Advertisements

கானல்நீராய் கல்முனையின் அபிவிருத்தி??? அங்கலாய்க்கும் மக்கள்

-எம்.வை.அமீர் –

கல்முனைத்தாய் தனது கடந்தகால வரலாற்றில் பல்வேறுபட்ட தலைவர்களையும்இ சிறந்த அடைவுகளையும், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பேசும் அளவுக்குஇ முஸ்லிம்களின் தலைநகர், என்ற அந்தஸ்த்தையும் ஏன் பல்வேறுபட்ட அபிவிருத்திகளையும் கண்டாள்.

கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் முதல் எம்.சீ.அகமட், ஏ.ஆர்.எம்.மன்சூர், எம்.எச்.எம்.அஷ்ரப், எம்.எம்.முஸ்தபா (மையோன்) எச்.எம்.எம்.ஹரீஸ் வரை பாரளமன்ற உறுப்பினர்களையும் கல்முனைத்தாய் ஈன்றாள். அத்துடன் உயர் கல்வியாளர்கள்இ சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், விவசாயிகள்இ மீனவர்கள் என பல்வேறு தரப்பினரையும் தன்னகத்தே உள்ளடக்கினாள்.

கல்முனைத்தாய் பெற்ற மக்கள் ஒற்றுமைக்கு பெயர்போனவர்கள். அவர்களுக்குள் முரன்பட்டுக்கொன்டாலும் இறுதியில் ஒன்றுபட்டு விடுவார்கள். இதற்க்கு பல்வேறு உதாரணங்களைக் கூறலாம்.

Kalmunai

deve2

deve1

அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலைக்கூட கூறலாம். சுமார் 89.81 வீதமான வாக்குகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்கி தங்களது ஒற்றுமையை தேசம் அறியச்செய்தார்கள்.

கல்முனை மக்கள் இவ்வாறு ஒற்றுமைப்படுவதன் காரணமாகவோ என்னவோ, ‘கல்முனை எனக்கு சவாலான பிரதேசம் இல்லை. எனவே சவாலான பிரதேசத்துக்கு வரப்பிரசாதங்களை வழங்கப்போகின்றேன்’ என்று கூறிக்கொண்டு கல்முனையை அரசியல்வாதிகள் கைவிட்ட சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை.

kalmunai1

கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் முதல் எம்.சீ.அகமட், ஏ.ஆர்.எம்.மன்சூர், எம்.எச்.எம்.அஷ்ரப் வரை கல்முனை பல்வேறுபட்ட பாரிய அபிவிருத்திகளைக் கண்டபோதிலும் தற்போதையநிலை ஆமைவேகத்திலேயே செல்கிறது.

புதிய அரசாங்கம், நாட்டில் நல்லபல சீர்திருத்தங்களை செய்துகொண்டுவரும் இவ்வேளையில் 100நாள் திட்டம் என்ற கோஷத்துடன் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
கல்முனை பிரதேச மக்களின் வாக்குப்பலத்தை பிரயோகித்து புதிய அரசில் அமைச்சர்களான முஸ்லிம் அமைச்சர்கள் இப்பிராந்தியத்துக்கு வருகைதந்து கல்முனையை செழிப்பாக்கித் தருவதாக கூறிச்சென்றுள்ளார்கள்.

தேர்தல் பிரச்சாரத்துக்கு வருகைதந்த தற்போதைய பிரதமர் கூட கல்முனையை சிறந்த நகராக்கித்தருவதாகவும்,  அபிவிருத்திகளை செய்வதாகவும் விசேடமாக கல்முனைக்குஇ கல்முனை அபிவிருத்தி அதிகாரசபை என்ற அதிகாரசபை ஒன்றை நிறுவி அதனூடாக அபிவிருத்தி செய்வதாகவும், ஆட்சியமைத்தவுடனேயே கல்முனை சந்தைக்கட்டிடத்தொகுதியை புனர்நிர்மாணம் செய்து தருவதாகவும், நகர அபிவிருத்திக்காக காணிகளை பெற்றுத்தருவதாகவும் கூறிச்சென்றார்.

அவரது கூற்றுக்கு ஒப்பாகவோ என்னவோ கல்முனை மக்களால் உரமூட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களுக்கு நகர அபிவிருத்தி நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சும் அதே போன்று றிசாத் பதியூதீன் அவர்களுக்கு வர்த்தக கைத்தொழில் அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது. இவ்விருவருக்கும் வழங்கப்பட்டுள்ள அமைச்சுகளின் ஊடாக கல்முனையின் அபிவிருத்திகளில் மிகுந்த பங்களிப்பைச் செய்யமுடியும் என கல்முனை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னர் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கும் விஜயம் செய்த அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களும் அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்களும் கல்முனைக்கும் வருகைதந்து அபிவிருத்தியோடு தொடர்புடைய தரப்புக்களை சந்தித்து கல்முனையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடினர். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் அவர்சார்ந்த அமைச்சுக்களின் அதிகாரிகளையும் அழைத்துவந்து கல்முனையின் அபிவிருத்தி தொடர்பாக உத்தரவுகளையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.

கல்முனைத் தொகுதியில் உள்ளடங்கும் சாய்ந்தமருதிலும்,  மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களது தலைமையில்இ சாய்ந்தமருது பிரதேசசெயலகத்தில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு சாய்ந்தமருதின் அபிவிருத்திக்காக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட துறைத்தலைவர் பொறியியலாளர் எம்.ஐ.இல்ஹாம் ஜெஸில் தலைமையில் குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டு இனம்காணப்பட்ட சில வேலைத்திட்டங்கள் சம்மந்தமாகவும் கலந்தாலோசிக்கப்பட்டு, சாய்ந்தமருது தோணா போன்ற சில வேலைத்திட்டங்களை உடனடியாக செய்வது தொடர்பான உத்தரவாதங்களும் வழங்கப்பட்டிருந்தன.

அதேபோன்று கல்முனை மாநகரசபையின் முதல்வர் தலைமையில் கூட்டப்பட்ட ஆலோசனைக்கூட்டத்திலும் கல்முனை மாநகர எல்லைக்குள் அடையாளம் காணப்பட்ட வேலைத்திட்டங்களை செய்வதற்கான பணிப்புரைகள் வழங்கப்பட்டன. இதைவிட மருதமுனை பிரதேசத்தின் அபிவிருத்தி உட்பட கல்முனையின் ஏனைய பகுதிகளின் அபிவிருத்திகள் தொடர்பாக குழுக்களாகவும் தனிநபர்களாகவும் வேண்டுதல்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்களும் கல்முனைக்கான விஜயத்தின் பொது பல்வேறு பிரதேசங்களுக்கும வருகை தந்து பிரதேசம் சார்ந்த மக்களையும் அமைப்புக்களையும் சந்தித்து பிரதேசம் சார்ந்த அபிவிருத்திகளுக்கு பல்வேறு உத்தரவாதங்களை வழங்கியிருந்தார்.

கல்முனை நகர அபிவிருத்திக்கு மேலாக அதன் உட்கட்டமைப்பில் ஒவ்வொரு இடத்திலும் குறைபாடுகள் நிறைந்தே காணப்படுகின்றன. அதில் கல்வியை எடுத்துக்கொண்டால் பாடசாலைகளில் ஒவ்வொரு அமைப்பிலும் குறைபாடுகள் முன்வைக்கப்படுகின்றன.அவைகள் நிவர்த்திக்கப்படாதுவிடின் எதிர்கால நமது சிறார்களின் நிலை கவலைக்கிடமாக மாறிவிடும் அபாயம் இருக்கின்றது. அடுத்து மிகக்குறுகிய நிலப்பரப்புக்குள் மக்கள் செறிந்து வாழ்வதால் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மக்கள் இப்போதே ஆளாக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தை நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. மக்களது நிலப்பிரச்சினைக்கு கரைவாகுவட்டை போன்ற பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புக்களை அமைக்க அரச அனுமதியைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று மீன்பிடியாளர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர் யுவதிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்பனபோன்றவற்றை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

அரசின் 100 நாள் திட்டவேலைகள் நாடுபுராயும் துரிதகெதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கல்முனைக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படுமா? அல்லது அவைகள் கானல்நீராய் ஆகிவிடுமா? அல்லது அபிவிருத்திக்காகவாவது கல்முனையை சவாலுள்ள பிரதேசமாக மாற்ற வேண்டுமா? என மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: