Advertisements

வாளைச்சேனையில் 22 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

எம்.எம்.இர்பான்

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 2015 ஜனவரி முதலாம் திகதி முதல் 28ம் திகதி வரை 22 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி ஏ.பி.திஸாநாயக்கா தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிதேச செயலாளர் பிரிவில் நுளம்புப் பெருக்கத்தை தடுக்கும் வகையில் கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் வேல்விஷன் நிறுவனம் என்பவற்றடன் இணைந்து இன்று (28.01.2015) தொடக்கம் எதிர்வரும் (04.02.2015) வரை டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் வாரமாக பிரகடனுபடுத்தி மக்களை விழிப்பூட்டும் வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.

இதன் அடிப்படையில் இன்று (புதன்கிழமை) கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் விநாயகபுரம் கிராம சேவகர் பிரிவில் இடம் பெற்ற ஆரம்ப நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், வாழைச்சேனை பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள், வேல்விஷன் நிறுவனத்தின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன்று விநாயகபுர கிராம சேவகர் பிரிவில் வீடுகள், வர்த்த நிலையங்கள், பாடசாலை உட்பட 385 இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 45 இடங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டதுடன் ஏழு வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படடுள்ளதாகவும் கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ் தெரிவித்தார்.

02 03 04 06 07 08

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: