Advertisements

கிழக்கு மாகாண சபை: TNA, SLMC மீண்டும் பேச்சுவார்த்தை

-அஸ்லம் எஸ்.மௌலானா-

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்படுத்தியுள்ள புதிய ஆட்சியில் தமிழ்த் தேசியக்’ கூட்டமைப்பு பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கமொன்றை உருவாக்கி மூவின மக்களும் ஒன்றாகச் செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக்’ கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமது ஆட்சியில் இணைந்து கொள்ள முன்வர வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக்’ கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நேற்று மாலை அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இப்பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமையும் தொடர்வதாக அறிய முடிகிறது.

தமிழ்த் தேசியக்’ கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமதாக்கிக் கொண்டுள்ளதை வன்மையாக கண்டித்து விமர்சித்து வருகின்ற நிலையிலேயே கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கிழக்கின் ஆட்சியில் பங்கேற்பது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கிழக்கின் ஆட்சியை நிறுவுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த போதிலும் முதலமைச்சர் பதவியை இரு தரப்பினரும் விட்டுக் கொடுக்க முன்வராமல் இழுபற நிலை தொடர்ந்து வந்தது.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஏலவே செய்து கொண்ட உடன்பாட்டின் பிரகாரம் பிந்திய இரண்டரை வருடங்களுக்கான முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால விருப்பம் தெரிவித்ததன் பேரில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதற்கான இணக்கத்தை வெளியிட்டது.

இதன் பிரகாரம் கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கின் புதிய முதலமைச்சராக ஹாபிஸ் நசீர் அஹமட் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதற்கான பெரும்பான்மைப் பலத்தை இல்லாமல் செய்வதற்கான தீவிர முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இறங்கியிருந்தது. எனினும் முஸ்லிம் காங்கிரஸ் தாம் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.

இந்நிலையிலேயே கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மு.கா.வினால் நிறுவப்பட்டுள்ள கிழக்கின் ஆட்சியில் அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் தவிர்ந்த நான்கு அமைச்சர் பதவிகளுள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒரு அமைச்சரும் தவிசாளர் பதவியும் மீதமுள்ள இரண்டு அமைச்சர்கள் மற்றும் பிரதித் தவிசாளர் பதவி என்பவற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி என்பன தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற யோசனை முஸ்லிம் காங்கிரசினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சூத்திரத்தின் பிரகாரம் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்பதுடன் தற்போது அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் சார்பில் மாகாண அமைச்சராக பதவி வகித்து வருகின்ற எம்.எஸ்.உதுமாலெப்பை அப்பதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை நாளை 10 ஆம் திகதி கூடவுள்ள நிலையில் இன்று நள்ளிரவுக்குள் பெரும்பாலும் இதற்கான இணக்கப்பாடு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் புதிய அமைச்சர்கள் நியமனம் தாமதமானாலும் புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களினால் கிழக்கு மாகாண சபையில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள பட்ஜெட் எவ்வித இடையூறுமின்றி பெரும்பான்மையுடன் நிறைவேறும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: