Advertisements

கிழக்கு ஆளுனராக அப்துல் மஜீதை நியமிக்குமாறு நியமிக்குமாறு கோரிக்கை

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாணத்திற்கான ஆளுனராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மாகாண சபை உறுப்பனருமான எம்.அப்துல் மஜீதையும் முதலமைச்சராக தமிழ் தேசிய  கூட்டமைச்சேர்ந்த ஒரு வரையும் நியமிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சமூக முற்போக்கு முன்னணி மகஜர்களை அனுப்பிவைத்துள்ளன.

அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புதிய அரசியல் கலாசாரத்தை கொண்டுவரும் நோக்கில் நூறுநாள் வேலைத்திட்டத்தையும் மைத்திரி யுகமும் முன்வைக்கப்பட்டு ஆட்சிக்கு வந்துள்ள தற்போதைய ஜனாதிபதிக்கு இன, மத வேறுபாடுகளின்றி அனைத்தின மக்களும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர்.

குறிப்பான வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சிறுபான்மையின தமிழ் பேசும் மக்கள் ஜனாதிபதி மைத்திரிக்கே வாக்களித்துள்ளனர். இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் இன ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் கட்டியெழுப்பும் வகையில் மாகாண சபைக்கு ஆளுனராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம். அப்துல் மஜீதையும், முதலமைச்சராக தமிழ் தேசிய கூட்மைப்பைச்சேர்ந்த ஒருவரையும் நியமிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் மஜீட் எஸ்.எஸ்.பியாக இருந்த காலம் முதல் இன, மத வேறுபாடுகள் பார்க்காது பல்வேறுபட்ட நெருக்டிகளுக்கு மத்தியில் தமிழ், முஸ்லிம் சகோதாரர்களுக்கு மிகவும் துணிச்சலுடனும், அர்ப்பணிப்புடனும் சேவையாற்றிய ஒருவர் என்பதை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.

இவர் பாராளுமன்ற உறுப்பினராகவும், பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு கிழக்கு மகாண சபை உறுப்பினராகவும் சேவையாற்றியவர். இவரின் மூலம் பல்லாயிரக்கணக்கான வாக்குகளையும், ஆதரவினையும் பெற்ற மு.கா. கிழக்கு மாகண சபைக்கான முதலமைச்சர் பதவிக்கான ஆசையைக்காட்டி பின்னர் சூழச்சிமமாக அரசியலிலிருந்து ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டிருந்தது.

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கான ஆதரவு மிகவும் அருகிக்காணப்பட்ட ஒரு இக்கட்டான காலகட்டத்தில் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம்களின் ஐக்கிய தேசிய கட்சிக்கான ஆதரவைப் பெற்று வந்ததுடன் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும் மிகவும் கடுமையான தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டும் வந்துள்ளார்.

இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுனர் பதவி வழங்குவதில் எம். அப்துல் மஜீதை ஐக்கிய தேசியகட்சி சிபார்சு செய்கின்ற வேளையில் மு.கா. பகைமையுணர்வுடன் இப்பதவிக்கு தடையாக செயல்படுவது தான்சார்ந்த சமூகத்திற்கு செய்யும் துரோகமாக அமைவதுடன் ஜனாதிபதி மைத்திரி யுகத்திற்கு மாசுபடும் ஒரு செயலாகவும் அமைவதுடன் அரசியல் குரோதங்தங்களை மேலோங்கச் செய்யும் நடவடிக்கையுமாக இவ்வாறான செயற்பாடு அமையும் என்பதில் ஐயமில்லை.

இதேவேளை சகோதர இனமான தமிழ் மக்களில் ஒரு வரை முதலமைச்சராக நியமிப்பதன் மூலம் இதுவரைகாலமும் பாதிக்கப்பட்டு வந்த தமிழ்  சகோதரர்களுக்கு ஒரு ஆறுதலும், நம்பிக்கையும் பிறப்பதுடன் தமிழ், முஸ்லிம்களின் நல்லுறவையும் கட்டியெழுப்ப முடியும்.

இதேவேளை அம்பாறை தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி கண்ட போதிலும் கல்முனைத் தொகுதியில் 90வீதமான வாக்குகள் புதிய ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டு ஆமோக ஆதரவும், வெற்றியும் கண்டுள்ளது. இந்நிலையில் தமிழ் பேச முடியாத ஒருவர் கல்முனைத் தொகுதிக்கு வந்து கட்சியை பலப்படுத்தவோ, ஆதரை அதிகரிக்கவோ முடியாது. மாறாக இவ்வாறன நிலை மக்கள் செல்வாக்கையும், ஆதரவையும், குறைப்பதாகவே அமையும்.

எனவே  ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளராக 30வருட காலமாக ஐ.தே.கட்சியில் தொடாந்து இருந்து வரும் முன்னாள்  கல்முனை பிரதேச சபையின் தலைவர் உபாலி என்றழைக்கப்படும் அலியார் அப்துல் அஸீஸை நியமிக்குமாறும் சமூக முற்போக்கு முன்னணி பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐ.தே.கட்சியின் செயலாளர் அமைச்சர் கபீர் காசிமுக்கும் மகஜர் அனுப்பி வைத்துள்ளது. 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: