Advertisements

சவூதி அரேபிய இஸ்லாமிய அறிஞர்கள் குழு காத்தான்குடிக்கு விஜயம்

பழுலுல்லாஹ் பர்ஹான்

ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் சவூதி அரேபிய நாட்டினுடைய இஸ்லாமிய அறிஞர்கள் குழு காத்தான்குடிக்கு விஜயம் செய்துள்ளனர்.

அங்கு விஜயம் செய்த சவூதி அரேபிய நாட்டினுடைய இஸ்லாமிய அறிஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வை அவரின் காத்தான்குடி காரியாலயத்தில் வைத்து 24-01-2015 நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் போது பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

சவூதி அரேபிய நாட்டின் நிதி உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிடுவதற்காக வருகைதந்துள்ள இவ் சவூதி அரேபிய நாட்டு இஸ்லாமிய அறிஞர்கள் குழுவில் சவூதி அரேபிய அல் கஸீம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அபூ ஸூலைமான் அப்துல்லாஹ் ஸாலிஹ் அல் ஹத்லூல், சவூதி அரேபிய சமூக நலன் விரும்பியும் நிதாஉல் கைர் அமைப்பின் தலைவருமான அஷ்ஷெய்க் அபூ ஸாலிஹ் ஹாலித் தாவூத் உட்பட இஸ்லாமிய அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பில் ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 Saudi Ulama Visit (1) Saudi Ulama Visit (2) Saudi Ulama Visit (3) Saudi Ulama Visit (4) Saudi Ulama Visit (5) Saudi Ulama Visit (6) Saudi Ulama Visit (7) Saudi Ulama Visit (8)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: