Advertisements

செம்மண்ணோடை அல்ஹம்ரா வித்தியாலயத்தில் ஆசிரியர் மாணர்வகளை கௌரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள செம்மண்ணோடை அல்ஹம்ரா வித்தியாலயத்தின் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் அவர்களுக்க கற்பித்த ஆசிரியர்களும், வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்களாக கடமையாற்றியவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் திங்கள்கிழமை (02.02.2015) மாலை இடம் பெற்றது.

வித்தியாலய அதிபர் எம்.எஸ்.சுபைதீன் தலைமையில் செம்மண்ணொடை சாட்டோ விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வீடமைப்பு சமுர்த்தி பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், மட்டக்களப்பு மத்தி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.மீரசாஹிப், கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி, கல்குடா தௌஹீத் ஜமாதின் தலைவர் அஷ்ஷேக் ஏ.எல்.பீர்முஹம்மது, ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவர் எம்.ஏ.சி.நியாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திடைந்த மாணவர்கள் 22 பேரும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் ஏ.எல்.எம்.சனூஸ் ஆசிரியை ஜனாபா எம்.எஸ்.இனாயா மற்றும் பாடசாலையில் இதுவரை அதிபர்களாக கடமையாற்றிய எட்டுபேரும் பிரதம அதிதியால் கௌரவிக்கப்பட்டனர்.

5a1d42n ah50iru clwdufs lcwjdts m1mxst5 nu4wwsk spqcqrm tzbrpmf 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: