Advertisements

தேர்தல் நள்ளிரவு இராணுவ புரட்சி முனைவு – முழுமையான உள்ளக தகவல்கள்

mahinda_rajapaksa-மூலம்: கொழும்பு டெலிகிராப், தமிழ் வடிவம்: காத்தான்குடி இன்போ-

சட்டமா அதிபர் யுவஞ்சன் விஜெதிலகவுக்கு நெருக்கமான சட்டத்தரணிகளிடம் இருந்து கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான நள்ளிரவில் இடம்பெற்றதாக கூறப்படும் இராணுவ ஆட்சி மயமாக்கல் முனைவு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த ராஜபக்ச மற்றும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசின் இடையே ஒரு சுமுகமான ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததை புகைப்படங்கள் மற்றும் காணொளிகளுடன் பத்திரிகைகள், தொலைகாட்சி அலைவரிசைகள் மற்றும் இணைய தளங்கள் ஜனவரி 9 ஆம் திகதி வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன. அன்றைய நாளின் முக்கிய பேசுபொருளாக இந்நிகழ்வே காணப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட முன்னர் மிகவும் எளிமையாக அப்போதைய ஜனாதிபதி அமைதியாக அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்.

எனினும் அதற்கு முந்திய சில மணித்துளிகளில் அதே அலரி மாளிகையின் அதிகார அறைகளில் இலங்கையின் ஜனநாயகத்தின் குரல்வளை ஏறக்குறைய அறுக்கப்பட முயன்ற முனைவுகள் ஒரு தைரியமான சட்ட மா அதிபர் மற்றும் சில நேர்மையான மக்கள் சேவகர்களால் முறியடிக்கப்பட்டது. இந்த நிகழ்வை வெளிக்கொணர புகைப்படங்களோ காணொளிகளோ கிடையாது.

ஜனவரி 8 ஆம் திகதி வாக்களிப்பு நிறைவுற்ற பின்னர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு நெருக்கமான ஆலோசகர்கள் தமது வெற்றி குறித்து மிகவும் நம்பிக்கையுடனேயே காணப்பட்டனர். எனினும் அரச அதிகார உயர் மட்டங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தன. அவற்றிடம் பயங்கரமான ஒரு மாற்றுத்திட்டமும் இருந்தது.

தேர்தல் முடிவுகளின் அதிர்வலைகள் நாட்டை சூழ்வதற்கு நீண்ட நேரத்துக்கு முன்பே அலரி மாளிகையை சூழ்ந்து கொண்டன. இரவு 10 மணிக்கு பின்னர் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளிவரத்தொடங்கின. இந்த முடிவுகள் இரண்டு தரப்புக்கும் மாறி மாறி வெற்றிகரமானதாக காணப்பட்டது. இந்த முடிவுகளின் மூலம் தீர்க்கமான வெற்றியாளர் ஒருவரை அனுமானிக்க முடியாதிருந்தது.

எவ்வாறிருப்பினும் மூன்று ஜனாதிபதி தேர்தல்கள் மற்றும் நான்கு பாராளுமன்ற தேர்தல்களை சந்தித்த மஹிந்த ராஜபக்சவுக்கு தனது தலைவிதி மாறுவது தெளிவாக தெரிந்தது. தபால் மூல வாக்காளர்கள் அனைவரும் கிட்டத்தட்ட  அரச பணியாளர்கள், தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல அரசை நம்பி இருப்பவர்கள், அரச படைகளில் உள்ளோர், இவர்கள் கண்மூடித்தனமான விசுவாசம் ஒன்றை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பால் கொடிருப்போர் என நம்பப்படுபவர்கள். உறுதி செய்யப்பட்ட தோல்வி சில மணித்துளிகளால் தாமதப்பட மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது நம்பிக்கைக்கு உரியோர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பலம் கை மாறுவதை தடுக்கும் மாற்று வழிகள் பற்றி ஆராயத்தொடங்கினர்.

அதிகாலை 3.00 மணியளவில் சட்ட மா அதிபரை அலரி மாளிகைக்கு வரும்படி ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதற்கு சில மணிகள் முன்பாக பனாகொட இராணுவ முகாமில் உள்ள இராணுவ அலகுகளுக்கு கொழும்பு மற்றும் அதன் சுற்றயல் பகுதிகளில் உள்ள வாக்கெண்ணும் நிலையங்களை சுற்றி வளைக்கும் படி உத்தரவுகள் பறந்திருந்தன. இது பற்றி சட்ட மா அதிபர் அறிந்திருக்கவில்லை.

அலரி மாளிகையை வந்தடையும் முன்னர் சொலிசிடர் ஜெனரல் பிம்பா திலகரத்னவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சட்ட மா அதிபர்  தான் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டதை அறிவித்ததோடு ஆலோசனைகள் தேவைப்படும் சமயம் சொலிசிடர் ஜெனரலின் இருப்பை உறுதி செய்து கொண்டார். அலரி மாளிகையின் கூட்ட அறை ஒன்றுக்குள் நுழைந்த சட்ட மா அதிபர் தான் சந்திக்கப்போகும் சூழ்நிலை தனது 35 வருட கால சட்டத்துறை அனுபவத்தில் சந்தித்திராத ஒன்று என்பதை அறிந்திருக்கவில்லை.

அந்த கூட்டத்துக்கு வந்திருந்தோரின் பட்டியல் அதிர்ச்சிகரமனாதாகவும் தொடர்புகள் அற்றதாகவும் இருந்தது. அந்த அறைக்குள் ஒரு சாதாரண மனிதன் புகுந்தால் அவனது முள்ளந்தண்டில் ஒரு அதிர்வு ஏற்படுவதை அவனால் தடுக்க முடியாது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வெளி விவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் அங்கிருந்தனர். இதற்கு மேலதிகமாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிசும் அங்கிருந்தார்.

அங்கிருந்த குழு சட்ட மா அதிபருக்கு தமது திட்டத்தை விளக்கியது. அத்துடன் அந்த திட்டத்தின் சட்ட வலுவை உறுதி செய்யும்படி பணித்தது. சட்ட வலு உறுதி செய்யப்பட்ட பின்னர் பொலிஸ் மா அதிபருக்கும் இராணுவ தளபதிக்கும் தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனக்கூறப்பட்டது. சட்ட மா அதிபரிடம் முன் வைக்கப்பட்ட கேள்வி இதுதான். “வாக்கெண்ணும் நிலையங்களில் ஏற்பட்ட தீவிர வன்முறைகள் காரணமாக நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை நிறைவேற்று அதிகாரம் மூலம் செல்லுபடியற்றதாக்க ஜனாதிபதிக்கு சட்ட ரீதியாக வலு உள்ளதா?” அதீத வன்முறை காரணமாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப் பட்டு இராணுவம் அழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படலாம்.

இந்தக்கேள்விக்கான விடை “இல்லை” என்பதே ஆகும். இதற்கு எந்த வித முகாந்திரமும் அரசியலமைப்பில் இல்லை. ஜனாதிபதியோ அல்லது வேறு எந்த அதிகாரியோ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதை தடுக்கவோ தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் தேர்தல் ஆணையாளரின் அதிகாரத்தை மீறவோ  முடியாது.

இந்த விவகாரத்தை அலரி மாளிகைக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டியதின் அவசியத்தை உணர்ந்த சட்ட மா அதிபர் தனக்கு இந்த விடயத்தில் முடிவெடுக்க சொலிசிடர் ஜெனரலின் ஆலோசனை தேவை எனக்கூறினார்.

சட்ட மா அதிபர் கூட்டத்தில் இருந்தவாறே சொலிசிடர் ஜெனரல் பிம்பா திலகரத்னவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். தொலைபேசியில் தான் எங்கிருக்கிறேன் தன்னுடன் யார் யாரெல்லாம் இருக்கின்றனர் என்று கூறிய சட்ட மா அதிபர் குறித்த திட்டத்தை முழுமையாக விளக்கி  அவரது சட்ட ஆலோசனையை கோருவுதாக கூறினார். நிலைமையை நன்கு புரிந்து கொண்ட பிம்பா திலகரத்ன அவருடைய சிரேஷ்ட பணியாளர் ஒருவரிடமும் ஆலோசனை பெற வேண்டும் என கூறினார்.

இந்த மூன்று சட்ட வல்லுனர்களுக்கும் இந்த திட்டத்தின் சட்ட வலு பற்றிய கேள்வியின் உள்ளடக்கம் தெளிவாக விளங்கி இருந்தது. அனைத்து சட்ட வலு மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் இறுதியாக பிரதம நீதியரசரினாலேயே தீர்மானிக்கப்படும். இந்த பிரதம நீதியரசர் நேர்மையான பக்க சார்பற்ற ஒரு நீதியரசராய் இருக்க வேண்டும். எனினும் அந்த இடத்தில் நீதி அரசரின் பிரசன்னம் இந்த மூன்று சட்ட வல்லுனர்களையும் இந்த திட்ட வரைபை வெறுமனே கை எழுத்திட்டு இந்த சட்ட வலு நாடகத்தை அரங்கேற்ற வைக்கவே என்பது தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டது.

யதார்த்தத்தில் இந்த இராணுவப்புரட்சி முனைவு நாட்டின் முக்கியமான மூன்று சட்ட வல்லுனர்களிடம் எதிர்மறையான நிலைப்பாட்டையே தோற்றுவித்தது. 1962 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளில் முனையப்பட்டு தோல்வியுற்ற இராணுவ சதிப்புரட்சி நகர்வு போன்றதொன்றே தற்பொழுதும் முயற்சிக்கப்படுகின்றது என்பது அவர்களுக்கு சந்தேகமின்றி உறுதியானது.

அரசியலமைப்பில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வாக்குரிமையை பிரயோகித்து தமது தலைமைய தேர்ந்தெடுத்த ஒரு இரவில் பழைய தலைமை நாட்டின் நீதித்துறை பிரதானிகளை அழைத்து கலந்துரையாடுவது எந்த ஒரு ஜனநாயக கட்டமைப்பாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும்.

மகிந்த ராஜபக்சவின் திட்டத்துக்கு உட்பட்டு ஏனைய நீதித்துறை பிரதானிகளை தந்திரமாக வரவழைத்து தன்னிச்சையாக அரசியலமைப்பை மாற்றி ஒரு சதித்திட்டத்துக்கு முற்பட்டதன் மூலம் பிரதம நீதியரசர் அரசியலமைப்பை கேவலப்படுத்தி உள்ளார்.  மகிந்த ராஜபக்ச மற்றும் மொஹான் பீரிஸ் ஆகியோர் சட்ட மா அதிபரை இந்த புரட்சி முனைவில் பங்குபற்ற வற்புறுத்தியதன் மூலம் தமது தலைவரை தெரிவு செய்யும் மக்களின் ஜனநாயக உரிமையை மறுத்து மக்களுக்கு எதிராக சதி புரிந்துள்ளனர். பிரதம நீதியரசர் ஜனாதிபதியின் சட்ட விரோத கட்டளை ஒன்றின் மூலமே இந்த முனைவுக்கு சம்மதித்தார் என்ற வாதத்துக்கு 2008 ஆம் ஆண்டு அப்போதைய பிரதம நீதியரசர் அளித்த நீதி மன்ற தீர்ப்பு ஒரு விடையாக அமையும்.

அரச உத்தியோகத்தர்கள் அரசியலமைப்பு கொள்கைகள் மற்றும் அவர்கள் மீதான மக்களின் நம்பிக்கைக்கு பாதகமாக செயலாற்றும் போது அவர்களை பாதுகாக்கவோ, அவர்களது நடவடிக்கைகளை மறைக்கவோ, அவ்வாறான நடவடிக்கைகளுக்கு தூண்டவோ ஜனாதிபதிக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இவ்வாறான நடவடிக்கைகளை ஜனாதிபதி பணிக்கும் போது அந்த பணிப்புரையை குறித்த உத்தியோகத்தர்கள் நிறைவேற்ற கூடாது.

தமது மற்றும் தமது குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கு நாட்டின் மிகவும் பலம் வாய்ந்த தனி நபரின் மூலம் பாரிய அச்சுறுத்தல் இருந்த வேளையிலும் சட்ட மா அதிபர் மற்றும் சொலிசிடர் ஜெனரல் ஆகியோர் மக்களின் இரத்தத்தை சிந்தியாவது தனது அதிகாரத்தை தக்கவைக்க அந்த பலம் வாய்ந்த நபரின் முனைவை சட்ட ரீதியாக அங்கீகரிக்கவில்லை.

பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோர் சட்ட அங்கீகாரமில்லாத இந்த முனைவை முன்னெடுக்க மறுத்த நிலையில் இந்த திட்டம் தவிடு பொடியானது. இதை தொடர்ந்து மகிந்த ராஜபக்ச தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்.

இந்த நிகழ்வுகள் நீதி மன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டால் இந்த நாட்டின் வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் கொடுமையான துரோகமாக இது அமையும். இங்கு குற்றம் சுமத்தப்படுபவர் நாட்டின் உயர் அதிகாரத்தை கொண்டிருந்தவர் மட்டுமன்றி அரசின் சகல செயற்பாடுகளிலும் தனது அதிகாரத்தை கொண்டிருந்தவர். இதற்கு சாட்சியாக அமைபவர்கள் இந்த நாட்டின் சட்ட ஒழுங்கமைப்பில் உள்ள மிக முக்கியமான நபர்கள். இந்த முனைவில் நாட்டின் ஜனநாயகம் மரணப்பிடியில் இருந்தது.

இந்த முனைவு பற்றி விசாரிக்க புதிய அரசு விரைவாக செயற்பட வேண்டும். விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து சமபந்தப்பட்ட அனைவரிடமும் வாக்கு மூலங்களை பதிவு செய்து நாட்டின் அரசியல் அமைப்பு, ஒருமைப்பாடு மற்றும் மக்களின் தீர்ப்பை  மாற்ற முயன்றவர்களை சட்டத்தை முழுமையாக பயன்படுத்தி தண்டிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தோல்வியடையும் எதிர்கால தலைவர்களுக்கு இது ஒரு தவறான முன்மாதிரியாக இருக்கும்.

 

Advertisements

Comments

  1. najim5543 says:

    மகிந்த ராஜபக்சே அவர்களை மிகவும் கௌரவமான கனவான் என்று நம்பி இருந்தேன். அல்லாஹ் நியாயமானவன் Dr M.L. Najimudeen

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: