ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியது.

பலத்த காற்றினால் சிறிய அளவிலான வாகன விபத்துக்களும் பல வீதிகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டது. அதிகாலையில் வேலைக்கு செல்லும் பலர் காற்றின் தாகத்தை தவிர்க்க விஷேட உடைகளை அணிந்து பயணித்தனர். வாகனங்களில் செல்வோருக்கு வானிலை பற்றிய எச்சரிக்கை விடப்பட்டது.

மழையுடன் கூடிய காலநிலை இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரலாம் என அபுதாபியில் அமைந்துள்ள அமீரத்தின் தேசிய வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அமீரகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த நிலை எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடற்கரை பகுதிகளுக்கு செல்வோர் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு சாரதிகள் தூசி பதிவு காரணமாக வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

01 02 03 04