Advertisements

சமயப் பன்மைத்துவத்தை மக்கள் மயப்படுத்தும் தாக்கமுள்ள கலையே வானொலி நாடகம் பேராசிரியர் . டப்ளிவ். டி. பீ. வணிகசுந்தர

எம்.ரீ.எம்.பாரிஸ் –

சமயப் பன்மைத்துவத்தை மிகவும் தாக்கமாக மக்களிடம் கொண்டும் செல்லும் கலைகளில் மிகவும் துரிதமானதே வானொலி நாடகம் என இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் தலைவர் பேராசிரியர் டப்ளிவ். டி. பீ. வணிகசுந்தர தெரிவித்துள்ளார்.
இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம் தழிழ் மற்றும் சிங்கள் மொழிகளில் அமுல்படுத்தும் சமயப் பன்மைத்துவத்தை ஊக்குவிக்கும் வானொலி நாடகச் செயற்றிட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ‘சமூக மாற்றம் என்பது மிகவும் மந்தமாக இடம்பெறும் செயற்பாடாகும். இதனை துரிதப்படுத்தும் போது, மக்களிடம் நடத்தை சார் மாற்றங்களை ஏற்படுத்துவது மிகவும் கட்டாயமாகும். வானொலி நாடகத்தைப் [Read more…]

கானல்நீராய் கல்முனையின் அபிவிருத்தி??? அங்கலாய்க்கும் மக்கள்

-எம்.வை.அமீர் –

கல்முனைத்தாய் தனது கடந்தகால வரலாற்றில் பல்வேறுபட்ட தலைவர்களையும்இ சிறந்த அடைவுகளையும், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பேசும் அளவுக்குஇ முஸ்லிம்களின் தலைநகர், என்ற அந்தஸ்த்தையும் ஏன் பல்வேறுபட்ட அபிவிருத்திகளையும் கண்டாள்.

கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் முதல் எம்.சீ.அகமட், ஏ.ஆர்.எம்.மன்சூர், எம்.எச்.எம்.அஷ்ரப், எம்.எம்.முஸ்தபா (மையோன்) எச்.எம்.எம்.ஹரீஸ் வரை பாரளமன்ற உறுப்பினர்களையும் கல்முனைத்தாய் ஈன்றாள். அத்துடன் உயர் கல்வியாளர்கள்இ சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், விவசாயிகள்இ மீனவர்கள் என பல்வேறு தரப்பினரையும் தன்னகத்தே உள்ளடக்கினாள்.

கல்முனைத்தாய் பெற்ற மக்கள் ஒற்றுமைக்கு பெயர்போனவர்கள். அவர்களுக்குள் முரன்பட்டுக்கொன்டாலும் இறுதியில் ஒன்றுபட்டு விடுவார்கள். இதற்க்கு பல்வேறு [Read more…]

புதிய அரசின் அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றி கலாநிதி ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்…

– கலாநிதி ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் –

அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் அரசியல் யாப்பில் மிகவும் முக்கியமான மாற்றங்கள் இடம் பெறவுள்ளன. குறிப்பாக ஜனாதிபதிக்க் உள்ள நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தி தேசத்தின் தலைவராக ஜனாதிபதியும், பாராளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரித்து அரசின் தலைவராக பிரதமரும் இருக்கின்ற வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

அதேபோன்று தேர்தல், பொது சேவைகள், பொலிஸ், நீதித்துறை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு போன்ற துறைகள் சுயாதீனமான கமிஷன்களுக்கு கீழ் கொண்டு வரப்படவுள்ளன.

தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது, தற்பொழுது அமுலில் உள்ள விகிதாசார முறைக்குப் பதிலாக, பழைய தொகுதிவாரி முறையுடன் மாவட்ட மற்றும் [Read more…]

புத்தளம் M.P விவகாரம்! தலையிடிக்கு தலையணையை மாற்றிப் பயனில்லை !!

M. ரஹ்மத்துல்லாஹ்

புத்தளம் மாவட்டத்தில்1989 முதல் 2010 வரை இடம் பெற்ற ஆறு பொதுத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், ஐக்கிய தேசிய கட்சியிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மர்ஹூம் M.I. பிஷ்ருல் ஹாபி, M.H.M. நவவி, K.A. பாயிஸ், S.A. யஹ்யா, T.M.இஸ்மாயில், A.M. கமர்தீன் முதலானோர் இவ்வாறு போட்டியிட்டனர்.

[Read more…]

கோட்டைவிடும் தமிழ் தேசிய தலைமைகள்

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் மிக சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். அதே போல புதிய சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

ஆனால் தமிழ் தேசிய தலைமைகள் இரு விடயங்களையும் கோட்டை விட்டே வந்து இருக்கின்றன என்பது கடந்த கால வரலாறாகவும், நிகழ் கால நிதர்சனமாகவும் உள்ளது. [Read more…]

யாருக்கு தொப்பி?

எஸ்.எம்.எம்.பஷீர் 

“அதிகாரம் சீரழிப்பதால் , பதவிக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் பொழுது ,  அறவழி  அதிகாரத்துக்கும் சிறப்பியல்களுக்குமான  சமுதாயத்தின் தேவைகள் அதிகரிக்கின்றன”  –  ஜான் அடம்ஸ் 

( Because power corrupts, society’s demands for moral authority and character increase as the importance of the position increases. –  John Adams )

ecmகிழக்கு மாகான சபைக்கான முதல்வர் நியமன இழுபறி இறுதியில் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. ஒருபுறம் மைத்ரி ஜனாதிபதியாக நாங்களும்  காரணம் என்ற தமிழர்களும் முஸ்லிம்களும்  ஆளுக்கு ஆள் வீராப்பு கதை பேசித் திரிய, தமிழர் கூட்டமைப்பு மைத்ரீயை சந்தித்து தங்களின் கட்சியிலில் இருந்தே கிழக்கு முதல்வர் நியமிக்கபட வேண்டும் என்று கோரப் போவதாக செய்திகள் ஊடகங்களில் ஊடாட, இந்நாள் வரை இரண்டரை வருடக் கதையை, இலேசாக அவ்வப்போது ஞாபகம் ஊட்டிக்  கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் திடீரெண்டு எங்களுக்கே முதல்வர் பதவி தரப்பட வேண்டும் என்று அட்டகாசமாக அவரோகணத்தில் தங்களின் முதல்வர் கோரிக்கையை முன்னெடுத்த பொழுது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் சொன்ன இரண்டரை வருட முதல்வர் சமாச்சாரம் உண்மைதான் என்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு முதல்வர் பதவி வழங்கி உறுதி செய்திருக்கிறார்கள். [Read more…]

நல்லாட்சிக்கு இன்றுடன் வயது ஒரு மாதம்

அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான நல்லாட்சிக்கு இன்றுடன் வயது ஒரு மாதமாகிறது. இலங்கையில் நல்லாட்சி ஒன்று மலர வேண்டுமென்று முஸ்லிம்கள் இறையச்சம் மேலோங்க நோன்பு நோற்று, தஹஜ்ஜதில் மன்றாடியதன் பலாபலனே இன்று சாத்தியமாகியிருக்கும் மைத்திரி யுகமாகும்.

[Read more…]

S.S.M. அபூபக்கர் வயதானாலும் மனம் தளராதவர்

S.S.M. அபூபக்கர் அவர்கள் சத்திய இஸ்லாத்தை திறம்பட ஆய்வு செய்து, இஸ்லாத்தை குடும்பம் சகிதம் ஏற்றுக் கொண்டவர். இன்றும் அவர் தான் பெற்ற பெரும் பாக்கியம் பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்ற தீராத வேட்கையில், உன்னத நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்.

[Read more…]

நேற்று பேசிய ஜெமீலா இது?

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நடத்தப்பட்ட இந்த வருடத்தின் முதலாவது பாரிய நாடகம் மேடையேற்றப்பட்டது. அமைச்சர் ஹக்கீம் பிரதான பாத்திரம் ஏற்க கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜெமீல், அன்வர் ஆகியோர் துணை நடிகர்களாக அற்புதமாக நடித்திருந்தனர்.

IMG_0816மக்களோ பாவம்… பழைய படங்களில் எம்.ஜி. ஆருக்கு நம்பியார் ஒரு அடிவிட்டாலே (நடிப்புக்காக) உண்மை என நினைத்து கொதித்தெழும் ரசிகர்கள் நிலையில்தான் காணப்பட்டனர். ஹாபிஸ் நஸீருக்கு முதலமைச்சர் பதவி வழங்கியதற்காகவும் அம்பாறை மாவட்டத்தைப் புறக்கணித்ததற்காகவும் ஜெமீலுக்கு அந்தப் பதவியை வழங்கவில்லை என்றும் கல்முனை மகக்ள் கொதிந்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் அமைச்சர் ஹக்கீமின் கொடும்பாவியையும் எரித்து நின்றனர்.

தாங்கள் அரகேற்றிய நாடகத்தை மக்கள் உண்மையாக நம்பி விட்டனர் என்ற கேலித்தனத்தில் இவர்கள் காணப்பட்டனர். ஆனால் மக்களோ உண்மையென நம்பியே அனைத்தையும் செய்து தங்களை வருத்தி, பிரிந்து கொண்டனர்.

இவர்கள் தங்களது நாடகத்துக்கு கௌரவ நடிகர்களாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான எம். சுபைரையும் வலிந்து எடுத்துக் கொண்டனர்.

இந்த நாடகத்துக்கு திரைக்கதை வசனம் எழுதி தயாரித்த கல்முனையின் குறுநில மன்னர் தலைமறைவாகியிருந்தார். பாவம் இறுதியில் அனைத்துப் பழிகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான தவம் அவர்கள் தலையில் கட்ட வேண்டியதாகி விட்டது.

sa2இவர்கள் ஆடிய நாடகத்தின் உண்மை நிலை இன்றைய ஊடகவியலாளர் மகாநாட்டில் அம்பலத்துக்கு வந்து விட்டது. ஜெமீல் மன்னிப்புக் கேட்டாராம். ஹக்கீம் மன்னித்து விட்டாராம்.. எவ்வளவு வெட்கம்.. இந்தப் போலி நாடகத்தின் உண்மையைத் தன்மையை இன்று அம்பலப்படுத்தாமல் கொஞ்சக் காலம் தாமதித்தாவது வெளிப்படுத்தியிருந்தால் முஸ்லிம் காங்கிரஸினால் பாவப்பட்டு போயுள்ள முஸ்லிம் மக்கள் சற்று மறந்த நிலையில் நிம்மதியடைந்திருப்பர். வெள்ளிக்கிழமை நாடகத்தையின் உண்மையை ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே அவர்கள் அரங்கேற்றி அசிங்கப்படுத்தி விட்டனர்.

பிரதேச வாதத்தையும் சமூகத்தில் பிரிவினையையும் ஏற்படுத்தி மக்களை பிரித்தவர்கள் இன்று சேர்ந்து விட்டனர். ஆனால் அவர்களை நம்பிய மக்களோ இன்று பிரிந்து நின்று மனக் கசப்புடன் காணப்படுகிறனர்.

கிழக்கு மகாண சபை உறுப்பினரான சர்ச்சைக்குரிய ஜெமீல் அவர்கள் பல தடவைகள் என்னுடன் நேற்று தொடர்பு கொண்டு பல விடயங்கைளத் தெரிவித்திருந்தார். அவற்றினை நான் நாகரிகமான முறையில் மறைத்துக் கொண்டேன். ஹாபிஸ் நஸீர் தொடர்பில் அவர் என்னிடம் தெரிவித்தவைகளை நான் இப்போது நினைத்துப் பார்க்கும் போது என்னுடன் நேற்று பேசியது இன்று அவருடன் இணைந்து கொண்ட ஜெமீலா என்று சந்தேகிக்கவும் தோன்றுகிறது. அத்துடன் அமைச்சர் ஹக்கீம் தொடர்பிலும் அவர் சில கருத்துகளை என்னிடம் தெரிவித்தார். அதனைக் கூட ஜெமீல்தான் சொன்னாரா என்பதும் எனக்கு இன்னும் அதிர்ச்சியாக உள்ளது.

இறுதியாக ஜெமீல் மன்னிப்புக் கேட்டாராம் ஹக்கீம் மன்னித்து விட்டாராம். வெட்கம் வெட்கம்.. மக்களை இறைவன் மன்னித்துக் கொள்ளட்டும்! வாழ்க, வளர்க முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்

[Read more…]

கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தில் ஐக்கிய மாகாண ஆட்சியே உடனடித் தேவை

எம். பௌசர்

கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கும் விவகாரம் சமூகங்களையும், கிழக்கு வாழ் மக்களையும் இரு துருவ நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஜனநாயக அடிப்படைக் கட்டுமாணங்களுக்கு வெளியில், எதோச்சதிகாரப் போக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை செயல்பட்டு நிலைமையை சிக்கலாக்கி உள்ளது.

[Read more…]

கிழக்கு மாகாண முதலமைச்சர் : முரண்பாட்டு அரசியலின் இனவாத அடையாளம்

 நவாஸ் சௌபி

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த நிலையில் கிழக்கு மாகாண சபை ஆட்சியை தொடர்வது சம்மந்தமாக இதுவரை இருந்துவந்த முதலமைச்சர் சர்ச்சை முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக ஒருமுடிவுக்கு வந்திருக்கிறது.

கிழக்கில் ஒரு முதலமைச்சர் பதவியை வழங்குவதற்கு தலைமைத்துவ சவால் ஒரு தடையாக இருப்பதாகக் கருதி வூப் ஹக்கீம் அதனை வழங்காதிருக்கின்றார் என்ற விமர்சனம் மிகவும் பலமாக முன்வைக்கப்பட்டுவந்த நிலையில் அதனை முற்றாக மறுப்பதாகவும் அக்கருததை அடியோடு அழிப்பதாகவும் இன்று முதலமைச்சர் பதவி கிழக்கிற்கு வழங்கப்பட்டிருப்பது முதலில் நாங்கள் பாராட்ட வேண்டிய விடயம். [Read more…]

கிழக்கின் முதலமைச்சர்!!! அம்பாறைக்கு ஆப்பு

எம்.வை.அமீர்

கிழக்கு மாகாண சபையில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட அமைச்சரவைகளில், அம்பாறை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கிய மாகாண சபையில், தொடராக அம்பாறை மாவட்டம் முதலமைச்சர் ஒருவரை பெறும் தகைமையை இழந்து வருகின்றது.

கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள மொத்த சனத்தொகையை எடுத்துக்கொண்டாலும் சரி கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்களின் தொகையை எடுத்துக்கொண்டாலும் சரி அம்பாறை மாவட்டமே முன்னிலையில் இருக்கின்றது. இருந்தபோதும் கிழக்கின் முதலமைச்சர் என்ற அந்தஸ்த்து மாறிமாறி திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்குமே வழங்கப்பட்டு வரும் செயற்பாடானது அம்பாறை மாவட்டத்தில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. [Read more…]

ராபிஆவில் ஓர் அழுகுரல்

படத்தில் இருப்பது சம்பவத்தை சொல்லும் சகோதரி ஸாரா

படத்தில் இருப்பது சம்பவத்தை சொல்லும் சகோதரி ஸாரா

அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி) Cairo-Egypt

(2013 ஆம் ஆண்டு எகிப்தில் ஏற்பட்ட அரசியல் மோதல்களில் முர்சியின் ஆட்சி வீழ்த்தப்பட்டது. அப்போது முர்சி ஆதரவாளர்கள் ராபிஆ மைதானத்தில் தொடர் போராட்டத்தில் இறங்கியபோது சில மாதங்களில் ராபிஆ மைதானத்தை எகிப்திய ராணுவம் பலப்பிரயோகம் மூலம் கலைப்போம் என்ற எச்சரிக்கையுடன் கலைத்தது. அப்போது ராபிஆவில் இக்வான்களின் நிர்வாகவியல் பொறுப்பில் இருந்த முஹம்மத் அலி என்பவரும் வபாத் ஆனார்கள். இதுபற்றி களத்தில் என்ன நடந்தது? முர்சி ஆதரவாளர்கள் நிலைபாடு எப்படி இருந்தது என்பதுபற்றி களத்தில் இருந்து வபாத்தான முஹம்மத் அலி அவர்களின் மகளும் ஊடகவியளாலருமான சகோதரி ஸாரா தனது சமூகவலைதளத்தில் ஒரு பதிவை அரபியில் எழுதி இருந்தார். இதை தமிழ் உலகுக்கும் தர வேண்டும் என்ற எண்ணத்தில் உங்களுடன் பகிர்கிறேன்.)

2013 ஓகஸ்ட் மாதம் புதன்கிழமை மாலை மூன்று மணிக்கு எனது தந்தை தொலைபேசியில் அழைத்து மூச்சு முட்ட வேறு கேள்விகள் எதுவும் இன்றி “ஸாரா நீ நலமா” என்று கேட்டார். “சில நிமிடத்துக்கு முன்தானே நான் வேலைக்கு சென்றுவிட்டேன் என்று சொன்னேனே பாபா”(பாபா என்பது எகிப்திய பாசையில் வாப்பா).

[Read more…]

CANCER – புற்றுநோய் : தெரிந்த பொய்களும் – தெரியாத உண்மைகளும்

நீண்ட காலமாக புற்று நோய்க்கு (CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் (JOHNS HOPKINS) சொல்கிறார்.

இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்தி்லிருந்து தமிழுக்கு மொழி மாற்றம். 

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

[Read more…]

தென் கிழக்கு உப வேந்தர் மீதான குற்றச்சாட்டு: தரம் கெட்ட அரசியல்வாதிகளின் செயல்

அபூ ரொஷான்

அண்மையில் தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் எஸ் எம் இஸ்மாயீல் தொடர்பாக பல விமர்சனக் கருத்துக்களும், விசக் கருத்துக்களும் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டு வருகின்றன.

பல ஊழல் மோசடிகள் பல்கலைக்கழகத்தில் நடந்தேறி இருப்பதாக தகவல்கள் வெளிவந்தமுள்ளன.

இது தொடர்பில் மக்களுக்கு சில விளக்கங்களை வழங்குவதே இக்கட்டுரையின் நோக்காகும்.

[Read more…]

இஸ்லாமிய ஆட்சி எப்போது? எப்படி?

அரபியில்: கலாநிதி முஸ்தபா மஹ்மூத் (எகிப்து)
தமிழில்: அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி)

வீட்டுக்கு வீடு சினிமா, வானொலி, ஆபாச சஞ்சிகைகள், அரைகுறை ஆடையுடன் கடலோர கன்னிகள் என்பதுபோன்ற எதுவும் இல்லாத மக்காவின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த குரைசிகளை தண்டிப்பது போல மேற்கூறப்பட்ட பாவங்கள் நிறைந்த காலப்பகுதியில் வாழும் நம்மையும் அல்லாஹ் தண்டிப்பானா? [Read more…]

கிழக்கின் முதலமைச்சர் பதவியும் ஆட்டம்காணப்போகும் கட்சியின் தளமும்

எம்.வை.அமீர்-

கிழக்கின் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசை தெரிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ள இவ்வேளையில் அண்மையில் மருதமுனையில் இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இன்னும் 72 மணிநேரத்தில் முதலமைச்சரை அறிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றவூப்ஹக்கீம் அறிவித்திருந்தார்.

முதலமைச்சரை அறிவிப்பதற்கு வழங்கப்பட்ட 72 மணிநேரம் என்ற காலக்கெடு முடிவதற்கு இன்னும் சில மணிநேரமே இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரசின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட 7 மாகாணசபை உறுப்பினர்களின் ஆதரவாளர்களும் தங்களது சார்பான உறுப்பினரே முதலமைச்சர் ஆவார் என கூறிவருகின்றனர். [Read more…]

அறுபத்தேழில் ஆனந்த சுதந்திரம்

அப்துல் அஸீஸ், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கை 67வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. ‘செழிப்புமிக்க தாய்நாடு அபிமானமிக்க நாளைய தினம்’ என்பதே இவ்வருட சுதந்திர தின தொனிப்பொருளாகும்.

[Read more…]

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் துணைவேந்தர் மீதும் பரப்பப்படும் விசமப்பிரச்சாரம்

ஏ.எம்.கபீர்

அண்மைக்காலமாக தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்பாக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகள் எவ்வித அடிப்படைகளுமற்றவை. மிகக்குறுகிய காலத்தில் பாரிய வளர்ச்சியினைக் கண்டுவரும் இப்பல்கலைக்கழகத்தின் மீதும் அதன் நிருவாகத்தின் மீதும் காழ்புணர்ச்சி கொண்ட சிலர் இவ்வாறான செய்திகளை வழங்கிவருவது மிகவும் வருந்தத்தக்கது. [Read more…]

ஸைபர் உலகில் சின்னாபின்னமாகும் இளம் சமூகம்

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

“(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும் அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.” (ஸுரதுல் லுக்மான் 31:16)

இணையதள, சமூக வலைதள பாவனைகள் அதிகரித்துள்ள ஒரு ஸைபர் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், முகநூல், வட்ஸ்அப், வைஃபர், ஸ்கைஃப் என இன்னும் எத்தனயோ தொடர்பூடகங்களில் புதிய தலைமுறையினர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதுவே உண்மை.

[Read more…]

ஊழல் பேர்வழிகள், வெள்ளை வான்காரர்கள் தண்டிக்கப்படுவார்களா?

எம்.எஸ்.எம். ஐயூப்

கடந்த 9ஆம் திகதி பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்ததைப் போல், இதற்கு முன்னர் பதவிக்கு வந்த எந்தவொரு ஜனாதிபதியோ எந்தவொரு அரசாங்கமோ குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட விடயங்களை செய்வேன் என்று நாட்குறிப்பொன்றை முன்வைத்ததில்லை.

[Read more…]

கலாநிதி தயான் ஜயதிலகவுக்கு ஒரு பாராட்டுக் கடிதம்

dayan-jayatilakeஅன்பான கலாநிதி தயான் ஜயதிலக அவர்களுக்கு,

நீங்கள் இதை வாசிப்பீர்கள் என்கிற நம்பிக்கையில் இதை அவர்களது இணையத் தளத்தில் பிரசுரிக்கும்படி நான் கொழும்பு ரெலிகிராப்ட்டிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். அதற்கான காரணம் உங்களது தற்போதைய விலாசத்தை என்னால் பெறமுடியவில்லை, மேலும் இந்த நாட்களில் நீங்கள் அதில் தங்கியிருப்பீர்கள் என்று எனக்கு நிச்சயமும் இல்லை.

[Read more…]

கிழக்கு முதலமைச்சர் முஸ்லிமாக இருப்பதுவே தமிழ்-சிங்கள சமூகங்களுக்கு ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்

கலாநிதி அஷ் ஷெய்க் மசிஹுதீன் இனாமுல்லாஹ் 

தற்போதைய நிலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியினை ஒரு முஸ்லிம் உறுப்பினரிடம் கையளிப்பதே தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களைப் பொறுத்தவரை ஆரோக்கியமான அரசியல் நகர்வாக இருக்கும்.

[Read more…]

இரத்ததானம் மற்றும் இரத்தம் பாய்சுதல் ஓர் இஸ்லாமிய பார்வை

தொகுப்பு – Dr. A. L. A. அஹ்மட் ஷியாம் (MBBS), NATIONAL HOSPITAL -COLOMBO 

இரத்ததானம் தொடர்பான இக் கட்டுரை , MSW நிறுவனம் எதிர்வரும் 1 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெத்தைபள்ளி வித்தியாலயத்‌தில் ஏற்பாடுசெய்துள்ள இரத்ததான முகாமை முன்னிட்டு பிரசுரிக்கப்படுகின்றது

இஸ்லாம் மனித உயிர்  பாதுகாக்கப்படுவதை விரும்புகிறது. மனிதனது மனவேதனை, தாங்க முடியாத துன்பநிலை என்பவற்றுக்கு எதிரான பாதுகாப்பை உறுதிசெய்கிறது. மேலும் மனிதனது அமைதி, பாதுகாப்பு  என்பன உறுதிப்படுத்தப்படுவதை வழியுருத்துகிறது.

[Read more…]

சார்லி ஹெப்டோ – இஸ்லாமோபோபியாவின் மறு வடிவம்

-அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம்-

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்தரிகை அலுவலகத்திற்குள் கடந்த வாரம் புகுந்த செரிப் குவாச்சி மற்றும் சயித் குவாச்சி ஆகிய சகோதரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பத்திரிகை ஆசிரியர், கேலிச்சித்திரம் வரைபவர்கள் (Cartoonist) உற்பட 12 பேர் கொல்லப்பட்டனர். நபி (ஸல்) அவர்களை கிண்டல் செய்து கேலிச்சித்திரத்தை வெளியிட்டதால் இப்பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.

[Read more…]

மைத்திரியின் காலம் உங்களுக்கு ஒரு சவால் விட்டிருக்கிறது

மட்டுநகரிலிருந்து  எழுகதிரோன்

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் இலங்கை தமிழரின் அரசியல்  பாதையிலும் பல புதிய பரிணாமங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதாவது  இலங்கைத்தமிழரின் இனப்பிரச்சனை வரலாற்றில் பல முக்கிய திருப்பங்களுக்கு  காரணமாய் இருந்துவரும் தமிழரசுக்கட்சி கடந்த ஜனாதிபதி தேர்தலில் எடுத்த  நிலைப்பாடே அதற்கு காரணமாயிற்று. இந்த மாற்றமானது தமிழ் மக்களின் வாழ்வை  மேம்படுத்துவதாக அமையுமா? அல்லது “மீண்டும் வேதாளம் முருங்கை  மரத்தில்”நிலைக்கு இட்டுச்செல்லுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க  வேண்டும்.

[Read more…]

உளநோய் நீங்கி உள்ளங்கள் அமைதி பெற ஆன்மீகம் தேவை

gealousஉளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா

உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பல ஆயிரம் பிரச்சினைகளுடன் பிறக்கின்றான்  அதே நேரம் பல் வேறு வகைப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றான். இதில் பிரச்சினைகளை இருவகையாக வகைப்படுத்த முடியும். ஒன்று எம்மை நோக்கி வருகின்ற பிரச்சினைகள், இரண்டாவது வகை நாம் பிரச்சினைகளை எம் கரங்களாளேயே உருவாக்கிக் கொள்வது.

[Read more…]

கிழக்கு மாகாண சபை: சிவில் சமூகத்தின் தலையீடு உடன் அவசியம்

-எம்.பௌசர்-

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் நிலைப்பாடு இலங்கை மைய அரசியலில்  ஏற்படுத்திய தாக்கம் எல்லோருக்கும் தெரிந்ததே. இரு இனங்களுக்கிடையேயும் பல்வேறு முரண்பாடுகளும் கசப்பணர்வுகளும் இருந்தாலும், தம்மை அடக்குகின்ற ஒரு பொது எதிரிக்கு எதிராக ஒரு தீர்க்கமான அரசியல் நிலைப்பாட்டினை தமிழ், முஸ்லிம் மக்கள் எடுத்து, நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு வேலைத்திட்டமாக இல்லாது விட்டாலும் தனித் தனியே  செயற்பட்டனர்.

[Read more…]

சார்லி ஹெப்டோ – முஸ்லீம் உம்மாவுக்கான சோதனை

chஉலகெங்கும் வாழும் பில்லியன் கணக்கான முஸ்லீம்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் இறை தூதரான முஹம்மது (ஸல்) அவர்களை நையாண்டி செய்து கார்டூன் வெளியிட்டதற்காக சார்லீ ஹெப்டோ எனும் அங்கதப் பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 நபர்களும் அதை தொடர்ந்த காவல்துறை வேட்டையில் 5 நபர்கள் என 17 நபர்கள் இறந்து போனர். இதை கருத்து சுதந்திரத்துக்கு விடப்பட்ட சவால் என மேற்குலகம் சித்தரிப்பது உண்மை தானா?. இஸ்லாம் சகிப்புத்தன்மை அற்ற மார்க்கமா ? என்பதை பார்க்கும் முன் சார்லீ ஹெப்டோவை கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம். [Read more…]

ஐம்பதுக்கு ஐம்பதுக்கும் அப்பால்

dayan jayathilakaஜனாதிபதி தேர்தலில் ஜூரிமார் குழுவின் தீர்ப்பு உள்ளது. அது எப்படி நடைபெற்றுள்ளது என்பதை தமிழர் எதிர்ப்பு அல்லது சிங்கள இனவாதி என்று விபரிக்க முடியாத ஒரு சுவாராஸ்யமான வட்டாரத்தின் கூற்று கீழே தரப்பட்டுள்ளது. திரு.எரிக் சொல்கைம் சொல்வதை கேளுங்கள்:

[Read more…]

முஸ்லிம் காங்கிரஸ்: குலையும் கட்டுக்கோப்பு

-ஷுஹைப்-

ஜனாதிபதித் தேர்தலுக்கான காய்நகர்த்தல்களில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. கடந்த காலங்களில் பாராளுமன்ற ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் , ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாகவும் விளங்கிய அரசியல் வானில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கப் போகின்றது என்ற வினா எழுப்பப்பட்டு வருகின்றது.

  [Read more…]

முழிக்கும் மு.கா. .

SLMC logoஎம். எஸ்.எம். ஐயூப்

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் கரையோர பகுதிகளை ஒன்றிணைத்து தனி மாவட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கை இந் நாட்களில் அரசியல் களத்தில், குறிப்பாக சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

[Read more…]

அனாதையாகிப்போன நமது அரசியலும் நம்பிக்கை தரும் புதிய நகர்வுகளும்

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

முஸ்லிம்கள் அரசியல் அனாதைகளாயினர் உண்மைதான், ஆனால் யாசகர் கைப்பிள்ளையாக இன்று நமது அரசியலே அனாதையாகிக் கிடக்கிறது, யாசகர்கள் கூட “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” எனும் சரணாகதி நிலை அடைந்து அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

[Read more…]

‘கல்முனை கரையோர மாவட்டம்’ – ஒரு தேர்தல்கால கனவு மட்டும்தானா?…..

faleelஎஸ்.எல்.எம்.பளீல், (உச்சபீட உறுப்பினர்-சிலமு காங்கிரஸ்,  முன்னாள் ஜாமிஆ நழீமியா விரிவுரையாளர்)

‘பிழையான நேரத்தில் எடுக்கப்படும் சரியான தீர்மானங்களும் பிழையானவையாகும். அதேபோல் சரியான நேரத்தில் எடுக்கப்படும் பிழையான தீர்மானங்களும் பிழையானவையாகும். ஆகவே,கால நேரம் பார்த்து பொருத்தமான நேரத்தில் எடுக்கப்படும் சரியான தீர்மானங்களே சரியானவையும் சாத்தியப் பாடானவையுமாகும்’ 

[Read more…]

குருக்கள்மடத்துப் பையன் (4)

அம்பலமாகும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ரெதிதென்ன கூட்டம்

எஸ்.எம்.எம்.பஷீர்

சமூகத்தின் பல மட்டங்களிலும் புலிகளுக்காக விசுவாசமாக செயட்பட்ட புலி ஆதரவாளர்கள், தகவல் சொல்லிகள், (உளவாளிகள்) பலர்  “நாட்டுப்பற்றாளர்கள்” என்று புலிகளால் அவர்களின் மரணத்தின் பின்னர் வெளிப்படையாக பிரகடணப்படுத்தப்பட்டனர். 

[Read more…]

கலைந்து போன கனவுகள்

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு நெடுகிலும் காலத்துக்குக் காலம் பல்வேறு கனவுகள் தோன்றிக் கலைந்து சென்று கொண்டிருப்பதனைப் பார்க்கின்றோம். நமது கையாலாகாத தனத்தினால் இன்று வரை ஒரு கனவைக் கூட நனவாக்கிக் கொள்ள முடியாது போய் உள்ளது. அந்தவகையில் சமகால அரசியல் வரலாற்றுக் கனவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.

[Read more…]

குருக்கள்மடத்துப் பையன் (3)

காணாமல் போன காத்தான்குடி முஸ்லிம்களின் விபரம்

எஸ்.எம்.எம்.பஷீர்

நாட்டுப்பற்றாளர் என்று புலிகளால் வெளிப்படையாக பிரகடனப்படுத்தப்படாமல், பகிரங்கமாகக் கொண்டாடப்படாமல் சிலர் புலிகளின் உளவாளிகளாக செயற்பட்டு புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளின் பொழுது, அல்லது புலிகளின் மீது இராணுவம் நடத்திய தாக்குதல்களின் பொழுது இறந்துள்ளனர். இவர்கள் மாவீரர்கள் என புலிகளால் அழைக்கப்படவில்லை. இவர்கள் புலி சீருடை அணிந்தவர்கள் அல்லர். நாட்டுப்பற்றாளர்கள் என்று பகிரங்கமாக வெளியிடப்பட்ட எந்த நிரலிலும் இவர்களின் பெயர்களை புலிகள் கச்சிதமாக தவிர்த்து வந்துள்ளனர். அவர்களில் சிலருள் சந்திரபோசும் ஒருவர்,

தயாபரன்

தயாபரன்

கிருஷ்ணகுமார்

கிருஷ்ணகுமார்

அவரைப்போலவே மக்களுக்குள் மக்களாக கலந்து செயற்பட்ட புலிகளுள் “நாட்டுப்பற்றாளர்” கிருஷ்ணகுமார் மற்றும் “நாட்டுப்பற்றாளர்” தயாபரன் ஆகியோரின் பாத்திரங்கள் தேடுதலுக்கு உரியவை. இவர்களின் புகைப்படங்களை பிரசுரிப்பதன் மூலம் பலர் இவர்களை இலகுவில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். இப்பொழுது குருக்கள்மட மனிதப் படுகுழிகள் தோண்டப்பட முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்ற வேளையில் இவர்களைப் பற்றியும் விசாரணைகள் முடுக்கி விடப்படல் வேண்டும் !

[Read more…]

கர்பலா: நிஜமும் நிழலும்

karbalaஅஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம்

முஹர்ரம் முஸ்லிம்களின் புது வருடம். அல்லாஹ்வால் சிறப்பிக்கப்பட்ட மாதங்களில் ஒன்று. ஹிஜ்ரத் எனும் இஸ்லாமிய சமுதாய உருவாக்கத்தை இலட்சியமாகக் கொண்ட பயணத்தின் அடிப்படையில் இரண்டாம் கலீபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இஸ்லாமிய ஆண்டு. இந்தவகையில் புனித முஹர்ரம் மாதம் பல சிறப்பியல்புகளை கொண்டமைந்தது. இஸ்லாமிய வரலாற்றில் நடந்த பல நிகழ்வுகளைக் கொண்ட ஒரு மாதம்.

[Read more…]

கோலத்தைச் சிதைக்கும் கோடுகள்!

– அஷ்ரப் சிஹாப்தீன் –

மிகக் குறைந்த நபர்களே வாசிக்கும் நூல்களில் இருந்த ‘இஸ்லாமிய அரசியல்’ என்ற பதத்தை நடைமுறை அரசியலில் முதன் முதலில் பேச விழைந்தவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள்.

அக்காலப் பகுதியில் முஸ்லிம்களை ஒன்றுபடுத்த அந்தப் பதம் ஒரு குறிப்பிட்ட வீதம்; பயன்பாடுடையதாக இருந்தது. இஸ்லாமிய அரசியல் என்பது என்ன என்பது பற்றிய பொதுவான தெளிவு இன்னும் சரியாக ஏற்படாத நிலையிலும் இன்னும் சிலர் அதே வார்த்தையை முன் வைத்து தமது அரசியலை முன் கொண்டு செல்லும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றன.

நேர்மையானதும் மக்களை மையப்படுத்தியதும் தன்முனைப்பற்றதுமான ஓர் அரசியலை முன்னெடுப்பது என்பதை எப்படி வியாக்கியானப்படுத்தினாலும் கூட, மர்ஹூம் அஷ்ரப் போய் நின்ற ‘முஸ்லிம் அரசியல்’ என்ற எல்லைக்குள்தான் நின்றாக வேண்டியேற்படும். இஸ்லாமிய அரசியல் என்று சொல்லி ஓர் அரசியலை முன் கொண்டு செல்பவர்கள் – அவர்கள் நேர்மையானவர்களாக, இறையச்சம் கொண்டவர்களாக, மக்களை மையப்படுத்தியவர்களாக இருந்த போதும் கூட, சாக்கடையாகிக் கிடக்கும் பொது அரசியல் நீரோட்டத்தோடு இணைந்தே செல்ல வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.

பன்மைத்துவ சமூக அமைப்பில் இஸ்லாமிய அரசியலை முன்கொண்டு செல்வது குறித்து மார்க்கத்தையும்; சர்வதேச அறிஞர்களையும் படித்த ஒரு சில இளைஞர்கள் இப்போது பேச ஆரம்பித்துள்ளார்கள் என்பதை உணர முடிகிறது. அவர்களிடமிருந்து வெளிவரும் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு சமூகத்துக்கு முன்னால் புரிகின்ற பாஷையில் வைக்கப்படுவதற்கு இன்னும் காலம் செல்லக் கூடும்.

ஒரு காலப்பிரிவில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தமக்குரிய அரசியல் பிரதிநிதி இல்லாமலே முஸ்லிம் சமூகம் வாழ்ந்து வந்திருக்கிறது. அரசியலைப் பொறுத்தவரை கால்கள் இல்லாத ஒரு பிச்சைக்காரனின் நிலையில் இந்த சமூகத்தின் நிலை இருந்து வந்துள்ளது. அநேகமாகவும் பெரும்பான்மைச் சிங்கள, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்து வந்தார்கள். அப்போதும் கூடச் சமூகம் பிரதான இரண்டு கட்சிகளாகப் பிளவு பட்டுக் கிடந்தது.

முஸ்லிம்களுக்கான அரசியல் என்று அஷ்ரப் அவர்கள் களத்தில் இறங்கிய போது ஒரே நாளில் அவரை மக்கள் தோள்களில் சுமந்து விடவில்லை. ஏற்கனவே பெரும்பான்மைக் கட்சிகளில் பிளவு பட்டுக் கிடந்தோரும் அவர்களின் எஜமானர்களும் அவரைத் தூஷித்தனர். துரத்தித் துரத்திச் சண்டித்தனங்கள் புரிந்தனர். ஆனால் தமிழ்ச் சமூகத்தின் துப்பாக்கி ஏந்திய விடுதலை வீரர்களது அழுத்தத்தின் காரணமாக நொந்து நூலாகிக் கிடந்த முஸ்லிம்களுக்குத் தமது எதிர்ப்பை அவர்களுக்குக் காண்பிக்க அஷ்ரப் ஒரு வடிகாலாக இருந்தார். ஆக அந்த உணர்வு, முஸ்லிம் சமூகம், இஸ்லாமிய அரசியல் என்ற பதம் யாவும் சேர்ந்து ஓர்அரசியல் எழுச்சியாக ஏற்பட்டதைப் பார்க்கிறோம்.

பெருந்தொகை முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சியில் இணைந்த போதும் ஏற்கனவே பெரும்பான்மைக் கட்சிகளோடு இருந்த முக்கியஸ்தர்கள் அதே இடத்தில் இருந்து அசைந்து கொடுக்கவில்லை. அவர்கள் சொற்பத் தொகையினராகக் குறுகிய போதும் ‘கிழிந்த பட்டுத்துணி’ என்ற நிலையில் இருந்தார்கள். ஆனால் சமூகம் அரசியலைப் பொறுத்தவரை மூன்று பிரிவாகப் பிளவு பட்டிருந்தது.

அஷ்ரப் அவர்களின் மரணத்துக்குப் பின்னர் கட்சி அவ்வப்போது பிளவுண்டு பல பிரிவுகளாக மாறியது. அவ்வப்போது அமீபாக்களைப் போலக் குட்டிவிடும் ஜமாஅத்துக்களைக் கொண்டு சமூகம் பிளவு பட்டது போல முஸ்லிம் அரசியலும் சமூகத்தைக் கூறு போட்டு வைத்திருக்கிறது.

அரசியல் புள்ளிகளில் சமூகமும் உரிமையும் பேசிக் கொண்டு சுகவாழ்வு வாழும் நபர்களுக்கு அப்பால் பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு சில அரசியல்வாதிகள் பௌதீக வழங்களைப் பெற்றுக் கொடுத்து வந்திருக்கிறார்கள், வருகிறார்கள். ஒரு சில தஃவா இயக்கங்களும் அவற்றையே செய்து வருகின்றன. சமூகத்தின் அரசியலும் தஃவா இயக்கங்கள் ஒரு சிலவும் ஒரே புள்ளியில் இணையும் முதற் கட்டம் இது.

இரண்டாவது கட்டம்தான் மிகவும் இழிவானது. அது சகோதரத்துவ சன்மார்க்க சமூகத்தை முஸ்லிம் அரசியலாலும் இஸ்லாமிய தஃவாவின பெயராலும் பிரித்து வைத்திருப்பதுடன் நின்று விடாமல் தீராத சண்டையையும் ஓயாத சச்சரவையும் சமூகத்துக்குள் விதைத்து விட்டிருக்கின்றன. ஒரு தேர்தல் முடிந்த பிறகாவது எதிரணியைச் சேர்ந்த ஒரு சகோதருக்கு ஸலாம் சொல்லிக் கொள்ளும் நிலை இன்று வரை முஸ்லிம் சமூகத்தில் இல்லை. ஒரே இறைவன், ஒரே நபி, ஒரே வழி என்று முழக்கமிடும் அமைப்புசார் சகோதரர்கள் வௌ;வேறு வீடுகளுக்குள் இருந்த போதும் பொது இடத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுகிறார்கள்.

அரசியல் பிளவுகளாலும் இயக்கப் பிளவுகளாலும் சகோதரத்துவத்தைத் தொலைத்து விட்டுச் சண்டை பிடித்துக் கொண்டு பொலிஸ் நிலையங்களில் நியாயம் கோரி நிற்கிறார்கள்.

நாம் முஸ்லிம்கள் என்று பெருமைப்படுகிறோம்… எங்களுடள் இணைந்து கொள்ளுங்கள், மனிதனுக்குரிய கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறோம் என்று பேசுகிறோம், எழுதுகிறோம்… நபிகளதும் ஸஹாபாக்களினதும் முன்மாதிரிகளை முன் வைத்துப் பேசுகிறோம். தோளோடு தோள் நின்று சகோதரத்துவம் வளர்க்கும் சமூகத்தின் பிரதிநிதிகளான நாம் பள்ளிவாசலுக்குள் கூட எதிரணி முஸ்லிமைக் கண்டால் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஒதுங்கிப் போய் நின்று தொழுகிறோம்…

புத்திசுவாதீனமுள்ள, ஓர் உண்மையான முஸ்லிமுக்கு இதை நினைத்துப் பார்க்கையில் வெட்கம் வரவேண்டும்!

(நன்றி: மீள்பார்வை – இதழ் – 304)

கால் நூற்றாண்டுக்கு காலடி வைத்துள்ள வட முஸ்லிம்களது வெளியேற்றம்

Jaffna Muslimஎம்.ஏ.எம். ஸப்றின், செயலாளர், ஜே.எம்.ஆர்.ஓ. 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறி தலைமுறை தலைமுறையாக பேரோடும் புகழோடும் வாழ்ந்து வந்தார்கள். முன்னொருகால் கோட்டை பிரதேசத்திலும் நல்லூர் பகுதியிலும் குடியிருந்ததும் அங்கிருந்து பலவந்தம் காரணமாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்து சென்றதும், இறுதியாக சோனக தெரு எனப்படும் பிரதேசத்தில் பல நூற்றாண்டு காலமாக நிலைகொண்டு வாழ்ந்து வந்ததும் வரலாறு. 

[Read more…]