Advertisements

மறுக்கப்பட்ட பாதுகாப்பு மீண்டும் வேண்டும் – கிழக்கு அமைச்சர் உதுமாலெப்பை

-வதூத் இர்பான்-

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் 2008,2012ம் ஆண்டுகளில் நடைபெற்று மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். கிழக்கு மாகாண சபை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி சகல உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வழங்கினோம். இன்று வரை கிழக்கு மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியில் உள்ள மாகாண சபையாகும்.

கிழக்கு மாகாண சபையில் பெரும்பான்மை பலம் உள்ளதாகவும், புதிய ஆட்சி மாற்றம் நடைபெறவுள்ளதாகவும் கடந்த 2 மாத காலமாக சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்ற போதும் இதுவரையும் உத்தியோகபூர்வமாக எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலை தொடர்கின்றது. ஆட்சி மாற்றம் ஏற்படும்போது உத்தியோகபூர்மாக கையளிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளும் ஏற்கனவே தயார்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. புதிய ஆட்சி மாற்றம் உத்தியோகபூர்வமாக நடைபெறும் வரையில் தற்போதுள்ள ஆளும் கட்சியின் நிருவாகத்தில் கிழக்கு மாகாண நிர்வாகம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திடீர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ. அமீர், திரு. வீரசிங்க ஆகிய உறுப்பினர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால் நமது உறுப்பினர்களுக்கு பாதூப்பு இல்லாமல் உள்ளது. எனவே, கிழக்கு மாகாண சபை அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபையின் அமர்வு தவிசாளர் திருமதி ஆரியவதி கலப்பதி தலைமையில் நேற்று நடைபெற்ற போது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், கிழக்கு மாகாண அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

மேலும் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாண சபையில் ஆளும் கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இன்று வரை செயல்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக ஆளும் கட்சி பெறும்பான்மை இழந்த நிலை உருவானது. அண்மையில் நமது நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனால் கிழக்கு மாகாண சபையில் எதிர்;க்கட்சி இல்லாத நிலை உருவாகி உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சிகள் இணைந்து ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்குவதனால் இந்த நிலைமை கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ளது.

இன்று வரை ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ள முடியாத நிலை நீடித்து வருகிறது. இவ்வாறான நிலைமையின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமை எங்களின் கட்சித் தலைமைகளின் அனுமதியினைப் பெற்று எதிர்காலத்தில் கிழக்கு மாகாண சபையில் செயல்படவுள்ளதாக அமைச்சர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: