Advertisements

மஹிந்த, நாமல் படம் பொறிக்கப்பட்ட 68 ஆயிரம் சுவர் கடிகாரங்கள் மீட்பு

wall clokமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அவரது மகன் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட 68 ஆயிரம் சுவர்கடிகாரங்கள், ஒருதொகுதி தேர்தல் சுவரொட்டிகள் என்பவற்றைத் தாம் இன்று மீட்டுள்ளனர் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சபுகஸ்கந்தவில் கடைத்தொகுதி ஒன்றை சோதனையிட நீதிமன்ற அனுமதி கோரப்பட்டிருந்தது என்றும், அனுமதி கிடைத்ததையடுத்து குறித்த கடைத் தொகுதியில் சோதனை நடத்தியபோது இவை மீட்கப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மஹர நீதிவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதியின் அடிப்படையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

குறித்த கடைத்தொகுதி துறைமுக அதிகாரியொருவரின் பெயரில் 15 இலட்சம் ரூபாவுக்கு குத்தகைக்கு பெறப்பட்டது என்று அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Comments

  1. Dr M.L.Najimudeen says:

    தேர்தலுக்கு முன்னர் இவற்றைக் கொடுத்து முடித்து இருந்தால் 68,000 மக்கள் சுவர்க் கடிகாரம் பெற்றிருப்பார்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: