Advertisements

தென் கிழக்கு உப வேந்தர் மீதான குற்றச்சாட்டு: தரம் கெட்ட அரசியல்வாதிகளின் செயல்

அபூ ரொஷான்

அண்மையில் தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் எஸ் எம் இஸ்மாயீல் தொடர்பாக பல விமர்சனக் கருத்துக்களும், விசக் கருத்துக்களும் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டு வருகின்றன.

பல ஊழல் மோசடிகள் பல்கலைக்கழகத்தில் நடந்தேறி இருப்பதாக தகவல்கள் வெளிவந்தமுள்ளன.

இது தொடர்பில் மக்களுக்கு சில விளக்கங்களை வழங்குவதே இக்கட்டுரையின் நோக்காகும்.

தற்போதைய தென் கிழக்கு பல்கலைகழகத்தின் உப வேந்தர் இஸ்மாயில் சம்மாந்துறையை பிறப்பிடமாக கொண்டாவர். தனிப்பட்ட வகையில் நல்லதோர் குடும்ப பின்னணியை கொண்டவர். அத்துடன் தாம் எடுத்துக்கொண்ட எந்த ஒரு பணியினையும் சிறப்பாக நிறைவேற்றும் ஆற்றல் கொண்டவர்.

இவரது தனிப்பட்ட ஆற்றல் விளைவை தென் கிழக்கு பல்கலைகழகத்துக்கு ஒருமுறை தரிசிப்பதன் மூலம் கண்டுகொள்ளும் வாய்ப்பை யாவரும் பெறலாம்.2009 ஆண்டுகளில் இப் பல்கலைக்கழகம் கொண்டிருந்த நிலமையினையும் தற்போது எங்கனம் புத்தாக்கம் பெற்று தலை நிமிர்ந்து காணப்படுகிறது என்பதற்கு சான்று பகரும் என கூறலாம்.மர்ஹூம் அஷ்ரப் தான் பதவி வகித்த துறைமுகத்திலே இளைஞ்சர்களுக்கு  தொழில் வாய்ப்பினை பெற்று கொடுத்தார் இத்தனைக்கும் அவர் ஒரு அமைச்சர் என்பது மட்டுமல்லாமல் அன்றைய  ஜனாதிபதி  சந்திரிக்காவை ஆட்டிப்படைத்தவர் என்று கூறினால் மிகையாகாது.

அப்படி இருந்தும் அவரால் தனது அமைச்சு மூலமாக கிடைத்த அதிகாரத்தை வைத்தே அவர் அவ்வாறு செயல்பட்டார்.இங்கு மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ராபோடு இஸ்மாயிலை ஒப்பிடும் நோக்கம் அல்ல இருந்த போதிலும், இஸ்மாயீல் சாதாரண ஒர் உப வேந்தர் பதவியில் இருந்துகொண்டு தன முன்னெடுத்த பணிதான் இந்த பிராந்தியத்தில் உள்ள கீழ்த்தரமான தரம் கெட்ட அரசியல் வாதிகளுக்கு பொறுத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

பல்கலைக்கழகத்தில் தொழிலுக்கான வெற்றிடங்கள் ஏற்கனவே இருக்கவில்லை மாறாக அது  உருவாக்கப்பட்டது.குறிப்பாக சொல்லப்போனால் இஸ்மாயிலின் வருகையோடு 2009 இற்கு பிற்பட்ட காலத்தில் தொழில் வழங்காத மாதங்கள் இல்லை எனலாம்.இது வெறுமனே இருக்கின்ற ஒரு தொழிலை வழங்குகின்ற ஒரு செயற்பாடு அல்ல மாறாக வெற்றிடங்களை உருவாக்கி அதன் பல படித்தரங்களில் களத்தில் நின்று உழைத்ததன் விளைவுதான், ஒரு அமைச்சரவை அமைச்சரினால் கூட இந்தளவு கணிசமான தொழில் வாய்ப்புகளை வழங்க முடியாது என்கிற நிலைமையில் இது சாத்தியமானது.

அமைச்சர் அதாஉல்லா, அமைச்சர் ஹக்கீமினால் கூட தங்களது அமைச்சினூடாகவோ அல்லது வேறு நிறுவனங்களினூடாகவோ தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தி வழங்க முடியாத ஒரு காரியத்தை நடைமுறை சாத்தியமாக்கிய பெருமை உப வேந்தர் இஸ்மாயீலை சாரும். தனக்கு வழங்கப்பட்ட இந்த உப வேந்தர் பதவி ஒரு அரசியல் அதிகாரம்  அல்ல இது ஒரு குறிப்பிட்ட ஒரு கல்வி நிறுவனத்தை நிர்வகிக்கின்ற ஒரு பொறுப்பே.

இந்த பதவிக்கு அரசியல் அதிகாரம் எந்தவிதத்திலும் கிடைக்காது, அப்படியான ஒரு நிறுவனம் சார்ந்த ஒரு பதவியை இந்த சமூகத்தின் நன்மைக்காக சிறப்பாக பயன்படுத்திய பெருமைக்குரியவர் இஸ்மாயீல்.அவ்வாறு இவர் மீது ஊழல் குற்ற சாட்டு இருக்குமானால் அவற்றை உரியவர்கள் நிருபித்தாக வேண்டும்.

பல்கலைக்கழகத்தை பொருத்தவரைக்கும் ஒரு சுயாதீனமாக இயங்கும் ஒரு நிறுவனம் ஒன்றாகும். இங்கு உபவேந்தரை சட்ட ரீதியாக வழிநடத்துபவர் அங்கு இருக்கும் பதிவாளராவார். கல்வி நடவடிக்கை தொடர்பாகவும் கல்வி சாரா நடவடிக்கை உட்பட அத்தனை நடைமுறைகளுக்கும் சட்டரீதியாக வழிகாட்டுபவர் தான் பதிவாளர்.

இங்கு ஊழல் மோசடியில் உவவேந்தருக்கு சந்தர்பங்கள் மிகவும் குறைவு ஏனெனில் ஏனய அதிகாரிகளினதும் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தினரும் தலையீடுகள் இன்றி எது வித செயற்பாடுகளும் இல்லை என்றே கூறலாம். உதாரணமாக பொருள் கொள்வனவு நடைமுறையை செயல்படுத்தவென தனியான வழங்குதல் பிரிவு அவற்றை கண்காணிப்பதற்கு கணக்கீட்டு பிரிவு என பல கட்டுப்பாட்டு நடைமுறைகள்  காணப்படுகிறது.

அத்துடன் கணக்காளரினதும் பல்கலைக்கழக பதிவாளரினதும் நேரடி கண்காணிப்பில் இது இருக்கிறது. இவ்வாறு சுயாதீனமாக இருக்கும்போது உபவேந்தரின் தலையீடு என்பது ஒரு சுத்து மாத்து என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

இங்கு இன்னுமொரு விடயத்தை குறிப்பிட வேண்டும், அதாவது கடந்த மகிந்த அரசினால் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ஒரு சில நிறுவனங்களை தவிர தற்காலிக தொழில் உள்ளவர்களை நிரந்தரமாக்குகின்ற புதிய சுற்று நிருபத்தின் பிரகாரம் தொழில்களை நிரந்தமாக்குவதில் இன்னமும் முடியாமல் இருக்கின்ற பொது தான் முன்னின்று தற்காலிக சமயா சமய ஒப்பந்த ஊழியர்கள் ஏறக்குறைய 150 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க அத்தனை நடவடிக்களையும் எடுத்திருந்தார்.அந்த வகையில் முதற் கட்டமாக சுமார் 100 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது ஒரு வரலாற்று சாதனையாகும்.

இங்கு நிரந்தர தொழிலுக்காக சேர்ந்துகொண்டவர்கள் அனைவரும் நமது சமூகத்தினரே என்பதுடன் நாளாந்தம் கூலித்தொழில் என்ற நிலையில் இப்பல்கலை கழகத்தில் வயிறு கழுவிய அப்பாவிகள் என்பதை இங்கு  குறிப்பிட வேண்டும். மட்டுமல்லாது இதனை கூட வழங்க கூடாது என்று தடுக்க முட்பட்டவர்களும் நமது சமூகத்தில் இருக்கிறார்கள்.

மற்றும் 35 ஏக்கர் காணி விவகாரமானது முன்னரே பேச்சளவில் மல்வத்தை ரேடியோ ஸ்டேசனுக்கு சொந்தமாக அமைந்திருக்கும் காணி கடந்த பல வருடமாக இராணுவத்தினரின் பிரசன்னதுடன் இது காணப்பட்டது.

இதற்கான எந்த ஒரு ஆவணமும் இல்லாத போதுதான் இஸ்மாயில் களத்தில் இறங்கினார் அவற்றின் உரிமை பத்திரத்தை பல்கலைக்கழகத்தின் பெயருக்கு ஆவணமாக்கும்  பணியை முன்னெடுத்தார்.அந்தவகையிலே இந்த குறிப்பிட்ட காணி ராணுவத்தின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு சுற்றி வர நிரந்தர வேலி அமைக்கப்பட்டு பல்கலைக்கழகத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் நோக்கில் அதனை நாளந்த பாவனைக்கு உட்படுத்துவதற்காக உடனடியாக குத்தகைக்கு கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, கேள்வி பத்திரம் மூலம் இது குத்தகைக்கு வழங்கப்பட்டது.

இங்கு ஒன்றை குறிப்பிட வேண்டும், இந்த காணி பல்கலைக்கழகத்தின் கைகளில் இருந்து வேறு தேவைக்கு ராணுவத்தினருக்கு கைமாற்றப்பட இருந்த திட்டத்தினை தனது ராஜதந்திர நடவடிக்கையினால் பல்கலைக்கழகத்தின் வசமே தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு பாரிய பங்காற்றினார்.

அமைச்சர்கள் மத்தியிலும் அரசின் மத்தியிலும் தனக்கிருந்த முழு செல்வாக்கினையும் இதில் பயன்படுத்தியே இதனை மீட்பதற்கு தன்னை ஈடுபடுத்தினார்.அவர் விரும்பி இருந்தால் இந்த விடயத்தினை கையாள்வதற்கு தனது கீழ்நிலை நிர்வாக அதிகாரிகளை பணித்துவிட்டு இருந்திருக்கவும் முடியும். அவ்வாறு இல்லாமல் தனது பதவியினதும் செல்வாக்கினதும் முழு வலிமையையும் அவர் பயன்படுத்தி இக்காணியை மீட்டார்.

மேலும், 2013 இல் கொழும்பில் இடம்பெற்ற உலக தலைவர்கள் கலந்துகொண்ட  சோகம் (CHOGAM) நிகழ்வுக்கு தென் கிழக்கு பல்கலை கழகத்தை முழுமையாக ஈடுபடுத்தினார். அதன் பெறுபேறாக எந்த ஒரு பல்கலைக்கலகதுக்கும் கொடுபடாத நிலையில் இப் பல்கலைகழகத்திற்கு   எதுவித செம்பு சதமும் செலவு இல்லாமல் பல மில்லியன் பெறுமதியான 2 வாகனங்களை பல்கலைகழகத்துக்கு சொந்தமாக்கி கொடுத்தார். அதன் மூலம் பல்கலைகழகத்தின் போக்குவரத்து தேவைக்கு யதார்த்தமாக  தீர்வினை கண்டார்.

மேலும் இவரினது காலத்தில் தடம் பதிக்கக்கூடிய சில விடயங்களை இவர் மேற்கொண்டார், அந்த வகையில் பொறியியல் பீடம் நிறுவுதல் ஒரு மகத்தான சேவையாக கருதப்படுகிறது. அத்துடன் பலகலைக்கழத்தின் பீடங்களுக்கான நிரந்தர கட்டிடங்களை அமைத்தல் பாரிய நூலகம் என்பன இவரது காலத்தில் தடம் பதிக்கின்ற பல்வேறு விடயங்களாகும்.

நாம் எல்லோரும் அறிந்தவகையில் எமது பிராந்தியத்தில் ஒரு கட்டிடம் அல்லது எதாவது அபீவிருத்தி வரவேண்டுமாக இருந்தால் பல அமைசர்களின் தயவை நாட வேண்டும். அவர்களுக்கு வால் பிடிக்க வேண்டும். அவர்கள் 10 லட்சம் பெறுமதியான ஒரு கொங்கிரீட் ரோட்டை போட்டுவிட்டு 5 லட்சம் அதிகமான பணத்தினை திறப்பு விழா செலவு செய்வார்கள், இந்த நடைமுறைதான் இப்போதும் நமது சமூகத்தில் இருக்கிறது.

ஆனால் இப்பல்கலைக்கழகத்தில் பல மில்லியன் கணக்கான பெறுமதி வாய்ந்த அபீவிருத்திகள் கட்டிடங்கள் பாதைகள் உள்ளக வசதிகள் எதுவித ஆர்பரிப்பும் இன்றி துணை வேந்தரின் அயராத முயற்சியினால் கொண்டுவரப்பட்டது.

ஒரு பீடம் ஒன்று உருவாக வேண்டுமானால் எத்தனை வேண்டுகோள்கள் முறைப்பாடுகள் எத்தனை பேரின் சிபாரிசு வேண்டும் தெரியுமா? ஏன் கடந்த காலங்களில் ஒரு பல்கலைக்கழகம் தனது குறிப்பிட்ட ஒரு வசதியை நிவர்த்தி செய்ய கோரி பாராளுமன்றில் குரல் எழுப்பியும் இன்று வரை நிறைவு செய்யப்படாமல் இருக்கும் நிலைமை நாம் காணவில்லையா? ஆனால் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் அமையபெற்ற பொறியியல் பீடமோ யாரினதும் சிபாரிசை வேண்டி நிற்கவில்லை, உப வேந்தர் இஸ்மாயீல் விடயத்தை கையிலெடுத்தார், களத்தில் இறங்கினார், வெற்றி பெற்றார்.

ஒரு சிலர் நினைக்கிறார்கள் இதுவல்லாம் இயல்பாகவே வந்தது என்று அவ்வாறென்றால் இன்று முழு கிழக்கு மாகாணமும் இன்று  சொர்க்கபுரியாக இருக்க வேண்டும்.கடந்த காலங்களில் நாடு கண்ட அபீவிருத்தியை இந்த கிழக்கு மாகாணம் அதிலும் குறிப்பாக அம்பாறை கரையோர பகுதி  இழந்து நிற்கிறது. இன்னும் சொல்லப்போனால் கல்முனை நகரம் அமைசர் மன்சூரின் காலத்தில் கண்ட அபிவிருத்தியோடு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் சம்மாந்துறை நகரும் அன்வர் இஸ்மாயிலோடு மட்டுப்ப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதற்குப் பின்னர் இந்த இரு பிராந்தியங்களிலும் எத்தனை வகையான அரசியல் அதிகாரம் கிடைத்தது ஏதாவது நடந்ததா குறிப்பிட்டு சொல்லக்கூடிய  எந்த அபீவிருத்தியும் இல்லை என்றே சொல்லலாம்.ஆனால் உபவேந்தர் இஸ்மாயீல் ஒரு அரசின் அதிகாரியாக இருந்து ஆற்றிய பணி ஒரு மகத்தான சேவையாகும்.

இது இந்த பிராந்திய மக்களிடத்தில் குறிப்பிடத்தக்க வகையில் மக்கள் பேசுபொருளாக இன்று மாறி இருக்கிறது. குறிப்பாக சம்மாந்துறை மக்கள் இவருக்கு ஒரு அரசியல் அதிகாரம் கிடைத்தால் இன்னும் சிறப்பாக பணியாற்றுவார் என்கிற எண்ணம் அவர்கள் மத்தியில் தோன்றியிருக்கிறதுசம்மாந்துறை மக்கள் மட்டுமல்லாது ஏனைய நற்பிட்டிமுனை, மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அக்கரைப்பற்று, பொத்துவில் மக்கள் அனைவரும் இவரை அரசியலுக்கு அழைக்கின்றனர். இப்படியான அற்பணிப்புள்ள சேவகன் இந்த பிராந்தியத்துக்கு தேவை என்று கருதியே இந்த அழைப்பு மக்கள் மனங்களில் இன்று உலா வருகிறது.

ஆட்சியாளர்கள் யாராகவும் இருக்கலாம் அவர்களிடத்தில் தந்து சமூகத்தின் அன்றாடப் பிரசினைகளை எடுத்துக்கூறி அவற்றை தீர்த்துவைக்கின்ற பணியினை செய்கின்ற ஒரு மகன் அவசியம் என மக்கள் இன்று உணர்ந்துள்ளனர். மக்கள் முடிவெடுத்து எவ்வாறு மாற்றம் ஒன்றுக்கு வாக்களித்தார்களோ அது போன்று மகத்தான சேவகர்களையும் இன்று மக்கள் தேடுகின்றனர்.அந்த வகையில் மக்கள் தேடும் ஒரு மகன்தான் இன்று முழு அம்பாறை மாவட்டத்திலும் பேசப்படும் ஒரு மகனாக இஸ்மாயில் திகழ்கிறார் என்பது தான் தற்போது களத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு கண்ணில் விட்ட எண்ணெய்யாக உள்ளது.

இஸ்மாயிலின் அரசியல் பிரவேசம் எங்கே தமது இருப்புகளுக்கு ஆப்பு வைத்து விடுமோ என்று அஞ்சியே அவர் மீது சேறு பூசும் நிகழ்ச்சி நிரலுக்கு இரங்கி உள்ளனர். இவரின் அரசியல் பிரவேசம் பற்றி மக்கள் மத்தியில் எதுவித பேச்சும் இல்லாது இருந்தால் இந்த சேறு பூசும் குற்ற சாட்டு எந்த வகையிலும் தோன்றி இருக்காது.

பிராந்திய அரசியவாதிகளின் ஒரு சித்து விளையாட்டு இது. இதற்கு பல்கலைக்கழக ஊழியர்கள் சிலரும் துணை போயுள்ளனர் என்பதை நினைக்கும் போது வேதனை தரும் ஒரு விடயமாகும். அத்துடன் அரசியல்வாதிகளின் கைபொம்மையாகி உள்ளனர் சிலர்.காய்கின்ற மரத்துக்கு கல்லடி என்பது போல இவரது சேவைகளை கண்டு  பொறாமை பிடித்தவர்கள் இவ்வாறான  கீழ்த்தரமான  செயல்களில் இறங்கியுள்ளனர்.

மிகவும் நேர்மையாக திறமையாக செயற்பட்ட ஒருவருக்கு வழங்குகின்ற பரிசா இது; நல்ல மனிதர்களை நாம் அவர்களது முயற்ச்சிகளை  பாராட்டி கௌரவிக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டும் அவ்வாறுதான் இல்லாவிட்டாலும் வைக்கோல் கந்தில் படுக்கின்ற அது மாதிரி இருப்பதில் இருந்து தவிர்ந்து கொள்ளல் வேண்டும். இதற்கு சமூகம் அனுமதிக்க கூடாது, காழ்புணர்ச்சி அரசியலின் காரணமாக இவர்களது செயற்பாடுகளை மக்கள் அடையாளம் காணல் வேண்டும்.

மட்டுமல்லாது அரசியல் அதிகாரம் இன்றி அரசின் அதிகாரியாக இருந்து கொண்டு இந்த சமூகத்துக்கு அர்ப்பணித்தார் என்றால் ஒரு அரசியல் அதிகாரம் வழங்கினால் தற்போது இருக்கின்ற அரசியல்வாதிகள் மங்கி மறைந்து விடுவார்கள் என்ற அச்சம் அவர்களை குடி கொண்டுள்ளது என்பதை நமது சமூகம் உணர வேண்டும்.எனவேதான் உப வேந்தர் இஸ்மாயிலின் மீது சுமத்தப்பட்டுள்ள அபாண்டம் உண்மைக்கு புறம்பானதும், அரசியல் காழ்புணர்ச்சியின் வெளிப்பாடே இது என்பதை ஆணித்தரமாக இங்கு கூறலாம்.

மேலும் இதன் பின்னணியில் ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியின் கிழக்கு மாகான சபை உறுப்பினரது அரசியல் வங்குரோத்து நிலையினை பட்டவர்த்தமாக மக்கள் வெகு விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.அத்துடன் அண்மையில் ரணிலின் மீதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதும் அபாண்டமாக போலியான ஆவணம் தயாரித்து பழி சுமத்திய திஸ்ஸ அத்தநாயக்கவை கைது செய்து விசாரணை செய்வது போன்று உப வேந்தரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்ப்படுத்தியவர்கள் யார் என்பது அடையாளம் காணப்பட்டு விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்து உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுவே மக்களின் ஆதங்கமாகும்.

அத்துடன் தங்களது இயலாமையை சமூகத்தின் முன் மறைப்பதற்காக இவ்வாறான போலி குற்றசாட்டுகளை முன்வைத்து மக்களை திசைதிருப்பி  பிழையான வழிகளுக்கு மக்களை இட்டுச்செல்ல முயலும் அரசியல் சக்திகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: