Advertisements

உலகக் கிண்ண கிரிக்கட் முதல் போட்டியில் இலங்கை தோல்வி

  நியூசிலாந்து அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்New-Zealand-vs-Sri-Lanka-1st-ODI-Live-Score-10-Nov-2013புக்கு மத்தியில் நியூசிலாந்தில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 98 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.

சி.ஜே. எண்டர்சன் 75 ஓட்டங்களையும் (46 பந்துகள்), பி.மெக்கலம் 65 ஓட்டங்களையும் (49 பந்துகள்), எஸ்.வில்லியம்சன் 57 ஓட்டங்களையும் (65 பந்துகள்) பெற்றுக்கொடுத்தனர். இறுதியில் 50 பந்துவீச்சு ஓவர்கள் நிறைவின்போது நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 331 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் நுவன் சுரங்க லக்மால், அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் நுவன் குலசேகரஇ ரங்கன ஹேரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்ககை அணி 46.1 பந்துவீச்சு ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னே ஆகக்கூடுதலாக 65 ஓட்டங்களை (60 பந்துகள்) பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் சௌத்தி, போல்ட், மில்ன், விட்டோரி, எண்டர்சன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் சி.ஜே.எண்டர்சன் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். சொந்த மண்ணில் விளையாடி வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிக்கு முதல் வெற்றியுடன் 2 புள்ளிகள் கிடைக்கப்பெறுகின்றன.

Advertisements

Comments

  1. Cricket is a very uncertain game. Hope the Sri Lanka will perform better in the future games.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: