Advertisements

பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் போன்ற உக்காத கழிவுக்குப்பைகளை பணம் கொடுத்து காத்தான்குடி நகர சபை வாங்குவதற்கு நடவடிக்கை

காத்தான்குடி நகர சபை பிரிவில் சேகரிக்கப்படும் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் போன்ற உக்காத கழிவுக்குப்பைகளை பணம் கொடுத்து காத்தான்குடி நகர சபை வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபையின் சுகாதார ஊழியர்களுக்கு காத்தான்குடி நகர சபை பிரிவில் திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் குப்பைகள் சேகரிப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டத்திலேயே காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மேற்கண்டவாறு கூறினார்.

 இக் கூட்டத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்த காத்தான்குடி நகர சபை தலைவர் அஸ்பர் காத்தான்குடி நகர சபை பிரிவில் வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் குப்பைகளை சேகரிக்கும் போது உக்கும் குப்பை, உக்காத குப்பைகள் என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும்.

காத்தான்குடி நகர சபை பிரிவில் இந்த குப்பை சேகரிப்பின் போது இந்த நடை முறை பின்பற்றப்படல் வேண்டும்.

வாரத்தில் உக்கும் குப்பைகள் நான்கு தினங்களிலும் உக்காத குப்பைகள் ஒரு தினத்திலும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதை இன்னும் துரிதப்படுத்தல் வேண்டும்.
அதே போன்று காத்தான்குடி நகர சபை சுகாதார ஊழியர்களினால் சேகரித்து கொண்டுவரப்படும் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் போன்ற உக்காத கழிவுக்குப்பைகளை பணம் கொடுத்து காத்தான்குடி நகர சபை வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
நான் காத்தான்குடி நகர சபை தலைவராக இருக்கும் காலத்திலேயே இந்தக் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படல் வேண்டும்.

இதற்கான முயற்சிகளை நான் மேற் கொண்டு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் நடவடிக்கை மேற் கொண்டுள்ளேன்.

இதற்கான காணிகள் கொள்வனவு செய்யப்பட்டு தின்மக்கழிவு முகாமைத்துவத்தினை மேற் கொள்வதற்கும் குப்பைகளை மீள் சுழற்சி செய்வதற்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.

இதில் காத்தான்குடி நகர சபை சுகாதார தொழிலாளர்கள் அர்ப்பனிப்புடன் செயலாற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

SAM_2516SAM_2519

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: