Advertisements

அமெரிக்க தூதுவராலயத்தின் பொதுச்சேவைகள் தொடர்பு அதிகாரி காத்தான்குடி நகர சபை விஜயம்

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் பொதுச்சேவைகள் தொடர்பு அதிகாரி திருமதி நிக்கொலி டொலிக் செவ்வாய்க்கிழமை(18.11.2014) பிற்பகல் காத்தான்குடி நகர சபைக்கு விஜயம் செய்தார்.

இதன் போது காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் நகர சபை உறுப்பினர்களை காத்தான்குடி நகர சபையில் வைத்து சந்தித்து இவர் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் காத்தான்குடி நகர சபையின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக அமெரிக்க தூதுவராலயத்தின் பொதுச்சேவைகள் தொடர்பு அதிகாரி திருமதி நிக்கொலி டொலிக் கேட்டறிந்து கொண்டதாக காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபை பிரிவில் மாணவர்களின் ஆங்கிலக்கல்வி மற்றும் தகவல் தொழிநுட்ப அறவை மேம்படுத்தல் போன்றவைகள் தொடர்பில் காத்தான்குடி நகர சபை எடுக்கும் முயற்சிகளுக்கு அமெரிக்கத்தூதுவரலாயம் எதிர் காலத்தில் உதவும் என்றும் இதன் போது அமெரிக்க தூதுவராலயத்தின் பொதுச்சேவைகள் தொடர்பு அதிகாரி திருமதி நிக்கொலி டொலிக் தெரிவித்ததாக நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபை மேற்கொண்டுவரும் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பாகவும் இதன் போது அமெரிக்க தூதுவராலயத்தின் பொதுச்சேவைகள் தொடர்பு அதிகாரிக்கு விளக்கி கூறியதாக நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் காத்தான்குடி நகர சபை பிரதி தலைவர் எம்.ஐ.எம்.ஜெஸீம், மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பிளர்களான எச்.எம்.எம்.பாக்கீர், எம்.அலி சப்ரி, எம்.எஸ்.சியாத் உட்பட நகர சபை செயலாளர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

SAM_2717 SAM_2727SAM_2720 SAM_2721 SAM_2727

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: