Advertisements

கானல்நீராய் கல்முனையின் அபிவிருத்தி??? அங்கலாய்க்கும் மக்கள்

-எம்.வை.அமீர் –

கல்முனைத்தாய் தனது கடந்தகால வரலாற்றில் பல்வேறுபட்ட தலைவர்களையும்இ சிறந்த அடைவுகளையும், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பேசும் அளவுக்குஇ முஸ்லிம்களின் தலைநகர், என்ற அந்தஸ்த்தையும் ஏன் பல்வேறுபட்ட அபிவிருத்திகளையும் கண்டாள்.

கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் முதல் எம்.சீ.அகமட், ஏ.ஆர்.எம்.மன்சூர், எம்.எச்.எம்.அஷ்ரப், எம்.எம்.முஸ்தபா (மையோன்) எச்.எம்.எம்.ஹரீஸ் வரை பாரளமன்ற உறுப்பினர்களையும் கல்முனைத்தாய் ஈன்றாள். அத்துடன் உயர் கல்வியாளர்கள்இ சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், விவசாயிகள்இ மீனவர்கள் என பல்வேறு தரப்பினரையும் தன்னகத்தே உள்ளடக்கினாள்.

கல்முனைத்தாய் பெற்ற மக்கள் ஒற்றுமைக்கு பெயர்போனவர்கள். அவர்களுக்குள் முரன்பட்டுக்கொன்டாலும் இறுதியில் ஒன்றுபட்டு விடுவார்கள். இதற்க்கு பல்வேறு [Read more…]

எதிரணியின் ஜனாதிபதி முறை ஒழிப்பு ஒப்பந்த கைச்சாத்து நாளை

sobi-அஷ்ரப் ஏ சமத்-

எதிர்வரும் 17ஆம் திகதி திங்கற்கிழமை மு.பகல் 11 மணிக்கு கொழும்பு கலாதாரி ஹோட்டலில் மாதுலாவே சோபித்த தேரர் முண்னிலையில் சகல அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைய ஓழிப்பதற்கான ஒப்பந்தத்தில் 19க்கும் மேற்பட்ட கட்சிகள் கைச்சாத்திட உள்ளன. சிலநேரம் இவ் நிகழ்வு நடைபெறும் இடம் மாற்றப்படும் வாய்ப்பு உள்ளது. என மாதுலவாவே தேரரின் என்.ஜி.ஓ அமைப்பின் பிரதான அமைப்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரத்தின தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வுக்கு தணியார் வைத்தியசாலையில் தங்கியிருக்கும் மாதுலாவேத் தேரர் தண்னை ஒர் அம்புலன்ஸ் வண்டி ஊடாகச் கொண்டு செல்லும்படியும் இந்த ஒப்பந்தத்தை என் முன்னிலையில் நிறைவேற்றிவிடல் வேண்டும். அவரை வைத்தியசாலையில் பார்வையிடும் கட்சித் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எக்காரணம் கொண்டும் இந் நிகழ்வை ஒத்திப்போட வேண்டாம.; என அவர் தெரிவித்துள்ளார். அதற்காகவே அவர் தணியார் மற்றும் அவரது சொந்த தணிப்பட்ட வைத்தியர் ஒருவரது வைத்தியசாலையில் தங்கி நின்று சிகிச்சை பெற்று வருகின்றார்.

sobith

இந் நிகழ்வில் எதிர்கட்சியான ஜக்கிய தேசியக் கட்சி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மேலும் அர்ஜூன ரணதுங்க, மங்கள சமரவீர, கரு ஜயசுரிய, முன்னாள் நீதியரசர்கள் சரத் என். சில்வா, சிராணி பண்டாரநாயக்க ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்;டுள்ளனர்.

அத்துடன் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் மாற்று அமைப்பு, சரத் பொண்சேகாவின் கட்சி, தேசிய ஜக்கிய முன்னணி, மவ்பிமா ஜனத்தா கட்சி, ருஹூனு ஜனத்தா கட்சி. ஜக்கிய மக்கள் பெரமுனே, ஊடகவியலாளர் சங்கம், சுதந்திர ஊடகவியலாளர்கள் அமைப்பு, புத்திஜீவிகள் அமைப்பு, பல்கலைக்கழக பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் அமைப்பு, இடதுசாரியில் பிரிந்த அமைப்பினர், இலங்கை கொமிஸ் கட்சியின் பிரிந்த அமைப்பினர், நவ சிகல உருமைய, மேலும் பல அமைப்புக்கள் இவ் ஒப்பந்தத்தில் கைசாத்திடுவர்.

18 ஆவது திருத்தம் தேசத்துரோகம், 19 ஆவது திருத்த முன்மொழிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது 

downloadஅரசியலமைப்பின் மீதான 18 ஆவது திருத்தம் தேசத்துரோகமாகும், உத்தேச 19 ஆவது திருத்த முன்மொழிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாகும். இஸ்லாமிய அரசியல் கோட்பாடுகளை புறக்கணித்தே முஸ்லிம் அரசியல் வாதிகள் செயற்படுகிறார்கள்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அரசியலில் நீதி, சமத்துவம், நல்லாட்சி என்ற பொதுவான விடயங்களில் இன மத மொழி குல, நிற வகுப்பு பேதங்களுக்கு அப்பால் மனித குல மேம்பாட்டிற்காக செயற்படுவது விதிக்கப்பட்ட கடமையாகிறது.

அதேபோல் இன, மத மொழி, குல, நிற வேறுபாடுகளுக்கும் பாகுபாடுகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் தாங்களோ அல்லது வேறு எந்த சமூகமோ உள்ளாகின்ற பொழுது அவற்றிற்கு எதிராக தமக்கு முன்னால் உள்ள சகல வழி வகைகளிலும் போராடுவதும் அவர்கள் மீது விதிக்கப்பட்ட கடமையாகும்.

அக்கிரம ஆட்சியாளர்கள்  எந்த இனத்தை மதத்தை குலத்தை நிறத்தை வகுப்பைச் சேர்ந்தவர்களாயினும் சரியே அதாவது இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரியே.

ஒருநாட்டின் சர்வாதிகாரி ஆட்சியாளன் மன்னராக இருந்தாலும் சரி, தெரிவு செய்யப்பட்ட அரச அதிபராக இருந்தாலும் சரி நல்லாட்சி விழுமியங்களை உத்தரவாதப்படுத்துகின்ற அமானிதமான தார்மீகப் பொறுப்பே அவரிடம் கையளிக்கப் படுகின்றது.

நீதி நேர்மை சமாதானம், பொருளாதார மேம்பாடு, கல்வி, உயர்கல்வி, தொழில் வாய்ப்பு, அடிப்படை வசதிகள்சுகாதாரம் என சகல துறை அபிவிருத்தி திட்டங்களிலும் சமத்துவம் என்பவற்றை உறுதிப்படுத்தி, சர்வாதிகாரம்அராஜகம், ஊழல், மோசடி, இன, மத, மொழி, குல நிற பாகுபாடுகள் அடக்குமுறைகளை ஒழித்துக் கட்டுகின்ற ஆட்சிக் கட்டமைப்புகளை நோக்கிய போராட்டங்களில் முன்னிற்க வேண்டியவர்கள் முஸ்லிம்கள்.

எந்தவொரு ஆன்மாவையும் சமூகத்தையும் அதன் சக்திக்கு அப்பால் எதனையும் சாதித்துவிடுமாறு எல்லாம் வல்ல அல்லாஹ் எதிர்பார்ப்பதில்லை.

அந்தவகையில் தற்பொழுது எமது நாட்டில் இருக்கின்ற குறைந்தபட்ச ஆட்சிக் கட்டமைப்புகளான ஜனநாயக ஸ்தாபனங்களை, அதிகார மையங்களை, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துகின்ற  நிறுவனங்களை, நீதித்துறையை, பொது நிர்வாக சேவைகளை, தேர்தல் ஆணையகத்தை மற்றும் தேர்தல் முறைமைகளைஇனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை, மத கலாச்சார சுதந்திரத்தை, சமாதான சகவாழ்வை  முற்போக்கு சக்திகளுடன் இணைந்து கட்டிக் காப்பது முஸ்லிம்கள் மீது கடமையாகிறது.

அந்த வகையில் இந்த நாட்டின் சாபக்கேடாக பார்க்கப்படுகின்ற வரைமுறைகளற்ற எதேச்சாதிகார நிறைவேற்று அதிகாரங்கள் மிக்க ஜனாதிபதி முறையினை ஒழித்து மக்கள் பிரதிநிதிகளைக்  கொண்ட பாராளுமன்றத்தின் மேலான்மையை உறுதிப்படுத்தி நல்லாட்சி குணாதிசியங்களை உறுதிப்படுத்துகின்ற ஆட்சி மற்றும் நிர்வாக கட்டமைப்புக்களை, சுயாதீனமான அரச அங்கங்களை கட்டி எழுப்புவதில் முஸ்லிம்களுக்கும் பாரிய பங்கு இருக்கின்றது.

இந்த தேசத்தின் முற்போக்கு சக்திகளின் தொடந்தேர்ச்சியிலான போராட்டங்களுக்குப் பின்னர் சுயாதீனமான பொலிஸ் சேவை, சுயாதீனமான பொதுச்சேவைகள், சுயாதீனமான தேர்தல், சுயாதீனமான நீதித்துறை  என நல்லாட்சிக் கட்டமைப்புக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அரசியலமைப்பின் மீது கொடுவரப்பட்ட 17 ஆவது திருத்தச் சட்டத்தை ஆளும் ஐக்கிய முன்னணி 18 ஆவது திருத்தம் ஒன்றின் மூலம் வலிதற்றதாய் ஆக்கியமை மிகப்பெரிய வரலாற்றுத் தவறாகும்.

துரதிஷ்டவசமாக மேற்படி 18ஆவது  திருத்தச் சட்டமூலத்தை மூன்றில் இரு பெரும்பான்மையுடன் பாராளு மன்றத்தில் நிறைவேற்றிக் எதேச்சதிகார ஜனாதிபதி முறையின் வரம்புகளை மேலும்  விஸ்தரிக்கவும் பதவியில் இருக்கின்ற அதிபர் தொடர்ந்தும் ஜானாதிபதியாக தெரிவு செய்யப்படுவதன் மூலம் சர்வாதிகாரம் நீடிக்கவும் முஸ்லிம் தனித்துவ அரசியலின் பெயரால் – உண்மையான இஸ்லாமிய  அரசியல் கோட்பாடுகளுக்கு முரணாக – ஆதரவு வழங்கப்பட்டமை மிகப் பாரிய அரசியல் வரலாற்றுத் தவறாகும்.

இவ்வாறான ஒரு நெருக்கடியான அரசியலமைப்பு மற்றும் வலுவேறாக்கல் சர்ச்சைகள் நாட்டில் இடம் பெறுகின்ற ஒரு கால கட்டத்தில் தான் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ளது.

 தூய நாளை” “பிவிதுரு ஹெடக்” “கிளீன் டுமாரோ” என்ற முன்னெடுப்பிற்கான தேசிய கவுன்ஸில் முன்வைத்துள்ள அரசியலமைப்பின் மீதான உத்தேச 19 சீர்திருத்த பிரேரணை முன்மொழிவுகளை முழுவதுமாக வாசித்தேன்.

வரை முறைகளற்ற நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதிமுறைக்குப் பதிலாக, வரை முறைகளுடன் கூடிய தேசத்தின் தலைவராக ஜனாதிபதியும், பாராளுமன்றத்தின் மேலான்மையை உறுதிப்படுத்தும் அதிகாரங்களை உடைய அரசின் தலைவராக பிரதம மந்திரியும் இருப்பதற்கான சீர்திருத்தப் பிரேரணைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

அதேவேளை ஏற்கனவே 17 சீர்திருத்தப் பிரேரணை அறிமுகப்படுத்திய சுயாதீனமான நீதித் துறை, தேர்தல், பொதுச் சேவைகள், பொலிஸ், ஊழல் மோசடி ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல், அரசியலமைப்பு கவுன்சிலுக்கான பிரதிநிதிகள் நியமனம்…

தொகுதிவாரி தேர்தல் முறையுடன் மட்டுபடுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறை, சகல சமூகங்களினதும் பிரதிநிதித் துவத்தை உறுதி செய்யும் தேர்தல் தொகுதி எல்லைகளின் மீள் நிர்ணயம் என பல்வேறு முற்போக்கான தேசத்தினதும் சகல சமூகங்களினதும் நலன்களை இலக்காக கொண்ட முன்மொழிவுகள் முன்வைக்கப் பட்டுள்ளன.

கடந்த காலங்களில் தேசத்திற்கும் சிறுபான்மையினருக்கும் பாதகாமான பல சட்டவக்கங்களுக்கு கை தூக்கி ஆதரவளித்த நமது முஸ்லிம்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மேற்சொன்ன 19 ஆவது சீர்திருத்த மொழிவுகளை ஒருமுறை வாசித்துப் பார்க்க வேண்டும்.

கீழ்காணும் விடயங்களில் தெளிவு தேவைப் படுகிறது

ஜனாதிபதி சட்டத்திற்கு மேலாக இருப்பாரா இல்லையா ? என்ற விடயத்தில் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை, அதேபோல் அவர் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது, (இருப்பது ஆபத்தானது) ஒரு முறை மாத்திரமே அவர் ஜனாதிபதியாக இருக்க முடியும்ஆனால் பின்னர் பொதுத் தேர்தல் மூலம் பிரதமராக வர முடியுமா..? என தெளிவாக கூறப்பட வில்லை…

முஸ்லிம் புத்திஜீவிகள், சமூக நல அமைப்புக்கள், சட்ட வல்லுனர்கள் கலாத்தின் கட்டாயம் கருதி அதனை ஆராய்ந்து பாருங்கள்.

ஒரு சில திருத்தங்களுடன் முஸ்லிம் சமூகம் இதற்கு முழு ஆதரவையும் வழங்க முடியும் , வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

மங்கள சமரவீரவுடன் சரத்பொன்சேகா சிங்கப்பூரில் சந்திப்பு

Mangala_Sarathஅஷரப் ஏ சமத்

நேற்று அனைத்து எதிர்க்கட்சிகளின் ஊடக மாநாட்டில் கலந்துகொண்ட சரத்பொன்சேகா மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார்.

அதே வைத்தியசாலையில் மங்கள சமரவீரவும் மருத்துவ பரிசோதனை முடித்துவிட்டு நாளை நாடு  திரும்பும் நிலையில் இருந்தார்.

[Read more…]

பொதுவேட்பாளராக போட்டியிட மறுத்தார் சந்திரிகா!

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் காசிம் மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் கடந்த வாரத்தில் சந்திரிகாவை சந்தித்து இந்த அழைப்பை விடுத்திருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொதுவேட்பாளராக போட்டியிடுவாரானால், அவருக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பது கடினம். எனவே அதற்கு பொருத்தமானவர் சந்திரிகாவே என்று கபீர் காசிம், ரணில் விக்கிரமசிங்கவிடம் விளக்கியுள்ளார்.இதனையடுத்து ரணில் விக்கிரமசிங்க, சந்திரிக்காவை சந்திக்குமாறு காசிமிடம் கோரியுள்ளார். எனினும், இந்த அழைப்பை சந்திரிகா நிராகரித்துள்ள போதும் பொதுவேட்பாளருக்கு தாம் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

அரசியல் அந்தரங்கம் : மங்கள சமரவீர , ரவி கருணாநாயக்கயாக தீர்க்கமான முடிவில்..

-டி இண்டிபெண்டன்ட் இணையம்- தமிழில் ஏ,எம்,எம் முஸம்மில்- பதுளை

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மேற்படி தலைவர்கள் இந்த வார இறுதிக்குள் அதிரடியான அரசியல் தீர்மானமொன்றை எடுக்க வுள்ளதாக கட்சியின் முக்கிய வட்டாரங்களால் அறியக்கூடியதாக உள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை அபேட்சகராக நிறுத்தி வெற்றிபெறக்கூடிய இருக்கையில் ஐ தே க வேட்பாளராக ரணில்  களமிறங்கும் போது நிச்சயமாக தோல்வியை தழுவவேண்டி ஏற்படும் என்றும், அப்படி தோல்வி அடையும் பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்வுக்கு 24 மணிநேரம் கூட கட்சி தலைமை பதவியில் இருக்க முடியாது போகும் என்றும், அத்தருணத்தை எதிர்பார்த்திருக்கும்  சஜித் பிரேமதாச அவர்கள் கட்சி தலைமையை ஏற்கும் நிலை ஏற்படும் என்று உறுதியாக நம்புவதாகவும் அவ்வாறானதொரு தருணத்தில் மகிந்த ரெஜீமின் (படையணியின்) தாளத்திற்கு ஆடக்கூடிய சஜித் போன்றதொரு  அரசியல் பகடைக்காயின் கீழ் ஐ தே கட்சியில் தொடர்ந்தும் செயற்பட முடியாது போகும் என்பதே மேற்படி ஐ தே க உயர்பீட தலைவர்களின் எண்ணமாக உள்ளது.

[Read more…]

ஊவா தேர்தல் – கொபெல்ஸ் நியதி வென்றது

lies-lies-ஏ எம் எம் முஸம்மில், தலைவர் மலையக முஸ்லிம் கவுன்சில் – பதுளை-

‘பொய் கூறி புறம் பேசி திரிபவனுக்கு கேடுதான்’ என்று இஸ்லாம் நமக்கு கடுமையாக எச்சரிரித்து இருக்கின்றது. ‘பொய்யான வதந்தியை பரப்பக் கூடியவன் நாசமடைவானாக’ என்று நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். ‘உங்களில் பொய்யான, பாவியான மனிதன் ஒரு செய்தியை கொண்டு வந்தால் அதைப் பற்றி ஆராய்ந்து பாருங்கள்’ என்று அல் குர் ஆண் நமக்கு கட்டளை இடுகின்றது.

கடந்த காலங்களில் தமிழ் பத்திரிகைகளில் குறிப்பாக முஸ்லிம் பத்திரிகைகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் பத்திரிகைகளிலும் ஊவா மாகாண சபை தேர்தல் சம்பந்தமாக பிரசுரமான கட்டுரைகளை வாசித்த போது அதை எழுதிய கட்டுரையாளர்களுக்கு மேற்சொன்ன இஸ்லாத்தின் எச்சரிக்கைகளை எடுத்து கூற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அத்துடன் முஸ்லிம் சமூகத்தின் உண்மையான குரலாக ஒலிக்க எமது சமூகத்தை அரசியல் மற்றும் மார்க்க ரீதியாக ஒற்றுமை படுத்த முஸ்லிம்களால் நிர்வகிக்கப்படும் ஒரு முஸ்லிம் ஊடகத்தின் தேவையும் வெகுவாக உணரப்பட்டது.

அத்துடன் இரு பெரும்பான்மை கட்சிகளும் அதன் வேட்பாளர்கள், ஆதரவாளர்களும் இந்தப் பொய்களையும் அபாண்டங்களையும் மேடைகள் தோறும முழங்கியதுடன் வீடு வீடாகசென்றும் பிரச்சாரம் செய்தார்கள். அரசாங்கத்தின் மீது முஸ்லிம்களுக்கு இருந்த வெறுப்பும் குறிப்பிட்ட இரு அமைச்சர்களும் தற்போதும் அரசாங்கத்தின் அமைச்சர்களாக பதவி வகித்துக் கொண்டிருப்பதாலும் குறிப்பிட்ட பொய்ப்பிரச்சாரங்களுக்கு முன் யதார்த்தம் அல்லது உண்மை தோற்று போனது.

‘பொய்’ ஒரு சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை செலுத்தக் கூடியது.?

ஹிட்லரின் ஆலோசகராகவும் இ ஜெர்மனியின் நாசி அரசின் பிரச்சாரக அமைச்சராகவும் செயற்பட்ட பௌல் ஜோசப் கோபெல்ஸ் என்பவனின் கொள்கைப்படி பிரசாரத்திற்காக இரண்டு பிரதான நியதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்று ஹிட்லருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

“If you tell a lie big enough and keep repeating it, people will eventually come to believe it. The lie can be maintained only for such time as the State can shield the people from the political, economic and/or military consequences of the lie.

SLFP – SLMC சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பால் ரத்து

SLMC Flag-ஏ.எம். ஹூசைனி-

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்டக் குழுவினருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருக்குமிடையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை மு.கா பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது விடயமாக மேலும் தெரியவருவதானது,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் அமைசர்களான மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, அனுர பியதர்சன யாப்பா, சுசில் பிரேம் ஜயந்த, நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்டக் குழுவினருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருக்குமிடையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை 6.00 மணிக்கு பேச்சுவார்த்தை இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது.

இச்சந்திப்புக்கு முன்னதாக மு.கா தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்; கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில கூட்டி இப்பேச்சுவார்த்தை சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளார்.

இக்கூட்டத்தில் அரசாங்கத்தினால்; வழங்கப்பட்ட கரையோரம் மாவட்ட வாக்குறுதி இரண்டு வருடங்களாகியும் பெற்றுத்தரவில்லை, முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்து எந்த நடவடிக்கையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை, முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் குழுக்களை அரசாங்கம் கட்டுப்படுத்த தவறிவிட்;டது போன்ற குற்றச்சாட்டுக்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததுடன் இதனால் இன்று முஸ்லிம்கள் ஆத்திரமடைந்துள்ளனர் எனவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இச்செயற்பாடுகளை அரசாங்கம் தடுத்து நிறுத்தி நம்பிக்கை ஊட்டும் வகையில் நடந்து கொள்ளாத சூழ்நிலையில் இப்பேச்சுவார்த்தைக்கு செல்லக்கூடாது என திட்டவட்டமாக மு.கா பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுத்துள்ளதாக தெரியவருகிறது. இதனை அடுத்து இப்பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இப்பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதி மாளிகையில் காத்திருந்த அரச உயர்மட்ட அமைச்சர்கள் குழுவினருக்கு ஏமாற்றத்துடன் கூடிய கவலையை தோற்றிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அம்பாறை கரையோர மாவட்ட கோரிக்கை விடயமாக தங்களது நிலைப்பாட்டினை மு.கா தலைவருக்கு அழுத்தமாக தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

சாய்ந்தமருது பீச் பார்க் குறித்து ஹரீஸ் அதிருப்தி

harees-அப்துல் மஜீத்-

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புறநெகும அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது கடற்கரை சிறுவர் பூங்கா அமைப்பதற்காக கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிபின் காலத்தில் 1 கோடியே 67 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

அந்த வகையில் கடற்கரை சிறுவர் பூங்கா அமைப்பதற்காக முன்னாள் முதல்வரும் பொறியியலாளர்களும் சேர்ந்து சகல அம்சங்களுக்குரிய சிறுவர் பொழுதுபோக்கு விளையாட்டு உபகரணங்களை உள்ளடக்கியதாக முழுமையான கடற்கரை சிறுவர் பூங்கா அமைக்கப்படுவதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டது.

அந்த வகையில் கடந்த 2012ம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவில் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிபின் அழைப்பின் பேரில் கடற்கரை சிறுவர் பூங்கா அபிவிருத்தி வேலைகளை நான் ஆரம்பித்து வைத்தேன்.

ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அன்று இவ்வேலைகளுக்கு தடங்கள்கள் ஏற்பட்டபோது நான் தலையிட்டு மாநகர சபையின் நிர்வாகத்துடன் இணைந்து கடற்கரை சிறுவர் பூங்கா அமைக்கும் வேலைகளுக்கு முழு உதவிகளையும் செய்து கொடுத்தேன்.

இந்த அடிப்படையில் இன்று திறக்கப்பட்ட சாய்ந்தமருது கடற்கரை சிறுவர் பூங்கா தொடர்பாக சில விமர்சனங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். அதில் முக்கியமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரை படத்தில் இருந்த சிறுவர் விளையாட்டுப் பகுதி முற்று முழுதாக செய்யப்படவில்லை என்பதுடன் ஏனைய அம்சங்கள் நிறைவடையாமலும் அவசரமாக சிறுவர் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த சாய்ந்தமருது மக்களுக்கும் சிறுவர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்குரிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத விடயத்தை பிரதேச நலன்விரும்பிகள் தொடர்பு கொண்டு என்னிடம் முறையிட்டனர்.

எனவேஇ பெரும் எதிர்பார்ப்பில் இருந்து பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு அதிரடி நடவடிக்கையாக சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்ட பிரதேசத்தில் சிறுவர் விளையாட்டு தொகுதிகளை உள்ளடக்கிய முழுமையான சிறுவர் பூங்கா ஒன்றினை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அனுமதியினையும் பெற்றுள்ளேன்.

அதற்கான சகல அபிவிருத்தி வேலைகளையும் இன்னும் இரண்டு மாதத்திற்குள் செய்து முடித்து சிறுவர்களின் எதிர்பார்ப்புக்களையும் கனவுகளையும் நிறைவேற்றிக் கொடுப்பதற்கு எண்ணியுள்ளேன்.

இந்த விடயம் சம்பந்தமாக ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பில் இப்பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற வகையில் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புறநெகும திடட்டத்திற்குப் பொறுப்பான பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்வதற்கும் தீர்மானித்துள்ளேன் என்றார்.

ஏழாவது ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?

Mahinda-brothers-முஜீபுர் றஹ்மான்-

2015 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறப்போகும் இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதித் தேர்தலானது இலங்கையின் அரசியல் போக்கைத் தீர்மானிப்பதோடு அதன் வரலாற்றையே மாற்றியமைக்கப் போகின்ற ஒரு தேர்தலாகவே நோக்கப்படுகின்றது.

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ஆனால், ஜனாதிபதி மூன்றாவது முறையாக போட்டியிடுவது அரசியல் சாசனத்துக்கு முரணானது எனவும் அதற்கான ஆலோசனையை நீதிமன்றத்திடம் பெற முடியாது எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். மேலும், 2016 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதால் நாட்டில் சர்வதிகார ஆட்சியே ஏற்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பொது பேட்பாளராக ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதோடு ஏனைய கட்சிகளையும் பொது அணியில் ஒன்றிணைக்கும் முயற்சிகளும் பரவலாக நடைபெறுகின்றது. இக்கூட்டணிக்கு மாதுலுவாவே சோபித தேரரும் ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச போட்டியிடுவது சட்டவிரோதமானதாகும். அதை எதிர்த்துப் போராடுவோம் என மக்கள் விடுதலை முன்னணி கூறுகின்றது. அதேநேரம், ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே அன்றி பொது வேட்பாளரில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு இனவாத பிரச்சாரங்களும், செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1915 ஆம் ஆண்டு முஸ்லிம் சிங்கள இனக்கலவரம் நடைபெற்று 2015 ஆண்டுடன் 100 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்நூற்றாண்டு விழாவை வெகு விமர்சையாகக் கொண்டாடுவதற்கு பொது பல சேனா, ஹெல உறுமய மற்றும் ஏனைய கடுப்போக்குவாத சிங்கள குழுக்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

மேலும், மாடறுப்பது, ஹலால் விவகாரம், பள்ளிவாசல்கள் உடைப்பு, முஸ்லிம்களின் பொருளாதாரம் திட்டமிடப்பட்டு முடக்கப்படுகின்றமை, முஸ்லிம் தனியார்ச் சட்டம் மற்றும் பலதார மனம் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இவர்கள் முஸ்லிம்களை எதிர்த்து வருகின்றனர்.

இலங்கை முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக தெற்காசிய பிராந்தியங்களிலுள்ள முஸ்லிம் எதிர்ப்பு குழுக்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதோடு இணைப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து, முஸ்லிம் அரசியல் கட்சிகள் எப்படியான தீர்க்கதரிசனமான முடிவை எடுக்கப்போகின்றன. இந்த ஜனாதிபதித் தேர்தலில் அவை எடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலேதான் எதிர்வரும் பொதுத் தேர்தலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வாபத்தான சூழ்நிலைகளின்போது, முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முஸ்லிம் சமூகத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக முடிவை எடுப்பார்களா? அல்லது தங்களது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முடிவை எடுப்பார்களா என மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனை ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க ஜனாதிபதித் தேர்தலாகவே நோக்கப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் விடுகின்ற அனைத்துத் தவறுகளும் மிகப் பெரிய வரலாற்றுத் துரோகமாகவே பார்க்கப்படும்.

இக்கட்டான இந்நிலையின்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான றஊப் ஹக்கீம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி யாரை ஆதரிப்பது என்ற தீர்மானம் இதுவரை எடுக்கவில்லை என்றும், நவம்பர் மாதத்தின் பின்னரே இத்தீர்மானத்தை எடுப்போம் எனவும் அறிவித்துள்ளார். ஆனால், ஏனைய கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை.

இக்கட்சிகள் அதி முக்கியமான ஜனாதிபதித் தேர்தலைவிடவும் தமது பாராளுமன்ற ஆசனங்களை எவ்வாறு பாதுகாப்பது, அதற்கான வியூகம் என்ன என்பதை வைத்தே இந்த ஜனாதிபதித் தேர்தலை நோக்குவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலேயே முஸ்லிம் சிவில் சமூகங்களின் தேவை முக்கியமாகின்றது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், தேசிய ஷூறா சபை மற்றும் ஏனைய முஸ்லிம் அமைப்புக்கள் நடுநிலையாக நின்று, தமது விருப்பு வெறுப்புகளுக்கப்பால் முஸ்லிம் வாக்காளர்களை விழிப்பூட்டுவது கட்டாயக் கடமையாகும். தற்போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள ஆபத்தான நிலமையையும் உணர்த்த வேண்டும்.

அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுக்களால் கவரப்பட்டும், அபிவிருத்தி என்ற மாயைக்கு மயங்காமலும் தமது வாக்குகளை சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வெளிப்படையாக முன்வைக்கும் வேட்பாளரை ஆதரிப்போம் என விழிப்பூட்ட வேண்டும்.

நீதி, நியாயம், ஜனநாயகம், சமத்துவம் என்பவற்றை மதிக்கின்ற, மனிதநேயம் கொண்ட, நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கின்ற சிறந்த ஒருவரை ஜனாதிபதியாக்கப் பாடுபடுவது முக்கிய கடமையாகும். இதுவே இன்றைய காலத்தின் முக்கிய தேவையாகவும் உள்ளது. இதுவே, முஸ்லிம் அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள் அனைவரினதும் காலத்தின கட்டாயக் கடமையாகும்.

2014.08.19 ஆம் திகதிய கிழக்கு மாகாண சபை அமர்வில் நடந்த வேடிக்கையான சம்பவங்கள்……..

ரஷீத் முகம்மத்

நேற்று நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின் போது திருகோணமலை கரிமளைஊற்று பள்ளிவாயல் விடயத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பல அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் இருந்து கொண்டு முதலமைச்சரை மட்டும் பொறுப்புச்சாட்டுவது மிகவும் வேடிக்கையாகவே இருந்தது.

[Read more…]

தேசிய காங்கிரசில் றூபிக்கு புதிய பொறுப்புக்கள்

Rooby LLB-டீன் பைரூஸ்-
அக்கரைப்பற்று: மகாண சபைகள் உள்ளுராட்சசி அமைச்சரும் தேசிய சாங்கிரஸின் தேசிய தலைவருமான கௌரவ ALM அதாவுள்ளாஹ் அவர்களின் தலைமையில் 2014.03.30ம் திகதி காலை அக்கரைப்பற்று அதாவுள்ளாஹ் அரங்கில் தேசிய காங்கிரஸின் 10வது பேராளர் மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தேசிய காங்கிரஸின் பேராளர்கள் கலந்து பொண்டனர்.

[Read more…]