ரணில் விக்ரமசிங்க சட்டவிரோதமான முறையில் பிரதமராக்கப்பட்டார்: சரத் என் சில்வா

Sarath N Silvaசட்டவிரோதமான முறையிலேயே ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்னவும் அப்போதைய அமைச்சர்களும் மிகவும் நாகரீகமாக முறையில் அமைதியைப் பேணியுள்ளதாகவும், அவர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தால் பாரிய குழப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்பட்ட விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். பிரதமராக பதவி வகித்த டி.எம் ஜயரட்ன பதவி விலகவில்லை, பதவியிலிருந்து விலக்கப்படவும் இல்லை இவ்வாறான ஓர் பின்னணியில் புதிதாக ஒருவரை பிரதமராக நியமிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க மீளவும் பதவியில் அமர்த்தப்பட்ட விதம் தவறானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் ஒன்றினால் மட்டுமே மொஹான் பிரிஸின் நியமனத்தை ரத்து செய்திருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டத்தை மதிக்கும் நபர் என்ற போதிலும்,அவருக்கு அருகாமையில் இருப்பவர்கள் அவரை பிழையாக வழிநடத்தியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி என்பது சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நிலைமையையே குறிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் செய்த பிழைகளை இந்த அரசாங்கம் செய்வதனை தாம் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். (GTN)

Leave a comment