Advertisements

மங்களகம கிராம மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய முயற்சிப்பேன்: அமீர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான மங்களகம கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று வீடமைப்பு சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மங்களகம பிரதேச மக்களுடனான சந்திப்பு மங்களகம மங்கராம விகாரையில் விகாராதிபதி தெஹிகம ஞானரத்ன தேரர் தலைமையில் (04.02.2015) புதன்கிழமை இடம் பெற்ற போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு  அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இந்த நாட்டின் சொத்துக்கள் வீன்விரயம் செய்யப்படாமல் கஸ்டப்பட்ட மக்களுக்கு உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதில் நாட்டின் ஜனாதிபதி மிகவும் அக்கரையுடன் உள்ளார். அதே போன்றுதான் பிரதமரும் அமைச்சர்களும் உள்ளனர் அடிப்படை வசதிகள் இன்றி உள்ள அனைத்துக் கிராமங்களும் நிச்சயம் அபிவிருத்தி அடையும்.

மங்களமகம பிரததேசத்தின் பாடசாலையின் வளப்பற்றாக்குறை, பிரதேசத்தின் மின்சாரம் இல்லாத வீதிகளுக்கு மின்சாரம், யானைகளின் தொல்லைகலிருந்து பாதுகாப்பிற்கு யானை பாதுகாப்பு வேலி, போக்குவரத்து பிரச்சினை போன்றவற்றுக்கு உரிய அதிகாரிகளுடன் பேசி தீர்வு பெற்றுத் தரப்படும் என்றும் உறுதியளித்தார்.

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சாலையால் நிறுத்தப்பட்டடிருந்த மட்டக்களப்பு மங்களகம பஸ் சேவை பிரதி அமைச்சரின் முயற்சியால் நேற்று (05.02.2015) தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_3961 IMG_3963 IMG_4009 IMG_4017

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: