Advertisements

புனித இஸ்லாத்தை ஏற்றார் இளம் ஜேர்மன் கால்பந்தாட்ட வீரர்

eis3ஜேர்மனியின் இளம் கால்பந்து வீரர் டேனி புளூம் புனித இஸ்லாத்தை ஏற்றதாக தெரிவித்துள்ளார். நம்பிக்கை மற்றும் உறுதியான மதமாக தான் இஸ்லாத்தை பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

டேனி புளூம்  நேற்று திங்கட்கிழமை, ஜனவரி 26 பில்ட் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில்;

“நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் இலகுவில் கோபம் அடையக்கூடியவனாகவும், ஒழுங்கற்றவனாகவும் எங்கே செல்வது என்று தெரியாதவனாகவும் காணப்பட்டேன்.

தற்பொழுது இஸ்லாம் எனக்கு நம்பிக்கை மற்றும் உறுதியை தருகின்றது இதனால் எனது மனது அமைதியடைகின்றது” என தெரிவித்துள்ளார்.

டேனி புளூம் ஜெர்மனியின் பன்டஸ்லிகா லீக்யில் உள்ள  இரண்டாவது டிவிசனில் நம்பேக் அணிக்கு தொழில்சார் கால்பந்தாட்ட வீராக விளையாடுகின்றார் .

அணியில் சேர்ந்து சிறுது நாட்களில் அவர் தனது முழங்கால் காயம் காரணாமாக ஆறு மாதங்களுக்கு ஒய்வு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஒரு சில வாரங்களுக்கு முன்பு, அவர் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமான இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொள்ள முடிவு எடுத்தார்.

ஆடம்பரத்தின் உச்சத்தில் வாழுதல்,  எதற்கும் எந்தப் பொறுப்பும் இல்லை,   உண்மையில் ஓய்வு பெற்ற பிறகு என்ன நடக்கும்?” எவ்வாறான பல கேள்விகள் டேனி புளூம் வீட்டில் இருக்கும் போது அவருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டிருக்கின்றது.

மதம் பற்றி அவரது நண்பர்களிடம் பேசியபோது அவர் இஸ்லாத்தை பற்றி அறிந்தார்.

“நான் பள்ளிவாயலுக்கு பாரவையிட சென்றேன் அப்போது, எனது மனதில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தேன். எனக்கு இங்கே எதோ தேவையானது இருப்பதை உணர்ந்தேன், அது தொடர்பாக நான் மேலும் அறிய ஆசைப்பட்டேன்”  எனவும் டேனி புளூம் பில்ட் பத்திரிகைக்கு தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து அவர் தினமும் ஐந்து நேரம் தொழுகையை கடைப்பிடித்ததோடு  ஹலால் உணவுகளையும் உற்கொள்ளத் தொடங்கினார்,     அத்துடன் தான் இஸ்லாத்தை ஏற்ற விடயத்தை தனது பெற்றோருக்கும் எத்திவைத்தார்.

எனது பெற்றோர்  பக்திமிக்க கிரிஸ்துவர்கள்,  ஆனால் அவர்கள் எனது நம்பிக்கை பிரகாரம் நடக்குமாறு கூறினார்கள் என்று அவர் தெரிவித்தார்.

“இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம், ஒருவர் செய்ய விரும்பாத ஒன்றை செய்ய அவரை வற்புறுத்த வேண்டாம் என்று எனது நம்பிக்கை இருக்கின்றது. நீங்கள் நினைத்தால் அது தானாக உங்கள் உள்ளத்தில் உதிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஜெர்மனியில் கிட்டத்தட்ட 4 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.   

Sourse: Oneislam.net

eis2 eis

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: