Advertisements

பிரதம நீதியரசர் விரைவில் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் மொஹான் பீரிஸ்

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தாம் பதவியை ராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார்.

பெரும்பாலும் இன்று அல்லது நாளை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் இராஜினாமா தொடர்பான தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று புதன்கிழமை (21) தெரிவித்திருந்தார்.

mpமொஹான் பீரிஸின் வெற்றிடத்திற்கு முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் உறுதி மொழிகளில் ஒன்றாக சிரானி பண்டாரநாயக்கவை மீளவும் பிரதம நீதியரசர் பதவியில் அமர்த்துவது என குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் விரைவில் பிரதம நீதியரசர் பதவிக்கு சிரானி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸின் திவிநெகும திட்டத்திற்கு எதிராக தீர்ப்பளித்த காரணத்திற்காக, பாராளுமன்றில் குற்றப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து பிரதம நீதியரசர் சிரானி பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: