Advertisements

தயட்ட செவன எனப்படும் தேசத்திற்கு நிழல் மர நடுகை நிகழ்ச்சித்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான வைபவம்

தயட்ட செவன எனப்படும் தேசத்திற்கு நிழல் மர நடுகை நிகழ்ச்சித்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான வைபவம் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முதலாவது மரத்தினை நாட்டி ஆரம்பித்து வைத்தார்.
சுற்றாடல் மற்றும் புனருத்தான சக்தி அமைச்சு மற்றும் வன பரிபாலன திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மரநடுகை வைபவத்தில் வன பரிபாலன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட வன அதிகாரி டி.பி.பிரசாந்த, மற்றும் வன பரிபாலன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட வன உதவி அதிகாரி எம்.ஏ.நபீஸ், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் எம்.ஏ.முபாறக் உட்பட அதிகாரிகள் வன பரிபாலன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பசுமை நிறைந்த நாடு ஒளிமையான எதிர்காலம் எனும் தேசிய மர நடுகை நிகழ்ச்சித்திட்த்தின் ஊடாக வனப்பரப்பினை அதிகரிப்பதற்கான இலக்கினை வெற்றி கொள்வோம் எனும் தொனிப் பொருளில் இந்த தேசிய மர நடுகை திட்டம் நடைபெற்றது.

இத் திட்டதின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 12000 காட்டு மரம், மற்றும் பூ மரங்கள் இன்று நடப்படுவதாக வன பரிபாலன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட வன உதவி அதிகாரி எம்.ஏ.நபீஸ் தெரிவித்தார்.

SAM_2578SAM_2585 SAM_2581

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: