Advertisements

யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஜே.வி.பி பாதுகாப்பு செயலரிடம் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபYosithaவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாடு செய்வதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.

கடற்படை அதிகாரியாகவிருந்த யோசித்த ராஜபக்ஷவுக்கு எவ்வாறு பிரித்தானியாவின் டார்ட்மவுத் கடற்படை பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் கிடைத்தது, அங்கு கல்வியை முடிப்பதற்கு முன்னர் எவ்வாறு அவருக்கு இலங்கை கடற்படையின் அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டது, அரசாங்க அதிகாரியாக இருக்கும்போது அவர் எவ்வாறு தனியார் நிறுவனமொன்றின் உரிமையைப் பெற்றிருக்க முடியும் போன்ற விடயங்கள் உள்ளடக்கிய முறைப்பாடொன்று கையளிக்கப்படவுள்ளது.

இந்த முறைப்பாடு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளிக்கப்படவிருப்பதாக ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான டொக்டர் நளின்.டி.திஸ்ஸ தெரிவித்தார்.

அதேநேரம், ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கையின் பாதுகாப்பு, நிதி மற்றும் இளைஞர் விவகாரம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வைத்திருந்தவர்கள் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: