Advertisements

சாய்ந்த-மருதை நிமிர்த்த ஹிருணிகா களத்தில்…

எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன் –

கடந்த ஜனாதிபத்தி தேர்தல் காலத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்காக அம்பாறை மாவட்டத்துக்கு பல்வேறுசந்தர்ப்பங்களில் வருகைதரவிருந்த மேல்மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்கள், இன்று அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளுக்கு 2015-02-08 ல் வருகைதந்திருந்தார்.

மேல்மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட குழுவினர் பொத்துவில், சம்மாந்துறை, சாய்ந்தமருது போன்ற இடங்களில் மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டு, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வெற்றிக்காக வாக்களித்த அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத்துங்க அவர்களது சார்பில் நன்றி தெரிவித்ததுடன் எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வலுப்படுத்துவதன்  ஊடாக வேலைவாய்ப்புகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை  செய்வதற்காக  ஒன்றிணைய  வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சாய்ந்தமருது லீமெரிடியன் மண்டபத்தில் வர்த்தக சமூகத் தலைவர் ஏ.ஆர்.எம்.அஸீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் எம்.எம்.ஜுனைதீன்  ஹிபத்துல் கரீம் உள்ளிட்ட பிரமுகர்களுடம் ஹிருணிகா  பிரேமச்சந்திரவுடன்  வருகைதந்த  பிரமுகர்களும் பெரும் திரளான பொதுமக்களும்  கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: