எனும் சிறப்ப மலரில் மேற்படி ஸியாரம் சம்பந்தமாக தமிழ் சகோதரர்களால் எழுதப்பட்டுள்ள சில விடயங்கள் வருமாறு:

காரைதீவு ஆலயங்களின் வரலாறு எனும் தொடரில் இந்த மலரின் 192ம் பக்கத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது;

‘ …….1830.10.18ம் திகதிய உறுதிப்படி சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான காரைதீவு முச்சந்தி உள்ள காணியில் இச்சியாரம்  இருந்தது. இங்கு ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து வந்த மெஹர்பான் அலிசா கலீபா கலாபத் வலியுல்லாஹ் அவர்கள் குடிசையமைத்து வாழ்ந்து வந்துள்ளார்கள். இவர் மரணமானபின் இவரின் ஜனாஸா இவ்வளவில் அடக்கம் செய்யப்பட்டு ஸியாரமும் அமைக்கப்பட்டது. இதனைப் பராமரிக்க பக்கீர்மார்கள் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலினால் நியமிக்கப்பட்டனர். தற்போது  இக்கட்டிடங்கள் யாவும் அழிந்து சில தென்னமரங்கள் மட்டும் காணப்படுகின்றன’.

மேலும் அந்த சிறப்பு மலரில்,

‘காரைதீவின் விவசாயப் பாரம்பரியம்’ எனும் தலைப்பிலான தனது கட்டுரையில், விவசாயப் போதனாசிரியரான இரா. விஜயராகவன் என்பவர் 103ம் பக்கத்தில் ‘அக்காலப்பகுதியிலே இவ்வாறு வண்டில் மாட்டின் மூலம் நெல்லை ஏற்றிவரும் போது தங்கி தேனீர் அருந்த காரைதீவு தைக்கா சந்தியிலே ஒரு பிரபலமான தேனீர்சாலையும் இருந்துள்ளது மூத்த விவசாயிகளின் ஞாபகத்தில் உள்ளது’ என்று எழுதியுள்ளார்.

இத்தகைய வலுவான ஆதாரங்கள் இருக்கின்ற போது, ஏதோ அந்த இடத்தில் புதிதாக பள்ளிவாசலொன்றை முஸ்லிம்கள் அமைக்க முனைகின்றார்கள் என்று ஆதாரமற்ற உண்மைக்குப் புறம்பான விடயத்தை அருண்காந்த் சொல்லியிருப்பதன் மர்மம தான் என்னவோ.

மேலும், அந்த இடத்தில் ஸியாரமும் பள்ளிவாசலும் இருந்தன என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கின்ற போதிலும், இதுவரை சாய்ந்தமருது ஜூம்மாப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரோ அல்லது வேறு எந்த முஸ்லிம் தரப்பினரோ குறித்த இடத்தில் பள்ளிவாசலை மீள அமைக்கப்போகிறோம் என்று எந்த சந்தர்ப்பத்திலும் தெரிவித்ததாக ஆதாரங்கள் எதுவுமில்லை. ஆகவே, அருண்காந்த் அவர்கள் எந்தத் தகவல்களின் அடிப்படையில் தமிழ், முஸ்லிம் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தக்கூடியவாறான கருத்துக்களைத் தெரிவித்தார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

பிரச்சினையைத் திசை திருப்பும் நோக்கில் கற்பனையான கதைகளை அவிழ்த்து விட்டு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற இப்பகுதி தமிழ், முஸ்லிம் மக்களிடையே குழப்பத்தையும், பிரச்சினையையும் உண்டுபண்ணி அதில் குளிர்காய நினைக்கிறார்கள் என்பதை இரண்டு சமூகமும் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடல்

wink_media_logo_design_by_jurgasan-d6h6bz6 (1)ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணம் தழுவியதான முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடல் ஒன்றினை காத்தான்குடி மீடியா போரம் நடாத்தவுள்ளதாக மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் தெரிவித்தார்.

மூன்றுதசாப்த கால யுத்தத்தின் பின்னர் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஓரே இடத்தில் ஓன்று சேர்வதோடு மூத்த ஊடகவியலாளர்கள் இளம் ஊடகவியலாளர்களுக்கு தமதுகடந்தகால ஊடகத்துறை தொடர்பான அனுபவங்களை இதன்போது பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

[Read more…]

நாவற்கேணிசேனை முஸ்லிம்களை வெளியேறுமாறு சேருவில DS கோரல்

திருகோணமலை சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் கிராம அதிகாரி பிரிவின் நாவற்கேணி சேனை கிராமத்தில் வசிக்கும் 35 முஸ்லிம் குடும்பங்களை அவர் களது சொந்த குடியிருப்பு மற்றும் பயிர்ச்செய்கை காணிகளை விட்டு அடுத்த மாதம் (ஒகஸ்ட்) 30 ஆம் திகதிக்கு முன் தமது குடும்பத் தினரோடு வெளியேறுமாறு சேரவில பிரதேச செயலாளரினால் கடிதம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

[Read more…]

ஞானசார தேரர் புனித குர் ஆனைப் பற்றி கூற அருகதையற்றவர் – மாகாண சபை உறுப்பினர் சிப்லி பறூக் சபையில் குர் ஆனைக்காட்டி உரை

IMG-20131119-00293பௌத்த மத போதனைகளை விளங்கத்தெரியாத பொதுபல சேனாவின் செயலளார் ஞானசார தேரர் புனித குர் ஆனைப் பற்றி கூற அருகதையற்றவர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.இன்று(15.7.2014)செவ்வாயக்கிழமை கிழக்கு மாகாண சபையின் அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

[Read more…]

மு.கா. வெட்டித்தனமாக அறிக்கை விடுவதைத் தவிர மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை – அமைச்சர் றிசாத்

rishard badurdeen-அஸ்ரப் ஏ சமத்-

இலங்கை முஸ்லிம் சமுகத்தின் கட்சியும் தேசியத் தலைவரும் அ. இ. ம. காங்கிரஸூம் அதன் தலைவர் றிசாத் பதியுதீனுமே. மு.கா இன்று காய்ந்த சருகாக உதிர்ந்து கொண்டிருக்கின்றது.

‘அமைச்சர் றிசாத்திற்கு மு.கா. பதிலடி’ என்ற தலைப்பில் திருகோணமலை மு.கா. மத்திய குழு விடுத்துள்ள அறிக்கைக்கு ‘செம அடி’ எனும் தலைப்பில் அ.இ.ம.காவின் திருகோணமலை மத்திய குழு விடுத்துள்ள பதில் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

[Read more…]

அடுத்த இரு வருட முதல்வர் பதவி SLMC க்கு வழங்கப்பட வேண்டும் – நஸீர் ஹாபிஸ்

hafiz-nazeer-அஸ்ரப் ஏ சமத்-

கிழக்கு மாகாணத்தின் அடுத்த 2 ஆண்டுகளுக்கான முதலமைச்சர் பதவி முஸ்லீம் காங்கிரசுடன் அரசு செய்து கொண்ட ஒப்பந்தப்படி முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கே அப்பதவி வழங்கப்பட வேண்டும். என அக் கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகண அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அப் பதவியாருக்கு வழங்கவேண்டு மென்றும் என்பதை முஸ்லீம் காங்கிரசின் அதி உயர்பீடமும், முஸ்லீம் காங்கிரஸின் தலைவருமே தீர்மாணிப்பார்கள். எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

கிழக்கு முதலமைச்சர் பதவிசம்பந்தமாக ஹாபீஸ் நசீர்அஹமட் மேலும் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது–

[Read more…]

கிண்ணியா வைத்தியசாலை விடுதிகளை ஒப்படைக்குமாறு இராணுவத்திடம் மன்சூர் கோரிக்கை

New-Health-Minister2இஸ்ஹாக் 

இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருக்கும் கிண்ணியா வைத்தியசாலைக்கு சொந்தமான வைத்தியர்களின் உத்தியோக பூர்வ விடுதிகளை வைத்திய சாலைக்கு மீள ஒப்படைக்குமாறு  கிழக்கு மாகாண  சுகாதார விளையாட்டு தகவல் தொழில் நுட்ப கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடுதிகளை இராணுவத்தின் பிடியில் இருந்து மீட்டுத்தருமாறு கிழக்குமாகாண  அமைச்சர் மன்சூர் பொருளாதார பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமைக்கு கடிதம் எழுதியுள்ளார் . அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

[Read more…]

கொடுவா மீன் வளர்க்கும் திட்டம் – ஹாபீஸ் நஸீர் முன்னெடுப்பு

DSCF9341-அமைச்சரின் ஊடகப் பிரிவு-

வடக்கு கிழக்கு மக்களின் மிகப்பிரசித்தி பெற்ற மீனினங்களின் கொடுவாய் மீனும் ஒன்றாகும். மீன்பிடித் தொழில் ஈடுபடுவோர் பல்வேறு பிரயத்தனங்களின் பின்னர் இந்த மீனை மிகவும் குறைந்தளவிலேயே பிடித்து வருவர். காரணம் இது ஒரு அரிதான மீனாகவும் மிகவும் அதிக ருசி கொண்ட மீனாகவும் விளங்குவதனால் நம் நாட்டு மக்களும் வெளிநாட்டவர்களும் விரும்பி உண்ணுவர்.

இந்த வகை மீனின உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி ,கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தனது கிழக்கு முதலீட்டுத் திட்டத்தின் கீழ் ஆக்கப் பூர்வமான முயற்சியினை மேற்கொண்டுள்ளார்.

[Read more…]

திருகோணமலை வைத்தியசாலை மத்திய அரசிடம் கையளிப்பு

DSC09045-அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை-

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கி வந்த திருகோணமலை பொது வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கான கோவைகளை நேற்று திங்ககிழமை கிழக்கு மாகாண ஆளுனரினால் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை பொது வைத்தியசாலை முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே பௌத்த சாசன பிரதி அமைச்சர் எம் .கே .ஏ.டீ.குணவர்தன சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் மகிபால ஹேரத் -கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் -கிழக்கு மாகாண தவிசாளர் ஆரியவத்தி கலப்பத்தி மற்றும் கிழக்கு சுகாதார அமைச்சர் எம் .ஐ .மன்சூர் மற்றும் அரச திணைக்கள உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

[Read more…]

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 754 பேருக்குப் பட்டமளிப்பு

DSC00091-ஜெஸ்மிலா பானு- கிழக்குப் பல்கலைக்கழகம்-

கிழக்குப் பல்கலைக் கழகம் வந்தாறுமூலை வளாகத்தில் நேற்றுக் காலையிலிருந்து மாலை வரை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 754 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கோலாகலமான நிகழ்வுகளில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.

[Read more…]

என்று தணியும் இந்த கொலைஞரின் தாகம்

புலிகளால் மிலேச்சத்தனமாக கொல்லப்பட்டு மறைந்த நண்பர் போலீஸ் அத்தியட்சகர் ஜமால்தீன் குறித்து எஸ்.எம்.எம் பஷீர் ஏப்ரல் 2009ல் பிரசுரித்த கட்டுரை ஜமால்தீன் அவர்களின் 05வது நினைவு தினத்தை முன்னிட்டு இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.

-எஸ்.எம்.எம் பஷீர்-

‘அக்கறைப்படவேண்டிய விடயங்கள்பற்றி நாங்கள் மௌனம் சாதித்தால் அந்த நாள் எங்களுடைய வாழ்க்கை முடிவிற்கான ஆரம்பமாகும்’ –மாட்டின் லூதர் கிங்

downloadஞாயிற்றுக்கிழமை சுமார் 7.30 மணியளவில் மருதமுனை மஸ்சிதுல் கபீர் பள்ளிவாசல் வீதியில் இரவுத் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பியவுடன் தனது மகளுடன் வீட்டிற்கு அண்மையிலுள்ள கடைக்கு மோட்டார் பைசிக்களில் சென்ற மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிக்கல்லூரி இயக்குனரும் பொலிஸ் அத்தியட்சகருமான எச்.எல் ஜமால்தீன் இரண்டு இனவெறிகொண்ட புலிப்பயங்கரவாதிகளால் நித்தாட்சன்யமாக கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி எனது காதுகளில் இடியாய் வீழ்ந்தது.

ஏனெனில் இவர் எனது பல்கலைக்கழக நண்பர். முஸ்லிம் சமூகத்தின் உயர்கல்விகற்ற உயர் பதவிவகித்த மருதமுனையின் ஒரு மைந்தன். இவருடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அறிமுகமான காலத்தில் பொலிஸ் இன்ஸ்பெக்டராக வேண்டுமென்னும் லட்சியத்தினைக் கொண்டிருந்தவர்.உதைபந்தாட்டத்தின்மீது அளவில்லாப் பிரியமும் தினசரி பயிற்சியும் மேற்கொண்டவர். இறந்த தினத்தன்றும் உதைபந்தாட்டம் விளையாடிவிட்டுத்தான் அவர் வீடு திரும்பியிருந்தார். [Read more…]

புதிய ஈரான் தூதுவர் – நஸீர் ஹாபிஸ் சந்திப்பு

DSCF9238-அமைச்சரின் ஊடகப் பிரிவு-

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான ஈரானிய தூதுவர் ஹூசைன் இப்ராஹிம் ஹகானியை கொழும்பில் அமைந்துள்ள அவரது தூதரகத்தில் வைத்து அண்மையில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி ,கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்.

[Read more…]

ரிதிதென்ன இக்ரா குர்அன் மதரசாவின் பரிசளிப்பு விழா

20140330_175657-டீன் பைரூஸ்-

மட்டக்களப்பு-ரிதிதென்ன அபுபக்கர் சித்தீக் ஜூம்ஆ பள்ளிவாயலின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இக்ரா குர்அன் மதரசாவின் பரிசளிப்பு விழா தலைவர் எஸ்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது.பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான ரிதிதென்ன இக்ரா குர்அன் மதரசா மாணவா்களின் பல்வேறு பட்ட திறமைகளைப் பாராட்டி பிரதம அதிதி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களினால் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

[Read more…]

ஜனாதிபதி கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு 19 ஆம் திகதி விஜயம்!

???????????????????????????????-ஜெஸ்மிலா பானு-

உயர் கல்வியமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை 04.04.2014 பகல் கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்திற்கு விஜயம் செய்தார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் புதிதாக நிருமாணிக்கப்பட்டுள்ள நூலக கட்டிடத்திற்கு சம்பிரதாயபூர்வமாக நூல்களை மாற்றும் நடவடிக்கையும் நூலகத்தின் வைபவ ரீதியான திறப்பு விழாவுக்கு நாள் பார்த்து பால்காய்ச்சுதலும் இன்று கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக கலந்து கொண்டார்.

[Read more…]

ஆசிய விளையாட்டுக்கான கிழக்கு மாகாணக்குழு அங்குரார்ப்பண நிகழ்வு

DSCN5403-முதலமைச்சரின் ஊடகப்பிரிவு-

எதிர் வரும் 2017ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டையில் நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு நேற்று 2014.04.02ம் திகதி மாகாணக்குழு அங்குரார்ப்பண நிகழ்வு திருகோணமலை விவேகானந்த மகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் விளையாட்டுதுறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக, கிழக்கு மாகாண சுகாதார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எம.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், திருகோணமலை அரசாங்க அதிபர், விளையாட்டு, கல்வித்திணைக்கள பணிப்பாளர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண மற்றும் வலய விளையாட்டு உத்தியோகத்தர்களும்; கலந்து கொண்டனர்.

[Read more…]

முதலமைச்சர் விக்னேஸ்வரன் எனக்கு தம்பி – பிள்ளையான்

T M V P Leader Pilleyanவடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் வயதில் முதிர்ந்தவர். வயதில் அவரைப் பார்த்தால் எனக்கு அண்ணன், முதலமைச்சராக பார்த்தால் அவர் எனக்கு தம்பி. இதனை நான் தற்பெருமைக்காக சொல்லவில்லை’ என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

‘விக்னேஸ்வரன் ஒரு சட்ட மேதை. சட்டமா அதிபர் என்று கூறினார்கள். வடமாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்தால் அது கிழக்கு மாகாணசபைக்கு உதவிசெய்யும் நிலை உருவாகும் என நான் கடந்த காலத்தில் கூறியிருந்தேன். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கு எதிராகவே நடைபெறுகின்றது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பட்டிப்பளை பிரதேச சபையின் புதிய கட்டிட திறப்பு விழா செவ்வாய்க்கிழமை(01) இடம்பெற்றது.. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘மூன்றில் இரண்டு தாருங்கள் சாதித்துக் காட்டுவோம் என வட பகுதி மக்களிடம் கேட்டார்கள். ஆனால் அவர்கள் மூன்றில் இரண்டை விட அதிகமாக வாக்களித்தனர்.

வடமாகாண செயலாளராக இருக்கும் விஜயலட்சுமி  முதலமைச்சருக்கு ஒரு சுற்று நிருபம்  அனுப்பமுடியாதவாறு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையை பிறப்பித்துள்ளது. நீதியரசரான விக்னேஸ்வரனுக்கு அவரின் கத்தியால் அவருக்கே குத்தப்பட்டுள்ளது.

[Read more…]

கடமை தவறிய சாரதியும் நடத்துனரும் பதவி நீக்கம் – கிழக்கு பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை 

suspended_02-அபூஹக் –

ஆசன ஒதுக்கீடு செய்திருந்தும் குறித்த பயணிகளுக்கு ஆசனங்களை வழங்காததோடு இடை நடுவில் இறக்கிவிட்டுச் சென்ற சாரதியையும் நடத்துனரையும் பதவி நீக்கம் செய்ய கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அண்மையில் நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கல்முனை – திருகோணமலை வழித்த தடத்தில் வழக்கமாக சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றிற்கு காத்தன்குடியில் ஆசனப் பதிவு நிலையத்தில் ஆசன ஒதுக்கீடு செய்திருந்த காத்தான்குயைச் சேர்ந்த பயணிகள் இருவருக்கு ஏறாவூர் வரை ஆசனம் வழங்கப்படாது நின்றவாறே பயணிக்கும் நிலை ஏற்பட்டது.

[Read more…]