Advertisements

SLMC ஐ விமர்சித்த சுமந்திரன் MP யின் உரைக்கு பதிலடி – ஒலிப்பதிவு

Sumanthiran MPநேற்று நீங்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் ஸ்ரீ.ல.மு.கா கட்சியை கடுமையாக விமர்சித்தீர்கள் அத்துடன் சில கேள்விகளையும் கேட்டீர்கள்.

அதே வினாவை நான் உங்களிடத்திலே கேட்கிறேன். உங்களுடைய கொள்கை என்ன? உங்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்த சேவை என்ன?

ஆனால் எங்களுடைய SLMC தன்னுடைய கொள்கைகளை நோக்கி மிகவும் நிதானத்தோடும் பொறுமையோடும் மிகவும் சானக்யமான முறையில் காய் நகர்த்திக்கொண்டு இருக்கிறது.

மேலும் எமது சமூகம் பதவியை விட்டுத்தர தயாராக இல்லை என்றீர்கள். அப்படியாக இருந்தால் ஏன் முதலாவது கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் முஸ்லிம்கள் அதிகமான ஆசனங்களை பெற்றிருந்தும் பிள்ளையான் அவர்களை முதலமைச்சராக நியமிக்க ஒத்துழைப்பு வழங்க வில்லையா?

எங்களுடைய கட்சியோ எமது சமூகமோ ஒருநாளும் ஒரு இந்து முதலமைச்சராக வரக்கூடாது என்று நினைக்கவில்லை. மாறாக ஒரு முஸ்லிம் முதலமைச்சராக வர வேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றோம். ஏனென்று சொன்னால் இந்த மாகானத்திலாவது முஸ்லிம்களுடைய இருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான். இதை இனவாதமாக காட்டுவதற்கு தயவு செய்து முயற்சிக்க வேண்டாம்.

ஏனென்றால், கடந்த காலங்களில் சிறுபான்மை சமூகங்களான எமது முஸ்லிம் சமூகம் பெரும்பான்மை சமூகங்களின் இனவாத குழுக்களினால் பல்வேறு இன்னல்களை அனுபவித்தோம். கடந்த காலங்களில் வடக்கிலிருந்து 24 மணித்தியாலயத்துக்குள் 20 ரூபாய் பணத்துடன் வெளியேற்றப்பட்டோம், காத்தான்குடி பள்ளியில் தொழுதுகொண்டு இருந்த நூற்றுக்கணக்கான சகோதரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர், வயலுக்கு, காடுகளுக்கு, கடலுக்கு சென்றவர்கள் வீடுதிரும்பவில்லை, கப்பம் செலுத்தினோம் அதை போன்று பள்ளிகள் உடைக்கப்பட்டது, பேருவளை சம்பவம், ஹலால் சான்றிதழ் பிரச்சினை, முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

எனேவேதான் முஸ்லிம்களுடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு நிலைமை எமக்கு ஏற்பட்டது அதனால்தான் அந்த முதலமைச்சர் ஆசனத்தை கோருகிறோம். கிழக்கையும் விட்டுதந்தால் முஸ்லிம்களுக்கென்று ஒரு மாகாணம் இல்லாமல் பொய் விடும்.

எமது முஸ்லிம்கள் ஒரு நாளும் இனவாதத்தை விரும்ப மாட்டோம். கடந்த வரலாறுகளை எடுத்துப்பாருங்கள். எமது சமூகம் பெரும் பான்மை சமூகத்தால் இன்னல்களை அனுபவித்தேதே தவிர முஸ்லிம்களால் இனவாத செயற்பாடுகள் செய்யப்பட்டதாக வரலாறு இந்த நாட்டில் கிடையாது.

இன்று வாட மாகாண சபையை வித்து உங்களால் என்ன சாதிக்க முடிந்தது. ஆனால் அரசுடன் ஒத்துப் போனால்தான் நாங்கள் சில உரிமைகளையாவது பெற்றுக்கொள்ள முடியும். அதனால்தான் நாங்கள் மஹிந்த அருசுடன் சேர்ந்து கிழக்கில் ஆட்சி அமைத்தோம்.

எனேவேதான் தயவு செய்து நீங்கள் எமது கட்சியையும் எமது சமூகத்தையும் விமர்சிப்பதை உடனடியாக நிறுத்துமாறு கேட்டு கொள்கிறோம்.

-SLMC திருகோணமலை மத்திய கிளை-

Advertisements

Comments

  1. najim5543 says:

    தமிழ் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஆயிரம் பிளவுகள் இருக்கும். ஆனால் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்வதானால் எல்லோரும் ஒன்று பட்டு விடுவார்கள். தமிழ்ப் பயங்கரவாதக் குழுக்கள் ஒருவரை ஒருவர் தேடிக் கொலை செய்தனர். ஆனால் முஸ்லிம்களைக் கொல்வதில் எல்லோரும் ஒன்று பட்டனர். தமிழ் மக்கள் மிகவும் நல்லவர்கள். ஆனால் தமிழ் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து முஸ்லிம்கள் அரசியல் பண்ண முடியாது – Dr M.L.Najimudeen

  2. AAMJ says:

    நீங்கள்  கொள்கை  சாணக்கியம்  என்று பேசுவது , இவ்வளவு  நாளும்  மகிந்த அரசில்  இருந்து அநியாயத்துக்கு  துணை  போனதையா?  மக்கள்  சார்பாக அல்லாமல்  உங்கள்  சௌகரியங்களுக்காக  முடிவெடுத்ததையா?  சுமந்திரன்  mp  குறித்து  பேச  உங்களுக்கு  என்ன  தகுதி  இருக்கிறது . வீதிகளுக்கும்  , கட்டடங்களுக்கும்  அல்லாமல் அவர்களுடைய  மக்களுக்காக  எதனை  செய்திருக்கிறார்கள்  என்பது  புத்தி  உள்ள மக்களுக்கு  தெரியும் 

    A.A Mohamed Jumaani
    Kattankudy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: