Advertisements

யாரையும் ஏமாற்றி தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுக் கொள்ளவில்லை: றிசாத் பதியுதீன்

எம்.எம்.இர்பான்-

ஆகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை எதிர்வரும் தேர்தலில் மக்கள் அங்கீரித்தால் மூன்று வீதமாக இருக்கின்ற எமது பல்கலைக்கழக வைத்திய தெரிவை மற்றும் நான்கு வீதத்தில் இருக்கின்ற பொறியியல் துறையை பத்து வீதமாக கொண்டு வரமுடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் வணிகத்துறை வாணிப அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அமைச்சுப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் முதன் முறையாக தனது பிரதேசத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு அவரை வரவேற்கும் நிகழ்வும் பொதுக் கூட்டமும் ஓட்டமாவடியில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்நாட்டில் இருபது இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர் அதில் பதின்மூவாயிரம் இலட்சம் வாக்காளர்கள் இருக்கின்றார்கள் எமது சமூகம் சிதறிக் காணப்பட்டது இந்த சமூகத்துக்கு வழிகாட்டுவதற்காக மறைந்த தலைவர் அஷ்ரப் தனியான கட்சியை அமைத்து பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளுராட்சி சபை ஆகியவற்றிலே பிரதிநிதிகளை பெறுகின்ற சந்தர்ப்பத்தை பெற்றுத் தந்து இந்த சமூகத்தை தலை நிமிந்து வாழச் செய்ய வேண்டும் என்பதற்காக சகல அற்பணிப்புக்களை செய்தார். தற்போது இச்சமூகம் பரிதாபமான நிலையிலே இருந்து கொண்டு இருக்கின்ற காலத்தினால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கட்சியை சகோதரர் அமீர் அலியுடன் சேர்ந்து நாங்கள் ஆரம்பித்தோம்.

நாங்கள் குறுகிய காலத்திற்குள் முன்னேறி பதின்மூவாயிரம் இலட்சம் மக்கள் எதிர்பார்த்த, முப்பது வீதமான சிறுபான்மை மக்கள் எதிர்பார்த்த இந்நாட்டிலே ஒரு நல்ல ஆட்சி மாற்றத்தை கொண்டு வர மாட்டார்களா என மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த போது நமது கட்சியை தைரியமாக இந்த சமூகத்தின் எதிர்பார்ப்பை, விருப்பத்தை, ஆட்சி மாற்றத்தை, நல்லாட்சியை கொண்டுவருகின்ற பாரிய பொறுப்புக்காக அர்ப்பணித்த கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி விளங்குகின்றது.

அதே போல் தான் மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வந்து முப்பது வருடம் யுத்தம் செய்து இல்லாத பொல்லாத துன்பங்களும், துயரங்களும், வேதனைகளும் அடைந்த ஒரு சமூகமாக இந்தச் சமூகம் எங்களுக்கு விடிவில்லையா, விமோசனமில்லையா, என்று துடித்துக் கொண்டிருந்த பொழுது மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சியமைப்பதற்கு பக்க பலமாக நின்று சமாதானத்தை பெற்றுக் கொடுப்பதிலே, இருபது இலட்சம் மக்கள் நிம்மதியான பெருமூச்சு விடுவதற்காக அர்பணிப்பு செய்கின்ற சமாதானத்தை உருவாக்கியவர்கள் என்று நிரூபிக்கின்ற ஒரு கட்சியாக எங்கள் கட்சி காணப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷவோடு சேர்ந்து உங்களை நிம்மதியாக வாழ வைக்க அர்ப்பணிப்பு செய்ததோ, அதேபோல கொண்டு வந்த அந்த ஆட்சி பொதுபல சேனாவுடன் இன்றும் சில நயவஞ்சகக் கூட்டங்களின் ஊடாக நமது மத நடவடிக்கைகளிலே கை வைத்த போது, நமது பொருளாதாரத்திலே கை வைத்த போது, நமது எல்லா விடயத்திலும் கை வைத்து இந்த சமூகத்தை அடிமைப்படுத்தி எங்களை ஒரு கோளைச் சமூகமாக, அரசியல் வாதிகள் கூட சவால் விடுகின்ற மதத்தலைவர்களான அவர்கள் மாறிய போது உள்ளே இருந்து போராடினோம், சண்டை பிடித்தோம், ஜனாதிபதியோடு பேசினோம், முரண்பட்டோம் அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் பேசினோம் அந்த கூட்டத்திற்கு எதிராக தைரியமாக சென்று நீதிமன்றத்திலே பல வழக்குகளை அவர்களுக்கு எதிராக தொடுத்தோம்.

எனது அமைச்சுக்குள் வந்து அடாவடித்தனம் செய்த பொழுது ஜனாதிபதி மற்றும் பலர் வந்து சமாதானமாக போய்விடுங்கள் என்று சொன்ன போது அதையெல்லாம் நிராகரித்து இந்த பொதுபல சேனாவுக்கு எதிராக நாங்கள் வழக்கு தாக்கல் செய்தோம். காணிகளை பிடித்து வேறு நாட்டு முஸ்லிம்களை குடியேற்றுகின்றோம் என்று எங்களை குற்றம் சுமத்திய ஞானசாரர் தேரருக்கு எதிராக ஐநூறு மில்லியன் ரூபாய் நஸ்ட ஈடு கேட்டு வழங்கு தாக்கல் செய்துள்ளோம் இந்த சமூகத்தை பாதுகாக்க இந்த ஆட்சி மாற்றம் வருவதற்காக நாங்கள் என்ன என்ன அர்ப்பணிப்புக்களை, தியாகங்களை செய்ய வேண்டுமோ நேர்மையாக, இதய சுத்தியோடு, தைரியமாக, உயிரைக் கூட பணயம் வைத்து அந்த முடிவுகளை அந்தக் காலங்களிலே நாங்கள் செய்தோம்.

இந்நாட்டில் வாழுகின்ற இருபது இலட்சம் முஸ்லிம்களைப் பற்றி பேசுகின்ற, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், கட்சியை உருவாக்குவதற்கு மிக முக்கியமாக இருந்த வரும், கட்சியின் ஸ்தாபர்களில் முக்கியமாக இருக்கின்ற வரும் கல்குடாவின் அரசியல் தலைமையுமான பிரதியமைச்சர் அமீர் அலி நான்கு வருடங்கள் பதவி அந்தஸ்தில்லாமல் வேதனையோடு அவருடன் சேர்த்து கல்குடா மக்களும் அவரின் ஆதரவாளர்களும் இருந்த பொழுது கட்சியின் தலைமையானது அரசாங்கத்தோடும் பெஷில் ராஜபக்ஷவோடும் வாக்குறுதி தந்த அரசின் முக்கியஸ்தர்களோடும் எல்லா வகையிலும் பேச்சுவார்த்தைகளில் பல முறை ஈடுபட்டோம் எங்களை அவர்கள் ஏமாற்றிக் கொண்டே இருந்தார்கள்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் அரச தரப்பினர் நயவஞ்சகத்தனமாகவே நடந்து கொண்டனர் கல்குடா மக்களும் ஓட்டமாவடி பள்ளிவாயலும் அதற்கு சாட்சியாகவுள்ள. பெஷில் ராஜபக்ஷ ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு வந்து வாக்குறுதி தந்ததை சகோதரர் ஹிஸ்புல்லா அதை மொழி பெயர்த்தது தங்களுக்கு ஞாபகம் இருக்கும் இந்த கல்குடா மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. இரண்டு வருடத்துக்கு தரவேண்டிய தேசிய பட்டியலை தேர்தல் நெருங்க அதைத் தந்தார்கள் அதை எடுப்பதா இல்லையா என்று நாங்கள் யோசித்தோம்; பத்து நாட்கள் பொறுத்தோம் உங்களிடத்தில் வந்து கேட்டு நீங்கள் எடுங்கள் என்று சொன்னீர்கள்.

ஆகவே கட்சியானது யாரையும் ஏமாற்றி தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுக் கொள்ளவில்லை. எமக்களிக்கப்பட்ட வாக்குறுதியின் படி எமக்கு கிடைக்க வேண்டிய தேசியப் பட்டியல் ஆசனத்தையே கட்சியும் சகோதரர் அமீர் அலிக்கு பெற்றுக் கொடுத்தது எமது கட்சி சென்ற அரசினை ஒரு போதும் ஏமாற்றி தேசியப் பட்டியலை பெற்றுக் கொள்ளவில்லை நாங்கள் அரசை விட்டுப் போக மாட்டோம் என்று அரசிடம் வாக்குறுதியளித்து விட்டு அமீர் அலியினுடைய தேசியப் பட்டியலைப் பெற்றுக் கொள்ளவுமில்லை அல்லது மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக நாங்கள் கூறியதற்காக எமக்கு தரப்படவுமில்லை.

அனைத்து கட்சிகளுக்கும் தேசிய பட்டியல் கொடுத்தார்கள் எங்கள் கட்சிக்கு தரவில்லை எங்களுக்கு தர வேண்டியதையே நாங்கள் பெற்றுக் கொண்டோம் அதே போலவே பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளுக்கும் அரசாங்கம் கொடுத்ததைப் போலவே எமது கட்சிக்கும் தேசியப் பட்டியலைத் தந்தார்கள் ஆனால் கல்குடாவிலுள்ளவர்கள் சிலர் நாங்கள் ஏமாற்றி தேசியப் பட்டியலைப் பெற்றதாக விமர்சிக்கின்றார்கள்.

நாங்கள் நாட்டிலிருக்கின்ற இருபது இலட்சம் முஸ்லிம்களின் உரிமமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும், மக்கள் நிம்மதியான வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்காக எமது போராட்டத்தினை தற்போது ஆரம்பித்துள்ளோம். அந்நிலையில் கல்குடாவிலிருக்கின்ற நீங்கள் உங்கள் சக்திமிக்கதும் அரசியல் சாணக்கியமுள்ள அரசியல் தலைமையான அமீர் அலிலை எவ்வாறு தோற்கடிக்கலாம் என்ற போராட்டத்தில் இறங்கிவிடாதீர்கள். எவ்வாறு கல்குடாவிலிருக்கின்ற பிரதியமைச்சை அரசியல் தலைமையை பாராளுமன்ற உறுப்புரிமையை அழித்து கல்குடா சமூகத்தை அடிமைச் சமூகமாகவும், அரசியல் அனாதைகளாக மாற்றும் சதித்திட்டத்தில் ஈடுபட்ட குற்றத்தை செய்த சமூகமாகி விடாதீர்கள் என கல்குடா மக்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

கல்குடா மக்களின் முக்கிய பிரச்சனையாக இருக்கின்ற தண்ணீர் பிரச்சனை, கல்வி சார் பிரச்சனைகள், பிரதேச சபை சம்பந்தப்பட்ட காணி, சம்பந்தப்பட்ட அலகுப் பிரச்சனைகள் போன்றவற்றை நாங்கள் அதிமேதகு ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுடன் செய்து கொள்ளப்பட்ட இருபது அம்சங்கள் அடங்கிய கோரிக்கையில் திட்டவட்டமாக சுட்டிக்காட்டியுள்ளோம் அந்த வகையில் கல்குடா மக்கள் கண்ணை மூடிக் கொண்டிருந்தாலும் அமீர் அலி அனைத்து பிரச்சனைகளையும் அவரின் தலைமையில் சுமந்தவராக அவருக்கு கட்சியின் தலைமை பக்க பலமாக இருந்து கல்குடாப் பிரதேசத்தைக் கட்டியெழுப்புகின்ற பயணத்தை முன்னெடுப்போம் என்ற வாக்குறுதியைத் தருகின்றேன் என்றார்.

இக் கூட்டத்திற்கு வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், ஓட்டமாவடி பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி, ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.கே.முஹைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisements

Comments

  1. M. Nakeer says:

    Hey Rishad, are you trying to cheat the people of the eastern as you have done in the North. If you are brave can you declare the properties you have and tell public how did you earn them.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: