Advertisements

சமயப் பன்மைத்துவத்தை மக்கள் மயப்படுத்தும் தாக்கமுள்ள கலையே வானொலி நாடகம் பேராசிரியர் . டப்ளிவ். டி. பீ. வணிகசுந்தர

எம்.ரீ.எம்.பாரிஸ் –

சமயப் பன்மைத்துவத்தை மிகவும் தாக்கமாக மக்களிடம் கொண்டும் செல்லும் கலைகளில் மிகவும் துரிதமானதே வானொலி நாடகம் என இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் தலைவர் பேராசிரியர் டப்ளிவ். டி. பீ. வணிகசுந்தர தெரிவித்துள்ளார்.
இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம் தழிழ் மற்றும் சிங்கள் மொழிகளில் அமுல்படுத்தும் சமயப் பன்மைத்துவத்தை ஊக்குவிக்கும் வானொலி நாடகச் செயற்றிட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ‘சமூக மாற்றம் என்பது மிகவும் மந்தமாக இடம்பெறும் செயற்பாடாகும். இதனை துரிதப்படுத்தும் போது, மக்களிடம் நடத்தை சார் மாற்றங்களை ஏற்படுத்துவது மிகவும் கட்டாயமாகும். வானொலி நாடகத்தைப் [Read more…]

புத்தளம் M.P விவகாரம்! தலையிடிக்கு தலையணையை மாற்றிப் பயனில்லை !!

M. ரஹ்மத்துல்லாஹ்

புத்தளம் மாவட்டத்தில்1989 முதல் 2010 வரை இடம் பெற்ற ஆறு பொதுத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், ஐக்கிய தேசிய கட்சியிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மர்ஹூம் M.I. பிஷ்ருல் ஹாபி, M.H.M. நவவி, K.A. பாயிஸ், S.A. யஹ்யா, T.M.இஸ்மாயில், A.M. கமர்தீன் முதலானோர் இவ்வாறு போட்டியிட்டனர்.

[Read more…]

கோட்டைவிடும் தமிழ் தேசிய தலைமைகள்

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் மிக சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். அதே போல புதிய சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

ஆனால் தமிழ் தேசிய தலைமைகள் இரு விடயங்களையும் கோட்டை விட்டே வந்து இருக்கின்றன என்பது கடந்த கால வரலாறாகவும், நிகழ் கால நிதர்சனமாகவும் உள்ளது. [Read more…]

யாருக்கு தொப்பி?

எஸ்.எம்.எம்.பஷீர் 

“அதிகாரம் சீரழிப்பதால் , பதவிக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் பொழுது ,  அறவழி  அதிகாரத்துக்கும் சிறப்பியல்களுக்குமான  சமுதாயத்தின் தேவைகள் அதிகரிக்கின்றன”  –  ஜான் அடம்ஸ் 

( Because power corrupts, society’s demands for moral authority and character increase as the importance of the position increases. –  John Adams )

ecmகிழக்கு மாகான சபைக்கான முதல்வர் நியமன இழுபறி இறுதியில் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. ஒருபுறம் மைத்ரி ஜனாதிபதியாக நாங்களும்  காரணம் என்ற தமிழர்களும் முஸ்லிம்களும்  ஆளுக்கு ஆள் வீராப்பு கதை பேசித் திரிய, தமிழர் கூட்டமைப்பு மைத்ரீயை சந்தித்து தங்களின் கட்சியிலில் இருந்தே கிழக்கு முதல்வர் நியமிக்கபட வேண்டும் என்று கோரப் போவதாக செய்திகள் ஊடகங்களில் ஊடாட, இந்நாள் வரை இரண்டரை வருடக் கதையை, இலேசாக அவ்வப்போது ஞாபகம் ஊட்டிக்  கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் திடீரெண்டு எங்களுக்கே முதல்வர் பதவி தரப்பட வேண்டும் என்று அட்டகாசமாக அவரோகணத்தில் தங்களின் முதல்வர் கோரிக்கையை முன்னெடுத்த பொழுது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் சொன்ன இரண்டரை வருட முதல்வர் சமாச்சாரம் உண்மைதான் என்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு முதல்வர் பதவி வழங்கி உறுதி செய்திருக்கிறார்கள். [Read more…]

நல்லாட்சிக்கு இன்றுடன் வயது ஒரு மாதம்

அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான நல்லாட்சிக்கு இன்றுடன் வயது ஒரு மாதமாகிறது. இலங்கையில் நல்லாட்சி ஒன்று மலர வேண்டுமென்று முஸ்லிம்கள் இறையச்சம் மேலோங்க நோன்பு நோற்று, தஹஜ்ஜதில் மன்றாடியதன் பலாபலனே இன்று சாத்தியமாகியிருக்கும் மைத்திரி யுகமாகும்.

[Read more…]

S.S.M. அபூபக்கர் வயதானாலும் மனம் தளராதவர்

S.S.M. அபூபக்கர் அவர்கள் சத்திய இஸ்லாத்தை திறம்பட ஆய்வு செய்து, இஸ்லாத்தை குடும்பம் சகிதம் ஏற்றுக் கொண்டவர். இன்றும் அவர் தான் பெற்ற பெரும் பாக்கியம் பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்ற தீராத வேட்கையில், உன்னத நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்.

[Read more…]

நேற்று பேசிய ஜெமீலா இது?

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நடத்தப்பட்ட இந்த வருடத்தின் முதலாவது பாரிய நாடகம் மேடையேற்றப்பட்டது. அமைச்சர் ஹக்கீம் பிரதான பாத்திரம் ஏற்க கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜெமீல், அன்வர் ஆகியோர் துணை நடிகர்களாக அற்புதமாக நடித்திருந்தனர்.

IMG_0816மக்களோ பாவம்… பழைய படங்களில் எம்.ஜி. ஆருக்கு நம்பியார் ஒரு அடிவிட்டாலே (நடிப்புக்காக) உண்மை என நினைத்து கொதித்தெழும் ரசிகர்கள் நிலையில்தான் காணப்பட்டனர். ஹாபிஸ் நஸீருக்கு முதலமைச்சர் பதவி வழங்கியதற்காகவும் அம்பாறை மாவட்டத்தைப் புறக்கணித்ததற்காகவும் ஜெமீலுக்கு அந்தப் பதவியை வழங்கவில்லை என்றும் கல்முனை மகக்ள் கொதிந்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் அமைச்சர் ஹக்கீமின் கொடும்பாவியையும் எரித்து நின்றனர்.

தாங்கள் அரகேற்றிய நாடகத்தை மக்கள் உண்மையாக நம்பி விட்டனர் என்ற கேலித்தனத்தில் இவர்கள் காணப்பட்டனர். ஆனால் மக்களோ உண்மையென நம்பியே அனைத்தையும் செய்து தங்களை வருத்தி, பிரிந்து கொண்டனர்.

இவர்கள் தங்களது நாடகத்துக்கு கௌரவ நடிகர்களாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான எம். சுபைரையும் வலிந்து எடுத்துக் கொண்டனர்.

இந்த நாடகத்துக்கு திரைக்கதை வசனம் எழுதி தயாரித்த கல்முனையின் குறுநில மன்னர் தலைமறைவாகியிருந்தார். பாவம் இறுதியில் அனைத்துப் பழிகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான தவம் அவர்கள் தலையில் கட்ட வேண்டியதாகி விட்டது.

sa2இவர்கள் ஆடிய நாடகத்தின் உண்மை நிலை இன்றைய ஊடகவியலாளர் மகாநாட்டில் அம்பலத்துக்கு வந்து விட்டது. ஜெமீல் மன்னிப்புக் கேட்டாராம். ஹக்கீம் மன்னித்து விட்டாராம்.. எவ்வளவு வெட்கம்.. இந்தப் போலி நாடகத்தின் உண்மையைத் தன்மையை இன்று அம்பலப்படுத்தாமல் கொஞ்சக் காலம் தாமதித்தாவது வெளிப்படுத்தியிருந்தால் முஸ்லிம் காங்கிரஸினால் பாவப்பட்டு போயுள்ள முஸ்லிம் மக்கள் சற்று மறந்த நிலையில் நிம்மதியடைந்திருப்பர். வெள்ளிக்கிழமை நாடகத்தையின் உண்மையை ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே அவர்கள் அரங்கேற்றி அசிங்கப்படுத்தி விட்டனர்.

பிரதேச வாதத்தையும் சமூகத்தில் பிரிவினையையும் ஏற்படுத்தி மக்களை பிரித்தவர்கள் இன்று சேர்ந்து விட்டனர். ஆனால் அவர்களை நம்பிய மக்களோ இன்று பிரிந்து நின்று மனக் கசப்புடன் காணப்படுகிறனர்.

கிழக்கு மகாண சபை உறுப்பினரான சர்ச்சைக்குரிய ஜெமீல் அவர்கள் பல தடவைகள் என்னுடன் நேற்று தொடர்பு கொண்டு பல விடயங்கைளத் தெரிவித்திருந்தார். அவற்றினை நான் நாகரிகமான முறையில் மறைத்துக் கொண்டேன். ஹாபிஸ் நஸீர் தொடர்பில் அவர் என்னிடம் தெரிவித்தவைகளை நான் இப்போது நினைத்துப் பார்க்கும் போது என்னுடன் நேற்று பேசியது இன்று அவருடன் இணைந்து கொண்ட ஜெமீலா என்று சந்தேகிக்கவும் தோன்றுகிறது. அத்துடன் அமைச்சர் ஹக்கீம் தொடர்பிலும் அவர் சில கருத்துகளை என்னிடம் தெரிவித்தார். அதனைக் கூட ஜெமீல்தான் சொன்னாரா என்பதும் எனக்கு இன்னும் அதிர்ச்சியாக உள்ளது.

இறுதியாக ஜெமீல் மன்னிப்புக் கேட்டாராம் ஹக்கீம் மன்னித்து விட்டாராம். வெட்கம் வெட்கம்.. மக்களை இறைவன் மன்னித்துக் கொள்ளட்டும்! வாழ்க, வளர்க முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்

[Read more…]

கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தில் ஐக்கிய மாகாண ஆட்சியே உடனடித் தேவை

எம். பௌசர்

கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கும் விவகாரம் சமூகங்களையும், கிழக்கு வாழ் மக்களையும் இரு துருவ நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஜனநாயக அடிப்படைக் கட்டுமாணங்களுக்கு வெளியில், எதோச்சதிகாரப் போக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை செயல்பட்டு நிலைமையை சிக்கலாக்கி உள்ளது.

[Read more…]

கிழக்கு மாகாண முதலமைச்சர் : முரண்பாட்டு அரசியலின் இனவாத அடையாளம்

 நவாஸ் சௌபி

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த நிலையில் கிழக்கு மாகாண சபை ஆட்சியை தொடர்வது சம்மந்தமாக இதுவரை இருந்துவந்த முதலமைச்சர் சர்ச்சை முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக ஒருமுடிவுக்கு வந்திருக்கிறது.

கிழக்கில் ஒரு முதலமைச்சர் பதவியை வழங்குவதற்கு தலைமைத்துவ சவால் ஒரு தடையாக இருப்பதாகக் கருதி வூப் ஹக்கீம் அதனை வழங்காதிருக்கின்றார் என்ற விமர்சனம் மிகவும் பலமாக முன்வைக்கப்பட்டுவந்த நிலையில் அதனை முற்றாக மறுப்பதாகவும் அக்கருததை அடியோடு அழிப்பதாகவும் இன்று முதலமைச்சர் பதவி கிழக்கிற்கு வழங்கப்பட்டிருப்பது முதலில் நாங்கள் பாராட்ட வேண்டிய விடயம். [Read more…]

கிழக்கின் முதலமைச்சர்!!! அம்பாறைக்கு ஆப்பு

எம்.வை.அமீர்

கிழக்கு மாகாண சபையில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட அமைச்சரவைகளில், அம்பாறை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கிய மாகாண சபையில், தொடராக அம்பாறை மாவட்டம் முதலமைச்சர் ஒருவரை பெறும் தகைமையை இழந்து வருகின்றது.

கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள மொத்த சனத்தொகையை எடுத்துக்கொண்டாலும் சரி கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்களின் தொகையை எடுத்துக்கொண்டாலும் சரி அம்பாறை மாவட்டமே முன்னிலையில் இருக்கின்றது. இருந்தபோதும் கிழக்கின் முதலமைச்சர் என்ற அந்தஸ்த்து மாறிமாறி திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்குமே வழங்கப்பட்டு வரும் செயற்பாடானது அம்பாறை மாவட்டத்தில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. [Read more…]

ராபிஆவில் ஓர் அழுகுரல்

படத்தில் இருப்பது சம்பவத்தை சொல்லும் சகோதரி ஸாரா

படத்தில் இருப்பது சம்பவத்தை சொல்லும் சகோதரி ஸாரா

அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி) Cairo-Egypt

(2013 ஆம் ஆண்டு எகிப்தில் ஏற்பட்ட அரசியல் மோதல்களில் முர்சியின் ஆட்சி வீழ்த்தப்பட்டது. அப்போது முர்சி ஆதரவாளர்கள் ராபிஆ மைதானத்தில் தொடர் போராட்டத்தில் இறங்கியபோது சில மாதங்களில் ராபிஆ மைதானத்தை எகிப்திய ராணுவம் பலப்பிரயோகம் மூலம் கலைப்போம் என்ற எச்சரிக்கையுடன் கலைத்தது. அப்போது ராபிஆவில் இக்வான்களின் நிர்வாகவியல் பொறுப்பில் இருந்த முஹம்மத் அலி என்பவரும் வபாத் ஆனார்கள். இதுபற்றி களத்தில் என்ன நடந்தது? முர்சி ஆதரவாளர்கள் நிலைபாடு எப்படி இருந்தது என்பதுபற்றி களத்தில் இருந்து வபாத்தான முஹம்மத் அலி அவர்களின் மகளும் ஊடகவியளாலருமான சகோதரி ஸாரா தனது சமூகவலைதளத்தில் ஒரு பதிவை அரபியில் எழுதி இருந்தார். இதை தமிழ் உலகுக்கும் தர வேண்டும் என்ற எண்ணத்தில் உங்களுடன் பகிர்கிறேன்.)

2013 ஓகஸ்ட் மாதம் புதன்கிழமை மாலை மூன்று மணிக்கு எனது தந்தை தொலைபேசியில் அழைத்து மூச்சு முட்ட வேறு கேள்விகள் எதுவும் இன்றி “ஸாரா நீ நலமா” என்று கேட்டார். “சில நிமிடத்துக்கு முன்தானே நான் வேலைக்கு சென்றுவிட்டேன் என்று சொன்னேனே பாபா”(பாபா என்பது எகிப்திய பாசையில் வாப்பா).

[Read more…]

தென் கிழக்கு உப வேந்தர் மீதான குற்றச்சாட்டு: தரம் கெட்ட அரசியல்வாதிகளின் செயல்

அபூ ரொஷான்

அண்மையில் தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் எஸ் எம் இஸ்மாயீல் தொடர்பாக பல விமர்சனக் கருத்துக்களும், விசக் கருத்துக்களும் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டு வருகின்றன.

பல ஊழல் மோசடிகள் பல்கலைக்கழகத்தில் நடந்தேறி இருப்பதாக தகவல்கள் வெளிவந்தமுள்ளன.

இது தொடர்பில் மக்களுக்கு சில விளக்கங்களை வழங்குவதே இக்கட்டுரையின் நோக்காகும்.

[Read more…]

இஸ்லாமிய ஆட்சி எப்போது? எப்படி?

அரபியில்: கலாநிதி முஸ்தபா மஹ்மூத் (எகிப்து)
தமிழில்: அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி)

வீட்டுக்கு வீடு சினிமா, வானொலி, ஆபாச சஞ்சிகைகள், அரைகுறை ஆடையுடன் கடலோர கன்னிகள் என்பதுபோன்ற எதுவும் இல்லாத மக்காவின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த குரைசிகளை தண்டிப்பது போல மேற்கூறப்பட்ட பாவங்கள் நிறைந்த காலப்பகுதியில் வாழும் நம்மையும் அல்லாஹ் தண்டிப்பானா? [Read more…]

அறுபத்தேழில் ஆனந்த சுதந்திரம்

அப்துல் அஸீஸ், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கை 67வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. ‘செழிப்புமிக்க தாய்நாடு அபிமானமிக்க நாளைய தினம்’ என்பதே இவ்வருட சுதந்திர தின தொனிப்பொருளாகும்.

[Read more…]

ஸைபர் உலகில் சின்னாபின்னமாகும் இளம் சமூகம்

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

“(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும் அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.” (ஸுரதுல் லுக்மான் 31:16)

இணையதள, சமூக வலைதள பாவனைகள் அதிகரித்துள்ள ஒரு ஸைபர் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், முகநூல், வட்ஸ்அப், வைஃபர், ஸ்கைஃப் என இன்னும் எத்தனயோ தொடர்பூடகங்களில் புதிய தலைமுறையினர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதுவே உண்மை.

[Read more…]

ஊழல் பேர்வழிகள், வெள்ளை வான்காரர்கள் தண்டிக்கப்படுவார்களா?

எம்.எஸ்.எம். ஐயூப்

கடந்த 9ஆம் திகதி பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்ததைப் போல், இதற்கு முன்னர் பதவிக்கு வந்த எந்தவொரு ஜனாதிபதியோ எந்தவொரு அரசாங்கமோ குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட விடயங்களை செய்வேன் என்று நாட்குறிப்பொன்றை முன்வைத்ததில்லை.

[Read more…]

கலாநிதி தயான் ஜயதிலகவுக்கு ஒரு பாராட்டுக் கடிதம்

dayan-jayatilakeஅன்பான கலாநிதி தயான் ஜயதிலக அவர்களுக்கு,

நீங்கள் இதை வாசிப்பீர்கள் என்கிற நம்பிக்கையில் இதை அவர்களது இணையத் தளத்தில் பிரசுரிக்கும்படி நான் கொழும்பு ரெலிகிராப்ட்டிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். அதற்கான காரணம் உங்களது தற்போதைய விலாசத்தை என்னால் பெறமுடியவில்லை, மேலும் இந்த நாட்களில் நீங்கள் அதில் தங்கியிருப்பீர்கள் என்று எனக்கு நிச்சயமும் இல்லை.

[Read more…]

கிழக்கு முதலமைச்சர் முஸ்லிமாக இருப்பதுவே தமிழ்-சிங்கள சமூகங்களுக்கு ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்

கலாநிதி அஷ் ஷெய்க் மசிஹுதீன் இனாமுல்லாஹ் 

தற்போதைய நிலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியினை ஒரு முஸ்லிம் உறுப்பினரிடம் கையளிப்பதே தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களைப் பொறுத்தவரை ஆரோக்கியமான அரசியல் நகர்வாக இருக்கும்.

[Read more…]

இரத்ததானம் மற்றும் இரத்தம் பாய்சுதல் ஓர் இஸ்லாமிய பார்வை

தொகுப்பு – Dr. A. L. A. அஹ்மட் ஷியாம் (MBBS), NATIONAL HOSPITAL -COLOMBO 

இரத்ததானம் தொடர்பான இக் கட்டுரை , MSW நிறுவனம் எதிர்வரும் 1 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெத்தைபள்ளி வித்தியாலயத்‌தில் ஏற்பாடுசெய்துள்ள இரத்ததான முகாமை முன்னிட்டு பிரசுரிக்கப்படுகின்றது

இஸ்லாம் மனித உயிர்  பாதுகாக்கப்படுவதை விரும்புகிறது. மனிதனது மனவேதனை, தாங்க முடியாத துன்பநிலை என்பவற்றுக்கு எதிரான பாதுகாப்பை உறுதிசெய்கிறது. மேலும் மனிதனது அமைதி, பாதுகாப்பு  என்பன உறுதிப்படுத்தப்படுவதை வழியுருத்துகிறது.

[Read more…]

சார்லி ஹெப்டோ – இஸ்லாமோபோபியாவின் மறு வடிவம்

-அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம்-

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்தரிகை அலுவலகத்திற்குள் கடந்த வாரம் புகுந்த செரிப் குவாச்சி மற்றும் சயித் குவாச்சி ஆகிய சகோதரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பத்திரிகை ஆசிரியர், கேலிச்சித்திரம் வரைபவர்கள் (Cartoonist) உற்பட 12 பேர் கொல்லப்பட்டனர். நபி (ஸல்) அவர்களை கிண்டல் செய்து கேலிச்சித்திரத்தை வெளியிட்டதால் இப்பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.

[Read more…]

மைத்திரியின் காலம் உங்களுக்கு ஒரு சவால் விட்டிருக்கிறது

மட்டுநகரிலிருந்து  எழுகதிரோன்

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் இலங்கை தமிழரின் அரசியல்  பாதையிலும் பல புதிய பரிணாமங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதாவது  இலங்கைத்தமிழரின் இனப்பிரச்சனை வரலாற்றில் பல முக்கிய திருப்பங்களுக்கு  காரணமாய் இருந்துவரும் தமிழரசுக்கட்சி கடந்த ஜனாதிபதி தேர்தலில் எடுத்த  நிலைப்பாடே அதற்கு காரணமாயிற்று. இந்த மாற்றமானது தமிழ் மக்களின் வாழ்வை  மேம்படுத்துவதாக அமையுமா? அல்லது “மீண்டும் வேதாளம் முருங்கை  மரத்தில்”நிலைக்கு இட்டுச்செல்லுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க  வேண்டும்.

[Read more…]

உளநோய் நீங்கி உள்ளங்கள் அமைதி பெற ஆன்மீகம் தேவை

gealousஉளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா

உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பல ஆயிரம் பிரச்சினைகளுடன் பிறக்கின்றான்  அதே நேரம் பல் வேறு வகைப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றான். இதில் பிரச்சினைகளை இருவகையாக வகைப்படுத்த முடியும். ஒன்று எம்மை நோக்கி வருகின்ற பிரச்சினைகள், இரண்டாவது வகை நாம் பிரச்சினைகளை எம் கரங்களாளேயே உருவாக்கிக் கொள்வது.

[Read more…]

கிழக்கு மாகாண சபை: சிவில் சமூகத்தின் தலையீடு உடன் அவசியம்

-எம்.பௌசர்-

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் நிலைப்பாடு இலங்கை மைய அரசியலில்  ஏற்படுத்திய தாக்கம் எல்லோருக்கும் தெரிந்ததே. இரு இனங்களுக்கிடையேயும் பல்வேறு முரண்பாடுகளும் கசப்பணர்வுகளும் இருந்தாலும், தம்மை அடக்குகின்ற ஒரு பொது எதிரிக்கு எதிராக ஒரு தீர்க்கமான அரசியல் நிலைப்பாட்டினை தமிழ், முஸ்லிம் மக்கள் எடுத்து, நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு வேலைத்திட்டமாக இல்லாது விட்டாலும் தனித் தனியே  செயற்பட்டனர்.

[Read more…]

சார்லி ஹெப்டோ – முஸ்லீம் உம்மாவுக்கான சோதனை

chஉலகெங்கும் வாழும் பில்லியன் கணக்கான முஸ்லீம்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் இறை தூதரான முஹம்மது (ஸல்) அவர்களை நையாண்டி செய்து கார்டூன் வெளியிட்டதற்காக சார்லீ ஹெப்டோ எனும் அங்கதப் பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 நபர்களும் அதை தொடர்ந்த காவல்துறை வேட்டையில் 5 நபர்கள் என 17 நபர்கள் இறந்து போனர். இதை கருத்து சுதந்திரத்துக்கு விடப்பட்ட சவால் என மேற்குலகம் சித்தரிப்பது உண்மை தானா?. இஸ்லாம் சகிப்புத்தன்மை அற்ற மார்க்கமா ? என்பதை பார்க்கும் முன் சார்லீ ஹெப்டோவை கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம். [Read more…]

ஐம்பதுக்கு ஐம்பதுக்கும் அப்பால்

dayan jayathilakaஜனாதிபதி தேர்தலில் ஜூரிமார் குழுவின் தீர்ப்பு உள்ளது. அது எப்படி நடைபெற்றுள்ளது என்பதை தமிழர் எதிர்ப்பு அல்லது சிங்கள இனவாதி என்று விபரிக்க முடியாத ஒரு சுவாராஸ்யமான வட்டாரத்தின் கூற்று கீழே தரப்பட்டுள்ளது. திரு.எரிக் சொல்கைம் சொல்வதை கேளுங்கள்:

[Read more…]

மைத்திரி ஆட்சியின் மீதான சவால்கள்

maithripalaஎம்.ஏ.எம்.பௌசர், விரிவுரையாளர்
அரசறிவியல் துறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில்.

மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் முடிவடைந்துள்ள இலங்கையின் ஏழாவது ஜனாதிபதித் தேர்தல் தேசிய, சர்வதேச மட்டத்தில் அதீத கவனஈர்ப்பினைப் பெற்றுள்ளது. தேர்தல் நடாத்தப்பட்ட பின்புலம், போட்டியாளர்கள், தேர்தல் முடிவுகள், தேர்தலுக்குப் பிந்திய அரசியல் என சுவாரஷ்யமான பல விடயங்களில் அதன் முக்கியத்துவத்தினைப் பரிசீலிக்க முடியும். எனினும் இக்கட்டுரை ஜனாதிபதித் தேர்தல் பற்றிய சிறு அறிமுகத்துடன் தேர்தலுக்கு பிந்திய அரசியலில் புதிய ஆட்சியின் மீதுள்ள சில சவால்களைக் குறித்துக்; காட்டுகின்றது.

[Read more…]

அரசியல் களநிலை யதாரத்தங்களை முஸ்லிம் அரசியல் குழுக்கள் உள்வாங்கி ஒன்றுபடல் வேண்டும்

dr-inamullah
-அஷ் ஷேய்க் கலாநிதி மஸிஹுதீன் இனாமுல்லாஹ்-

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் ஏப்ரல் மாதம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்பட உத்தேசிக்கப்படுவதாக அறிய முடிகிறது, மைத்ரி அரசு தனது நூறு நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள படி தொகுதிவாரி மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறை கலந்த ஒரு தேர்தல் முறையில் பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

[Read more…]

காத்தான்குடியில் சீயாக்கள் ஊடுருவிய வரலாறு – பகுதி 02

IMG_0070-முஜீப் ஜுனைத்- 

அல்லாஹ்வுக்கு இணைவைக்காத மக்களை உருவாக்கிய பெரும்பங்கு மர்ஹூம் அஹமட் லெப்பை அவர்களையே சாரும் வஃததுல் வுஜூத் எனும் எல்லாம் அவனே என்ற கோட்பாட்டைக் கொண்ட அப்துல் ரவூப் மிஸ்பாகி கூறும் கருத்து இஸ்லாத்துக்கு முரணானது என்று உலகுக்குப் பறை சாற்றிய மனிதன் அவர் அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் அவரது கொள்கையை பின்பற்றுபவர்கள் முர்தத் என்று அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் மூலம் பட்டம் வாங்கிக் கொடுத்தவரும் அவரே.காலம் நகர்ந்து சென்று மாதங்கள் வருடங்களாகியது காத்தான்குடி மக்கள் விவசாயத்தை நம்பியிருந்ததால் விடுதலைப் புலிகள் காத்தான்குடி மக்களின் காணிகளை அபகரித்திருந்ததால் வியாபாரத்தை நோக்கி நகர்ந்தனர்.

ஐரோப்பிய மறுமலர்ச்சியைப் போல் காத்தான்குடி மக்கள் வியாபாரத்தில் உலகமே வியக்கும் வண்ணம் வியாபாரப் புரட்சி மூலம் முன்னோக்கினர் “காகம் பறக்காத ஊரும் இல்லை காத்தான்குடியான் இல்லாத ஊரும் இல்லை” என்ற பழமொழிக்கு உரித்தானார்கள்.

இவ்வேளைகளில் வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்காகச் சென்றிருந்த சகோதரர்களாலும் தவ்ஹீத் எனும் அல்லாஹ்வுக்கு இணை வைக்காத கபுறு வணங்காத தூய இஸ்லாம் காத்தான்குடியில் வேகமாகப் பரவியது மேலும் அதற்கு வலுவூட்டும் விதமாக காத்தான்குடி ஜம்மியதுல் உலமா,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவன்ங்களின் சம்மேளனம், நழீமிக்கள்,மதனிகள் ,சீ.ஐ.ஜி,இஸ்லாமிக் சென்றர்,தாருல் அதர்,என்.டீ.ஜே மற்றும் தென்னிந்திய மார்க்க அறிஞர் பீ.ஜெயினுலாப்தீன் அவர்களின் மார்க்கப் போதனைகள் மற்றும் தப்லீக் சகோதரர்களின் தொலைக்காட்சி பார்க்காத நிதானப் போக்கு போன்றவை இணை வைப்பிலிருந்து காத்தான்குடியின் பெரும்பாலான மக்களை இணை வைக்கும் வழிமுறையில் இருந்து பாதுகாத்தது அல்ஹம்துலில்லாஹ்.

இப்படியான காலகட்டத்தில் பயில்வான் எனும் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவனுக்கு எதிராக (தான் ஹிஜ்ரத் சென்றேன் என்றும் கூறினான்) அவனது உடலத்தை காத்தான்குடியில் அடக்கச் சென்ற வேளை உதித்தது மக்களின் ஈமானியப் போராட்டம் அது பிற்பாடு ரவூப் மௌலவிக்கு எதிராகவும் திசை திரும்பியது இதன் பின்னர் ரவூப் மௌலவி தனது பாதுகாப்புக்கருதி கொழும்புக்குச் சென்றார் அவரை மீண்டும் ஊருக்குக் கொண்டு வந்து சுமூகமாக மாற்றுவதற்கு அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முயன்றார்.

தொடரும்…

அரசியலமைப்பின் மீதான 18 ஆவது திருத்தம் தேசத்துரோகமாகும், உத்தேச 19 ஆவது திருத்த முன்மொழிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாகும். இஸ்லாமிய அரசியல் கோட்பாடுகளை புறக்கணித்தே முஸ்லிம் அரசியல் வாதிகள் செயற்படுகிறார்கள்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அரசியலில் நீதி, சமத்துவம், நல்லாட்சி என்ற பொதுவான விடயங்களில் இன மத மொழி குல, நிற வகுப்பு பேதங்களுக்கு அப்பால் மனித குல மேம்பாட்டிற்காக செயற்படுவது விதிக்கப்பட்ட கடமையாகிறது.

அதேபோல் இன, மத மொழி, குல, நிற வேறுபாடுகளுக்கும் பாகுபாடுகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் தாங்களோ அல்லது வேறு எந்த சமூகமோ உள்ளாகின்ற பொழுது அவற்றிற்கு எதிராக தமக்கு முன்னால் உள்ள சகல வழி வகைகளிலும் போராடுவதும் அவர்கள் மீது விதிக்கப்பட்ட கடமையாகும்.

அக்கிரம் ஆட்சியாளர்கள் எந்த இனத்தை மதத்தை குலத்தை நிறத்தை வகுப்பைச் சேர்ந்தவர்களாயினும் சரியே அதாவது இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரியே.

ஒருநாட்டின் சர்வாதிகாரி ஆட்சியாளன் மன்னராக இருந்தாலும் சரி, தெரிவு செய்யப்பட்ட அரச அதிபராக இருந்தாலும் சரி நல்லாட்சி விழுமியங்களை உத்தரவதப்படுத்துகின்ற அமானிதமான தார்மீகப் பொறுப்பே அவரிடம் கையளிக்கப் படுகின்றது.

நீதி நேர்மை சமாதானம், பொருளாதார மேம்பாடு, கல்வி, உர்கல்வி, தொழில் வாய்ப்பு, அடிப்படை வசதிகள், சுகாதாரம் என சகல துறை அபிவிருத்தி திட்டங்களிலும் சமத்துவம் என்பவற்றை உறுதிப்படுத்தி, சர்வாதிகாரம்,அராஜகம், ஊழல், மோசடி, இன, மத மொழி, குல நிற பாகுபாடுகள் அடக்குமுறைகளை ஒழித்துக் கட்டுகின்ற ஆட்சிக் கட்டமைப்புகளை நோக்கிய போராட்டங்களில் முன்னிற்க வேண்டியவர்கள் முஸ்லிம்கள்.

எந்தவொரு ஆன்மாவையும் சமூகத்தையும் அதன் சக்திக்கு அப்பால் எதனையும் சாதித்துவிடுமாறு எல்லாம் வல்ல அல்லாஹ் எதிர்பார்ப்பதில்லை.

அந்தவகையில் தற்பொழுது எமது நாட்டில் இருக்கின்ற குறைந்தபட்ச ஆட்சிக் கட்டமைப்புகளான ஜனநாயக ஸ்தாபனங்களை, அதிகார மையங்களை, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துகின்ற நிறுவனங்களை, நீதித்துறையை, பொது நிர்வாக சேவைகளை, தேர்தல் ஆணையகத்தை மற்றும் தேர்தல் முறைமைகளை ,இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை, மத கலாச்சார சுதந்திரத்தை, சமாதான சகவாழ்வை முற்போக்கு சக்திகளுடன் இணைந்து கட்டிக் காப்பது முஸ்லிம்கள் மீது கடமையாகிறது.

அந்த வகையில் இந்த நாட்டின் சாபக்கேடாக பார்க்கப்படுகின்ற வரைமுறைகளற்ற எதேச்சாதிகார நிறைவேற்று அதிகாரங்கள் மிக்க ஜனாதிபதி முறையினை ஒழித்து மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தின் மேலான்மையை உறுதிப்படுத்தி நல்லாட்சி குணாதிசியங்களை உறுதிப்படுத்துகின்ற ஆட்சி மற்றும் நிர்வாக கட்டமைப்புக்களை, சுயாதீனமான அரச அங்கங்களை கட்டி எழுப்புவதில் முஸ்லிம்களுக்கும் பாரிய பங்கு இருக்கின்றது.

இந்த தேசத்தின் முற்போக்கு சக்திகளின் தொடந்தேர்ச்சியிலான போராட்டங்களுக்குப்ப் பின்னர் சுயாதீனமான பொலிஸ் சேவை, சுயாதீனமான பொதுச்சேவைகள், சுயாதீனமான தேர்தல், சுயாதீனமான நீதித்துறை என நல்லாட்சிக் கட்டமைப்புக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அரசியலமைப்பின் மீது கொடுவரப்பட்ட 17 ஆவது திருத்தச் சட்டத்தை ஆளும் ஐக்கிய முன்னணி 18 ஆவது திருத்தம் ஒன்றின் மூலம் வலிதற்றதாய் ஆக்கியமை மிகப்பெரிய வரலாற்றுத் தவறாகும்.

துரதிஷ்டவசமாக மேற்படி 18ஆவது திருத்தச் சட்டமூலத்தை மூன்றில் இரு பெரும்பான்மையுடன் பாராளு மன்றத்தில் நிறைவேற்றிக் எதேச்சதிகார ஜனாதிபதி முறையின் வரம்புகளை மேலும் விஸ்தரிக்கவும் பதவியில் இருக்கின்ற அதிபர் தொடர்ந்தும் ஜானாதிபதியாக தெரிவு செய்யப்படுவதன் மூலம் சர்வாதிகாரம் நீடிக்கவும் முஸ்லிம் தனித்துவ அரசியலின் பெயரால் -உண்மையான இஸ்லாமிய அரசியல் கோட்பாடுகளுக்கு முரணாக – ஆதரவு வழங்கப்பட்டமை மிகப் பாரிய அரசியல் வரலாற்றுத் தவறாகும்.
இவ்வாறான ஒரு நெருக்கடியான அரசியலமைப்பு மற்றும் வலுவேறாக்கல் சர்ச்சைகள் நாட்டில் இடம் பெறுகின்ற ஒரு கால கட்டத்தில் தான் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ளது.

“தூய நாளை” “பிவிதுரு ஹெடக்” “கிளீன் டுமாரோ” என்ற முன்னெடுப்பிற்கான தேசிய கவுன்ஸில் முன்வைத்துள்ள அரசியலமைப்பின் மீதான உத்தேச 19 சீர்திருத்த பிரேரணை முன்மொழிவுகளை முழுவதுமாக வாசித்தேன்.

வரை முறைகளற்ற நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதிமுறைக்குப் பதிலாக, வரை முறைகளுடன் கூடிய தேசத்தின் தலைவராக ஜனாதிபதியும், பாராளுமன்றத்தின் மேலான்மையை உறுதிப்படுத்தும் அதிகாரங்களை உடைய அரசின் தலைவராக பிரதம மந்திரியும் இருப்பதற்கான சீர்திருத்தப் பிரேரணைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

அதேவேளை ஏற்கனவே 17 சீர்திருத்தப் பிரேரணை அறிமுகப்படுத்திய சுயாதீனமான நீதித் துறை, தேர்தல், பொதுச் சேவைகள், பொலிஸ், ஊழல் மோசடி ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல், அரசியலமைப்பு கவுன்சிலுக்கான பிரதிநிதிகள் நியமனம்…

தொகுதிவாரி தேர்தல் முறையுடன் மட்டுபடுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறை, சகல சமூகங்களினதும் பிரதிநிதித் துவத்தை உறுதி செய்யும் தேர்தல் தொகுதி எல்லைகளின் மீள் நிர்ணயம் என பல்வேறு முற்போக்கான தேசத்தினதும் சகல சமூகங்களினதும் நலன்களை இலக்காக கொண்ட முன்மொழிவுகள் முன்வைக்கப் பட்டுள்ளன.

கடந்த காலங்களில் தேசத்திற்கும் சிறுபான்மையினருக்கும் பாதகாமான பல சட்டவக்கங்களுக்கு கை தூக்கி ஆதரவளித்த நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மேற்சொன்ன 19 ஆவது சீர்திருத்த மொழிவுகளை ஒருமுறை வாசித்துப் பார்க்க வேண்டும்.

கீழ்காணும் விடயங்களில் தெளிவு தேவைப் படுகிறது

ஜனாதிபதி சட்டத்திற்கு மேலாக இருப்பாரா இல்லையா ? என்ற விடயத்தில் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை, அதேபோல் அவர் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது, (இருப்பது ஆபத்தானது) ஒரு முறை மாத்திரமே அவர் ஜனாதிபதியாக இருக்க முடியும், ஆனால் பின்னர் பொதுத் தேர்தல் மூலம் பிரதமராக வர முடியுமா..? என தெளிவாக கூறப்பட வில்லை…

முஸ்லிம் புத்திஜீவிகள், சமூக நல அமைப்புக்கள், சட்ட வல்லுனர்கள் கலாத்தின் கட்டாயம் கருதி அதனை ஆராய்ந்து பாருங்கள்.

ஒரு சில திருத்தங்களுடன் முஸ்லிம் சமூகம் இதற்கு முழு ஆதரவையும் வழங்க முடியும் , வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

18 ஆவது திருத்தம் தேசத்துரோகம், 19 ஆவது திருத்த முன்மொழிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது 

downloadஅரசியலமைப்பின் மீதான 18 ஆவது திருத்தம் தேசத்துரோகமாகும், உத்தேச 19 ஆவது திருத்த முன்மொழிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாகும். இஸ்லாமிய அரசியல் கோட்பாடுகளை புறக்கணித்தே முஸ்லிம் அரசியல் வாதிகள் செயற்படுகிறார்கள்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அரசியலில் நீதி, சமத்துவம், நல்லாட்சி என்ற பொதுவான விடயங்களில் இன மத மொழி குல, நிற வகுப்பு பேதங்களுக்கு அப்பால் மனித குல மேம்பாட்டிற்காக செயற்படுவது விதிக்கப்பட்ட கடமையாகிறது.

அதேபோல் இன, மத மொழி, குல, நிற வேறுபாடுகளுக்கும் பாகுபாடுகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் தாங்களோ அல்லது வேறு எந்த சமூகமோ உள்ளாகின்ற பொழுது அவற்றிற்கு எதிராக தமக்கு முன்னால் உள்ள சகல வழி வகைகளிலும் போராடுவதும் அவர்கள் மீது விதிக்கப்பட்ட கடமையாகும்.

அக்கிரம ஆட்சியாளர்கள்  எந்த இனத்தை மதத்தை குலத்தை நிறத்தை வகுப்பைச் சேர்ந்தவர்களாயினும் சரியே அதாவது இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரியே.

ஒருநாட்டின் சர்வாதிகாரி ஆட்சியாளன் மன்னராக இருந்தாலும் சரி, தெரிவு செய்யப்பட்ட அரச அதிபராக இருந்தாலும் சரி நல்லாட்சி விழுமியங்களை உத்தரவாதப்படுத்துகின்ற அமானிதமான தார்மீகப் பொறுப்பே அவரிடம் கையளிக்கப் படுகின்றது.

நீதி நேர்மை சமாதானம், பொருளாதார மேம்பாடு, கல்வி, உயர்கல்வி, தொழில் வாய்ப்பு, அடிப்படை வசதிகள்சுகாதாரம் என சகல துறை அபிவிருத்தி திட்டங்களிலும் சமத்துவம் என்பவற்றை உறுதிப்படுத்தி, சர்வாதிகாரம்அராஜகம், ஊழல், மோசடி, இன, மத, மொழி, குல நிற பாகுபாடுகள் அடக்குமுறைகளை ஒழித்துக் கட்டுகின்ற ஆட்சிக் கட்டமைப்புகளை நோக்கிய போராட்டங்களில் முன்னிற்க வேண்டியவர்கள் முஸ்லிம்கள்.

எந்தவொரு ஆன்மாவையும் சமூகத்தையும் அதன் சக்திக்கு அப்பால் எதனையும் சாதித்துவிடுமாறு எல்லாம் வல்ல அல்லாஹ் எதிர்பார்ப்பதில்லை.

அந்தவகையில் தற்பொழுது எமது நாட்டில் இருக்கின்ற குறைந்தபட்ச ஆட்சிக் கட்டமைப்புகளான ஜனநாயக ஸ்தாபனங்களை, அதிகார மையங்களை, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துகின்ற  நிறுவனங்களை, நீதித்துறையை, பொது நிர்வாக சேவைகளை, தேர்தல் ஆணையகத்தை மற்றும் தேர்தல் முறைமைகளைஇனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை, மத கலாச்சார சுதந்திரத்தை, சமாதான சகவாழ்வை  முற்போக்கு சக்திகளுடன் இணைந்து கட்டிக் காப்பது முஸ்லிம்கள் மீது கடமையாகிறது.

அந்த வகையில் இந்த நாட்டின் சாபக்கேடாக பார்க்கப்படுகின்ற வரைமுறைகளற்ற எதேச்சாதிகார நிறைவேற்று அதிகாரங்கள் மிக்க ஜனாதிபதி முறையினை ஒழித்து மக்கள் பிரதிநிதிகளைக்  கொண்ட பாராளுமன்றத்தின் மேலான்மையை உறுதிப்படுத்தி நல்லாட்சி குணாதிசியங்களை உறுதிப்படுத்துகின்ற ஆட்சி மற்றும் நிர்வாக கட்டமைப்புக்களை, சுயாதீனமான அரச அங்கங்களை கட்டி எழுப்புவதில் முஸ்லிம்களுக்கும் பாரிய பங்கு இருக்கின்றது.

இந்த தேசத்தின் முற்போக்கு சக்திகளின் தொடந்தேர்ச்சியிலான போராட்டங்களுக்குப் பின்னர் சுயாதீனமான பொலிஸ் சேவை, சுயாதீனமான பொதுச்சேவைகள், சுயாதீனமான தேர்தல், சுயாதீனமான நீதித்துறை  என நல்லாட்சிக் கட்டமைப்புக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அரசியலமைப்பின் மீது கொடுவரப்பட்ட 17 ஆவது திருத்தச் சட்டத்தை ஆளும் ஐக்கிய முன்னணி 18 ஆவது திருத்தம் ஒன்றின் மூலம் வலிதற்றதாய் ஆக்கியமை மிகப்பெரிய வரலாற்றுத் தவறாகும்.

துரதிஷ்டவசமாக மேற்படி 18ஆவது  திருத்தச் சட்டமூலத்தை மூன்றில் இரு பெரும்பான்மையுடன் பாராளு மன்றத்தில் நிறைவேற்றிக் எதேச்சதிகார ஜனாதிபதி முறையின் வரம்புகளை மேலும்  விஸ்தரிக்கவும் பதவியில் இருக்கின்ற அதிபர் தொடர்ந்தும் ஜானாதிபதியாக தெரிவு செய்யப்படுவதன் மூலம் சர்வாதிகாரம் நீடிக்கவும் முஸ்லிம் தனித்துவ அரசியலின் பெயரால் – உண்மையான இஸ்லாமிய  அரசியல் கோட்பாடுகளுக்கு முரணாக – ஆதரவு வழங்கப்பட்டமை மிகப் பாரிய அரசியல் வரலாற்றுத் தவறாகும்.

இவ்வாறான ஒரு நெருக்கடியான அரசியலமைப்பு மற்றும் வலுவேறாக்கல் சர்ச்சைகள் நாட்டில் இடம் பெறுகின்ற ஒரு கால கட்டத்தில் தான் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ளது.

 தூய நாளை” “பிவிதுரு ஹெடக்” “கிளீன் டுமாரோ” என்ற முன்னெடுப்பிற்கான தேசிய கவுன்ஸில் முன்வைத்துள்ள அரசியலமைப்பின் மீதான உத்தேச 19 சீர்திருத்த பிரேரணை முன்மொழிவுகளை முழுவதுமாக வாசித்தேன்.

வரை முறைகளற்ற நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதிமுறைக்குப் பதிலாக, வரை முறைகளுடன் கூடிய தேசத்தின் தலைவராக ஜனாதிபதியும், பாராளுமன்றத்தின் மேலான்மையை உறுதிப்படுத்தும் அதிகாரங்களை உடைய அரசின் தலைவராக பிரதம மந்திரியும் இருப்பதற்கான சீர்திருத்தப் பிரேரணைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

அதேவேளை ஏற்கனவே 17 சீர்திருத்தப் பிரேரணை அறிமுகப்படுத்திய சுயாதீனமான நீதித் துறை, தேர்தல், பொதுச் சேவைகள், பொலிஸ், ஊழல் மோசடி ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல், அரசியலமைப்பு கவுன்சிலுக்கான பிரதிநிதிகள் நியமனம்…

தொகுதிவாரி தேர்தல் முறையுடன் மட்டுபடுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறை, சகல சமூகங்களினதும் பிரதிநிதித் துவத்தை உறுதி செய்யும் தேர்தல் தொகுதி எல்லைகளின் மீள் நிர்ணயம் என பல்வேறு முற்போக்கான தேசத்தினதும் சகல சமூகங்களினதும் நலன்களை இலக்காக கொண்ட முன்மொழிவுகள் முன்வைக்கப் பட்டுள்ளன.

கடந்த காலங்களில் தேசத்திற்கும் சிறுபான்மையினருக்கும் பாதகாமான பல சட்டவக்கங்களுக்கு கை தூக்கி ஆதரவளித்த நமது முஸ்லிம்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மேற்சொன்ன 19 ஆவது சீர்திருத்த மொழிவுகளை ஒருமுறை வாசித்துப் பார்க்க வேண்டும்.

கீழ்காணும் விடயங்களில் தெளிவு தேவைப் படுகிறது

ஜனாதிபதி சட்டத்திற்கு மேலாக இருப்பாரா இல்லையா ? என்ற விடயத்தில் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை, அதேபோல் அவர் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது, (இருப்பது ஆபத்தானது) ஒரு முறை மாத்திரமே அவர் ஜனாதிபதியாக இருக்க முடியும்ஆனால் பின்னர் பொதுத் தேர்தல் மூலம் பிரதமராக வர முடியுமா..? என தெளிவாக கூறப்பட வில்லை…

முஸ்லிம் புத்திஜீவிகள், சமூக நல அமைப்புக்கள், சட்ட வல்லுனர்கள் கலாத்தின் கட்டாயம் கருதி அதனை ஆராய்ந்து பாருங்கள்.

ஒரு சில திருத்தங்களுடன் முஸ்லிம் சமூகம் இதற்கு முழு ஆதரவையும் வழங்க முடியும் , வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

அரசியல் வாதிகளால் வளர்க்கப்படும் மார்க்க விரோதக் கொள்கைகள்: வரலாறு  நமக்கு சொல்லும் பாடமென்ன?

-பைசர்அமான்-

இஸ்லாமிய அகீதாவுக்கு எதிரான ஷீஆ கொள்கை எமதூரில் பரவிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு இப்போது பல்வேறு பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையிலேயே தேசிய தௌஹீத் அமைப்பினரும் கடந்த வெள்ளிக்கிழமையன்று பகிரங்கப்பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

ஷீஆ கொள்கை என்றால் என்ன..? அதன் பாரதூரம் என்ன..? போன்ற விடயங்களை சாதாரணமக்கள் புரிந்து கொள்வதற்கும் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் இது போன்ற பிரச்சாரங்கள் உதவும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

இஸ்லாமிய அகீதாவுக்கு எதிரான சிந்தனைகள் எதுவாக இருந்தாலும்.. அதனைப் பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் ஈமானுள்ள அனைவரும் அதனைக் கண்டிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் முயற்ச்சிக்கவே வேண்டும்.

தூய இஸ்லாத்தின் மீது நாம் கொண்டுள்ள பற்றின் பிரதிபலிப்பே அதுவாகும். அவ்வாறு இஸ்லாத்தின் மீது அக்கறை கொண்டுள்ள நாம் அதனைப் பாதுகாப்பதற்கு முயலும்போது நீதமாகவும் இஸ்லாத்தின் அடிப்படை விதிகளை மீறாத வகையிலும் நடந்து கொள்ள வேண்டும்.

‘ஒருவர் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக அவர்மீது நீதி செலுத்துவதிலிருந்துதவறிவிடவேண்டாம்.’ என்ற நபியவர்களின் பொன்மொழி இங்கு நினைவுபடுத்த பொருத்தமானது.

மேலும், வெறும் அனுமானங்கள், ஊகங்கள் அடிப்படையில் ஒருவர் மீது குற்றம் சாட்டுவதும் பாரதூரமான விடயமாகும். அதுவும் ‘ இவர்கள் இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடுகளுக்கு எதிரான கொள்கைகளை பரப்புகிறார்கள்..அதற்கு துணை போகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டினை தெளிவான ஆதாரங்கள் எதுவுமின்றி இவ்வாறு  சுமத்துவதானது இஸ்லாத்தின் பார்வையில் மிகவும் பாரதூரமான ஒன்றாகும்.

ஏன் இதனைச் சொல்வேண்டியிருக்கிறது என்றால்…ஷீஆ விடயம் தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை சாதகமாகப் பயன்படுத்தி தமது அரசியல் வஞ்சத்தை  தீர்த்துக் கொள்ளும்  அற்ப அரசியல் நோக்கத்தோடு  சிலர்தொழிற்படுவது தெளிவாகவே தெரிகிறது.

குறிப்பாக, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினை(PMGG) இலக்கு வைத்து இந்தக் குற்றச்சாட்டுக்களை சிலர் மறை முகமாகவும், வெளிப்படையாகவும் முன்வைத்து பிரச்சாரம் செய்வதனை காணக்கூடியதாக இருக்கிறது.

இஸ்லாமிய அகீதாவுக்கு எதிரான கொள்கையானது அரசியல் பின்புலத்துடன் வளர்க்கப்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கிவிடக்கூடாது என்பதில் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும்என்பதுஉண்மையே.ஆனாலும் நாம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களின் நியாயத் தன்மையினை நமது கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டியது மிக முக்கியமாகும்.

அவ்வாறு மதிப்பீடு செய்தால்,

தமது அரசியல் இலாபங்களுக்காக மார்க்க விரோத கொள்கைகளை  நமதூரில் வளர்த்துப் பலப்படுத்தியது PMGGயா அல்லது ஏனைய அரசியல்தரப்புகளா..? என்பதனை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

வரலாறுகற்றுத்தரும்பாடம்என்ன..?

இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கை கோட்டபாடுகளுக்கு எதிரான அத்வைதக் கொள்கை எமதூரில் 1977 ஆம் ஆண்டிலிருந்தே பலமான நிர்வாக கட்டமைப்புக்களுடன் பகிரங்கமாகவே பரப்பப்பட்டு வந்திருக்கின்றது. வரலாறு நெடுகிலும் பல்வேறு அரசியல் வாதிகள் தமது அற்ப அரசியல் இலாபங்களுக்காக வெவ்வேறு கால கட்டங்களில் அத்வைதக் கொள்கையினை வளர்ப்பதற்கு துணைபோயிருக்கின்றார்கள்.

கடந்த 2003,2004 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தௌஹீத் உலமாக்களால் மேற்கொள்ளப்பட்ட மிகக் காத்திரமான பிரச்சாரங்கள் காரணமாக அத்வைதக் கொள்கையும் அதன் பிரச்சாரக் கட்டமைப்பும் ஆட்டம் காணத் தொடங்கியது.

அத்வைதக் கொள்கையை ஏற்றிருந்த பலரும் அதனைக் கைவிட்டு விட்டு தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர்.

இதனையடுத்து அத்வைதிகளுக்குத் தலைமை தாங்கியவர்  தொடர்ந்தும் காத்தான்குடியில் தனது பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் ஊரைவிட்டு வெளியேறினார். அத்தோடு கப்று வணங்கிகள் நடாத்திக் கொண்டிருந்த பல்வேறுபட்ட பித்ஆத்தான, ஷிர்க்கான நடவடிக்கைகளும் கைவிடப்பட்டன.

பலவருட கால மார்க்க விரோத நடவடிக்கைகள் ஒருவாறு முடிவுக்கு வந்து விட்ட திருப்தியில் நாமெல்லோரும் இருந்தோம்.

அப்போதுதான் 2006 ஆம் ஆண்டு நகரசபைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டில்தான் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு முதன் முதலில் தேர்தலிலும் இறங்கியது.

கண்டிப்பாக மார்க்க வரையறைக்குள் நின்றே அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் எனப் பிரகடனம் செய்த PMGG எச்சந்தர்ப்பத்திலும் மார்க்க விரோத கொள்கைகள் வளர்வதற்கு துணை நிற்க மாட்டோம் என்றும் மக்களுக்கு உறுதியளித்தது.

அப்படியே PMGG நடந்தும் கொண்டது. ஆனால் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் களமிறங்கிய SLMC அணி அத்வைதக் கொள்கை உடையவர்களையும் இணைத்துக் கொண்டே PMGG க்குஎதிராக களத்தில் இறங்கியது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈமானிய எழுச்சிகளில் முன்னின்று பாடுபட்ட சட்டத்தரணி அப்துல் ஜவாத், மர்சூக் அஹமட் லெவ்வை மற்றும் முபீன் போன்றோரும் அத்வைத ஆதரவாளர்களின் வாக்குகளுக்காக அவர்களோடு அணிசேர்வதற்கு தயங்கவில்லை.

இதன் விளைவாக ஊரில் எவ்வித செல்வாக்கும் தளமும் அற்றிருந்த அத்வைதகொள்கைக்கு ஒக்சிஜன் கொடுத்தது போல் அத்வைதிகளுள் ஒருவர் நகர சபையின் அதிகாரத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

அடுத்தடுத்த தேர்தல்களிலும் தனது அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்பிய ஹிஸ்புல்லாஹ் நலிவுற்றிருந்த அத்வைத வாதிகளை தொடர்ந்தும் பலப்படுத்தத் தொடங்கினார்.

அடுத்த கட்டமாக, வெளிப்படையில்லாத சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் அத்வைதிகளுக்கு எதிரான முர்த்தத் பட்டத்தனையும் வாபஸ் பெறச் செய்தார். இதற்குக் கைமாறாக 2008 ஆம் ஆண்டு நடந்த மாகாண சபைத் தேர்தலில் அத்வைத வாதிகள் தமது ஒட்டு மொத்த ஆதரவினையும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கினர்.

இதற்கு பிரதியுபகாரமாக, ஊருக்கு வருவதற்கு நாதியற்றிருந்த அத்வைதிகளின் தலைவரை 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பினன்னர் பெரும் VIP பாதுகாப்புடன் ஊர்வலமாக ஹிஸ்புல்லாஹ் வரவேற்று ஊருக்குக் அழைத்து வந்தார்.

மட்டுமின்றி அவர்களின் கொடியேற்றம், கந்தூரி போன்ற எல்லா பித்அத் வழி பாடுகளையும் அவர்கள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு உதிவி செய்தது மாத்திரமின்றி தானும் பங்கேற்று அவர்களை உற்சாகப்படுத்தினார். இதற்கு நன்றிக்கடனாக 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் ஹிஸ்புல்லாஹ்வின் பின்னால் அத்வைத ஆதரவாளர்கள் அணி திரண்டனர்.

அத்தேர்தலில் வெற்றி பெற்ற ஹிஸ்புல்லாஹ், அத்வைதக் கொள்கையினையும் அவர்களின் வணக்க வழிபாடுகளையும் தொடர்ந்தும் வெளிப்படையாகவே வளர்த்தார். வெளிநாட்டு ராஜதந்திரிகளையும், அமைச்சர்களையும் அழைத்து வந்து அவர்களுக்கு அரசியல் அந்தஸ்த்தினையும் அரசாங்க நிதிகளையும் பெற்றுக் கொடுத்தார். அவர்களின் பள்ளிவாயலைக் கட்டி முடிப்பதற்கு இது பேருதவியாக அமைந்தது.

மட்டுமின்றி அத்வைதிகளும், அவர்களின் தலைமைகளும் நமதூரின் அங்கீகாரத்தினையும் அந்தஸ்த்தினையும் எல்லா மட்டங்களிலும் பெற்றுக் பெற்றுக் கொள்வதற்கும் ஹிஸ்புல்லாஹ் உதவினார்.

தூய மார்க்கத்தின் வளர்ச்சிக்கு உதவாத அரசியல் வாதிகள், மார்க்கத்திற்கு விரோதமானவர்களின் வாக்குகளைப் பெறுவதில் மாத்திரம் போட்டி போட்டுக் கொண்டு அவர்களுக்கு உதவத் தொடங்கினார்கள். அதன் காரணமாக அதே காலப் பகுதியில் அத்வைதிகளின் நிறுவனங்களை பசீர் சேகுதாவூத் பாராளு மன்றத்தில் பதிவும் செய்துகொடுத்தார்.

இப்போது அவர்களின் தரப்பு பிரமாண்டமான பள்ளிவாயலை கொண்டிருப்பதற்கும் ஜூம்ஆநடாத்துவதற்கும் மாநாடு நடாத்துவதற்கும் இப்படியாக அரசியல் வாதிகள் பக்க பலமாக இருந்தனர்.

அதே காலத்தில் பயில்வான் தரப்பினரை வளர்த்து அவர்களின் தரப்பு வாக்குகளையும் பெற்றுக்கொள்வதற்கு ஹிஸ்புல்லாஹ் முயற்சிகளை மேற் கொண்டிருந்தார். அப்போது மாகாண சபை அமைச்சராக இருந்த ஹிஸ்புல்லாஹ் முடக்கப்பட்டிருந்த தமது கட்டுமானப் பணிகளை பயில்வான் தரப்பினர் மீளவும் தொடங்குவதற்கு அப்போதைய கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பிள்ளையானிடம் நேரடியாகவே அவர்களை அழைத்துச் சென்று உதவி பெற்றுக் கொடுத்தார்.

நமது தௌஹீத் உலமாக்கள் பிள்ளையானை பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்தித்த வேளை அவரே நேரடியாக இதனை நமது உலமாக்களிடம் உறுதிப்படுத்தியிருந்தார்.

இப்படியாகத்தான் நமதூரில் நலிவுற்றிருந்த மார்க்க விரோதக் கொள்கையினை ஹிஸ்புல்லாஹ்வும் ஏனையஅரசியல் வாதிகளும் இந்த நிலைக்கு வளர்த்து விட்டனர். இப்போது அவர்களில் ஒருவருக்கு நமதூரில் உதவித் தவிசாளர் என்ற அந்தஸ்த்தினையும் ஹிஸ்புல்லாஹ்தான் உருவாக்கிக்கொடுத்தார்.

பிற்காலப்பகுதியில்ஹிஸ்புல்லாவின்அணியில்இணைந்துகொண்டாடஷிப்லிபாறூக்கும்இதற்குவிதிவிலக்கல்ல. அரசியலுக்காகஅத்வைதிகளிடத்தில்செல்லமாட்டேன்எனஆர்மபத்தில்சொன்னஇவரும்  பின்னர்அத்வைதிகளிடம்சரணடைந்தார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பல தேர்தல்கள் நமதூரில் நடந்திருக்கின்றன.

2006 ஆம் ஆண்டில் நகர சபைத் தேர்தலும், 2008 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபைத்தேர்தலும், 2010 ஆம் ஆண்டில்  ஜனாதிபதி மற்றும் பாராளு மன்றத் தேர்தலும்

2011 ஆம் ஆண்டில் நகர சபைத் தேர்தலும்

2012 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் என இக்காலப்பகுதிகளில் ஐந்து தேர்தல்கள் நடந்துள்ளன.

இந்த 5 தேர்தல்களிலும் மிக வெளிப்படையாகவே மார்க்கத்திற்கு விரோதமான சக்திகளுடன் ஹிஸ்புல்லாஹ்வும், ஏனைய அரசியல் வாதிகளும் அணிசேர்ந்திருந்தனர். இது நாமெல்லோரும் கண்கூடாகக் கண்ட வரலாற்று அனுபவமாகும்.

அரசியலுக்காகமார்க்கத்தைவிலைபேசியதா  PMGG..?

இந்த வரலாற்றுஅனுபவத்தோடு ஒப்பிடும் போது இது வரை காலமும் மார்க்க விடயத்தில் PMGGயின்மிகத் தெளிவான நிலைப்பாடுகளையும் உறுதியினையும் எவரும் மறுக்க முடியாது.

நடைபெற்ற 5 தேர்தல்களில் மூன்றில் PMGG பங்கு பற்றியது. ஏனைய அரசியல் வாதிகளைப்போலவே மார்க்க விடயத்தை விலைபேசி வாக்குகளைப் பெற்றுக் கொள்ள PMGG யும் முயற்சித்திருக்க முடியும். ஆனால் அதனை அவர்கள் ஒரு போதும் செய்யவில்லை. அப்படி மார்க்கத்தை விலை பேசியிருந்தால் அவர்களும்கூட இதை விட பெரிய அரசியல் அதிகாரங்களைப் பெற்றிருக்க முடியும் என்பதும் நமக்குத் தெரியும்.

ஆக மொதத்தத்தில் மார்க்க விரோத சக்திகளை தமது அரசியலுக்காக வளர்ப்பவர்களாக PMGG யைத் தவிர மற்ற அரசியல் வாதிகள் அத்தனை பேருமே இருந்திருக்கிறார்கள்என்பது மட்டுமின்றி தொடர்ந்தும் இருந்து வருகிறார்கள்.

எனவே, நடு நிலையாக நின்று , தெட்டத் தெளிவான இந்த வரலாற்றின் அனுபவத்தின் அடிப்படையில் நாம் சித்திப்போமாக இருந்தால் தற்போது எழுந்துள்ள ஷீஆ விடயம்தொடர்பில் நாம் சந்தேகிக்க அல்லது பயப்பட வேண்டியது PMGG யை பற்றி அல்ல. மாறாக ஏனையஅரசியல் வாதிகளைப்பற்றியேயாகும்.

மார்க்கவிரோதஅரசியல்வாதிகளைதௌஹீத்சமூகமும்ஏன்முழுமையாகநிராகரிக்கவில்லை..?

மேலும் இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தையும் நாம் யதார்த்த பூர்வமாக சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

 அதாவது மார்க்கத்திற்கு விரோதமான கொள்கைகளை மிகவெளிப்படையாகவே ஹிஸ்புல்லாஹ்வும் ஏனையவர்களும் தமது அரசியல் இலாபங்களுக்காக வளர்த்து வரும் நிலையில், தௌஹீதை நிலைநாட்டப் பாடுபடுவதாகக் கூறும் உலமாக்களும் தௌஹீத் ஆதரவாளர்களும்களும் என நாம் அத்தனை பேருமே (அத்வைதிகள்தமதுகொள்கைக்காகஅணிதிரண்டதுபோல்) ஓரணியாகநின்று இதற்குஎதிராக மேற் கொண்ட நடவடிக்கைகள் என்ன..?

 அரசியல்வாதிகளின்இந்தமார்க்கவிரோதசெயல்களை சில உலமாக்கள் சூசகமாககண்டித்தாலும்அதற்கு எதிரான பிரச்சாரம் தெளிவாகவும் பலமாகவும் இருக்கவில்லை.

இன்னும் சொல்லப் போனால் மார்க்க விரோத சக்திகளை வளர்த்த ஹிஸ்புல்லாஹ்வுக்கு பக்கபலமாக தௌஹீத் உலமாக்கள் எனக் கூறிக் கொள்ளும் சிலர்எவ்விததயக்கமுமின்றி செயல் பட்டனர்; இன்னமும் செயல் பட்டும் வருகின்றனர். தௌஹீதை போதிப்பதாக கூறும் ஒரு மார்க்க நிறுவனம் கூட மிக வெளிப்படையாகவே ஹிஸ்புல்லாஹ்வின்அரசியலுக்கு ஆதரவாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது.

இன்னொரு வகையில் சொன்னால், மார்க்க விரோத சக்திகளை வளர்க்கும் அரசியலுக்கே இந்ததௌஹீத் அறிவியல் நிறுவனம் தனது வெளிப்படையான ஆதரவினை வழங்கிவருகின்றது.

அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி மார்க்கத்திற்கு விரோதமானவற்றை நிராகரிக்கவேண்டும் என்ற அடிப்படை ஈமானிய தெளிவும் கூட நமது தௌஹீத் சகோதரர்களிடம் அத்தனைபேரிடமும் முழுமையாக இருக்கவில்லை. அதன் காரணமாக மார்க்க விரோத சக்திகளுக்கு ஆதரவளித்து வளர்த்து வந்த அரசியல் வாதிகளுக்கு கணிசமான தௌஹீத் உலமாக்களும் ஆதரவாளர்களும் எவ்வித தயக்கமுமின்றி நடந்து முடிந்த எல்லாத் தேர்தல்களிலும் ஆதரவளித்தனர் என்பது பெரும் வேதனைக்குரிய விடயமாகும்.

மேலும், தமக்கு வேண்டிய சிறியசிறிய உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக இப்படி மார்க்கத்திற்கு துரோகமிழைக்கும் அரசியல் வாதிகளை தமது தஃவா நிறுவனங்களுக்கு அழைத்து வரவேற்று உபசரித்து கொரவிப்பதற்கும் நமது தௌஹீத் சகோதரர்கள் தயங்கவில்லை என்பதும் இன்னுமொரு வேதனைக்குரிய அவதானமாகும்.

இவ்வாறு மார்க்கத்திற்கு துரோகமிழைக்கும் அரசியல் சக்திகளை எதிர்த்து பகிரங்கமாகக் கண்டிப்பது ஒரு புறமிருக்க மறைமுகமாகவேனும் அதனை நிராகரிக்கும்  அளவிற்கு  இஸ்லாம் பற்றிய தெளிவு இன்னும் நமக்கு ஏற்படவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

ஏனெனில் அந்தப்  தெளிவு இருந்திருக்குமேயானால்

‘தேர்தல்களில் வாக்களிப்பில் நிராகரித்தல்’ என்கின்ற ரகசிய நிராகரிப்பையாவது தௌஹீத் சமூகம் அல்லாஹ்வுக்காக ஒட்டு மொத்தமாக செய்திருக்கவேண்டும். ஆனால் துரதிஸ்ட வசமாக அப்படி நடக்க வில்லை.

மார்க்கவிடயத்தில்யாரைநம்பலாம்…?

இந்த அனுபவங்களின்அடிப்படையில் பார்க்கும் போது அரசியல் நோக்கங்களுக்காக மார்க்க விடயங்களில் விட்டுக்கொடுக்க முடியாது என்ற விடயத்தில் நமது தௌஹீத் வாதிகளை விடவும் தெளிவோடும் உறுதியோடும் PMGG இருந்துவருகின்கிறது என்பதே யதார்த்தபூர்வமான வரலாற்று உண்மையாகும்.

மேலும்,இதேவரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் நோக்கும் போது ஷீஆக் கொள்கையை வளர்ப்பதற்கு PMGG பக்க பலமாக இருக்கிறது என்றகுற்றச்சாட்டு எவ்வளவு தூரம் அபத்தமானது என்பது நடுநிலையாக சிந்திக்கின்ற அனைவருக்கும் புரியும்.

அது மாத்திரமின்றி ‘மார்க்கவிவகாரங்களை பாது காத்தல்’ என்ற விடயத்தில் நம் மத்தியில் இருக்கும் அரசியல் தரப்புகளுக்குள் PMGG யை மாத்திரமே நம்ப முடியும் என்பதும் மிகத் தெளிவான ஒன்றாகும்.

மறுக்க முடியாத உண்மை இப்படியிருக்க,ஷீஆ விவகாரத்தில் PMGG யின் மீது பழிபோட நினைப்பவர்கள் அரசியல் நோக்கத்திற்காகவே இதனைச் செய்கிறார்கள் என்பதனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.அத்தோடுமார்க்கத்தில் உண்மையான அக்கறை கொண்டவர்களாக இவர்கள் இருந்தால் இப்படி மார்க்வரையறைகளையும்மீறி அநியாயமான குற்றச்சாட்டுக்களை முன் வைக்க மாட்டார்கள்.

இறுதியாக இன்னுமொரு விடயத்தையும் இங்கு சொல்லியாக வேண்டும்

PMGG  யின் உயர்மட்ட உறுப்பினர்கள்எவரும் அகீதாவுக்கு முரணான ஷீஆக் கொள்கையை வளர்ப்பவர்களாக இருப்பது உறுதி செய்யப்பட்டால் அது தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை PMGG தயங்காமல் மேற் கொள்ளும் என்பதனையும் நாம் நிச்சயமாக நம்பலாம்.

ஏனெனில் ஏனைய அரசியல் தரப்புக்களைப் போலன்றி தமது உயர்மட்ட உறுப்பினர்கள் தவறிழைக்கும்போது அதனை மூடி மறைத்து அவர்களைப் பாதுகாக்காமல் உரிய நடவடிக்கைகளை PMGG எவ்வாறு மேற் கொண்டது என்ற  வரலாறும் நம் கண்முன்னே இருக்கிறது.

எனவே, ஷீஆக்  கொள்கைக்கு எதிரான பிரச்சாரத்தை நாம் முன்னெடுக்கும் அதே வேளை, அரசியல் ரீதியான எமது சொந்தக் கோப தாபங்களைத் தீர்த்துக் கொள்வதற்கானவாய்ப்பாகஇதனை  பயன்படுத்தாது,   இறைவனின் திருப்தியைப் பெற்றுக் கொள்ளும் வகையில் நேர்மையோடும் இஹ்லாசோடும் அதனை முன்னெடுப்போம்.

அப்போதுதான் நமதுமுயற்சிகளுக்கு நல்ல பலனும் அல்லாஹ்வின் கூலியும் கிடைக்கும்

முஸ்லிம் காங்கிரஸ்: குலையும் கட்டுக்கோப்பு

-ஷுஹைப்-

ஜனாதிபதித் தேர்தலுக்கான காய்நகர்த்தல்களில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. கடந்த காலங்களில் பாராளுமன்ற ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் , ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாகவும் விளங்கிய அரசியல் வானில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கப் போகின்றது என்ற வினா எழுப்பப்பட்டு வருகின்றது.

  [Read more…]

‪மீராவோடை மன்பஹுல் ஹுதாவும் ஷீயா இஷமும்‬

Afghan Shiites beat themselves with chains and blades to mark Ashura in Kabul, Afghanistan, Friday, Oct. 31, 2014. Shiites mark Ashura, the tenth day of the month of Muharam to commemorate the Battle of Karbala when Imam Hussein, a grandson of Prophet Muhammad, was killed. (AP Photo/Rahmat Gul)

Afghan Shiites beat themselves with chains and blades to mark Ashura in Kabul, Afghanistan, Friday, Oct. 31, 2014. Shiites mark Ashura, the tenth day of the month of Muharam to commemorate the Battle of Karbala when Imam Hussein, a grandson of Prophet Muhammad, was killed. (AP Photo/Rahmat Gul)

-இனாமுல்லா கான்-

ஷீயா மதத்தைச் சேர்ந்தவர்கள் ஈரானைத் தலைமையாகக் கொண்டு இலங்கையில் இருக்கும் இஸ்லாமிய பெயர்தாங்கி இயக்கங்களுடன் கைகோர்த்து சமகச்சிதமாக தனது மதப்பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்கள்.

இலங்கையை இலக்கு வைத்துச் செயல்படும் வழிகெட்ட ஷீயா மதத்தினர் பல விதமான சேவைகளின் போர்வையில்தான் மதப்பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள். ஈரான் அரசாங்கத்தின் இலங்கைத் தூதரகம் தான் இதற்கான அனைத்து செலவினங்களையும் பொருப்பெடுத்து செய்து கொண்டிருக்கிறது. கிருத்தவ மிஷனரிகளின் செயல்பாட்டைப் போல் ஷீயாக்களும் வீடு கட்டிக் கொடுத்தல், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்ற காரியங்களின் மூலம் மதமாற்ற முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

இலங்கையில் இயங்கும் மீடியாக்களை தன் வசப்படுத்துவதின் மூலமும் இந்த ஷீயாப்பிரச்சாரம் அதிகமாக முன்னெடுக்கப்படுகிறது. தனியார் தொலைக்காட்சிகளில் ஈரானிய கலாச்சாரம் தொடர்பான நிகழ்சிகளை ஒளி, ஒலி பரப்புதல், தனியார் வானொலிகளில் தூய இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரனான மூட நம்பிக்கைகள் நிறைந்த கருத்துக்களை பரப்புதல், ஆஷுரா தினக் கொண்டாட்டம், மீலாதுன் நபி விழாக் கொண்டாட்டம் என்ற மார்க்கத்தில் இல்லாத கொண்டாட்டங்களையெல்லாம் உருவாக்கி அவற்றை மார்க்கத்தில் உள்ளதைப் போல் மக்கள் மத்தியில் காட்ட முனைவது.

இலங்கைக்கான ஈரானிய தூதரகத்தின் மூலம் தூது என்ற ஒரு பத்திரிக்கை வெளியிடப்படுகிறது. இந்தப் பத்திரிக்கையில் ஷியாக் கருத்துக்கள் பரப்பப்படுகின்றமை. தூது என்ற ஷியாக்களின் இந்தப் பத்திரிக்கையில் அதிகமான கட்டுரைகள் அஸ்ஹரீக்களினாலும், நளீமிக்களினாலும் தான் எழுதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இஷாஅத் அஹ்லுஸ் ஸுன்னா(?) என்ற ஷியா அமைப்பின் மூலம் மார்க்க விரோ கருத்துக்களை புத்தகங்கள் மற்றும் வானொலி வாயிலாக பரப்புவது. இந்த அமைப்பு வெற்றி என்ற பெயரில் ஒரு சஞ்சிகையையும் வெளியிடுகிறது.

முஆவியா மற்றும் யஸீத்(ரலி) ஆகியோரை இழிவுபடுத்தும் புத்தகங்கள், துண்டுப்பிசுரங்கள் ஆகியவற்றை விநியோகிப்பதுடன், சாதாரண மற்றும் உயர் தர பாடத்திட்டத்தில் இஸ்லாமிய நாகரீகம் என்ற பெயரில் நபித்தோழர்களை இழிவுபடுத்துவது. அஹ்லு பைத்கள் பற்றிய தவறான செய்திகள் அடங்கிய வெளியீடுகள், ஹஸன் ஹுஸைன், ஸைனப், மஹ்தி என்ற பெயர்களில் இந்தியாவின் பெங்களுரிலிருந்து வெளியாகும் புத்தகங்களை இங்கு விநியோகம் செய்வது.

மர்சூக் மௌலவி

இதன் அடிப்படையில் மீராவோடையில் மன்பஉல் ஹுதா என்ற பெயரில் ஆண்களுக்கான மத்ரஸா நடத்தப்பட்டுவருகிறது. இந்த மத்ரஸாவில் இருந்து இது வரை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வெளியாகியுள்ளார்கள். இவர்கள் ஷீயா மதத்தைப் பரப்பும் தொழிலில் மும்முரமான ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. இந்த மத்ரஸாவில் பட்டம் பெருபவர்கள் ஈரான் தலை நகரில் உள்ள கும் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு ஷீயா சிந்தனையில் பட்டம் பெற்று இலங்கை அனுப்பப்படுகிறார்கள். இவ்வாறு பட்டம் பெற்று வந்தவர்களில் ஒருவர்தான் மர்சூக் மௌலவி அவா்கள்.

நமது பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் ஷீயாக்கள் தற்போது இந்தஹாதி, ஹாஷிமி, என இரண்டாக பிரிந்துள்ளனா் இதில் ஹாஷிமி ஷீயா மிகவும் கடும் போக்கைகொண்டது இந்தஹாதி ஷீயாக்களைக்கூட முனாபிக்குகள் என்ற வார்த்தைகளை கூறி ஏசும் அளவுக்கு இயக்கவெறி பிடித்தவா்கள்.

இதன் தேசிய தலைவா் லாபிர் மதனி (நளீமி) அவா்கள். கல்குடாவுக்கு தனி தலைவா் இருந்தாலும் மர்சூக் மௌலவியின் கட்டுப்பாட்டில்தான் அனைத்தும் உள்ளது மர்சூக் மௌலவி அவா்கள் வெளியில் கருத்து சகிப்புள்ளவராக தென்பட்டாலும் உள்ளுக்குள் முரண்படுபவா்களை அடக்கத்துடிக்கும் வஞ்சகத்துடன் செயற்படுபவா். முரண்படும் சக ஷீயாக்களையும் கொல்லத்துடிக்கும் மனபாங்கு கொண்டவா். ICC என்றழைக்கப்படும் ஒரு நிலையத்தை மீராவோடை ஆலிம் வீதியில் கொண்டிருக்கும் இவா்கள் வளா்ந்து வந்தால் இப்பகுதிக்கு பெரும் அபாயம் இருக்கின்றது. பெரும்பாலும் ஷீயா அகீதா பற்றி கற்றவா்களைவிட நன்கு கற்றவராக மர்சூக் மௌலவியே உள்ளார். மன்பஉல் ஹுதாவை 100 வீதம் ஹாஷிமி ஷீயாயிஷமாக்க இவா்கள் திட்டமிட்டு செயல்படுகின்றார்கள்.

இவ்வாறு தங்களுக்குள்ளேயே பிளவுபட்டுக்கிடக்கும் இவா்களுக்கு ஷீயா-ஸுன்னி ஒற்றுமையைப்பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கின்றது?

ஹாஷிமி ஷீயாக்கள் மிக திட்டமிட்டு மாணவா்களைப் பயன்படுத்தி ஏற்கனவே இருந்த மத்ரஸா கட்டமைப்பை சீர்குலைக்கும் வகையில் கலகங்களை தூண்டிவிட்டுள்ளனா் இதன் மூலம் மன்பஉல் ஹுதா மத்ரஸா தலைவரை நெருக்கடிக்குள்ளாக்கி அவா் வேறு வழியில்லாமல் மர்சூக் மௌலவி அவா்களை அதிபர் பதவிக்கு அழைக்க வேண்டும் என்பதுதான் இவா்களது உள் நோக்கமாகும்.

மர்சூக் மௌலவி அவா்கள் ஜனவரியிலிருந்து தலைவராகவுள்ளார் ஏற்கனவே இவா் கடும்போக்கு ஷீயாவாக இருந்ததால் ஊராரின் அலுத்தத்தால் வெளியேற்றப்பட்டது ஊர் அறிந்தவிடயம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை முறியடிக்க அனைவரும் ஒன்றினைவது கல்குடா மக்களின் கடமை‬

கல்குடா டுடே இணையத்தில் மே 12, 2012 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை வாசகர் தகவலுக்காக மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது

நன்றி‬ கல்குடா டுடே

முழிக்கும் மு.கா. .

SLMC logoஎம். எஸ்.எம். ஐயூப்

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் கரையோர பகுதிகளை ஒன்றிணைத்து தனி மாவட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கை இந் நாட்களில் அரசியல் களத்தில், குறிப்பாக சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

[Read more…]

அனாதையாகிப்போன நமது அரசியலும் நம்பிக்கை தரும் புதிய நகர்வுகளும்

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

முஸ்லிம்கள் அரசியல் அனாதைகளாயினர் உண்மைதான், ஆனால் யாசகர் கைப்பிள்ளையாக இன்று நமது அரசியலே அனாதையாகிக் கிடக்கிறது, யாசகர்கள் கூட “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” எனும் சரணாகதி நிலை அடைந்து அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

[Read more…]

‘கல்முனை கரையோர மாவட்டம்’ – ஒரு தேர்தல்கால கனவு மட்டும்தானா?…..

faleelஎஸ்.எல்.எம்.பளீல், (உச்சபீட உறுப்பினர்-சிலமு காங்கிரஸ்,  முன்னாள் ஜாமிஆ நழீமியா விரிவுரையாளர்)

‘பிழையான நேரத்தில் எடுக்கப்படும் சரியான தீர்மானங்களும் பிழையானவையாகும். அதேபோல் சரியான நேரத்தில் எடுக்கப்படும் பிழையான தீர்மானங்களும் பிழையானவையாகும். ஆகவே,கால நேரம் பார்த்து பொருத்தமான நேரத்தில் எடுக்கப்படும் சரியான தீர்மானங்களே சரியானவையும் சாத்தியப் பாடானவையுமாகும்’ 

[Read more…]

குருக்கள்மடத்துப் பையன் (4)

அம்பலமாகும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ரெதிதென்ன கூட்டம்

எஸ்.எம்.எம்.பஷீர்

சமூகத்தின் பல மட்டங்களிலும் புலிகளுக்காக விசுவாசமாக செயட்பட்ட புலி ஆதரவாளர்கள், தகவல் சொல்லிகள், (உளவாளிகள்) பலர்  “நாட்டுப்பற்றாளர்கள்” என்று புலிகளால் அவர்களின் மரணத்தின் பின்னர் வெளிப்படையாக பிரகடணப்படுத்தப்பட்டனர். 

[Read more…]

கலைந்து போன கனவுகள்

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு நெடுகிலும் காலத்துக்குக் காலம் பல்வேறு கனவுகள் தோன்றிக் கலைந்து சென்று கொண்டிருப்பதனைப் பார்க்கின்றோம். நமது கையாலாகாத தனத்தினால் இன்று வரை ஒரு கனவைக் கூட நனவாக்கிக் கொள்ள முடியாது போய் உள்ளது. அந்தவகையில் சமகால அரசியல் வரலாற்றுக் கனவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.

[Read more…]

குருக்கள்மடத்துப் பையன் (3)

காணாமல் போன காத்தான்குடி முஸ்லிம்களின் விபரம்

எஸ்.எம்.எம்.பஷீர்

நாட்டுப்பற்றாளர் என்று புலிகளால் வெளிப்படையாக பிரகடனப்படுத்தப்படாமல், பகிரங்கமாகக் கொண்டாடப்படாமல் சிலர் புலிகளின் உளவாளிகளாக செயற்பட்டு புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளின் பொழுது, அல்லது புலிகளின் மீது இராணுவம் நடத்திய தாக்குதல்களின் பொழுது இறந்துள்ளனர். இவர்கள் மாவீரர்கள் என புலிகளால் அழைக்கப்படவில்லை. இவர்கள் புலி சீருடை அணிந்தவர்கள் அல்லர். நாட்டுப்பற்றாளர்கள் என்று பகிரங்கமாக வெளியிடப்பட்ட எந்த நிரலிலும் இவர்களின் பெயர்களை புலிகள் கச்சிதமாக தவிர்த்து வந்துள்ளனர். அவர்களில் சிலருள் சந்திரபோசும் ஒருவர்,

தயாபரன்

தயாபரன்

கிருஷ்ணகுமார்

கிருஷ்ணகுமார்

அவரைப்போலவே மக்களுக்குள் மக்களாக கலந்து செயற்பட்ட புலிகளுள் “நாட்டுப்பற்றாளர்” கிருஷ்ணகுமார் மற்றும் “நாட்டுப்பற்றாளர்” தயாபரன் ஆகியோரின் பாத்திரங்கள் தேடுதலுக்கு உரியவை. இவர்களின் புகைப்படங்களை பிரசுரிப்பதன் மூலம் பலர் இவர்களை இலகுவில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். இப்பொழுது குருக்கள்மட மனிதப் படுகுழிகள் தோண்டப்பட முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்ற வேளையில் இவர்களைப் பற்றியும் விசாரணைகள் முடுக்கி விடப்படல் வேண்டும் !

[Read more…]

கர்பலா: நிஜமும் நிழலும்

karbalaஅஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம்

முஹர்ரம் முஸ்லிம்களின் புது வருடம். அல்லாஹ்வால் சிறப்பிக்கப்பட்ட மாதங்களில் ஒன்று. ஹிஜ்ரத் எனும் இஸ்லாமிய சமுதாய உருவாக்கத்தை இலட்சியமாகக் கொண்ட பயணத்தின் அடிப்படையில் இரண்டாம் கலீபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இஸ்லாமிய ஆண்டு. இந்தவகையில் புனித முஹர்ரம் மாதம் பல சிறப்பியல்புகளை கொண்டமைந்தது. இஸ்லாமிய வரலாற்றில் நடந்த பல நிகழ்வுகளைக் கொண்ட ஒரு மாதம்.

[Read more…]