Advertisements

கிழக்கு முதலமைச்சர் தெரிவு : நடந்தது என்ன? உள்வீட்டு தகவல்கள்

கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்றிரவு (04) கிழக்கு மாகாண புதிய முதலமைச்சர் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். அதன்போது முடிவுகள் பெரிதாக எட்டப்படவில்லை.

இந்த நிலையில் இன்று (05) காலையில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ஹக்கீமின் கொள்ளுப்பிட்டி வீடு பரபரப்பாக காணப்பட்டது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஹாபிஸ் நஸீர், தவம், ஜெமீல் ஆகியோர் அங்கிருக்கவில்லை. (மன்சூரும் காணப்படவில்லை என கூறப்டுகிறது) ஜெமீலுடன் அமைச்சர் ஹக்கீம் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பலனளிக்கவில்லை. தவம் காலையிலேயே வந்து விட்டு சென்றதாக தகவல் வழங்கப்பட்டதனையடுத்து அவர் மீண்டும் அழைக்கப்படவில்லை.

RHஅமைச்சர் ஹக்கீம் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் பிரதித் தலைவருமான ஹாபீஸ் நஸீரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடன் வருமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து சற்று நேரத்தில் அவரும் அங்கு வந்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதல்வராக ஹாபிஸ் நஸீர் அஹமதை நியமிப்பதென்ற தீர்மானம் அங்கு அறிவிக்கப்பட்டது. ஓரிருவர் இந்த விடயத்தில் (அம்பாறை மாவட்டம்) முகத்தைச் சுழித்தார்கள். பலர் ஆமோதிக்கும நிலையில் காணப்பட்டனர். சிலர் ஹாபீஸ நஸீரின் நியமனத்துக்கு எழுத்து மூலம் இணக்கத்தை தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஏ.எல். எம். நஸீர் இந்த விடயத்தில் தனது மன வேதனையை சற்று வெளிக்காட்டியுள்ளார். ஆனால், தலைவரின் தீர்மானம் தீர்மானம்தான். மாற்றமில்லை.

இந்த நிலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஜெமீலின் கடிதம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்த ஒருவர் அமைச்சர் ஹக்கீமிடம் நீட்டுகிறார். கடிதத்தை படித்த ஹக்கீம் ஆத்திரமடைந்த நிலையில் குறித்த நபரிடம் அதனைத் திருப்பிக் கொடுத்து கட்சியின் செயலாளரிடம் கொண்டு போய் கொடுங்கள் என கூறியுள்ளார்.. அந்தக் கடிதத்தில் தான் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக ஜெமீல் தெரிவித்திருந்தார்.

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் Via Facebook

Advertisements

Comments

  1. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை முதல் அமைச்சர் ஆக்கி இருக்கலாம் என்பது என்னுடைய சொந்த அபிப்பிராயம் ஆகும். ஆனால் அதற்காகக் கொடும்பாவி எரிப்பது போன்ற அநாகரிகமான செயல்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை.
    இலங்கை முஸ்லிம்களின் பிரதிநிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைத்தான் சர்வதேசம் அங்கீகரிக்கின்றது.. இதுதான் யதார்த்தம். ஆகவே இந்தக் கட்சியை ஒரு சக்தி வாய்ந்த இயக்கமாகக் காட்ட வேண்டுமே தவிர பிளவுகள் நிறைந்த பலவீனமான கட்சியாகக் காட்டக் கூடாது.
    Dr M.L.Najimudeen

  2. M. Nakeer says:

    It could have been discussed in the high command and decision should have taken according to the views expressed there. So any of them have to obey the majority view or view supported with strong logical arguments. SLMC Leader approach on decision making brings him lot of issues and conflicts.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: