Advertisements

குருக்கள்மடத்துப் பையன் (5)

-எஸ்.எம்.எம்.பஷீர்-

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் முதன்முதலில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவினரை  தொடர்பு கொண்டனர் என்று சொல்லப்படுகிறது. ஆணைக்குழுவில் கடத்தப்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் இடங்களை அடையாளம் கண்டு தோண்ட வேண்டும் என்றும் , அவ்வாறு தோண்டப்பட்ட மனித எச்சங்ககளை அடையாளம் கண்டதன் பின்னர் (மரபணு பரிசோதனை மூலம்) அம்மனித எச்சங்களை உறவினர்களிடம் மார்க்க கிரிகைகளை நிறைவேற்றி மீளடக்கம் செய்ய வழங்கப்பட வேண்டும், குற்றமிழைத்தோரை  நீதியின் முன் நிறுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பதெல்லாம் அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

அவ்வாறுதான் ஸ்ரீ.ல.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், காத்தான்குடியின் நகரசபை உறுப்பினர் ரவூப் ஏ மஜீதும் குருக்கள் மட மனித புதை குழிகளை தோண்டுவதில் முதலில் தனது உறவினரின் சார்பில் போலீஸ் முறைப்பாட்டை செய்தவராகும். சென்ற கட்டுரை தொடரில் ரெதிதென்ன எனும் இடத்தில் உள்ள விவசாய கால்நடைபன்னையில்  குருக்கள் மட புதைகுழி தொடர்பில் இடங்களை அடையாளம் கட்டக் கூடிய உத்தியோகபூர்வமாக தன்னை வெளிப்படுத்தாத காத்தான்குடி வணிகரும் நல்லாட்சிக்கான இயக்க பிரமுகர்களும் சந்தித்து விருந்து உண்டது பற்றி இக்கட்டுரையாளர் குறிப்பிட்டு இருந்தார். அந்த நிகழவில் இன்னுமொரு பிரபல காத்தான்குடி வணிகரும் அரசியல்வாதியும் கலந்து கொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல நகைக்கடை நடத்தும்  ஸ்ரீ.ல.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், காத்தான்குடியின் நகரசபை உறுப்பினர் ரவூப் ஏ மஜீத் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

மொத்தத்தில் முதன் முதலில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஒரு சமூக செயற்பாட்டு இயக்கம் என்ற வகையில் (அரசியல் இயக்கம் என்ற தோரணையில் அல்லாமல்)  பொத்தாம் பொதுவாக காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடு ஒன்றினை செய்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினரும், குருக்கள்மடம் மனித புதைகுழிகள் தொடர்பில் தன்னை  தகுந்த சாட்சியத்துடன் இதுவரை எந்தவிதத்திலும் பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் புதைகுழி இடங்களை அடையாளம் கண்டவர் எனப்படுபவரும், காணாமல் போன குடும்பத்தினருக்காக முதன் முதலில் போலீசில் முறைப்பாட்டை செய்தவர், இடங்களை அடையாளம் காட்டியவர் என பெருமிதம் கொள்ளும் ரவூப் ஏ மஜீதும் குருக்கள்மடம் தொடர்பில் எப்படி செயற்பட்டு இருக்கிறார்கள் என்ற கேள்விக்கான விடையை இப்பொழுது வெளிப்படையாகவே காணக் கூடியதாக உள்ளது.!

summons 1

summons 2இவர்களில் குறிப்பாக ஸ்ரீ.ல.சு.கட்சிக் கெதிராகவும், குறிப்பாக இன்றைய மஹிந்த அரசுக் கெதிராக வெளிப்படையாக செயற்படும், தமிழர் தேசியக் கூட்டமைப்புடன் அரசியல் கூட்டும் வைத்துள்ள    ஒரு அரசியல் இயக்கமாக செயற்படும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலுடன்,ஸ்ரீ.ல.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஆக உள்ள ரவூப் ஏ மஜீத் என்னவிதமான உறவினைப் பேணி ரெதிதன்னவில் நடைபெற்ற அவர்களின் உயர்மட்ட (சூரா) இயக்க (கட்சி) விருந்துபசார கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார் என்ற கேள்வி  எழுகிறது. இந்த வேளையில் குருக்கள்மடபடுகொலைகளை முன்னின்று நடத்திய புலி லெப்டினன்ட் மணியின் சொந்த ஊரான கொம்மாதுறையை சேர்ந்தஇக்கட்டுரையாளருடன்  இளமையில் இருந்தே நட்புடன் பழகி வரும் ஒருவரை மணி பற்றிய தகவல்களை வழங்க கோரிக்கை விடுத்தும், அவர் இக்கட்டுரையாளரை , இதுவரை தவிர்த்தே வருகிறார்.  அவரைப் பற்றி சொல்வதானால் , அவர் கருணா புலிகளின் நீண்ட போராட்டத்தை குலைத்தவர் என்று கருணாவுக்கு சாப அர்ச்சனை செய்பவர் , தமிழர் கூட்டமைப்பு ஆதரவாளர், முஸ்லிம்கள் தமிழர் கூட்டமைப்புடன் சேர்ந்து சிங்கள அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று உன்னதமான கோட்பாட்டு அரசியல் பேசுபவர்.

இந்த பின்னணியில் ந.ஆ.ம. இயக்கத்தின் குருக்கள்மட தோண்டுதல் தொடர்பான முன்னெடுப்பு பற்றிய ஒரு விசாரணை அவசியமாகிறது. ஏனெனில் அவர்கள்  ஜனாதிபதி ஆணைக்குழுவை சந்தித்த பொழுதுஆணையாளர் UNDP  உதவி மூலம் மரபணு பரிசோதனைக்கு உதவி செய்யப்படும் என்று கூறி, ந.ஆ.ம. இயக்கம் , தோண்டுவது தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கி இருந்தார். ஆனால் எந்தவித சட்ட நடவடிக்கைகளையும் ந.ஆ.ம.இயக்கம் மேற்கொள்ளவில்லை என்பது ஒருபுறம் இருக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட (ரவூப் ஏ மஜீத் , சிப்லி பாரூக்), சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய (அவர்களின் ஆதரவாளரான வணிகர்) ஆகியோரின் சட்ட நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணாமல் சங்கடங்களை ஏற்படுத்த எத்தகைய அரசியல் சூட்சுமத்தை பிரயோகித்தனர் என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.! இந்த நிலையில் சென்ற 19ம் திகதி களுவாஞ்சிகுடி போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி அப்துல் மஜீத் முஹம்மத் ரவுப் எனப்படும் ரவுப் ஏ மஜீத்தை உரிய இடத்தை தீர்க்கமாக அடையாளம் காட்டுமாறு கூறி, அது தொடர்பில் அழைப்பாணை ஒன்றை அனுப்புமாறு நீதிமன்றத்தை கோரி உள்ளார்.  அவரால் சரியாக அடையாளம் கட்டப்பட்ட இடம் ஏன் கேள்விக்குள்ளானது? இந்த அழைப்பாணை சொல்லும் சங்கதி என்ன என்பதையும் இங்கு ஆராய வேண்டி உள்ளது.!

மொத்தத்தில், ந.ஆ.ம.இயக்கம் குருக்கள்மடம் என்ற சொல்லை தவிர்த்தே பொத்தாம் பொதுவாக காணாமல்போனோரை கண்டுபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டே அறிக்கைகளை வெளியிட்டனர். அதிலும் அவர்கள் மிகக் கவனமாகவே தமது சார்பு அரசியல் நிகழ்ச்சி நிரலை வெளிபடுத்தினர். சமூகம் சார்ந்த விடயங்களில் மிகத் தெளிவாக சொல்லப்படவேண்டிய செய்தியை அவர்கள் இருட்டடிப்பு செய்தனர். காணாமல்போனோர் என்பதில் முஸ்லிம்பிரதேசங்களுக்குள் இன முறுகல், கலவர காலங்களில் காணாமல் போன தமிழர்களையும் தேட வேண்டும் என்று வரும் பொழுது,  ந.ஆ.ம.இயக்கம் காணாமல் போனோர் என்று பொதுவில் சொல்லி இருப்பதால், அப்படிக் காணாமல் போன தமிழர்கள் தொடர்பில், அவர்களின் உடலங்களை தேடுவதில் என்ன தகவல்களை (ந.ஆ.ம.இயக்கம் ஒரு சமூக செயற்பாட்டு இயக்கம் என்ற வகையில்)  சேகரித்திருக்கிறது.  அப்படிக் காணாமல் போன தமிழர்கள் எண்ணிக்கையில் மிகச் சிலராக இருக்கலாம் , அது பற்றிய தகவல்களை , தமிழர்கள் வழங்கும் பொழுது, காய்தல் உவத்தல் இன்றி  ந.ஆ.ம.இயக்கம் செயற்பட வேண்டும்!. இந்த குருக்கள்மடம் பலருக்கு அரசியல் சதுரங்கம்  இதுவே “செத்தவன் வாயில் மண்ணு இருப்பவன் வாயில் அரிசி” என்ற அரசியல் பித்தலாட்டமாகும் !

2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மூலம் ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதாயின் பதிய நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டும்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தேர்தல் கட்சியாக பதிவு செய்யப்பட ஏற்படுத்தப்பட்டுள்ள நிபந்தனைகளை திருப்திப்படுத்த, தேர்தல் ஆணையாளரைத் திருப்திப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளை முடக்கி விடுவது அவசியமாகிறது. அவ்வாறான செயற்பாடுகளை அரசியல் வீரியம் கொண்டதாக மாற்றுவதற்கு தேர்தல் ஆணையாளரை திருப்திப்படுத்த  அரசியல்  கூட்டணி அமைப்பதும், மாகாண சபை மாகான சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதும் அங்கத்துவம் வகிப்பதும், நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதும் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிப்பதும், என அமைகிறது. எனவேதான் படுபிற்போக்குத்தனமான அரசியல் சிந்தனையும் செயற்பாடும் கொண்ட தமிழர் கூட்டமைப்புடன் இணக்க அரசியல் செய்து தங்களை நிலை நிறுத்திக் கொள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் முயன்று வருகிறது. இது தொடர்பில்  பல சங்கதிகளுடன் யாழ் முத்துராசா எனும் சாமான்ய முஸ்லிம் ஒருவர் தமிழ் அரசுக் கட்சியுடன் சேர்ந்து கண்ட அனுபவங்களை பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுவது பொருத்தமாக இருக்கும்.

தங்களின் தமிழரசு, தமிழர் கூட்டணி பிதாமகர்களின் சுவட்டில் புலிகள்  எப்படி  தமிழ் மக்களுக்குக்குள் முஸ்லிம்களுக்கு எதிராக   எதிர்ப் பிரச்சாரங்களை கருத்துப் பதிவுகளை ஏற்படுத்தும் பல அரசியல் சூழ்ச்சிப் பணிகளில் ஈடுபட்டார்களோ, அவ்வாறே ஒருபுறம் தமிழ் – முஸ்லிம் ஐக்கிய முகம் காட்டிக் கொண்டு முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரங்களை, கருத்துப்பதிவுகளை அவ்வப்பொழுது பல தமிழ் தேசியக் கூட்டணி உறுப்பினர்கள் கிழக்கிலே முன்னெடுத்து வருகிறார்கள். 

அந்த வகையில் அண்மைக் காலமாக, அரியேந்திரன், கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டணி உறுப்பினர் ஜனா, மற்றும் துரைரெட்ணம் ஆகியோர் உமிழும் இனவாதக் கருத்துக்களை கேட்டும் கேட்காமல் செயற்பட சூடு சுரணையற்ற ஒரு முஸ்லிம் புத்தி ஜீவிக் கூட்டம் இயக்கம் அமைத்து அரசியல் செய்யப் புறப்பட்டுள்ளனர். அதுபற்றிய ஒரு விரிவான பார்வையும் சமூக அரசியல் சிந்தனைத் தளத்தில் அவசியமாகிறது.

salim 1புலிகள் தங்களின் பதிவேட்டில் குறிப்பிடும் முகம்மது அலியார் – முகம்மது சலீம், காங்கேயன்ஓடை ஆரையம்பதியைச் சேர்ந்தவர் என்று குறித்துள்ளனர். அவரின் வீரத்தை முஸ்லிம்கள் , குறிப்பாக இந்திய அமைதிப்படை காலத்தில் வழங்கிய உதவி ஒத்தாசைகளை எல்லாம் அவர் பற்றிய பதிவில் சுட்டிக்காட்டுகின்றனர். அந்த வகையில் கபூர் எனப்படும் சலீமின் இறந்த திகதி 11/06/1990 என்று புலிகள் குறிப்பிடுகின்றனர் ஆனால் புகைப்படம்  எதனையும் அவர்கள் இதுவரை பிரசுரம் செய்யவில்லை. ஆனாலும் புலிகளின் மாவீரகள் பற்றிய புகைப்படச் சேகரிப்புக்களில் லெப்டினன்ட் சலீம் எனும் ஒருவரின் புகைப்படம் காணப்படுகிறது. அவர் மட்டக்களப்பு கிரானைச் சேர்ந்த குமாரசிங்கம் ரவிச்சந்திரன் என்பவராகும். அவரின் இயக்கப் பெயர் சலீம், அவரின் புகைப்படத்தையும் புலிகள் பிரசுரம் செய்யவில்லை. ஆனாலும் அவரின் புகைப்படம் இங்கு பிரசுரிக்கப்படுகிறது. அவரின் புகைப்படத்தில் அவருன் சேர்ந்து காணப்படுபவர் ஒரு முஸ்லிம் புலி இயக்க உறுப்பினராக இருக்கலாம் என்ற ஊகம் எழுகிறது ஆனால் அதை உறுதி செய்ய முடியவில்லை.

பல முஸ்லிம் பெயர்களை தங்களின் இயக்க உறுப்பினர்களுக்கு அடையாளப்பெயராக வழங்கிய புலிகள் பின் வந்த காலங்களில் கொழும்பில் மற்றும் தெற்கின் பல பிரதேசங்களில் செய்யப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்கு, அரசியல் சதிக் கொலைகளுக்கு  முஸ்லிம் பெயரில் அடையாள அட்டைகளை போலி ஆவணங்களை வழங்கி, அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கிப்பெற்றுப் பயன்படுத்தினர். இந்த முஸ்லிம் முக மூடி அணிந்த புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளின் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளில் இலஞ்ச வலையில் சில முஸ்லிம் உத்தியோகத்தர்கள் கூட கைதாகினர்.

எது எப்படியோ, காத்தான்குடியில் புலியின் முன்னோடி புலி உறுப்பினர் நசீரும், அவரைக் கொன்ற  காத்தான்குடி ஊர் காவற் படையினரும் முஸ்லிம்களே, என்று பார்த்தோம். பின்னர் புலிகள் அந்த சம்பவத்தின் பின்னர் ஆத்திரமுற்று காத்தான்குடியில் மேற்கொண்ட பதில் தாக்குதல் கிழக்கிலே முஸ்லிம்கள் புலிகளுக்கு கீழ்படிந்தே நடக்க வேண்டும், தாங்களே தமிழர் தாயகத்தில் வாழும் சகலரினதும் ஆட்சியாளர்கள் என்ற செய்தியை அழுத்தமாக, ஆவேசமாக நிலை நிறுவிய தாக்குதலாகும். இத்தாக்குதல் ஓட்டமாவடியிலும் எதிரொலித்தது!  இதனால்தான் சரிப் அலி ஆசிரியர் போன்றோரும் புலிகளின் அனுசரணையை நாட வேண்டி ஏற்பட்டது.

தொடரும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: