Advertisements

அமீர் அலிக்கு ஓட்டமாவடியில் பலத்த வரவேற்பு

எம்.எம்.இர்பான்

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அமைச்சுப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் முதன் முறையாக தனது பிரதேசத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு அவரை வரவேற்கும் நிகழ்வும் பொதுக் கூட்டமும் நேற்று வெள்ளிக்கிழமை (30.01.2015) பிற்பகல் ஓட்டமாவடியில் இடம் பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்றலில் இடம் பெற்ற கூட்டத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வணிகத்துறை வாணிப அமைச்சருமான றிஸாட் பதியுதீன், கிழக்குமாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், ஓட்டமாவடி பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி, ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.கே.முஹைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதிதிகள் மட்டக்களப்பு பொலநறுவை மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான ரிதிதென்ன ஜெயந்தியாய கிராமத்தில் அக் கிராம மக்களால் வரவேற்கப்பட்டதுடன் நாவலடிச் சந்தியில் அப்பகுதியில் உள்ள மீள் குடியேற்ற மக்களால் நாவலடி சந்தி பள்ளிவாயலில் வரவேற்கப்பட்டு மீண்டும் பிறைந்துரைச்சேனை நூரியா ஜூம்ஆ பள்ளிவாயலில் மௌலவி மஜீத் அவர்களலால் விஷேட துஆப் பிராத்தனை இடம் பெற்றதன் பின்னர் ஓட்டமாவடியில் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் வீதிக்கான பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டதுடன் அதிதிகள் ஊர்வலமாக பொதுக்கூட்டம் இடம் பெற்ற ஓட்டமாவடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க வலாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

0bcnhys 1xq4nqx 2adhdzo 2ksxe4j bcp4lqe c3szijf cj13r55 sbfet1g sp3lj0p toxdz45 zd5yihz

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: