Advertisements

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நிறுத்துவதற்கு ஒரு வேட்பாளரை கூட தெரிவு செய்ய முடியாத நிலையில் எதிர்க்கட்சிகள் திண்டாட்டம்- பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நிறுத்துவதற்கு ஒரு வேட்பாளரை கூட தெரிவு செய்ய முடியாத ஒரு சூழ் நிலையில் இன்று எதிhக்கட்சிகள் இருக்கின்றதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தொவித்தார்.

சனிக்கிழமை (15.11.2014) காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையில் தயட்ட செவன எனப்படும் தேசத்திற்கு நிழல் மர நடுகை நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்இந்த அரசை தோற்கடிப்பதனூடாக இந்த நாட்டில் மீண்டும் யுத்த சூழ் நிலையை உருவாக்குவதற்கும் இந்த நாட்டை குட்டிச்சுவராக்குவதற்கும் சில சர்வதேச சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அதற்கு ஒரு போதும் நாம் இடமளிக்க கூடாது. இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி சமதானத்தை ஏற்படுத்தி அபிவிருத்தி அடைந்த ஒரு நாடாக இந்த பிராந்தியத்தில் முன்னேற வேண்டுமாக இருந்தால் உறுதியான அரசாங்கம் நமக்கு தேவை
அந்த அரசையும், ஜனாதிபதியையும் Nhற்கடிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபகச்வக்கு எதிராக நிறுத்துவதற்கு ஒரு வேட்பாளரை கூட தரிவு செய்ய முடியாத ஒரு சூழ் நிலையில் இன்று எதிhக்கட்சிகள் இருக்கின்றன.

இந்த நிலையில் நாங்கள் உறுதியாக இருந்து ஒரு உறுதியான அரசை உறுதியான ஆட்சியை இந்த நாட்டில் வைத்துக் கொள்வதினூடாக நாட்டைக் கட்டியெழுப்பமுடியும்.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நாட்டில் 2020ம் ஆண்டு 35 வீதமான நிலம் காடுகளாக மாற்றப்படல் வேண்டும்.
அதனூடாக நல்லதொரு சிறப்பான சூழ் நிலை உருவாக்கப்படல் வேண்டும் என்ற அடிப்படையில் தேசத்திற்கு நிலழ் எனும் வேலைத்திட்டம் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் காடுகள் என்பது வெறும் மக்கள் வாழாத பிரதேசங்களில் உள்ள காடுகளல்ல இவ்வாறான பாடசாலைகள், பொது இடங்கள் வீதிகள் எல்லா இடங்களிலும் மரங்கள் நாட்டப்படல் வேண்டும்.

அதன் மூலம் நல்லதொரு இயற்கையை நல்ல சூழ் நிலையை அழகை உருவாக்க முடியும்.

ஆகவேதான இன்று பாடசாலைகள் மட்டத்திலே வைத்திய சாலை, அரச காரியாலயங்கள், பொதுக் கட்டிடங்கள், எல்லா இடங்களிலும் மரங்களை நடுகின்ற வேலைத்திட்டங்களை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.

நமது நாடு முப்பது வருடங்கள் யுத்தத்தில் இருந்தது.

அந்த யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்து யுத்தத்தில் இருந்து மீட்பதற்கான முயற்சிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபகச் முதல் கட்ட காலத்தை செலவு செய்தார்.

அதற்கு பின்னர் வீதிகளை போடுவது பாடசாலைகளை கட்டுவது வைத்தியசாலைகளை நிர்மானிப்பது இலங்கை முழுவதும் மின்சாரம் வழங்குகின்ற மக்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவு செய்வது போன்ற வேலைத்திட்டங்களினூடாக இந்த நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தினை ஜனாதிபதி மேற் கொண்டார்.

எதிர் வரும் ஜனவரி மாதம் தொடக்கம் மூண்றாண்டுகளுக்கு மக்களை கட்டியெழுப்புகின்ற மக்களின் வருமானத்தை அதிகரிக்கின்ற வறுமையை போக்குகின்ற வளமான மக்களாக வாழ்கின்ற ஒரு நாட்டையும், கிராமத்தினையும் கட்டியெழுப்புவதற்கான பாரிய பணிகளில் அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் இன்று எங்களுடைய அமைச்சு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு ஒரு நாட்டை கட்டியnழுப்பி இன்று ஆசியாவிலேயே பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடாக நமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் உறுதியான அரசியல் தலைமைத்துவம் தேவை ஒரு உறுதியான ஆட்சி தேவை, ஒரு உறுதியான அரசு தேவை, அந்த அரசை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நாம் கொண்டிருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: