Advertisements

தமிழர் முதலமைச்சராக வர கூட்டமைப்புக்கு த.ம.வி.பு. நிபந்தனையற்ற ஆதரவு!

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் இன்று விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாண சபையின் அரசியல் ஸ்திரத் தன்மையற்ற நிலை தொடர்பிலும், முதலமைச்சர் பதவிக்கான முரண்பாட்டு நிலை தொடர்பிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மிக ஆழ்ந்த கவனத்துடன் உற்றுநோக்கி வருகிறது.

கிழக்குஎமாகாணத்தை முதல் தடவையாக ஆட்சி செய்த கட்சி என்ற வகையிலும், தமிழ் மக்களின் கணிசமான ஆதரவைப் பெற்ற பொறுப்புமிக்க அரசியல் கட்சி என்ற வகையிலும் மக்கள் சார்ந்து எம் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை நாம் ஒரு போதும் தட்டிக் கழிக்கப் போவதில்லை. இது எமது கடந்தகால அரசியல் மூலம் உணர்த்தப்பட்டவையே. தேசிய அரசில் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதாக கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் கிழக்கு மாகாண ஆட்சி தொடர்பில் முரண்பட்டுக் கொள்வது வேதனையானது.

மாகாண சபை முறைமையானது தமிழ் மக்களின் பெறுமதி மிக்க ஆயுதப் போராட்டத்தின் விலையாகக் கிடைக்கப்பெற்றது. இதில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், அரசியல் உரிமைகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். இவற்றில் எமது கட்சி உறுதியாக இருந்து வருகின்றது. கிழக்கு மாகாண சபையில் தமிழர் ஒருவர் முதலமைச்சராவதற்கு யாருடனும் எத்தகைய விட்டுக் கொடுப்புடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம். கடந்த மாகாண சபைத் தேர்தலில் தமிழர்களின் கையிலிருந்த ஆட்சி அதிகாரத்தை எம்மவரே பிடுங்கி எடுத்த நயவஞ்சக அரசியலுக்கு இரையாகாமல் தூரநோக்குடன் செயற்பட நாம் தயாராக உள்ளோம்.

தற்போதைய கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கும் அக்கட்சி சார்பான ஒருவர் முதலமைச்சராவதற்கும் எமது கட்சி நிபந்தனையற்ற ஆதரவை வழங்கத் தயாராக உள்ளது.

தற்போதைய கிழக்கு மாகாண ஆசனப் பங்கீடுகளின் அடிப்படையில் த.தே.கூ 11, ஐ.தே.க. 4 ஆசனங்களைக் வைத்துள்ளன. எனவே தமிழர் ஒருவர் முதலமைச்சர் ஆவதற்கு ஆதரவு தெரிவிக்கின்ற ஏனைய சில மாகாண சபை உறுப்பினர்களின் ஆதரவுடனும் எமது கட்சியின் இரண்டு உறுப்பினர்களது ஒத்துழைப்புடனும் கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசிய கூட்மைப்பினால் புதிய ஆட்சியை அமைக்க முடியும்.

இதனூடாக த.தே.கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை மட்டுமின்றி நான்கு அமைச்சுக்களில் இரண்டு அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொள்ளமுடியும். ஏனைய அமைச்சுப் பதவிகளையும் தவிசாளர் பதவியையும் ஐ.தே.க்கும் ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கம் பகிர்ந்தளிக்க முடியும். எமது கட்சி அமைச்சுப் பதவிகளிலோ அல்லது ஏனைய பதவிகளிலோ இடம் பெறப்போவதில்லை. எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எஞ்சி இருக்கின்ற இரண்டரை வருட காலப்பதியில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்ற நியாயமான அரசியல் தீர்வையும், அபிவிருத்தியையும் பெற்றுக் கொடுக்க முடியும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: