கடித உறையில் இருந்த கடிதத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

“நானும் எனது நண்பனும் உங்கள் வீட்டில் இருந்து எரிவாயு சிலிண்டர்களை திருடினோம்” “திருட்டின் பின்னர் எனது நண்பன் இறந்து விட்டான், எங்களை மன்னித்து விடுங்கள், இந்த கடித உறையில் திருடிய எரிவாயு சிலிண்டர்களின் பெறுமதிக்கான பணம் உள்ளது”

திருடு போன வீட்டின் உரிமையாளர் அமானி அல் தாவூத் குறித்த கடித உறையில் 500 சவூதி ரியால்கள் இருந்ததாக டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த கடிதம் குற்ற உணர்வை உணர்தல் மற்றும் நட்பு என்பவற்றுக்கு உன்னத அடையாளமாக இருப்பதாக அவர் உள்ளூர் செய்தி தளம் ஒன்றுக்கு மேலும் கூறினார்.

சமூக வலைத்தள பாவனையாளர்கள் இந்த திருந்திய திருடனின் செயலை பாராட்டியதோடு தவறை உணர்ந்து மன்னிப்பு கோருதல் எப்போதும் காலம் தாழ்ந்தது அல்ல என கூறுகின்றனனர்.