Advertisements

கோத்தபாய கொலைகளை மேற்கொண்டமை தொடர்பில் பொலிஸ் விசாரணை

Gotaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச கொலைப்படை ஒன்றை நடாத்தியமை மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தமை என்று எழுப்பப்பட்டுள்ள கூற்றுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பொது உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் லசந்த விக்ரமதுங்க கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் கடந்த 2009 ஜனவரியில் கொல்லப்பட்டார் என பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.

ஆட்கடத்தல், தாக்குதல்கள் மற்றும் கொலைகளை கோதபாய மேற்கொண்டார் என முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன நேற்று ஏ. எப். பி. செய்தி சேவைக்கு தெரிவித்திருந்தார்.

மூன்று கொலைகள் தொடர்பாக செய்யப்பட்டுள்ள குறித்த முறைப்பாட்டில் லசந்த விக்ரமதுங்கவின் கொலையும் உள்ளடங்குவதாகவும் கோத்தபாய கொலைப் படை ஒன்றை நடத்தி வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அஜித ரோகன மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துக்களை பெற கோத்தபாய ராஜபக்சவை தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலனளிக்கவில்லை.

லசந்த விக்ரமதுங்க ராஜபக்ச அரசு மீது கடுமையான விமர்சனங்களையும் தரம் குறைந்த விமானங்களை இலங்கை விமானப்படைக்கு கோத்தபாய கொள்வனவு செய்தார் என குற்றம் சாட்டியிருந்தார்.

வெள்ளை வான் கடத்தல்கள்

மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கை கடந்த தசாப்தத்தில் கடுமையான கண்டனங்களை சர்வதேச சமூகத்திடம் இருந்து பெற்றிருந்தது. மனித உரிமை குழுக்கள் ராஜபக்ச அரசு விமர்சனம் மற்றும் மாற்றுக்கருத்துக்களை கூறுவோருக்கு எதிராக கடுமையான அடக்குமுறையை மேற்கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தன.

மேர்வின் சில்வா தனது முறைப்பாட்டில் கோத்தபாய வெள்ளை வேன் கடத்தல்களின் சூத்திரதாரியாக செயற்பட்டார் எனவும் குற்றம் சுமத்தி இருந்தார்.

அரசை எதிர்ப்போர் மற்றும் ஊடகவியலாளர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு பின்னர் வீதி ஓரங்களில் பிணமாக மீட்கப்பட்டனர்.  யுத்த காலத்தில் இந்த உபாயம் இலங்கை அரச படையினரால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

அதிக எண்ணிக்கையான ஊடகவியலாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்து அரசியல் வாதிகள் மேற்கு நாடுகளில் புகலிடம் பெற்று வாழ்ந்து வருகின்றமைக்கு இந்த வெள்ளை வான் கடத்தல் ஒரு காரணமாகும்.

2009 ஆம் ஆண்டு முடிவுற்ற யுத்தத்தின் இறுதிப் பகுதியில் ராஜபக்ச அரசு 40,000 தமிழ் பொது மக்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டமை இங்கு குறிப்பிட தக்கது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள மைத்திரிபால அரசு யுத்த குற்ற சாட்டுகள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக உறுதி அளித்துள்ளது.

-அல் ஜசீரா-

Advertisements

Comments

  1. najim5543 says:

    அளுத்கம முஸ்லிம்களின் வீடுகள் எரிப்பு,கொலைகள் என்பவற்றில் அவரின் பங்கு பற்றியும் விசாரிக்க வேண்டும். இத்தனைக்கும் அவர் தாவர உணவுகள் மாத்திரம் சாப்பிடுகின்ற Vegetarian என்கிறார்கள். ஹிட்லர் கூட ஒரு வெஜிடரியன் தான்.
    மகிந்தவின் தோல்விக்கு முழுக்காரணம் கோதபாயவின் அட்டூழியங்களேயாகும்
    Dr M.L.Najimudeen

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: